ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Putin stages “mission accomplished” visit to Syria

புட்டின் சிரியாவுக்கு “பணி நிறைவேற்றப்பட்டது” என்ற பயணத்தை மேற்கொள்கிறார்  

By Bill Van Auken
12 December 2017

திங்களன்று, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சிரியாவுக்கு திடீரென விஜயம் செய்து, நாட்டின் கடற்கரை மாகாணமான லட்டாக்கியாவில் உள்ள Hmeimim விமானத் தளத்தில் ரஷ்ய துருப்புக்கள் முன்னிலையில் ஒரு புகழ் பாடும் உரையை நிகழ்த்தியதோடு, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தை சந்தித்துப் பேசினார்.  

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பிருந்து அசாத் கேட்டுக்கொண்டதன் பேரில் சிரியாவிற்குள் ரஷ்யா தலையிட்டு விமான உதவியையும் மற்றும் பிற உதவிகளையும் வழங்கியமை, சிஐஏ, துருக்கி, சவூதி அரேபியா மற்றும் சன்னி வளைகுடா எண்ணெய் முடியாட்சிகள் ஆகியவற்றின் மூலமாக ஆயுதங்களையும், நிதியுதவியையும் பெற்றிருந்த அல் கொய்தாவுடன் இணைந்த “போராளிகள்” அடைந்திருந்த செல்வாக்கை மாற்றுவதிலுள்ள நெருக்கடியை நிரூபித்தது.      

ஈராக் மற்றும் சிரிய இஸ்லாமிய அரசின் (Islamic State of Iraq and Syria-ISIS) மீதான ஒரு “முற்றுமுழுதான வெற்றியை” குறித்து அவரும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் அறிவித்து சில நாட்களுக்குப் பின்னர் புட்டினின் விஜயம் இருந்தது. இவ்விஜயம், சிரியாவின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் கிழக்கு டெய்ர் ஏஜோர் மாகாணத்தில் உள்ள யூப்ரடீஸ் ஆற்றின் (Euphrates River) குறுக்கேயுள்ள ஒரு சில சிறிய பகுதிகளுக்கும் சென்று முடிவடைந்தது.

சிரியாவில் இருந்து ரஷ்ய இராணுவப் பிரிவின் “ஒரு கணிசமான பகுதியை” மீளப்பெற இராணுவத்திற்கு உத்திரவிட்டுள்ளதாக புட்டின் தெரிவித்தார். அதே நேரத்தில், 2015 வீழ்ச்சிக்குப் பின்னர், அந்நாட்டில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையமாக இருந்துவரும் Hmeimim விமானத் தளத்தில் இராணுவம் தக்கவைத்துக் கொள்ளப்படும் என்பதையும், அத்துடன் சிரியாவின் மத்தியதரைக்கடல் துறைமுக நகரமான டார்ட்டஸில் அமைந்திருக்கும் ரஷ்ய கடற்படைத்தளம் தொடர்ந்து இயங்கும் என்பதையும் மாஸ்கோ தெளிவுபடுத்தியுள்ளது.

ரஷ்ய துருப்புக்களின் முன்னிலையில் புட்டின் ஆற்றிய உரையில், “தீவிரவாதிகள் மீண்டும் தலை தூக்குவார்களானால், அவர்கள் முன்னெப்போதும் கண்டிராத வகையில், அவர்களை நாங்கள் முழுவீச்சுடன் தாக்குவோம்” என்று அறிவித்தார்.

புட்டினின் சிரியாவிற்கான பயணத் திட்டம் அவரது விமானம் அங்கு சென்று தரையிறங்கும் வரை இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மற்றுமொரு ஆறு ஆண்டு காலத்திற்கு புட்டினை பதவியில் அமர்த்திய ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு வெறும் மூன்று மாதங்களுக்கு முன்னர் வருகை தந்த போது, ரஷ்ய ஜனாதிபதியின் உரை, உலக அரங்கில் ரஷ்யாவின் தேசிய நலன்களுக்கான ஒரு பாதுகாவலனாக தனது நற்பெயரை வளர்த்துக் கொள்ளும் நோக்கம் கொண்டதாக, “பணி நிறைவேற்றப்பட்டது” என்ற கருத்தாக்கத்தைக் கொண்டிருந்தது.    

