ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

“Time is quickly running out”
Trump threatens China over North Korea and trade

“நேரம் வெகுவாக குறைந்து கொண்டிருக்கிறது”

வட கொரியா மற்றும் வர்த்தகம் குறித்து சீனாவை ட்ரம்ப் அச்சுறுத்துகிறார்

By James Cogan
10 November 2017

நேற்று, டொனால்ட் ட்ரம்புக்கு சீன ஆட்சி வழங்கிய பெரும் அரசு மரியாதையும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அவரது மனைவியின் ஆர்வம் நிறைந்த முகஸ்துதியிலான பிந்தைய கலந்துரையாடலும், அமெரிக்க ஜனாதிபதி வட கொரியாவிற்கு எதிராக ஒரு புதிய அச்சுறுத்தலை விடுப்பதையோ, அமெரிக்க பெருநிறுவனங்களுக்கு பாரிய பொருளாதார சலுகைகளை வழங்குமாறு சீனாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுப்பதையோ தடுக்க முடியவில்லை.

ட்ரம்ப் நேற்று மாலையில் டியானான்மென் சதுக்கத்தில் உள்ள பெரும் மக்கள் அரங்கத்தில் வைத்து, ஜனாதிபதி ஜி இன் அமர்வுடன் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயரடுக்கினர் மத்தியில் உரையாற்றினார்.

ட்ரம்பின் மற்ற உரைகளுடன் ஒப்பிடுகையில், அவரது தொனியையும் சொல்லாட்சியும் அளவிடுகையில், அங்கு அவராற்றிய உரையின் உள்ளடக்கம் கூட ஆத்திரமூட்டுவதாகவும், அச்சுறுத்துவதாகவும் இருந்தது. வட கொரியாவின் சிறிய அணுசக்தி ஆயுதங்கள் ஒரு இருப்பிற்கே அபாயகரமாக உள்ளது என்றொரு போலித்தனமான சாக்குப்போக்கில், அமெரிக்க ஏகாதிபத்தியம் கொரிய தீபகற்பத்தின் மீதான ஒரு பேரழிவுகர போரைத் தொடுக்க தயாராகி வருகிறது.

ட்ரம்ப் பின்வருமாறு அறிவித்தார்: “வட கொரியாவின் முழுமையான மற்றும் நிரந்தரமான அணுஆயுத ஒழிப்புக்கு அமெரிக்கா உறுதியளிக்கிறது... இந்த முரட்டுத்தனமான ஆட்சி அதன் அணுஆயுதங்களை கொண்டு உலகை அச்சுறுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்த அனைத்து நாடுகளும் ஒருங்கிணைய வேண்டும்.”

“நேரம் வெகுவாக குறைந்து கொண்டிருக்கிறது. நாம் வேகமாக செயல்பட வேண்டும், அதிலும் சீனா, வேறெவரையும் விட இந்த பிரச்சினை குறித்து மிக வேகமாகவும், அதிக திறத்துடனும் செயல்படும் என நம்புகிறோம்.”

“இந்த சாத்தியமான மிகவும் துயரமான சூழ்நிலைக்கு கடிவாளமிட உதவுவதற்கு நான் ரஷ்யாவையும் துணைக்கு அழைக்கிறேன்.”

அமெரிக்க ஏகாதிபத்தியம், ஒரு “துயரமான சூழ்நிலையை” அல்லது மிகத் துல்லியமாக கூறுவதானால், பேரழிவுகரமான இறப்பையும் அழிவையும் உருவாக்க தயார்நிலையில் உள்ளது. கொரிய தீபகற்பத்தின் கடலோர பகுதிகளில், கடல்வழி ஏவுகணைகளை தாங்கிய நீர்மூழ்கிக்கப்பல்கள் மற்றும் தெரியாத எண்ணிக்கையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகளுடன் கூடிய ஒஹியோ வகை நீர்மூழ்கிக்கப்பல்கள் ஆகியவற்றுடன் இணைந்து, மூன்று விமானந்தாங்கி கப்பல்கள் போர்க்கால குழுக்களுடன் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தென் கொரியா, ஜப்பான், குவாம் மற்றும் அலாஸ்காவில் நூற்றுக்கணக்கான விமானப்படை ஜெட் போர் விமானங்களும், டசின் கணக்கான தொலை தூர குண்டு வீசிகளும் தயார் நிலையில் உள்ளன.

