ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump orders military to prepare for world war

உலக போருக்கு ஆயத்தமாக இராணுவத்திற்கு ட்ரம்ப் உத்தரவிடுகிறார்

By Tom Eley
28 January 2017

வெள்ளிக்கிழமை அன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பென்டகனுக்கு விஜயம் செய்திருந்தபோது, சிரியாவின் மீது முடுக்கிவிடப்படும் வன்முறைக்கும் மற்றும் அணுஆயுதங்கள் உட்பட அமெரிக்க இராணுவத்தின் ஒரு பரந்தளவிலான விரிவாக்கத்துடன், "சாத்தியமான போட்டியாளர்களுடன்" போருக்கான தயாரிப்பிற்காக ஒரு நிர்வாக நடவடிக்கைக்கு அழைப்புவிட்டார். இது அணுஆயுதமேந்திய சீனாவுக்கும், ரஷ்யாவிற்கும் மற்றும் ஈரான் போன்ற "பிராந்திய சவால் விடுவோருக்கும்" விடுக்கப்படுகின்ற ஒரு குறிப்பாக உள்ளது.

"அமெரிக்க ஆயுதப்படைகளை மீண்டும் கட்டியெழுப்புதல்" எனத் தலைப்பிடப்பட்ட ஆவணத்தில் கையெழுத்திடும்போது டரம்ப், "அமெரிக்காவின் ஆயுத சேவைகளின் ஒரு பாரியளவிலான மீள்கட்டமைப்பினை தொடங்குவதற்காகவே நான் இந்த நிர்வாக நடவடிக்கையில் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கிறேன்," என்று தெரிவித்தார்.

பென்டகனுக்கு ட்ரம்பின் முதல் விஜயத்தின்போது அவர், "வெளிநாட்டு பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து அமெரிக்காவை பாதுகாத்தல்," என்ற இரண்டாவதொரு உத்தரவிலும் கையெழுத்திட்டார். இது முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் நாடுகளிலிருந்து நுழைவுரிமை மற்றும் குடியேறுவதற்கான விண்ணப்பங்களை செயலிழக்கச் செய்வதாகும். இந்த உத்தரவு, அடைக்கலம் தேடிவரும் அகதிகள், வேலை வாய்ப்பினை நாடிவரும் தொழிலாளர்கள், பள்ளிகளுக்கு வருகைதரும் மாணவர்கள், மற்றும் குடும்பங்கள் ஐக்கியப்படுதல் ஆகிய அனைத்தையும் தடுப்பதற்கு அச்சுறுத்துகின்றது. (பார்க்கவும், "முஸ்லீம் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு தடைவிதிப்பதற்கு சிரியாவின் மீதான 'பாதுகாப்பு வலையம்' என்ற நிர்வாக உத்தரவினை வெள்ளை மாளிகை வெளியிடும்")

"பிற வடிவங்களிலான இஸ்லாமிய பயங்கரவாதத்துடன்", சிரியா மற்றும் ஈராக்கில் ISIS இன் அழிவுக்காக தயார்செய்து வடிவமைக்கப்பட்ட ஒரு 30-நாள் "தயார்நிலை ஆய்வினை" நிறைவு செய்யும் விழாவில் பதவி பிரமாணம் செய்துவைக்கப்பட்ட பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மாட்டிஸை இந்த இராணுவ உத்தரவு வழிநடத்துகிறது. கடந்த வாரம், செனட் மூலமாக மாட்டிஸ் ஒரு 98-1 என்ற வாக்களிப்புடன் பதவிக்கு உறுதிசெய்யப்பட்டார்.

இந்த உத்தரவு பகிரங்கமாக வெளியிடப்படுவதற்கு முன்னர் வாஷிங்டன் போஸ்ட் க்கு கிடைத்த ஒரு பிரதியின்படி, அதன் வார்த்தைகளில், "சீனா, ரஷ்யா போன்று பொதுவாக அடையாளம் கண்டு வைத்துள்ள அமெரிக்க அதிகாரிகளின் ஒரு குழு அருகிலுள்ள பெயர் குறிப்பிடப்படாத 'சாத்தியமான’ போட்டியாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பது எப்படி என்று ஆய்வு செய்வதற்கு" மாட்டிஸை இந்த உத்தரவு மேலும் அறிவுறுத்துகிறது. மேலும் இது பென்டகனும் மற்றும் நிர்வாக அலுவலகமும் ஒரு "இராணுவ தயார்நிலைக்கான அவசரகால வரவு-செலவு திட்டத் திருத்தத்தை" அபிவிருத்தி செய்வதற்கு வரவு-செலவு திட்டம் வகுத்து அதன்மூலமாக நடப்பு ஆண்டில் இராணுவ செலவினங்களை அதிகரிக்க செய்வதற்கும், 2018 வரவு-செலவு திட்டத்தை அதிகரிக்கவும், அதனைத் தொடர்ந்து சமூக செலவினங்களில் குறைப்பினை அதிகரிப்பதன் மூலமாக வரவு-செலவு திட்டத்தினை ஈடுசெய்ய வேண்டுமென்று கட்டளையிடுகிறது.

