ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Corruption allegations hit conservative French presidential candidate Fillon

பழமைவாத பிரெஞ்சு ஜனாதிபதி வேட்பாளர் ஃபிய்யோன் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன

By Alex Lantier
28 January 2017

வலதுசாரி குடியரசுக் கட்சி (LR) இன் ஜனாதிபதி வேட்பாளர் அந்தஸ்தைப் பெற்று இரண்டு மாதங்களுக்கு பின்னரும், பேர்லினில் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் உடனான ஒரு சந்திப்பிற்கு முன்னதாக மாஸ்கோவுடன் நெருக்கமான உறவுகளுக்கு அழைப்புவிடுத்து ஒரு வாரத்திற்கும் குறைந்த நாட்களுக்குப் பின்னரும், பிரான்சுவா ஃபிய்யோன் அவர் பிரச்சாரத்தைப் பலவீனப்படுத்தக்கூடிய ஊழல் குற்றச்சாட்டுக்களை முகங்கொடுத்துள்ளார்.

ஃபிய்யோனின் மனைவி பெனிலோப் (Penelope) க்கு அவர் சம்பந்தப்படாத இரண்டு வேலைகளுக்காக எட்டாண்டுகளாக அவருக்கு 600,000 யூரோ [US $642,000] வழங்கப்பட்டுள்ளதாக நையாண்டி வாரயிதழான Le Canard Enchaîné புதனன்று குற்றச்சாட்டுக்களை வெளியிட்டது. குடியரசுக் கட்சியில் அவருடைய பிரதான போட்டியாளர்கள் அளவிற்கு அவர் ஊழல்மிக்கவர் கிடையாது என்ற வாதங்களின் மீதே ஃபிய்யோன் அவரது ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சாரத்தை அமைத்துள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டு குறிப்பாக அவர் மதிப்பைக் கெடுத்து வருகிறது. 2004 இல் முன்னாள் பிரதம மந்திரி அலன் யூப்பே க்கு ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக தீர்ப்பு வழங்கப்பட்டது, மற்றும் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி 2007 இல் இருந்து 2012 வரையிலான அவரது பதவிக்காலத்திலிருந்து இன்றுவரையிலும் பல்வேறு வழக்குகளில் சட்டரீதியில் சிக்கி உள்ளார்.

தேர்தல் காலகட்டங்களின் போதிருக்கும் பாரம்பரிய "குடியரசின் சமாதானத்தை" கைவிட்டு, பிரெஞ்சு நிதித்துறை அதிகாரிகள் இப்பிரச்சினையில் அவர்கள் ஆரம்ப விசாரணையைத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தின் பரந்த ஊழலுடன் சேர்ந்து, இந்த அம்பலப்படுத்தல் வெளிவந்துள்ள நேரமானது —அதாவது புதிய அமெரிக்க நிர்வாகத்திற்கு எதிராக ஜேர்மனி மற்றும் ரஷ்யாவின் ஒரு கூட்டணிக்கான ஃபிய்யோனின் வெடிப்பார்ந்த அழைப்பிற்கு வெறும் ஒரு சில நாட்களுக்கு பின்னர் வந்துள்ள— இந்த அம்பலப்படுத்தல், டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வந்ததற்கு எவ்வாறு விடையிறுப்பது என்பதில் இப்போது குழம்பி போயுள்ள ஆளும் வட்டாரங்களின் வக்கிரமான கன்னை மோதலின் ஒரு கூறுபாடாக தெரிகிறது.

ஃபிய்யோன் தன்னைத்தானே நியாயப்படுத்துவதற்கும் மற்றும் இந்த விடயத்தை வெளிப்படுத்தும் இதழாளர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படுமென அச்சுறுத்துவதற்கும் வியாழனன்று TF1 தொலைக்காட்சியின் தனிப்பட்டரீதியில் மாலை செய்தியில் தோன்றி, உடனடியாக இந்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்நடவடிக்கை எடுத்தார். “என் மனைவி போலியான ஒரு வேலையில் இருந்தார் என்று குறிப்பிடும் பத்திரிகைகளுக்கு எதிராக நான் வழக்குத் தொடுப்பேன்,” என்று கூறிய அவர், “பழிசுமத்தும்" இலக்கில் அவர் வைக்கப்பட்டிருப்பதாகவும் மற்றும் அவர் வேட்பாளர் அந்தஸ்தை "மதிப்பு கெடுக்க செய்யும்ரீதியில்" குற்றச்சாட்டுக்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நமது ஜனநாயகத்தில் ஏதோவொன்று அழுகிப் போயுள்ளது,” என்றார்.

