ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Spain moves toward military rule in Catalonia

ஸ்பெயின் கட்டலோனியாவில் இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறது

By Alex Lantier
12 October 2017

சுதந்திரத்திற்கான அக்டோபர் 1 சர்வஜன வாக்கெடுப்பை உறுதிப்படுத்தி கட்டலான் பிராந்திய முதல்வர் கார்லெஸ் புய்க்டெமொன்ட் உரையாற்றியதற்கு விடையிறுப்பாக, மக்கள் கட்சியின் (PP) பிரதம மந்திரி மரீயானோ ரஹோய் புதனன்று ஸ்பானிய காங்கிரஸிற்கு வழங்கிய ஓர் அச்சுறுத்தலான உரையில், அவர் ஸ்பானிய அரசியலமைப்பின் ஷரத்து 155 ஐ பயன்படுத்த தயாரிப்பு செய்து வருவதாக தெரிவித்தார். இந்த வழிவகையானது கட்டலான் பிராந்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு இடைக்கால தடை விதிக்கவும், அப்பிராந்தியத்தின் நிதி மற்றும் நிர்வாகம் மீதான கட்டுப்பாட்டை எடுக்கவும் மாட்ரிட்டை அனுமதிக்கிறது.

ஓர் அவசரகால நிலையைத் திணிக்க அல்லது அரசை கைப்பற்ற ஷரத்து 116 ஐ பயன்படுத்துவது குறித்து ஸ்பானிய ஊடகங்கள் விவாதித்து வருகின்ற நிலையில், ரஹோய் துரிதமாக கட்டலனியாவில் மட்டுமல்ல, மாறாக ஸ்பெயின் எங்கிலும் இராணுவ ஆட்சியை ஸ்தாபிக்க நகர்ந்து வருவது தெளிவாக உள்ளது.

இராணுவம் கட்டலோனியாவுக்குள் உள்நுழைந்து, கட்டலானின் பலமான 17,000 பிராந்திய பொலிஸின் (Mossos d'Esquadra) பிரிவுகள் அல்லது கட்டலான் தேசியவாத கட்சிகளுக்கு விசுவாசமாக உள்ளவர்களின் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க அவர்கள் தயாரிப்பு செய்து வருவதாக இராணுவ ஆதாரநபர்கள் புதனன்று காலை El País க்குத் தெரிவித்தனர். Cota de Malla (சங்கிலி தொடர்) என குறியீட்டுப் பெயரிடப்பட்டுள்ள இத்தாக்குதல் திட்டத்தின் கீழ், இராணுவம் கட்டலோனியாவில் உள்ள பொலிஸ் மற்றும் Guardia Civil படைகளது (நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும். பார்சிலோனாவில் இருக்கும் மோட்டார் வாகன படைப்பிரிவு மற்றும் சான்ட் க்ளீமென்ட் செஸ்செபெஸ் இல் உள்ள கவச வாகன படைப்பிரிவு என ஏற்கனவே அங்கிருக்கும் இரண்டு படைப்பிரிவுகளுக்கும் உதவ அது அப்பிராந்தியத்திற்குள் குறிப்பிடத்தக்க படைகளை அனுப்பவிருக்கிறது.

இத்திட்டம், El País பத்திரிகை செய்தியின்படி, ஒரு குறிப்பிட்ட காலமாக தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இதை, ஆகஸ்ட் 17 இல் பார்சிலோனா பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், ரஹோய் ஓரளவுக்கு பயன்படுத்தி இருந்தார்.

ரஹோய் இராணுவ சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வுகளை, ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி (PSOE) இன் முழு ஆதரவுடனும், பொடெமோஸ் கட்சி எதிர்க்காது என்ற அதன் தெளிவான சமிக்ஞைகளின் அடித்தளத்திலும் மேற்கொண்டு வருகிறார்.

ரஹோய் உடனான பகிரங்க பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு பெரும்பிரயத்தன முயற்சியாக, செவ்வாயன்று புய்க்டெமொன்ட் அவரது சொந்த உரையில், அவரது சுதந்திர பிரகடனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். ஆனால் மாட்ரிட்டின் அரசியல் ஸ்தாபகமோ பேச்சுவார்த்தைகளை கடுமையாக நிராகரிக்கும் அரசாங்கத்தின் போக்கு மற்றும் பாரிய ஒடுக்குமுறை திட்டங்களின் பின்னால் வேகமாக அணிசேர்ந்து வருகின்றன.