மூன்று பக்கங்கள் நீளம் மட்டுமே கொண்ட இந்த ஜனாதிபதியின் உடன்படிக்கை உலக போருக்கான திட்டமாகவே உள்ளது.

இந்த உத்தரவு சந்தேகத்திற்கு இடமின்றி அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று அச்சுறுத்துகிறது. பிரிவு 3, "21ம் நூற்றாண்டு அச்சுறுத்தல்களை பின்வாங்கசெய்ய" மேலும், அச்சுறுத்தும் வகையில், "ஜனாதிபதி இலக்குகளை அடைவதில் தோல்விகளுக்கு தடுப்புமுறை இருக்கவேண்டும்" என்று ஒரு அணு சக்திக்கு அழைப்பு விடுக்கிறது.

மேலும் இது "2022 க்குள்" அணுஆயுதங்களை பயன்படுத்துவதற்கான "தயார்நிலை இலக்குகளை அடைவதற்கு" ஒரு திட்டமிடவும் அழைப்புவிடுக்கிறது. இது, அமெரிக்க அணு சக்தியை "நவீனப்படுத்துதல்", ஒரு பெரிதும் விரிவுபடுத்தப்பட்டதான ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, மற்றும் முக்கிய எதிரிகளின் பதிலடி கொடுக்கும் திறனை முடக்குவதற்கான நோக்கம் கொண்டு அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்பாக அவர்களது எண்முறை மற்றும் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பை இலக்காக்கி இணைய போர்முறைக்கு வலியுறுத்துவதை அதிகப்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

நாட்டின் அணு ஆயுத தளவாடங்களை ஒரு 1 டிரில்லியன் டாலர் அளவிற்கு மேம்படுத்துவதை செயல்படுத்துவதற்கான ஒபாமா நிர்வாகத்தின் நடவடிக்கையினையே இந்த நடவடிக்கைகள் பின்பற்றுகின்றன.

இந்த நிர்வாக நடவடிக்கை புதிய இராணுவ செலவினத்தினை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஊடகங்களின் ஊகங்கள், அந்த மதிப்புத் தொகை வருடத்திற்கு இன்னும் கூடுதலாக 100 பில்லியன் டாலரை அணுகக்கூடும் என்று சமிக்ஞை செய்கிறது. ட்ரம்பின் இராணுவ திட்டங்கள், அணு சக்தி புனரமைப்பு, 350 கப்பல்களைக் கொண்ட கடற்படை விரிவாக்கம், 1200 போர் விமானப்படை மற்றும் தாக்குதல் ஜெட் விமானங்கள், 24 முதல் 36 பிரிவுகள் வரையிலான மரைன் பிரிவினை, மற்றும் ஒரு அரை மில்லியன் வீரர்களுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுப்பதன் மூலமாக Heritage Foundation இன் திட்டத்திற்கு நெருக்கமானதாக வருகின்றது.

அமெரிக்கா தற்போது ஆண்டுதோறும் உளவுத்துறை முகமைகள் மற்றும் முன்னாள் படையினருக்கான செலவினங்கள் தவிர்த்து, மேலும் அடுத்த ஒன்பது மிகப்பெரிய இராணுவ செலவாளிகள் இணைந்த கூட்டின் செலவைவிட அதிகமானதுமாக சுமார் 600 பில்லியன் டாலர் செலவிடுகிறது. அமெரிக்க "பாதுகாப்பு" செலவுகள், அதனை, அனைத்து பூகோள அளவிலான மொத்த இராணுவ செலவினத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு கூடுதலாக இருப்பதுடன், கிடைக்ககூடிய மத்திய வரவு-செலவுத் திட்டத்தில் பெரும் பெரும்பான்மையை உள்ளடக்குகின்றது.

பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்கள் மீது மிகவும் குறைந்த வரி விதிப்புக்களுக்கு ட்ரம்ப் கொடுத்திருந்த வாக்குறுதிகளுடன் இணைந்ததாக, தவிர்க்க முடியாமல் கல்வி, உடல்நல பராமரிப்பு மற்றும் உட்கட்டமைப்பு போன்றவற்றில் செலவின வெட்டுக்களை ஏற்படுத்துவதன் மூலமாக செலுத்தப்படுவதற்கும், மற்றும் சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ நலனை கொள்ளையடிப்பதன் மூலமாகவும் இராணுவ செலவினங்களை அதிகரிக்கிறது.

