ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

As the media hails Lt. General McMaster, the military strengthens its grip on the government

ஊடகங்கள் லெப்டினென்ட் ஜெனரல் மெக்மாஸ்டரை புகழ்கையில், இராணுவம் அரசு மீதான அதன் பிடியை பலப்படுத்துகிறது

Patrick Martin
23 February 2017

பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள்-தளபதி மைக்கெல் ஃபிளினுக்கு பதிலாக லெப்டினென்ட் ஜெனரல் எச். ஆர். மெக்மாஸ்டரை அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக டொனால்ட் ட்ரம்ப் தேர்வு செய்தமைக்கு, அமெரிக்க ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும் நடைமுறையளவில் முழுஅளவிலான பாராட்டுக்களுடன் விடையிறுத்துள்ளன.

ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருதரப்பிலிருந்தும், அத்துடன் பெருநிறுவன ஊடகங்களிடமிருந்தும் வந்த விடையிறுப்பை ஒருவர் பார்க்கையில், அவர் ஒரு "அதிமேதாவி", ஒரு "அனுபவபூர்வமான தளபதி,” ஒரு "மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்,” ஒரு "புத்திஜீவியும்" கூட என்று மெக்மாஸ்டரை விவரிப்பதற்குப் பிரயோகிக்க வேண்டிய மொழி குறித்து சிஐஏ தலைமையகங்களில் இருந்து குறிப்பு அனுப்பப்பட்டிருக்குமோ என்று தான் ஒருவர் முடிவு செய்யக்கூடும். புராதன கிரேக்க தளபதியான த்யூசிடைட்ஸ் (Thucydides) மற்றும் பிரஸ்யாவின் பெரும்தளபதியான கிளாஸ்விட்ஜ் (Clausewitz) இன் இந்த கலவையானது, ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவு கொள்கையை வழிநடத்துவதற்கு "பகுத்தறிவார்ந்த மற்றும் பலமான தீர்ப்பை" வழங்கும் என்பதே இதிலிருந்து கிடைத்திருக்கும் விளக்கமாகும்.

ஜனநாயகக் கட்சி செனட்டர் ஷெல்டன் வொயிட்ஹவுஸ் உற்சாகத்தோடு கூறுகையில், மெக்மாஸ்டர் ஒரு "வளர்த்தெடுக்கப்பட்ட அங்கத்தவர்" (card-carrying grownup) என்றார், அதேவேளையில் ஜனநாயகக் கட்சியின் நியூ யோர்க் பிரதிநிதி ஸ்டீவ் இஸ்ரேல், அவரை ஒரு "புத்திசாலியான, பகுத்தறிவார்ந்த தலைவர்" என்று அறிவித்தார். முன்னாள் ஒபாமா நிர்வாக அதிகாரியும், கிளிண்டன் ஆலோசகருமான ஜாரெட் கோஹன் (Jared Cohen) அவரை ஒரு "புத்திசாலியான மூலோபாயவாதி மற்றும் சிந்தனையாளர்" என்று அழைத்தார்.

ஊடகங்களின் பாகத்திலிருந்து, நடைமுறையளவில் ஜனநாயகக் கட்சியின் ஒரு அங்கமாக செயல்படும் நியூ யோர்க் டைம்ஸ், அதன் புதன்கிழமை தலையங்கத்துடன் அதன் குரலை வழங்கியது. உளவுத்துறை முகமைகளால் நடத்தப்பட்ட ரஷ்ய-விரோத பிரச்சாரத்தில் அப்பத்திரிகை முன்னணி பாத்திரம் வகித்திருந்த நிலையில், அதன் விடையிறுப்பு குறிப்பாக குறிப்பிடத்தக்கதாகும்.

“இப்போது லெப்டினென்ட் ஜெனரல் மெக்மாஸ்டர் அவர் வேலையைச் செய்யட்டும்” என்று அத்தலையங்கத்தின் தலைப்பே ட்ரம்ப்க்கும் மற்றும் வெள்ளை மாளிகையில் உள்ள அவரது உயர்மட்ட உதவியாளர்களுக்கும் நேரடியாக முறையிட்டது. ட்ரம்ப்பின் புதிய தளபதி "ஒரு முதிர்ச்சியான தேர்வு" என்று அது அறிவித்தது. “திருவாளர் ட்ரம்ப் அவரை சுயமாக செயல்படவிட்டு, அவர் முடிவுகளுக்குக் கீழ்படிந்தால், தீவிர கொள்கையுடையவர்களும் மற்றும் முதிர்ச்சியில்லாதவர்களும் இடம்பெற்றுள்ள ஒரு நிர்வாகத்தில் ஜெனரல் மெக்மாஸ்டர் ஒரு முக்கியமான இடைநிலை சக்தியாக விளங்குவார்,” என்று அது ஆலோசனை வழங்குமளவிற்கு சென்றது.