ரஷ்யாவின் தலையீடு சிரியாவின் இறையாண்மையை பாதுகாத்து, 2011 இல் தொடங்கிய இரத்தம் தோய்ந்த போரை முடிவுக்குக் கொண்டுவந்தது, ஆயினும் அவை சந்தேகத்திற்கு இடமின்றி காலத்திற்கு முற்பட்டதாகவே உள்ளன என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்க தலையீட்டை சட்டவிரோதமான ஆக்கிரமிப்பாக சிரிய அரசாங்கம் கண்டனம் செய்கின்ற நிலையில், சிரியாவில் எஞ்சியுள்ள ரஷ்ய படைகளைத் தவிர கூடுதலாக, அந்நாட்டில் முழுமையாக 2,000 துருப்புக்களை நிலைநிறுத்துவதை சமீபத்தில் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது, அதேவேளையில் அவற்றை திரும்பப் பெறுவதற்கான நோக்கம் எதுவுமில்லை என்றும் குறிப்பிட்டுக் காட்டுகிறது. துருக்கி அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்கள், சிரிய பிராந்தியத்திற்குள் குறைந்தபட்சம் ஒரு டசின் தளங்களை பென்டகன் அமைத்துள்ளதை சுட்டிக்காட்டுகின்றது. 

துருப்புக்களை திரும்பப் பெறும் அடிப்படையிலான மாஸ்கோவின் வழிகாட்டுதலை அது பின்பற்றாது என்பதை தெளிவுபடுத்தும் போது, வெளிப்படையான அவநம்பிக்கையுடன் புட்டினின் அறிவிப்புக்கு பென்டகன் விடையிறுத்தது.

“அவர்களது படைகளை அகற்றுவது என்பது பெரும்பாலும் உண்மையான துருப்பு குறைப்புக்களுடன் தொடர்புடையவை அல்ல என்பது பற்றிய ரஷ்ய கருத்துக்களையும், மேலும் அவை சிரியாவில் அமெரிக்காவின் முன்னுரிமைகளை பாதிக்காது,” என்பதையும் பென்டகன் செய்தித் தொடர்பாளர் மஜ். அட்ரியன் ரான்கினே-கால்லோவே கூறினார். 

அமெரிக்க துருப்புக்கள், “ISIS ஐ இராணுவ ரீதியாக முற்றிலும் தோல்வியுற செய்யும் நோக்கத்தில் போராடும் உள்ளூர் படைகளுக்கு ஆதரவளித்து, விடுவிக்கப்பட்ட பிராந்தியத்தை ஸ்திரமாக்கும் வகையிலும், இடம்பெயர்ந்து சென்ற சிரியர்களையும் அகதிகளையும் திரும்பிவர அனுமதிக்கும் வகையில் சிரியாவில் தொடர்ந்து செயலாற்றும்” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ரஷ்ய படைகளை திரும்பப் பெறுவதற்கு இரண்டாவது முறையாக புடின் அறிவித்துள்ளதை இது குறிப்பிடுகிறது. 2016 மார்ச்சில், சிரியாவில் மாஸ்கோவின் பணி “ஒட்டுமொத்தமாக நிறைவேற்றப்பட்டது,” என்பது அந்நாட்டில் உள்ள ரஷ்ய இராணுவ படையின் “முக்கிய பகுதியை” வெளியேற்றும் சாத்தியத்தை உருவாக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி அறிவித்தார். இருப்பினும், குறிப்பாக கிழக்கு அலெப்போவில் இஸ்லாமிய “கிளர்ச்சி” படைகளை தோற்கடிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதை முன்னிட்டு, அடுத்தடுத்த மாதங்களில் ரஷ்யாவின் தலையீடு தீவிரமடைந்தது.