கட்டலான் சுதந்திரம் உண்மையில் அறிவிக்கப்பட்டுவிட்டதா என்பதை புய்க்டெமொன்ட் தெளிவுபடுத்துமாறு கோரி ஒரு சுருக்கமான பொது அறிவிப்பு ஒன்றை புதனன்று காலை ரஹோய் வெளியிட்டார். ஷரத்து 155 ஐ பயன்படுத்த தயாரிப்பு செய்துவதற்காக அவருக்கு விளக்கம் தேவைப்படுவதாக ரஹோய் பார்சிலோனாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டார். அவர் புய்க்டெமொன்ட் பதிலளிப்பதற்கு அக்டோபர் 19 வரை அவகாசம் அளித்தார்.

கட்சிக்குள் சுய-பாணியிலான "இடதாக" விளங்கும் சோசலிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பெட்ரோ சான்சேஸ், ரஹோயின் ஆரம்ப அறிக்கையை பாராட்டினார். “முதல்வர் புய்க்டெமொன்ட், கட்டலான் அரசியலை கொண்டு வந்து நிறுத்தியுள்ள இந்த குழப்பத்தை தெளிவாக்க, முதல்வரின் விளக்கத்தைக் கோரியதை நாங்கள் ஆமோதிக்கிறோம்,” என்று சான்சேஸ் அறிவித்தார். மாட்ரிட் ஷரத்து 155 ஐ செயல்படுத்தும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா என்று வினவிய போது, “நிச்சயமாக, அதை நாங்கள் செயல்படுத்துவோம் என்பது வெளிப்படையானது,” என்றார்.

தேச ஒற்றுமையின் PP-PSOE அரசாங்கத்திற்கான திட்டங்கள் குறித்த வதந்திகளுக்கு இடையே, சோசலிஸ்ட் கட்சி ஸ்பானிய அரசியலமைப்பை திருத்தி எழுதும் திட்டங்கள் மீது மக்கள் கட்சியுடன் சேர்ந்து செயல்படும் என்பதை சான்சேஸ் சுட்டிக்காட்டினார்.

ரஹோய் புதனன்று மாலை 4 மணிக்கு காங்கிரஸ் முன் உரையாற்றுகையில், புய்க்டெமொன்ட் ஐ கடுமையாக சாடியதுடன், அக்டோபர் 1 சர்வஜன வாக்கெடுப்பில் அமைதியாக வாக்களிக்க முயன்ற கட்டலானியர்களை ஸ்பானிய பொலிஸ் மூர்க்கமாக ஒடுக்கியதை முழுமூச்சுடன் பாதுகாத்தார். அக்டோபர் 19 இல் புய்க்டெமொன்ட் அளிக்கும் பதிலே எதிர்கால சம்பவங்களைத் தீர்மானிக்கும் என்று குறிப்பிட்ட ரஹோய், பேச்சுவார்த்தைகளை திறந்துவிடுவதற்கு அடிப்படையாக, புய்க்டெமொன்ட் இன் முழுமையான சரணடைவுக்கு குறைவின்றி அவர் வேறெதையும் ஏற்க போவதில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.

“இந்த சட்டவிரோத மோசடி [அக்டோபர் 1] சர்வஜன வாக்கெடுப்பின் எந்த முடிவையும், கட்டலோனியாவின் சுதந்திரம் என்பதற்கு குறைவாக, எந்தவொரு நடவடிக்கையையும் நியாயப்படுத்துவதற்கான அடித்தளமாக எடுத்துக் கொள்ள முடியாது,” என்று ரஹோய் தெரிவித்தார்.

2012 இல் ஐரோப்பிய ஒன்றிய வங்கி பிணையெடுப்புகள் மற்றும் சிக்கன கொள்கைள் மீது மோதல்கள் எழுந்ததில் இருந்தே, அவர் பார்சிலோனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வலியுறுத்தி, அவர் பேச்சுவார்த்தைகளுக்கு மறுத்து வருகிறார் என்ற அவர்மீதான குற்றச்சாட்டுக்களை மறுக்க ரஹோய் நிர்பந்திக்கப்பட்டதாக உணர்ந்தார். ஓர் உடன்பாட்டை எட்ட முடியாமல் போனதற்கு, கட்டலான் அரசாங்கம் "மிகவும் அமைப்பு-விரோத மற்றும் அதி-இடது கட்சியின் கரங்களுக்குள் தன்னை அமிழ்த்திக் கொள்ள முடிவெடுத்தது" என்ற உண்மையின் மீது அவர் பழிசுமத்தினார், அவ்விதமாக அவர் குட்டி-முதலாளித்துவ தேசியவாத மக்கள் வேட்பாளர்களின் கூட்டணி (CUP) ஐ அர்த்தப்படுத்தினார்.