தசாப்த காலத்திற்கும் மேலாக மூன்று விமானந்தாங்கி கப்பல்களை ஈடுபடுத்தி நடத்தப்பட்டுவரும் முதல் கூட்டு கடற்படை பயிற்சிகளை கடற்படைக்குரிய போர்க்கப்பல்களின் தொகுப்பு நவம்பர் 11 முதல் 14 வரை நடத்தும். “நேரம் விரைவாக வெகுவாக குறைந்து கொண்டிருக்கிறது,” என்ற ட்ரம்பின் அறிக்கை, இப்போர்க்கப்பல்களில் இரண்டை மிக நீண்ட காலத்திற்கு கிழக்கு ஆசியாவில் நிறுத்திவைக்க முடியாது என்ற நிலைமையில் குறிப்பாக ஆபத்தானது. அதில் ஒன்றான USS Theodore Roosevelt என்ற போர்க்கப்பல் பாரசீக வளைகுடாவிற்கு கடந்து செல்லும் ஒரு பகுதியில் மட்டுமே தங்கியிருக்கின்றது. மற்றொரு போர்க்கால குழுவான USS Nimitz, ஜூன் முதல் செயல்பாட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது, மேலும் பராமரிப்புக்காகவும், ஓய்வுக்காகவும் அதன் தளமான அமெரிக்க மேற்கு கடற்கரைக்கு அதனை திருப்பியனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம், பேச்சுவார்த்தைகளுக்கும் மற்றும் முடக்கும் பொருளாதார தடைகளை தளர்த்துவதற்கும் பரிசீலிப்பதற்கு முன்னர், “முழுமையான நிரூபிக்கக்கூடிய அணுஆயுத ஒழிப்பு” என்ற அமெரிக்காவின் இறுதி எச்சரிக்கையை நிராகரிப்பதாக வட கொரியா ஏற்கனவே சமிக்ஞை செய்துவிட்டது. வட கொரிய அதிகாரி ஒருவர் CNN செய்தி ஊடகத்திற்கு பின்வருமாறு தெரிவித்தார்: “அந்த பைத்தியக்கார நாய் (ட்ரம்ப்) என்ன சொன்னாலும் நாங்கள் கவலைப்படவில்லை, ஏனெனில் நாங்கள் போதுமான அளவு கேட்டுவிட்டோம்.” ஈராக்கும் லிபியாவும் இதேபோன்ற அமெரிக்க கோரிக்கைகளுக்கு அடிபணிந்தன. ஆனால் அவர்களது நாடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மற்றும் அவர்களது தலைமைகள் அகற்றப்பட்டதிலேயை முடிந்தது.

இந்த காட்சிகளின் பின்னணியில், ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஏதேனுமொரு வடிவிலான சரணடைதலை உருவாக்க கிம் ஜோங் உன் தலைமையிலான வட கொரிய உயரடுக்கிற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக அமெரிக்க, தென் கொரிய, சீன, ரஷ்ய மற்றும் ஏனைய அதிகாரிகளை ஈடுபடுத்தும் தீவிர இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றனவா என்பதில் சிறு சந்தேகம் உள்ளது.

அமெரிக்க இராணுவத்திற்குள்ளே கூட போரின் விளைவுகளைப் பற்றி நடுக்கம் உள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தினால் கூறப்பட்ட இலக்குகளை அடைவதற்கு, வட கொரியா மீதான “தரைவழி படையெடுப்பு” ஒன்று மட்டும்தான் ஒரே வழி என்று பென்டகன் தயாரித்த ஒரு அறிக்கை எச்சரித்தது.

ஒரு படையெடுப்புக்கு நூறாயிரக்கணக்கான துருப்புக்கள் தேவைப்படும் என்பதோடு, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நிகழ்ந்த சமீபத்திய அனுபவத்தையும், மற்றும் கொரிய வரலாற்றையும் அடிப்படையாக வைத்துப் பார்த்தால், ஆக்கிரமிப்பு எதிர்ப்பு கிளர்ச்சியை அடக்குவதற்கு நீண்ட மற்றும் இரத்தக்களரியிலான நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டியிருக்கும். நிதிச் செலவு டிரில்லியன் கணக்கிலான டாலர்களுக்கு இட்டுச் செல்லும். மனித விலை கொடுப்போ மில்லியன் கணக்கான உயிர்களாக இல்லாவிட்டாலும் கூட, நூறாயிரக்கணக்கான உயிர்களாக இருக்கும்.