அந்த தலையங்கம் மெக்மாஸ்டரை ஒரு "வரலாற்றின் மாணவர்" என்றும், “இராணுவத்தின் மிகவும் திறமையுள்ள மேதாவிகள் மற்றும் மூலோபாயவாதிகளில் ஒருவர்" என்றும், மற்றும் ஈராக் போரில் "சிறந்த அமெரிக்க தளபதிகளில் ஒருவர்" என்றும் பாராட்டியது. டைம்ஸ் செய்தியின்படி, வாஷிங்டனின் வியட்நாம் போர் கொள்கை-முடிவு குறித்த மெக்மாஸ்டரின் நூல், Dereliction of Duty, “நன்கு சிந்திக்காத கொள்கைகளுடன் வழிநடத்தப்பட்ட ஜனாதிபதிகளுக்கு துணைபோனதன் விளைவுகளை எடுத்துரைக்கிறது.”

மெக்மாஸ்டரை "ஒரு நம்பிக்கையான தேர்வு: பாதுகாப்புத்துறை செயலர் ஜிம் மாட்டிஸ் ஆல் உருக்கொடுக்கப்பட்ட ஒரு மேதமை பொருந்திய வீரர், அத்துடன் அமைப்பின் அனைத்து பாகங்களையும் கூடுதலாக பார்வையில் வைப்பவர்,” மற்றும் "நிரூபிக்கப்பட்ட குதிரைப்படை அதிகாரி மற்றும் ஒரு தோற்கடிக்க முடியாத பாதுகாப்புத்துறை புத்திஜீவி", இவர் ஈராக்கில் "எதிர்கிளர்ச்சி கோட்பாட்டை சீரியமுறையில் பயன்படுத்தியவர்" என்றெல்லாம் வர்ணித்துள்ள ஒபாமா நிர்வாகத்தின் ஒரு முன்னாள் தேசிய பாதுகாப்பு உதவியாளரான ஜொநாதன் ஸ்டீவென்சன் எழுதிய ஒரு சுய-தலையங்க கட்டுரையில் டைம்ஸ் புகழுரைகளைப் பொழிகிறது.

பெரும்பாலான இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் வழமையான ரஷ்ய-விரோத கருத்தொற்றுமையோடு இணக்கமாக இருக்கும் அவரது வெளியுறவு கொள்கை கண்ணோட்டங்கள், ட்ரம்ப் நிர்வாக குழுவிற்குள், குறிப்பாக பென்டகனில் தளபதி மாட்டிஸ் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறையில் ஜெனரல் ஜோன் கெல்லி ஆழ்ந்து சிந்திக்கையில், மேலோங்கி நிற்கும் என்ற நம்பிக்கையே மெக்மாஸ்டரை புகழ்ந்துரைக்க உந்தும் உடனடி காரணமாகும்.

மிக பொதுவாக, இந்த கூட்டு வழிபாட்டு நடைமுறையானது, அமெரிக்க ஜனநாயக சிதைவின் மற்றும் அமெரிக்காவில் உள்ள சகல உத்தியோகபூர்வ அமைப்புகள் மீதும் இராணுவத்தின் அசாதாரண அதிகாரத்தினது ஒரு வெளிப்பாடாகும்.