அக்டோபர் 1 சர்வஜன வாக்கெடுப்பை "நமது நல்லிணக்க மாதிரிக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு சதி" என்பதாக குற்றஞ்சாட்டிய ரஹோய், மக்கள் கட்சியின் விடையிறுப்பு —அதாவது உலகெங்கிலுமான மக்களைப் பீதியூட்டிய, ஆயிரக் கணக்கான கட்டலோனியா எங்கிலுமான வாக்காளர்கள் மற்றும் வாக்குப்பதிவு மையங்கள் மீதான இரத்தந்தோய்ந்த பொலிஸ் தாக்குதல்— "சரியானதே" என்றார். காங்கிரஸின் ஒட்டுமொத்த அமர்வின் வர்க்க உள்ளடக்கத்தை படம் பிடித்து காட்டும் ஒரு தருணமாக, Guardia Civil படையின் ஒடுக்குமுறையை ரஹோய் பாராட்டிய போது பிரதிநிதிகளிடம் இருந்து இடைவிடாது இடிமுழக்கமென கைத்தட்டல் வந்தது.

புய்க்டெமொன்ட் இன் நிலைப்பாட்டை "சுதந்திர பிரகடனம் செய்யவதற்கு நேர்மையின்றி முயற்சிக்கும் வழி" என்று குறிப்பிட்ட ரஹோய், மத்தியஸ்தம் தொடங்கினால் அது அரசியலைப்பை மாற்றி எழுதுவதற்கான அவர் முயற்சிகளை நோக்கி செலுத்தப்படும் என்பதைச் சுட்டிக்காட்டினார். சமூக அமைதி, பன்முகத்தன்மையின் அவசியத்தையும் மற்றும் கட்டலான் உணர்வை "கலப்பினத்தின்" அடையாளமாக குறிப்பிட்ட ரஹோய், பல ஸ்பானிய நகரங்களில் நடத்தப்பட்ட ஸ்பானிய ஒருமைப்பாட்டிற்கான தேசியவாத போராட்டங்களைப் பாராட்டியதுடன் அவர் உரையை நிறைவு செய்தார். இத்தகைய பல போராட்டங்களில், மறைந்த பாசிசவாத சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோவின் Falange அமைப்பு உட்பட பாசிசவாத அமைப்புகள் செயலூக்கத்துடன் பங்குபற்றியிருந்தன.

ரஹோய்க்கு பிரதான ஐரோப்பிய ஒன்றிய சக்திகளின் முழு ஆதரவும் உள்ளது. ரஹோய்க்கு ஆதரவாக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மற்றும் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் இவ்வார ஆரம்பத்தில் அறிக்கை வெளியிட்ட பின்னர், ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியேல் நேற்று மீண்டும் ரஹோய்க்கு ஆதரவளித்தார். புய்க்டெமொன்ட் இன் சுதந்திர பிரகடனத்தை "பொறுப்பற்றதென" குறிப்பிட்ட அவர், “சட்டத்தின் ஆட்சி அடிப்படையிலும் மற்றும் ஸ்பானிய அரசியலமைப்பின் உள்ளடக்கத்திலும் மட்டுந்தான் ஒரு தீர்வைக் காண முடியும்,” என்றார்.

ஸ்பானிய இராணுவம், ரஹோய், சோசலிஸ்ட் கட்சி (PSOE) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இவற்றின் அறிக்கைகளை தொழிலாள வர்க்கம் ஓர் அவசர எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஸ்பெயினில் மட்டுமல்ல, மாறாக ஐரோப்பா முழுவதிலும், எதேச்சதிகார ஆட்சிக்குத் திரும்புவதற்கான திட்டங்கள் நன்கு முதிர்ந்துள்ளன. ஐரோப்பிய அரசியல்வாதிகள் அவர்களின் சொந்த நாடுகளில் அதேபோன்ற நடவடிக்கைகளுக்கு தயாரிப்பு செய்து வருகிறார்கள் என்பதால் தான், அவர்கள் ரஹோயை ஆதரிக்கிறார்கள்.