ஜனாதிபதி பதவியை பாதுகாப்பதில், சிரியா மீது ஹிலாரி கிளின்டனின் தலையீட்டு நிலைப்பாட்டில் மக்களுடைய விரோதப்போக்கையும், ரஷ்யாவிற்கு எதிரான அவரது போர்முரசு கொட்டுதலையும் ட்ரம்ப் சாதகமாக பிரயோகப்படுத்தினார். ஆனால் அவரது நிர்வாக உத்தரவுகள் சிரியப் போர் விரிவாக்கத்தை கோருவது பிராந்திய சக்தியான ஈரான் மற்றும் அணு ஆயுதமேந்திய ரஷ்யா இரு நாடுகளுடன் போர் நிகழும் வாய்ப்புக்களை அதிகரிக்கிறது. ரஷ்யா சிரியாவில் அதன் குறிப்பிடத்தக்க வெளிநாட்டு இராணுவ தளத்தை பராமரிப்பதுடன், ஒபாமா நிர்வாகத்தால் திட்டமிடப்பட்ட ஆட்சி மாற்றத்திற்குத்தான் ஒரு போரில் இதுவரை பஷர் அல்-அசாத்தின் ஆட்சியை பாதுகாத்து வந்திருக்கின்றது.

ISIS மற்றும் "தீவிர இஸ்லாமியத்தை" அடியோடு ஒழிப்பதற்கான ஒரு திட்டமாக தனது பதவியேற்பு உரையில், அவர் "பூமியிலிருந்து முற்றிலும் அவற்றை இல்லாதொழிக்கவேண்டும்" என்ற நோக்கத்துடன், பல்லூஜா மீதான 2004 தாக்குதலில் கணக்கிலடங்காத குடிமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டமை உட்பட, ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு காரணமாக இருந்த பல எண்ணிக்கையிலான போர் குற்றங்களுக்கு பொறுப்பாளியான மாட்டிஸால் இது வகுக்கப்படவுள்ளது என அறிவித்தார்.

அமெரிக்கா தற்போது ISIS மீது போர் தொடுக்கும் அதேநேரத்தில், லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கைகளில் அல் கொய்தாவுடன் இணைந்த அமைப்புக்களுக்கு அது நிதியுதவியளித்து இயக்கிவருகிறது. ஆயினும் கடந்த கோடையில் உரையாற்றுகையில், பாதுகாப்பு செயலர் பதவிக்கு அவரை பரிந்துரைப்பதற்கு முன்பு, அவரது பார்வையில், ISIS என்பது மத்திய கிழக்கு பகுதி முழுவதிலும் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டு ஈரானுக்கான ஒரு குதிரையே தவிர வேறொன்றுமில்லை என்று மாட்டிஸ் கூறினார். ஒபாமா நிர்வாகத்தில் விடுபட்ட கட்டளையையே மாட்டிஸ் தொடருகிறார் என்று பரவலான வதந்தி நிலவுகிறது, ஏனென்றால் ஈரான் மீதான ஒரு மிகுந்த போர்வெறிகொண்ட அணுகுமுறைக்கு அவர் பெரிதும் ஆதரவளித்தார்.

ட்ரம்பின் உத்தரவு பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு முன்பு, மாட்டிஸ் சிரியாவில் ஒரு பாரிய போர் அதிகரிப்பிற்கு திட்டமிடுகிறார் என்று இராணுவத்திற்கு உள்ளும் வெளியிலும் உள்ள பிரமுகர்களால் ஊகிக்கப்பட்டது.

ஸ்காட் முர்ரே, ஒரு ஓய்வுபெற்ற விமானப்படை தளபதியாக ISIS இன் முந்தைய வான்வழி குண்டுவீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டு, பொது மக்கள் மீது இலக்குவைப்பதை தடுக்கும் விதிகளை விலக்குவதால் இதனை செய்யமுடியும் என்று NRR க்கு தெரிவித்தார்.

"ISIL இலக்குகளைத் தாக்கும் போது இராணுவத்திற்கு அபாயம் ஏற்படும்போது பொது மக்கள் இறப்புக்கள் மீதான வரம்புகள் குறித்து தளபதிகள் மறு ஆய்வு செய்யமுடியும்,” என்று NPR அறிக்கை செய்தது. "எதிரிகள் அல்லாத மதிப்பு என்று அறியப்படுவது," என்ற விதிமுறையின்படி ஒரு வான்வழி தாக்குதலில் இவ்வளவு பேருக்கு ஆபத்து இருக்கலாம் என்ற வரையறை பொது மக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது.