அமெரிக்க மற்றும் மேற்கத்திய பெருநிறுவன செய்தி ஊடகங்கள், ரஷ்யாவின் குண்டுவீச்சு நடவடிக்கைகளினால் ஏற்பட்ட பொது மக்கள் இறப்புக்களுக்காக அதனை கண்டனம் செய்து ஒரு பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொண்டது. அதேவேளையில், அல்-கொய்தாவின் சிரிய தொடர்புடைய கூட்டணியில் இயங்கும் சிஐஏ ஆதரவிலான கிளர்ச்சியாளர்களின் பெரும்பகுதியை உள்ளடக்கி, “அரசாங்க எதிர்ப்புக்கு எதிரானதாக” விவரிக்கப்பட்ட தாக்குதல் இலக்குகளை கொண்டிருப்பது குறித்தும் மாஸ்கோவை வாஷிங்டன் கண்டனம் செய்தது.

சிரிய-ஈராக்கிய எல்லைகளின் இரு பக்கங்களிலும் அமெரிக்கா அதன் சொந்த வான் போரை அதிகரித்துவரும் நிலைமை, மிக அதிக எண்ணிக்கையிலான இறப்புக்களுக்கு இட்டுச்செல்வது, பொதுமக்களின் இறப்புக்கள் குறித்த ஊடகங்களின் கவலையை விரைவாக சிதறடித்தது. 

மாஸ்கோவும் வாஷிங்டனும் சிரியாவில் அவர்களது தலையீடுகள் குறிப்பாக ISIS போன்ற பயங்கரவாதத்தை எதிர்க்கும் நோக்கம் கொண்டது என்று கூறுகின்ற போதிலும், யதார்த்தம் என்னவென்றால், அவர்கள் வேறுபட்ட மற்றும் முற்றிலும் எதிர்மாறான நோக்கங்களை கொண்டுள்ளனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பொறுத்தவரை, 2011 முதல் தற்சமயம் வரையிலான அதன் இலக்கு, டமாஸ்கஸில் ஒரு அமெரிக்க கைப்பாவை அரசாங்கத்தை திணிக்கும் வகையில் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்ததோடு, மூலோபாய ரீதியாக சிரியாவின் இரு முக்கிய நட்பு நாடுகளான ஈரான் மற்றும் ரஷ்யாவின் பிராந்திய செல்வாக்கை பலவீனப்படுத்தி வருகிறது. 

சிரியாவில் அல் கொய்தாவுடன் இணைந்த மற்றும் ISIS போன்ற இஸ்லாமிய போராளிகளுடன் தொடர்புடைய அல்-நுஸ்ரா முன்னணி அமைப்பு ஆதிக்கம் செலுத்திய “கிளர்ச்சியாளர்களின்” ஊக்குவிப்பு, நிதி மற்றும் ஆயுத உதவி மூலமாக இந்த இலக்கை அடைவதற்கான முயற்சி ஒரு தோல்வியில் முடிவடைந்தது.

அதனைத் தொடர்ந்து, ISIS இற்கு எதிரான போரில், சிரிய குர்திஷ் போராளிகளான YPG இன் கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமான ஒரு பிரதிநிதி படையை உள்ளடக்கிய, சிரிய ஜனநாயக படைகளுக்கு (Syrian Democratic Forces-SDF) ஆதரவளிக்கும் சாக்குப்போக்கில் அந்த நாட்டில் வாஷிங்டன் தனது நேரடி இராணுவத் தலையீட்டை நிலையாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், BBC மற்றும் SDF இன் முன்னாள் தலைமை செய்தித் தொடர்பாளர் மூலமாக சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பைப் போன்று, சிரிய அரசாங்க துருப்புக்களின் முன்னேற்றத்திற்கு எதிராக அவர்களை திசை திருப்ப முற்றுகையிடப்பட்ட நகரங்களில் இருந்து ISIS படைகளை வெளியேற்ற பென்டகனும் அதன் பிரதிநிதிகளும் மீண்டும் மீண்டும் ஏற்பாடு செய்துள்ளனர்.

