ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Proclamation on the Assumption of Soviet Power

சோவியத் அதிகாரத்தைப் பொறுப்பேற்றல் மீதான பிரகடனம்

தொழிலாளர்கள், படைவீரர்கள் மற்றும் விவசாயிகளது சோவியத்துக்களின் இரண்டாவது அனைத்து ரஷ்ய காங்கிரசால் அறிவிக்கப்பட்டது

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இன்று சோவியத் அதிகாரத்தைப் பொறுப்பேற்றல் மீதான பொது அறிவிப்பு, இடைக்கால அரசாங்கத்தைத் தூக்கிவீசி ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதை அறிவித்தது. அது தொழிலாளர்கள், படைவீரர்கள் மற்றும் விவசாயிகளது சோவியத்துக்களின் அனைத்து ரஷ்ய காங்கிரசால் நவம்பர் 8 (அக்டோபர் 26, O.S.) அன்று ஏற்கப்பட்டு ரபோச்சி சோல்டாட் எண் 9, அக்டோபர் 26, 2017[O.S.] இல் பிரசுரிக்கப்பட்டது.

சோவியத்துக்களின் இரண்டாவது அனைத்து-ரஷ்ய காங்கிரஸ்

தொழிலாளர்கள், படைவீரர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பொது அறிவிப்பு

நவம்பர் 7, 1917

தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்கள் பிரதிநிதிகளின் சோவியத்துக்களின் இரண்டாவது அனைத்து ரஷ்ய காங்கிரஸ் ஆரம்பமாகியுள்ளது. சோவியத்துக்களின் பரந்த பெரும்பான்மையினர் காங்கிரசில் கூடினர். விவசாயிகள் சோவியத்துக்களில் இருந்தும் எண்ணிறைந்தோர் காங்கிரசில் பங்கேற்றனர். மத்திய நிறைவேற்றுக் குழுவின் சமரச ஆட்சியுரிமை நீக்கப்பட்டது. தொழிலாளர்கள், படைவீரர்கள் மற்றும் விவசாயிகளது பரந்த பெரும்பான்மையினரது விருப்பினாலும் பெட்ரோகிராட்டில் இடம்பெற்ற தொழிலாளர்கள் மற்றும் கோட்டைக் காவற்படையின் வெற்றிகரமான எழுச்சியாலும் ஆதரிக்கப்பட்டு காங்கிரஸ் ஆனது தனது சொந்தக் கைகளில் அதிகாரத்தை எடுத்துக்கொண்டது.


சோவியத்துக்களின் காங்கிரஸ்

இடைக்கால அரசாங்கம் தூக்கி வீசப்பட்டுள்ளது. இடைக்கால அரசாங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோவியத் அரசாங்கம் அனைத்து தேசங்களுக்கும் உடனடியாக ஜனநாயக அமைதியை முன்மொழிகிறது மற்றும் அனைத்து முனைகளிலும் உடனடி போர் நிறுத்த உடன்பாட்டை முன்மொழிகிறது. அது நிலப்பிரபுக்கள், முடியரசுகள் மற்றும் மடங்களிலிருந்து அனைத்து நிலங்களையும் இழப்பீடு எதுவுமின்றி விவசாயிகள் குழுவுக்கு மாற்றுவதை உத்திரவாதம் செய்யும்; அது இராணுவத்தில் முழு ஜனநாயகத்தையும் அறிமுகப்படுத்துவதன் மூலம் படைவீரர்களது சுதந்திரத்தைப் பாதுகாக்கும்; அது உற்பத்தி மீது தொழிலாளர்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும்; அது அந்த நேரம் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டசபையின் ஒன்று கூடலை உறுதிப்படுத்தும்; ரொட்டி நகரங்களுக்கும் கிராமங்களுக்கு முக்கிய தேவைகளாய் விநியோகிக்கப்படுவதையும் பார்க்கும்; ரஷ்யாவுடன் வாழும் அனைத்து தேசங்களின்  சுயநிர்ணய உரிமையையும் உத்தரவாதம் செய்யும்.

காங்கிரஸ் ஆணையிடல்: வட்டாரங்களில் உள்ள அனைத்து அதிகாரமும் தொழிலாளர், படைவீரர் மற்றும் விவசாய பிரிதிநிதிகளுக்கு செல்லும், அது உண்மையான புரட்சிகர ஒழுங்கிற்கு கட்டாயம் உத்தரவாதம் செய்யும்.

பதுங்கு குழிகளில் இருக்கும் படைவீரர்கள் விழிப்பாகவும் உறுதியுடனும் இருக்குமாறு காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது. அனைத்து மக்களுக்கும் நேரடியாக முன்மொழியும் ஜனநாயக அமைதியை முடிவு செய்வதில் புதிய அரசாங்கம் வெற்றிபெறுகின்ற அந்த காலம் வரைக்கும், ஏகாதிபத்தியத்தின் அனைத்து தாக்குதல்களுக்கும் எதிராக புரட்சிகர இராணுவம் புரட்சியை பாதுகாக்க வல்லது என்று சோவியத்துக்களின் காங்கிரஸ் நம்புகிறது. சொத்துடைமை வர்க்கங்களுக்கு வரிவிதித்தல் மற்றும் குறிப்பிட்ட சூழலில் வேண்டல் என்ற உறுதிப்படுத்தப்பட்ட கொள்கைகளின் மூலம் புரட்சிகர இராணுவத்தின் தேவைகளுக்கான அனைத்தையும் வழங்க அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யும், மற்றும் படைவீரர்களின் குடும்பங்களின் நிலைமையையும் முன்னேற்றும்.

கோர்னிலோவைட்டுகள் – கெரென்ஸ்கி, காலெடின் மற்றும் பிறர் – பெட்ரோகிராட்டுக்கு எதிராக துருப்புக்களைக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். ஏமாற்றி கெரென்ஸ்கி நகரவைத்திருந்த படைப்பிரிவுகள், கிளர்ந்தெழும் மக்கள் பக்கம் வந்துள்ளன.

படைவீரர்களே கோர்னிலோவிச கெரென்ஸ்கியை செயலூக்கத்துடன் எதிர்த்துப்போரிடுங்கள் ! உங்களின் பாதுகாவலராக இருங்கள் !

இருப்புப்பாதை தொழிலாளர்கள் பெட்ரோகிராட்டுக்கு எதிராக கெரென்ஸ்கியால் அனுப்பப்படும் துருப்புக்களின் அனைத்து இரயில்களையும் நிறுத்துங்கள் !

படைவீரர்களே, தொழிலாளர்களே மற்றும் பணியாளர்களே புரட்சியின் தலைவிதியும் ஜனநாயக அமைதியின் தலைவிதியும் உங்கள் கைகளில் !

புரட்சி நீடு வாழ்க !

(ஆதாரம் : வி.ஐ.லெனின், நூல் திரட்டு (நியூயோர்க், இண்டர்நேஷனல் பதிப்பகத்தார், 1934), தொகுதி. XXVI, பக்கம். 247-248)