தொழிலாளர்கள் இராணுவ ஆட்சிக்கான திட்டங்களை எதிர்க்க வேண்டும் என்பதோடு, கட்டலோனியாவில் இருந்து துருப்புகள் மற்றும் பொலிஸைத் திரும்ப அழைத்துக் கொள்ள கோர வேண்டும். ஆனால் ஆளும் ஸ்தாபகத்தினுள் உள்ள பெயரளவிலான "இடது" கூறுபாடுகள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த ஆளும் ஸ்தாபகத்திற்கு எதிரான புரட்சிகரமான எதிர்ப்பில் மட்டுமே இதை செய்ய முடியும்.

கட்டலோனியா ரஹோயின் ஒடுக்குமுறைக்கு உடனடி இலக்காக உள்ளது என்றாலும், பரந்த இலக்கில் இருப்பது ஸ்பெயின் மற்றும் ஐரோப்பா எங்கிலுமான தொழிலாள வர்க்கமாகும். 1991 இல் ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் தீவிரப்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஏகாதிபத்திய போரின் ஒரு கால் நூற்றாண்டுக்குப் பின்னர், ஐரோப்பிய முதலாளித்துவம் பொறிவின் ஒரு முதிர்ந்த நிலையில் உள்ளது. 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பிந்தைய பத்தாண்டு கால ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகள், பெரும்பாலும் அக்கண்டத்தின் பொருளாதார பாகங்களைச் சின்னாபின்னமாக்கி, பத்து மில்லியன் கணக்கானவர்களை வேலைவாய்ப்பின்றி செய்து, சமூக சமத்துவமின்மையை வெடிப்பார்ந்த மற்றும் தாங்கொணா மட்டங்களுக்குக் கொண்டு வந்துவிட்டுள்ளன.

வர்க்க பதட்டங்கள் ஜனநாயக ஆட்சி வடிவங்களுக்கு பொருந்தாத அதீத மட்டங்களை எட்டி வருகின்றன. பிரான்ஸ் இரண்டாண்டு காலமாக அவசரகால நிலையில் உள்ளது ஜேர்மனியோ நாஜி ஆட்சி முடிந்ததற்குப் பிந்தைய அதன் முதல் பாசிசவாத நாடாளுமன்றவாதிகள் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கண்டுள்ளது. இப்போது மாட்ரிட் ஸ்தாபகம் வன்முறையானரீதியில் விரைவாக ரஹோயின் பலவீனமான சிறுபான்மை அரசாங்கத்திற்கு பின்னால் தொங்கி கொண்டிருக்கின்றன, இது, பிராங்கோ இறந்துவிட்டாலும், ஸ்பெயின் 1978 இல் நாடாளுமன்ற ஜனநாயகமாக ஆட்சி மாறிய போது தப்பிப்பிழைத்த வர்க்க சக்திகள் ரஹோயின் ஆட்சியில் தங்கியுள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறது. அவர்கள் மீண்டும் எதேச்சதிகார ஆட்சிக்கு அழுத்தமளித்து வருகின்றனர்.

பாசிசம் மற்றும் இராணுவ சர்வாதிகாரத்திற்கு மறுவாழ்வளிக்கப்படுவதற்கு எதிரான, சோசலிசத்திற்கான, ஒரு போராட்டத்தில் ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் ஐக்கியப்படுத்தி அணிதிரட்டுவதே முக்கிய பணியாகும். இது கட்டலான் தேசியவாத கட்சிகளின் திவால்நிலையை அடிக்கோடிடுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கும் அவர்கள், நீண்டகாலமாக சிக்கன கொள்கைகளுக்கு ஆதரவான பார்சிலோனா ஆட்சியில் இருந்துள்ளதுடன், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் முதலாளித்துவ சார்பான தேசிய பிரிவினை வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

புய்க்டெமொன்டின் கட்டலோனிய ஜனநாயக ஐரோப்பிய கட்சி (PdeCat) ரஹோயின் கருத்துக்களை உதறித்தள்ளி, கட்டலோனியா சுதந்திர பிரகடனத்திற்கான உரிமையை வென்றிருப்பதாக அறிவித்து நேற்று மாலை விடையிறுத்தது. மாட்ரிட் ஷரத்து 155 ஐ பயன்படுத்தினால் அதுவொரு "மிகப்பெரும் பிழையாகும்" என்று கூறிய PdeCat இன் செய்தி தொடர்பாளர் Carles Campuzano, பேச்சுவார்த்தைக்கான புய்க்டெமொன்டின் முன்மொழிவை ஏற்குமாறு ரஹோயைக் கேட்டுக் கொண்டார். “இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறிய அவர், “நாம் அனைவரும் ஒரு தீர்வுக்கு வருவதற்கு இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும், இது ஒவ்வொருவருக்கும் நல்லது,” என்றார்.