இந்த அப்பட்டமான உண்மை, 1945 ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல் முறையாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் அபாயத்தை மட்டுமே அதிகரிக்கிறது.

வட கொரிய மக்களின் “சுதந்திரம்” ஒருபுறம் இருக்கட்டும், வட கொரியாவிற்கு எதிரான யுத்த ஆபத்து அதன் அணுஆயுத திட்டம் குறித்த அக்கறையிலிருந்து ஊக்குவிக்கப்படவில்லை. எனினும், ஆசிய பசிபிக்கிலும், சர்வதேச ரீதியிலும் மூலோபாய மற்றும் பொருளாதார சக்திகளின் போட்டி மையமாக உருவெடுக்கும் சீனாவின் தற்போதை எழுச்சியை தலைகீழாக மாற்ற இராணுவ வலிமையை பயன்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் திட்டமிடப்பட்ட மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவே இது உள்ளது.

பெய்ஜிங்கில் ட்ரம்ப் ஆற்றிய நேற்றைய உரை, அமெரிக்காவினால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் ஆக்கிரமிப்பு போர்கள், இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய அதன் பொருளாதார மற்றும் மூலோபாய ஆதிக்கத்தின் சரிவிற்கு முட்டுக்கொடுப்பதற்காகவே அமெரிக்க ஆளும் உயரடுக்கினரின் உறுதிப்பாட்டினால் உந்தப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டியது. அத்துடன் அவர், சீனா தனது பொருளாதாரத்தை அமெரிக்க வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கவேண்டும் என்ற மறைமுகமான அச்சுறுத்தல்களை விடுத்து, கொரிய தீபகற்பம் மீதான ஒரு போரை தொடுப்பதன் மூலமாக கிழக்கு ஆசியாவை ஸ்திரமற்ற தன்மைக்குள்ளும், கொந்தளிப்பிற்குள்ளும் மூழ்கடிப்பதற்கான அவரது அச்சுறுத்தலையும் சேர்த்து விடுத்தார்.

ட்ரம்ப், ஜி ஜின்பிங் மற்றும் அங்கு கூடியிருந்த CCP பிரமுகர்களிடம், சீனாவுடனான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறை, “ஒரு வருடத்திற்கு 500 பில்லியன் டாலரை விட மிக அதிகமாக” இருந்ததாக, அதாவது 2016 ஆம் ஆண்டில் 347 பில்லியன் டாலர் என்றிருந்த உத்தியோகபூர்வ புள்ளிவிபரத்தை காட்டிலும் மிக அதிகமாக இருந்ததெனக் கூறினார்.

“சந்தை வெற்றிக்கான தடைகளுடன் கூடிய, இந்த பற்றாக்குறையை இயக்குவிக்கும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் பற்றி நாம் உடனடியாக கவனம்செலுத்த வேண்டும்,” என வலியுறுத்தினார். மேலும், “அமெரிக்காவும் அதன் நிறுவனங்களுமே குறைந்தபட்சம் 300 பில்லியன் டாலர் தொகையை ஒரு வருடத்திற்கு விலை கொடுக்கின்றதான கட்டாய தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அறிவுசார் சொத்து திருட்டு ஆகியவை குறித்து உண்மையிலேயே நாம் கவனம்செலுத்த வேண்டும்….” என்றும் கூறினார்.

“நாம் இதை மாற்ற வேண்டும்,” “ஏனெனில் நமது பெரிய அமெரிக்க நிறுவனங்களுக்காக மட்டும் வெறுமனே இது வேலை செய்யாது, மேலும் நமது சிறந்த அமெரிக்க தொழிலாளர்களுக்காகவும் இது வேலை செய்யாது” என்றவர் நிறைவு செய்தார்.

“நான் சீனாவை குற்றம்சாட்டவில்லை” என்றும், வர்த்தக பற்றாக்குறைக்கு பொறுப்பான கடந்த நிர்வாகங்களை குற்றம்சாட்டுவதன் மூலம் உள்நாட்டு அரசியல் மதிப்பீடுகளை பெறுவதற்கே நான் முயற்சித்தேன் என ட்ரம்ப் அறிவித்தார். இருப்பினும், உண்மை என்னவென்றால், ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு” என்ற இராணுவ கொள்கைக்கும், மற்றும் அதனால் முன்மொழியப்பட்ட Trans-Pacific Partnership (TPP) வர்த்தக ஆதரவளிப்போர் தொகுப்பிலுள்ள அங்கத்துவ விதிமுறைகளுக்கும் உயிரூட்டுவதாக பெய்ஜிங்கிற்கு எதிரான அதே மோதல் நிலைப்பாடு தான் அவரது உரையில் அடங்கியிருந்தது.