அமெரிக்க அரசாங்கத்தின் வெளிநாட்டு வானொலி ஒலிபரப்பு நிறுவனமான அமெரிக்காவின் குரல் (Voice of America-VOA) உடன் அதிகாரிகள் பேசியபோது ஒபாமா நிர்வாகத்தின் சிரியாவில் "மிகநுண்ணிய-ஒப்புதல்" நடவடிக்கைகள் என்பது பற்றி புகார் கூறினர். கடந்த ஆண்டு சிரியாவிற்கு அனுப்பப்பட்ட 203 சிறப்பு படைவீரர்களின் படைப்பிரிவினை சார்ந்த "ஒவ்வொரு தனி மனிதனும் ஒப்புதல் பெறப்பட்டிருக்கவேண்டும்," என்று ஒரு பெயர் குறிப்பிடப்படாத பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்தார்.

ஓர் உயர்மட்ட இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டேவிட் பேர்னோ NPR இன் காலை பதிப்பில், உள்நாட்டு கையாட்களுக்கு பதிலாக மிகஅதிகளவில் அமெரிக்க சிப்பாய்களே சிரியாவில் நிலைநிறுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார். "ஜனாதிபதி ட்ரம்ப் சில விரைவான முடிவுகளுடன் ஏதோவொன்றை எதிர்நோக்குகிறார், அதன் மூலமாக அவரது அதிகாரத்தில் சில புதிய விருப்பங்களை கொண்டுவரமுடியும் என்று நான் நினைக்கிறேன்," என்றும், "களத்தில் நிறுத்துவதற்கான பெரியளவிலான அமெரிக்கர்களின் எண்ணிக்கையை அவர் தேர்வு செய்யமுடியும்" என்றும் பேர்னோ தெரிவித்தார்.

தற்போது இந்த பிராந்தியத்தில் பெரும்பாலும் 6,000 அமெரிக்க இராணுவ அதிகாரிகள் ஈராக்கில் தான் குவிந்திருக்கின்றனர், அங்கு, ஈராக் படைகளும் இணைந்து, அவர்களும் மோசூல் நகரத்தை ஒரு பாரிய தாக்குதலுக்கு உட்படுத்துவதற்கு இலக்குவைத்துள்ளனர். அண்டை நாடுகளில் தனித்தனியான போர் அரங்குகள் உள்ளன என்ற கட்டுக்கதையை ட்ரம்பின் உத்தரவுகள் இல்லாது செய்யலாம்.

குர்திஷ் மக்களின் பாதுகாப்பு பிரிவு (Kurdish People's Protection Units-YPG) அமைப்பை அமெரிக்கா முயற்சிக்கலாம் என்ற ஊகமும் இருந்தது. இது நேட்டோ நட்பு நாடான துருக்கியுடன் பதட்டங்களை அதிகரிக்கவே செய்யும், ஏனென்றால் துருக்கி YPG ஐ குர்திஷ் தொழிலாளர் கட்சியின் (Kurdish Workers Party-PKK) ஒரு பினாமியாகவே பார்ப்பதுடன், அதற்கெதிராக ஒரு சுதந்திர குர்திஸ்தான் வெளிப்படுவதை தடுக்க, கிட்டத்தட்ட ஒரு நான்கு தசாப்த கால எழுச்சி எதிர்ப்பு போரை நடத்தி வருகிறது.

ட்ரம்பின் குடியேற்ற எதிர்ப்பு உத்தரவின் பேரில் சிரியாவில் ஒரு போர் விரிவாக்கம் ஏற்படும் என்று முன்கணிக்கப்பட்டிருக்கிறது, இது, நெருக்கடி நிலையிலிருந்து தப்பி ஓடும் அகதிகளை தடுப்பதை முன்னிட்டு வெளிப்படையான நோக்கத்துடனும், சிரிய இறையாண்மையையும், சர்வதேச சட்டத்தினையும் அப்பட்டமாக மீறுகின்ற செயலாகவும், அமெரிக்க இராணுவத்தால் நடத்தப்படும் "பாதுகாப்பு வலையங்களின்" உருவாக்கத்திற்கு மேலும் திட்டமிடுகிறது. இந்த திட்டத்தின் கீழ், சிரிய அகதிகள், அனைத்துமே பெயரளவிற்கு உள்ளதான, அமெரிக்க நிர்வாகத்திற்கு உட்பட்ட முகாம்களில், அமெரிக்க இராணுவ மேற்பார்வையில் வைக்கப்படுவார்கள்.