அவர் மனைவி பணத்தைப் பெற்றார் என்பதை எவ்வாறிருப்பினும் ஃபிய்யோன் மறுக்கவில்லை, ஆனால் அந்த சம்பளத்தை நியாயமாக பெறுவதற்காக, உரைகள் மீதான வரைவுகளை மேற்பார்வையிடுவது மற்றும் விருந்தினரை வரவேற்பது போன்ற வேலைகளை அப்பெண்மணி செய்திருந்ததாக அவர் வலியுறுத்தினார். ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக அவர் மீது உத்தியோகபூர்வமாக வழக்கு தொடுக்கப்பட்டால் அவர் பதவி விலகி கொள்வதாக மீண்டும் அறிவித்தார் —இதே கருத்தை அவர் சார்க்கோசியிடம் இருந்து தன்னைத்தானே வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காக முன்னதாக அறிவித்திருந்தார்.

தொலைக்காட்சியின் பிரதான நேரத்தில் தோன்றுவதென்ற ஃபிய்யோனின் திடீர் முடிவு, Le Canard Enchaîné வழங்கிய விபரங்களும் குற்றச்சாட்டுக்களும் அவரது ஜனாதிபதியாகும் அபிலாஷைகளுக்கு சாத்தியமானளவிற்கு ஒரு மரணகதியிலான அடியை வழங்கும் என்பதை ஒப்புக் கொள்வதாக இருந்தது.

Le Canard எழுதுகிறது, பெனிலோப் ஃபிய்யோன் “சமீபத்தில் வரையில், சிறந்த பேரிக்காய் பலகாரத்திற்கான போட்டிகள் (pear pie) அல்லது ஷெட்லாந்து குதிரை பந்தயங்களில் (Shetland ponies) ஒரு நீதிபதியாக இருப்பதற்குரிய அவர் திறமைகளுக்காகவும், [ஒரு பெனெடிக்ட் மடமான] Solesmes Abbey ஜெபத்தில் இடைவிடாது கலந்து கொள்பவராகவும், மற்றும் வீட்டைப் பராமரிப்பராகவும் நன்கறியப்பட்டவர் … ஆச்சரியமான விதத்தில்: தன்னைத்தானே எப்போதும் ஒரு சீரிய குடும்ப ஸ்தீரியாக முன்னிறுத்தும் ஒரு பெண்ணின் வருவாய், சிலவேளைகளில் அந்த தம்பதிகள் காட்டிய மொத்த வரி வருவாயில் ஏறத்தாழ பாதியளவிற்கு இருந்தது.”

தேசிய சட்டமன்றத்திலிருந்து அண்மித்து 500,000 யூரோ அவர் வருவாயில் உள்ளடங்கி இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது, அடுத்தடுத்து வெற்றி பெற்று வந்த வலதுசாரி அரசாங்கங்களில் மந்திரியாக ஃபிய்யோன் பணியாற்றிய அதேவேளையில் சட்டமன்றத்தில் ஃபிய்யோனை பிரதியீடு செய்த ஒரு சட்டமன்ற பிரதிநிதியான Marc Joulaud க்காக அங்கே அவர் [பெனிலோப்] ஒரு "சட்டமன்ற உதவியாளராக" பணியாற்றினார். Le Canard Enchaîné இன் ஆதாரங்களின்படி, பெனிலோப் ஃபிய்யோன் இன் சம்பளம் மாதத்திற்கு 7,900 யூரோ அளவிற்குச் சென்றது —இது Joulaud இன் நாடாளுமன்ற உதவியாளர்களுக்கான மாதாந்தர வரவு-செலவு திட்ட ஒதுக்கீட்டான மொத்தம் 9,561 யூரோவில் பெரும்பகுதியாகும்.