ட்ரம்பினது தேசிய பாதுகாப்புத்துறை பதவிகளில், நான்கு உயர்மட்ட பதவிகளான பாதுகாப்புத்துறை செயலர், உள்நாட்டு பாதுகாப்புத்துறை செயலர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைமை தளபதி ஆகியவற்றை ஆக்கிரமித்துள்ள தற்போதைய மற்றும் முன்னாள் தளபதிகளின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து ஊடக பண்டிதர்களுக்கும் பத்திரிகை கட்டுரையாளர்களுக்கும் எந்த கவலையும் இல்லை, இவர்கள் இராணுவத்தின் மீதிருக்கும் படைத்துறைசாரா கட்டுப்பாடுகளின் அடிப்படை ஜனநாயக கோட்பாடுகளை மறந்துவிட்டதாக தெரிகிறது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கடமையுணர்வுடன் பதவி வகிக்க உள்ள மெக்மாஸ்டர் மீதான பாராட்டுக்கள், வியட்நாம் போர் குறித்த அவரது பகுப்பாய்வில் அவர் பெற்ற படிப்பினைகளை மேற்கோளிடுகிறது என்பது இன்றியமையாத விதத்தில் குறிப்பிடத்தக்கதாகும். ஏறத்தாழ 700,000 துருப்புகள், தெற்கு வியட்நாமில் தரைப்படை நடவடிக்கைகள் மீதான தடைகளை நீக்குவது, மற்றும் அனேகமாக சோவியத் மற்றும் சீன இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டிருக்கக்கூடிய MiG விமானப்படை தளங்கள் மற்றும் துறைமுகங்கள் உட்பட குண்டு தாக்குதல்களுக்கு வடக்கு வியட்நாமை தடையின்றி இலக்கில் வைப்பது என போர் முகப்பை "ஜெயிப்பதற்கு" அவசியமான ஆதாரவளங்களுக்கு ஜனாதிபதி லிண்டன் ஜோன்சனை உறுதியளிக்குமாறு கோர தவறியதற்காக மெக்மாஸ்டரின் நூல் முப்படைகளின் தலைமை தளபதியைக் குற்றஞ்சாட்டியது.

அவரது கருத்தியல், “பெரிய வெற்றியை அடையுங்கள், அல்லது வீட்டுக்குத் திரும்புங்கள்,” என்ற கோஷத்தால் தொகுத்தளிக்கப்பட்ட ஒரு திட்டவட்டமான அணுகுமுறைக்கு ஆதரவாக, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் "மட்டுப்படுத்தப்பட்ட போர்" உத்திகளுக்கு எதிராக வழங்கப்பட்ட ஒருவிதமான விமர்சனமாகும்.

அதுபோன்ற உத்திகள், இன்னும் பெரியளவில், வியட்நாமில் ஒரு பாரியளவிலான போர் குற்றங்களை ஏற்படுத்தி இருக்கும், உண்மையில் படிப்படியாக தீவிரப்படுத்தும் உத்திகளாலேயே அங்கே மில்லியன் கணக்கான வியட்நாமியர்கள் கொல்லப்பட்டனர், 50,000 க்கும் அதிகமான அமெரிக்க சிப்பாய்கள் கொல்லப்பட்டனர், வியட்நாம், லாவோஸ் மற்றும் கம்போடியா தரைமட்டமாக்கப்பட்டது, இவை மெக்மாஸ்டரின் ஆதரவாளர் குழுவிற்கு சிறிதும் போதுமானதாக இருக்காது போலும்.

வியட்நாம் போரின் முக்கிய குறைபாடே படைத்துறைசாரா தலைமைக்கு எதிராக இன்னும் பலமாக தங்களைத்தாங்களே தளபதிகள் பலப்படுத்திக் கொள்ள தவறியதுதான் என்ற மெக்மாஸ்டரின் வாதம் இன்னும் அதிக பிற்போக்குத்தனமாக உள்ளது. மெக்மாஸ்டரின் கண்ணோட்டத்தில், தென்கிழக்கு ஆசிய போரை விட வறுமைக்கு எதிரான போரை வெல்வதில் அதிக ஆர்வம் காட்டிய ஒரு ஜனாதிபதி, அவர்களை நிராகரிப்பதற்கு அவர்களே அனுமதித்தார்கள் என்பதை அவர்களின் "கடமை தவறல்" உள்ளடக்கி இருந்தது.

உக்ரேன் மோதலை ஆராய்ந்து, ரஷ்ய இராணுவம் மற்றும் விமானப்படைக்கு எதிரான கிழக்கு ஐரோப்பிய போர் தயாரிப்புகளுக்காக அமெரிக்க இராணுவ திட்ட நிபுணர்கள் பெறவேண்டிய படிப்பினைகள் மீதான ஓர் இராணுவ திட்டத்தில் மெக்மாஸ்டர் மிக சமீபத்திலிருந்து ஈடுபட்டுள்ளார்.