மாஸ்கோவின் தலையீட்டின் நோக்கம் மத்திய கிழக்கில் அதன் முக்கிய அரேபிய நட்பு நாட்டை தாங்கிப் பிடிப்பதாகும். அசாத்தின் ஆட்சியை தூக்கியெறியும் எதிர்பார்ப்பும் மற்றும் அமெரிக்க கைப்பாவை அரசாங்கத் திணிப்பும் மேற்கு ஐரோப்பாவை நோக்கிய ஒரு எரிகுழாய் திட்டத்தை செயல்படுத்த சிரிய நிலப்பகுதியை கத்தார் அணுகும் வகையிலான ஒரு உடன்பாட்டிற்கு வழிவகுக்கும் என்பதும் முக்கிய கவலையாக இருந்தது. ரஷ்யாவின் மிகப்பெரிய நிறுவனமான காஸ்பரோம் மற்றும் புட்டின் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் முதலாளித்துவ தன்னலக்குழுக்களின் இலாப நலன்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அத்தகைய உடன்பாட்டிற்கான கத்தார் முடியாட்சியின் கோரிக்கையை அசாத் நிராகரித்துவிட்டார்.

அசாத் ஆட்சி தூக்கிவீசப்படுவது என்பது, ரஷ்ய கூட்டாட்சியை சீர்குலைப்பதற்கும், இறுதியாக துண்டாடுவதற்கும் நோக்கம் கொண்டு, சிரியாவில் சிஐஏ ஆதரவிலான ஒரு பிரச்சாரத்தை தொடங்குவதற்கு ரஷ்யாவின் காகசஸ் பிராந்தியத்தில் இருந்து பெறப்பட்ட அல்-கொய்தாவுடன் இணைந்த இஸ்லாமிய போராளிகளுக்கான ஒரு தளமாக மாறிவரும் விளைவை கொடுக்கும் என்று ரஷ்யாவும் நியாயபூர்வமாக அஞ்சியது.

சிரியாவில் மாஸ்கோவின் தலையீட்டிற்கு இந்த மறுக்கமுடியாத தற்காப்பு அம்சம் இருக்கின்ற போதிலும், ரஷ்யாவை இராணுவ ரீதியாக சுற்றிவளைத்து அடிபணியச் செய்ய அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளின் ஒருங்கிணைந்த பிரச்சாரத்தின் கீழ் இது தொடங்கப்பட்டது. இது, சிரியாவை சீர்குலைக்கும் நெருக்கடிக்கு எந்தவொரு முற்போக்கான தீர்வையோ அல்லது சிரிய தொழிலாள வர்க்கத்திற்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் எந்தவித முன்னோக்கி செல்லும் பாதையையோ வழங்கவில்லை.

இந்த பிராந்தியத்தில் ரஷ்ய தலையீட்டின் குணாம்சம், எகிப்திய சர்வாதிகாரி ஜெனரல் அப்தெல் பத்தா எல்-சிசி உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கெய்ரோவில் அவரை சந்திக்கும் பொருட்டு புட்டின் அடுத்தடுத்து இருமுறை மேற்கொண்ட மத்திய கிழக்கு பயணங்களையும், மேலும் தொடர்ந்து துருக்கியின் எதேச்சதிகார ஜனாதிபதி ரெசெப் டாயிப் எர்டோகன் உடனான ஒரு சந்திப்புக்கு அங்காரவுக்கு பயணம் செய்ததையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ரஷ்ய போர் விமானங்கள் எகிப்திய தளங்களை பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு உடன்பாட்டை சிசி ஆட்சியுடன் மாஸ்கோ ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுவது, வாஷிங்டனை மேலும் விரோதமாக்குகிறது. அப்போது கெய்ரோவில், எகிப்தின் முதல் அணுசக்தி ஆலை ஒன்றை கட்டமைக்க ரஷ்யாவுக்கான ஒரு ஒப்பந்தத்தில் புட்டின் கையெழுத்திட்டார்.