Joulaud இன் உதவியாளர்களில் மற்றொருவரான Jeanne Robinson-Behre ஐ அந்த வாராந்தர பத்திரிகை பேட்டி எடுத்தது. Joulaud க்காக பெனிலோப் ஃபிய்யோன் மொத்தத்தில் ஏதேனும் வேலை செய்திருந்ததாக இவரால் நினைவுகூர முடியவில்லை. “நான் அவருடன் ஒருபோதும் பணியாற்றவில்லை, இந்த விடயத்தில் நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை,” என்று Robinson-Behre தெரிவித்தார். “அவரை ஒரு மந்திரியின் மனைவியாக மட்டுமே எனக்கு தெரியும்,” என்றார்.

அனைத்திற்கும் மேலாக, Le Canard Enchaîné தொடர்ந்து குறிப்பிடுகையில், “2012 மற்றும் 2013 இல், ஒரு குடும்ப நண்பரும், தொழில் வியாபாரியும், மற்றும் செல்வாக்கு மிக்க Marc Ladreit de Lacharrière க்கு சொந்தமான ஒரு மாதயிதழ் La Revue des Deux Mondes இல் [பெனிலோப் ஃபிய்யோன்] “இலக்கிய பகுதி ஆலோசகராக" இருந்தார். அவரை அந்த இதழின் இயக்குனர் ஒருபோதும் சந்தித்திருக்கவே இல்லை என்றபோதினும், 20 மாதங்களில் அவர் வரிக்கு முந்தைய தொகையாக 100,000 யூரோ பெற்றார்,” என்று குறிப்பிடுகிறது.

அந்நேரத்தில் அந்த இதழின் இயக்குனர் Michel Crépu ஐ விட வெறும் 1,000 யூரோ குறைவாக அவருக்கு மாதத்திற்கு 5,000 யூரோ வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. எவ்வாறிருப்பினும் Le Canard Enchaîné க்கு Crépu கூறுகையில், “நான் ஒருபோதும் பெனிலோப் ஃபிய்யோன் ஐ சந்தித்ததும் இல்லை, பத்திரிகை அலுவலங்களில் நான் ஒருபோதும் அவரை பார்த்ததும் இல்லை. … ஒருமுறை Marc de Lacharrière 'நீங்கள் திறனாய்வு செய்வதற்காக சில புத்தகங்களை எனக்கு கொடுக்க முடியுமா அதை நாம் திருமதி ஃபிய்யோனுக்கு வழங்கலாம், அவருக்கு சலிப்பாக இருக்கிறதாம்?' என்று கூறுவதற்காக தொலைபேசியில் அழைத்தார்" என்றார்.

சட்டமன்ற பிரதிநிதிகளின் உதவிக்காக இருக்கிறார்கள் என்று கூறப்படும் தேசிய சட்டமன்ற உதவியாளர்கள் உண்மையில் எந்த சட்டமன்ற பிரதிநிதிகளுக்கு அவசியப்படுகிறார்கள் என்பதன் மீதும் மற்றும் செல்வாக்கு செய்வதற்கு எதிராகவும் உள்ள சட்டங்களில் வளைந்து கொடுக்கும் தன்மை இருப்பதால், பெனிலோப் ஃபிய்யோன் இன் வருவாய் தொகுப்பு நுட்பமானரீதியில் சட்டவிரோதமானதா என்பது தெளிவின்றி உள்ளது. என்றாலும் இந்த விவகாரமானது, முன்னணி ஜனாதிபதி வேட்பாளர்களின் கட்டுக்கடங்கா வர்க்க இறுமாப்பைக் காட்டுகிறது. அவர்கள் உழைக்கும் மக்களிடம் இருந்து ஆழ்ந்த சிக்கன திட்டங்களையும், பொலிஸ்-அரசு மற்றும் இராணுவவாத கொள்கைகளுக்கு பணம் செலுத்த நிதியியல் தியாகங்களையும் கோரி வருகிறார்கள், அதேவேளையில் சட்டரீதியிலோ அல்லது ஏனைய விதத்திலோ, அவர்கள் பிரதான வங்கிகள் மற்றும் வணிகங்களிடம் இருந்து பெருமளவில் பணத்தைப் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.