சீன உள்நாட்டு சந்தைகளிலும் மற்றும் மிகவும் சர்ச்சைக்குரியதான அதன் வங்கி மற்றும் நிதி அமைப்புகள் உள்ளிட்டவைகளிலும் போட்டியிடும் அமெரிக்க பெருநிறுவனங்கள் மீதான தனது தடைகளை பெய்ஜிங் நீக்கிய பின்னரே TPP இல் அது இணைந்து கொள்ள முடியும் என ஒபாமா வலியுறுத்தி இருந்தார். மேலும் அவரது நிர்வாகம், சீனா தனது அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை முடுக்கிவிடவும், மற்றும் அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் இருக்கும் அறிவார்ந்த சொத்துரிமைகளுக்கான அதே பாதுகாப்பை சட்டமாக்கவும் கோரிக்கை விடுத்திருந்தது. காப்புரிமைகளின் கட்டுப்பாடு, அமெரிக்க அடிப்படையிலான தொழில்நுட்பம், மருந்துகள் மற்றும் இதர கூட்டு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதில் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் வருவாய் போக்கை உறுதி செய்கிறது.

ட்ரம்ப் TPP ஐ நிராகரித்துவிட்டார், என்றாலும் சுங்க மற்றும் வர்த்தக யுத்த அச்சுறுத்தலை விடுப்பது மற்றும் சீன அடிப்படையிலான பெருநிறுவனங்களின் மீதான ஏனைய பொருளாதாரத் தடைகளை சுமத்துவது போன்ற பிறவழிகளில் ஒபாமாவை போல அதே முடிவுகளைத் தேட முனைகிறார். அவரது பெய்ஜிங் கருத்துக்கள், வியட்நாம், டா நாங்கில் இன்று தொடங்கும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அரங்கத்தில் (Aisa Pacific Economic Cooperation (APEC) அவர் அமெரிக்க பெருநிறுவன நலன்களுக்கான சலுகைகள் குறித்த கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார் என்பதை தெரிவித்தன.

அதே நேரத்தில், அவரது நிர்வாகம் “முன்னெடுப்பு” அல்லது “மறுசீரமைப்பு” போன்ற வார்த்தைகளை கைவிட்டது, 2011 இல் ஒபாமாவின் கீழ் ஆசிய பிராந்தியத்தில் தொடங்கப்பட்டதான அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படையின் 60 சதவிகிதத்தை மையப்படுத்தி இது தொடர்கிறது. இந்த இராணுவ கட்டமைப்பின் பின்னால் இருக்கும் மூலோபாய நியதி என்பது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சீன முதலாளித்துவ செல்வந்த தட்டினருக்கும் இடையிலான பொருளாதார போட்டி இறுதியில் மோதல்களுக்கும் மற்றும் இரு அணுஆயுத வல்லரசுகளுக்கு இடையேயான போருக்கான சாத்தியக்கூறுகளுக்கும் வழிவகுக்கும் என்பது குறித்த ஒரு கணக்கீடாகும்.

சிறிய நாடான வட கொரியாவில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவும் மற்றும் அமெரிக்காவுடன் இணக்கமாகவுள்ள தென் கொரியவிற்குள் அதனை இணைக்கவும் அதன் அணுஆயுதங்களை சாக்குப்போக்காக பயன்படுத்தும் உந்துதலின் பின்னணியில் இறுதியில் சீனாவுடனான ஒரு மோதலுக்கான தயாரிப்புக்கள் மட்டுமே உள்ளன. இத்தகைய விளைவு, அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி படையினர் சீனாவின் வடகிழக்கு எல்லை வழியாக தீபகற்பத்தினுள் நேரடியாக புகுவதற்கான நிலைமைகளை உருவாக்கும்.

1950 இல், இவ்வாறான ஒன்று நடைபெறுவதை துல்லியமாக தடுக்கும் பொருட்டு, அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு படையிலிருந்து வட கொரியாவை பாதுகாக்க நூறாயிரக்கணக்கான சீன துருப்புக்கள் அனுப்பப்பட்டன.