ரஹோயின் உரைக்கு PSOE மற்றும் பொடெமோஸ் நாடாளுமன்ற குழு தலைவர்களின் விடையிறுப்போ, ரஹோயின் ஒடுக்குமுறை, அரசியல் ஸ்தாபகத்தினுள் எந்த எதிர்ப்பையும் முகங்கொடுக்கவில்லை என்பதை காட்டுகிறது. ஸ்பெயினில் இராணுவ ஒடுக்குமுறை மற்றும் அரசு முற்றுகைக்கு அதிகரித்து வரும் அபாயத்திற்கு இடையே, அவர்களின் கருத்துக்கள், பல ஆண்டுகளாக ஸ்பானிய "இடது" என்று கூறிவந்தவைகளின் திவால்நிலைக்கு ஒரு வரலாற்று அடையாளமாக உள்ளன.

ரஹோய் உரையுடன் அவர் முழுமையாக உடன்படுவதை அறிவித்து தொடங்கிய PSOE கன்னையின் தலைவர் Margarita Robles, ஸ்பெயினை இராணுவ ஆட்சியை நோக்கி கொண்டு செல்ல இப்போது ரஹோய் பயன்படுத்தி வரும் 1978 அரசியலமைப்பை புகழ்ந்துரைத்தார். “நாங்கள் எப்போதுமே அரசின் கட்சியாக, அரசாங்கத்தின் கட்சியாக, இந்நாட்டின் நவீனத்துவத்திற்காக போராடிய ஒரு கட்சியாக இருந்துள்ளோம்,” என்று தெரிவித்த அப்பெண்மணி, “அரசியலமைப்பை பாதுகாக்கும் ஒரு அரசு கட்சியாக எமது பாத்திரத்தை நாங்கள் தொடர்வோம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

கடந்த தேர்தலில் பொடெமோஸ் 5 மில்லியன் வாக்குகள் பெற்றிருந்த போதினும், அது முதலாளித்துவ வர்க்கத்திற்கோ அதன் சர்வாதிகார திட்டநிரலுக்கோ எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் அணிதிரட்ட தகைமையற்றுள்ளது என்பதை பொடெமோஸ் பொதுச் செயலாளர் பப்லோ இக்லெஸியாஸ் எடுத்துக்காட்டினார். கோழைத்தனம் மற்றும் வெறுப்பு மனப்பான்மையை ஒன்றுக்கொன்று நேரெதிராக எடுத்துக்காட்டும் வகையில், இக்லெஸியாஸ் ரஹோயுடன் ஒரு நட்புரீதியிலான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டார். கட்டலோனியாவில் ஓர் இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறையை நடத்த அந்த வலதுசாரி பிரதமர் இராணுவத்தை அனுப்ப தயாரிப்பு செய்து வரும்போதும், இக்லெஸியாஸ் அவரை ஒரு ஜனநாயகவாதிபோல நடத்தி, ஸ்பெயினின் பன்மொழித்தன்மையை மதிக்குமாறு அவருக்கு முறையிட்டார்.

இக்லெஸியாஸ் காங்கிரஸில் ரஹோய்க்கு நேரடியாக கருத்துரைக்கையில், “இன்று வாக்குவாதம் செய்வதற்குரிய நாளல்ல. நான் உங்களையே பிரதிபலிக்க விரும்புகிறேன். உங்கள் குழு 7.9 மில்லியன் ஸ்பானியர்களை பிரதிநிதித்துவம் செய்கிறது... உங்களுக்கு PSOE, Ciudadanos இன் ஆதரவு உள்ளது, உங்களை நான் வாழ்த்துகிறேன்,” என்றார்.

கட்டலான் நெருக்கடியை "உங்களின் கட்சி பதாகையைப் பாதுகாக்க" பயன்படுத்துவதாக அவர் ரஹோயை விமர்சித்தார் என்றாலும், இக்லெஸியாஸ் தொடர்ந்து கூறுகையில், “அரசின் பன்முக-தேசியத்தன்மையுடன் நீங்கள் வாழ வேண்டியிருப்பது உங்களுக்கே தெரியும்,” என்றார்.