ஃபிய்யோன் அவர் மனைவியை பெயரளவிலான வேலையில் நியமித்து சம்பள பணம் பெறச் செய்ய முடிந்திருக்கிறது என்றாலும், அது தேசிய சட்டமன்ற பிரதிநிதிகளிடையே வழமையில் இல்லாத ஒன்றல்ல. விபரங்கள் கோரப்பட்ட முதலாண்டான 2014 இல், 52 சட்டமன்ற பிரதிநிதிகளின் மனைவிகள், 28 மகன்கள் மற்றும் 32 மகள்கள் நாடாளுமன்ற நிதிகளை பயன்படுத்தி வேலையில் நியமிக்கப்பட்டிருந்ததாக Médiapart அறிக்கை குறிப்பிடுகிறது.

அனைத்திற்கும் மேலாக, Le Canard Enchaîné அச்சில் வருவதற்கு நீண்டகாலத்திற்கு முன்னரே, ஃபிய்யோனின் நிதியியல் ஒழுங்குப்படுத்தல்கள் ஐயத்திற்கிடமின்றி அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் நன்கறியப்பட்டதிருந்தன. இத்தகைய ஏற்பாடுகள் நவம்பருக்கு பின்னர் இருந்து ஆழமாக தோண்டி துருவப்பட்டு வந்த விடயமாக இருந்துள்ளது, அப்போது ஃபிய்யோனின் ஆலோசனை நிறுவனமான 2F Conseil குறித்து பல கட்டுரைகள் வந்தன, இந்நிறுவனம் பணியாளர்களே இல்லாமல் மூன்றாண்டுகளில் பிரமாண்டமாக 757,000 யூரோ ஈட்டியிருந்தது. இந்த மொத்த தொகையும் இலாபமளிக்கும் சொற்பொழிவுகளுக்கு கட்டணமாக, பல்வேறு வணிக குழுக்கள் மற்றும் சிந்தனை குழாம்களிடம் இருந்து அவருக்கு வந்திருந்ததாக தெரிகிறது.

ஃபிய்யோன் நிதிகள் குறித்து சாத்தியமான அளவிற்கு மிகவும் மதிப்பு கெடுக்கும் கூறுபாடு அம்பலமாவது, சரியான நேரத்தில் மிகவும் கவனமாக கொண்டு வரப்படுகிறது. சிரியா மற்றும் உக்ரேனில் நேட்டோ தலையீடுகளை மிகவும் செலவான பிழைகள் என்று அவர் Le Monde மற்றும் Frankfurter Allgemeine Zeitung க்கு அறிக்கை அளித்த பின்னரும் மற்றும் வாஷிங்டனுக்கு எதிராக ஒரு பிரெஞ்சு-ஜேர்மன்-ரஷ்ய கூட்டணியை உருவாக்குவதற்கு அழைப்புவிடுத்த பின்னரும் இது வந்தது. இதுபோன்ற ஒரு கொள்கை எமானுவெல் மாக்ரோன் மற்றும் பெனுவா அமோன் உட்பட சோசலிஸ்ட் கட்சியின் (PS) மற்றும் அதைச் சுற்றியுள்ள வேட்பாளர்களின் கண்ணோட்டங்களுடன் முரண்படுகிறது, இவர்கள் வாஷிங்டனுடன் உறவுகளை பேணுவதற்கு வலியுறுத்தி உள்ளனர் — பொதுவாக Le Canard Enchaîné இதற்கு ஆதரவாக உள்ளது.

இத்தகைய சூழல்களின் கீழ், ஃபிய்யோனுக்கு எதிரான குற்றச்சாட்டானது சர்வதேச நெருக்கடிகள் மற்றும் முரண்பாடுகள் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் அதிகரித்தளவில் எவ்வாறு மேலோங்கி வருகின்றன என்பதற்கு இன்னுமொரு அறிகுறியாக இருப்பதாகவே தெரிகிறது.