ட்ரம்ப் பதவியேற்றதற்கு பின்னர் இருந்து அரசியல் ஸ்தாபகத்திற்குள் சீறிக் கொண்டிருக்கும் மோதலுக்கும், ட்ரம்பின் ஏதேச்சதிகாரம் மற்றும் வலதுசாரி கொள்கைகளை எதிர்க்கும் மில்லியன் கணக்கான மக்களை உந்துகின்ற கவலைகளுக்கும் இடையில் எந்த சம்பந்தமும் கிடையாது என்ற உண்மையை, மெக்மாஸ்டர் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மீதான விடையிறுப்பு எடுத்துக்காட்டுகிறது. அரசு கருவிகள் மீது இராணுவ மற்றும் உளவுத்துறை முகமைகளுக்கு அதிக அதிகாரம் இருப்பது சிறப்பு என்பதே ட்ரம்பின் ஸ்தாபக விமர்சகர்களது கருத்தாக உள்ளது.

கொள்கைகளின் அர்த்தத்தில், “மிதவாத" மெக்மாஸ்டரை ஊக்குவிப்பவர்களது விருப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டால், ஓர் அணுஆயுத சக்தியான ரஷ்யா தொடர்பான அமெரிக்க இராணுவவாதத்தில் ஒரு பாரிய தீவிரப்பாடு இருக்கும். ட்ரம்பின் ஏனைய "மிதவாத" தளபதிகளை பொறுத்த வரையில், உள்நாட்டு பாதுகாப்புத்துறை தலைவர் ஜோன் கெல்லி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதலை மேற்பார்வை செய்து வருகிறார் மற்றும் தேசிய பாதுகாப்புப்படையை பலப்படுத்த நூறாயிரக் கணக்கான தேசிய பாதுகாப்புப்படையினரை ஒன்றுதிரட்டுவதற்கு அழைப்புவிடுக்கும் ஒரு குறிப்பாணையில் கையெழுத்திட்டுள்ளார். ஃபல்லூஜாவை அழித்ததற்கு பொறுப்பான ஒரு போர் குற்றவாளியான பாதுகாப்புத்துறை செயலர் மாட்டிஸ், உலக போருக்கான தயாரிப்பில் ஒரு பாரிய இராணுவ விரிவாக்கத்தை மேற்பார்வை செய்து வருகிறார்.

இது அனைத்தும் எடுத்துக்காட்டுவது, உலக சோசலிச வலைத் தளம் வலியுறுத்தியதைப் போல, ட்ரம்ப் ஏதோவொருவித ஆரோக்கியமான ஜனநாய சமூகத்திற்குள் ஆதாய நோக்கத்திற்காக குழப்பம் ஏற்படுத்த நுழைந்தவர் அல்ல. அவரது நிர்வாகம் கடந்த இருபத்தைந்து ஆண்டுகால முடிவில்லா போர்கள் மற்றும் தசாப்தகால சமூக எதிர்புரட்சியின் விளைவாகும். அமெரிக்க நிதியியல் அதிகார அடுக்கு, ஓர் ஆழ்ந்த நோய்பீடித்த சமூக ஒழுங்கமைப்பின் உச்சியில் நின்று கொண்டு, அதன் மேலாதிக்கத்தை பேணுவதற்காக போர் மற்றும் அரசு ஒடுக்குமுறை கருவிகளில் முன்பினும் அதிகமாக நேரடியாக சார்ந்துள்ளது.

இரண்டு அணுஆயுத சக்திகளான சீனா மற்றும் ரஷ்யாவுடன் சாத்தியமான இராணுவ நடவடிக்கைக்கு பெருந்திரளான மக்கள் ஆதரவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், மத்திய கிழக்கில் கூடுதல் இராணுவ சாகசங்களுக்கும் கூட பெருந்திரளான மக்களிடையே ஆதரவு கிடையாது. வெளிநாடுகளில் இன்னும் அதிக இரத்தந்தோய்ந்த ஆக்ரோஷ இராணுவ வழிவகைகள் மூலமாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்க அந்தஸ்தைப் பேணுவதற்கான உந்துதல், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு முன்னிலை தாக்குதலுடன் பிரிக்கவியலாதவாறு பிணைந்துள்ளது.