இதற்கிடையில் துருக்கியில் எர்டோகன், ரஷ்ய S-400 ரக தரையிலிருந்து-விண்ணுக்கு பாயும் ஏவுகணை அமைப்பு ஒன்றை அங்காரா வாங்குவது குறித்து நடத்தப்பட்ட இறுதி பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது என்று அறிவித்தார். நேட்டோ வான்வழி பாதுகாப்பு வலைப்பின்னலில் ஒருங்கிணைக்கப்பட முடியாத இந்த அமைப்பை நிறுவுவதற்கான திட்டம், துருக்கி மற்றும் அதன் முந்தைய மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு இடையிலான பதட்டங்களை மேலும் அதிகரித்துள்ளது.  

இரண்டு பக்கங்களின் வெளிப்படையான நோக்கமும், ISIS இன் தோல்வி தான் என்பது உணரப்பட்டு வருகின்ற நிலையில், உலகின் இரண்டு முக்கிய அணுவாயுத சக்திகளுக்கு இடையே சிரியாவில் ஒரு நேரடி மோதலை விளைவிக்கும் அச்சுறுத்தல் எப்போதும் மிக தீவிரமாக வளர்ந்து வருகிறது. சமீபத்திய வாரங்களில், அவர்கள் ஒரு ரஷ்ய ஜெட் விமானத்தை சுட்டுவீழ்த்தக் கூடும் என்று பென்டகன் எச்சரிக்கை விடுப்பதுடன், அமெரிக்க மற்றும் ரஷ்ய இராணுவத்தினர் ஒருவருக்கொருவர், யூப்ரடீஸ் நதி பள்ளத்தாக்கின் மீது போர் விமானங்கள் மூலம் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிகழ்த்தியுள்ளனர்.

வாஷிங்டன் மற்றும் மாஸ்கோவுக்கு இடையில் அணுவாயுத பதட்டங்கள் பெருகியமுறையில் அபாயகரமாக அதிகரித்துவருவதன் பின்னணிக்கு எதிராக இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. கடந்த வெள்ளியன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை, இடைநிலை- தூர அணுவாயுதப் படை உடன்படிக்கை (Intermediate-Range Nuclear Forces-INF Treaty) கையெழுத்தாகி 30வது வருட நிறைவைப் பற்றி குறிப்பிடும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதில், ட்ரம்ப் நிர்வாகம், உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு இணங்குமாறு மாஸ்கோவை “தூண்டிவிட நோக்கம் கொண்ட பொருளாதார மற்றும் இராணுவ நடவடிக்கைகளை பின்பற்றி” வருவதாக இது தெரிவிக்கிறது.  

ஒப்பந்தத்தை முற்றிலும் அகற்றுவதற்கும், மற்றும் அணுசக்தி மோதலுக்கு வழிவகுக்கும் ஒரு பாதையில் இறங்குவதற்குமான ஒரு சாக்குப்போக்காக கூறப்படும் ரஷ்ய மீறல்களை செயல்படுத்த வாஷிங்டன் தயாராக உள்ளது என்பதை இந்த அறிக்கை தெளிவுபடுத்த முயன்றது. பென்டகன், நம்மையும் நமது நட்பு நாடுகளையும் பாதுகாக்க அமெரிக்காவிற்கு உதவக்கூடிய வழமையான, தரையில்-தொடங்கப்பட்ட, இடைநிலை-தொலைதூர ஏவுகணை அமைப்புகள் உள்ளிட்ட, “இராணுவ கருத்துக்கள் மற்றும் தேர்வுகளைப் பற்றி ஒரு மதிப்பாய்வை” நடத்திக் கொண்டிருக்கிறது என்று வெளியுறவுத்துறை எச்சரித்தது.