ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

“We should be outraged by what is happening in India.”

US, Canadian autoworkers speak in defense of framed-up Maruti Suzuki workers

“இந்தியாவில் என்ன நடக்கின்றது என்பது பற்றி நாம் சீற்றமடையவேண்டும்.”

அமெரிக்க மற்றும் கனேடிய வாகனத்துறை தொழிலாளர்கள், ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாப்பது பற்றி பேசுகின்றனர்.

By a reporting team
25 March 2017

இந்தியாவில் ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) நடத்துகின்ற பிரச்சாரம் வட அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்களிடமிருந்து ஆதரவை பெறுகிறது.

மார்ச் 18 அன்று, வட இந்திய மாநிலம் ஹரியானாவில் குர்கான் மாவட்ட நீதிமன்றம் போலி கொலை குற்றச்சாட்டின் பேரில் 13 மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது, மேலும் அதற்கு சற்று குறைவான குற்றச்சாட்டுக்களின் பேரில் 18 ஏனைய தொழிலாளர்களுக்கு எதிராக வழிவழியாக வழங்கப்பட்டுவரும் கடுமையான சிறை தண்டனைகளை வழங்கியுள்ளது.

அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் பன்னாட்டு வாகன தயாரிப்பு நிறுவனம் மூலமாக மாருதி சுசூகி தொழிலாளர்களை ஒரு உதாரணமாக காட்டும் பொருட்டு அவர்களுக்கு எதிரான இந்த வழக்கு இட்டுக்கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி ஆலையின் கொடூரமான நிலைமைகளுக்கு எதிராக அவர்கள் போராடிவந்தது மட்டுமே அவர்கள் செய்த ஒரே குற்றமாகும். ICFI ஒரு இணையவழி மனுவினை தொடங்கியுள்ளதன் மூலமாக உலகம் முழுவதிலுமிருந்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அவர்களது விடுதலைக்காக போராட அழைப்புவிடுத்துள்ளது.

உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்கள் டெட்ராய்ட் பகுதியிலுள்ள வாகனத்துறை தொழிலாளர்களிடமும், அத்துடன் கனடாவின் ஒன்டாரியோ பகுதியை சார்ந்த தொழிலாளர்களிடமும், ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தின் நலன்கள் குறித்து நடத்தப்படுகின்ற பாதுகாப்பு பிரச்சாரத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார்கள்.

சோசலிச சமத்துவ கட்சியின் ஒரு பிரச்சார குழு வெள்ளியன்று, வடக்கு டெட்ராய்ட் பகுதியிலுள்ள ஃபியட் கிரைஸ்லர் வார்ரென் டிரக் அசெம்பிளி ஆலையில் (Fiat Chrysler Warren Truck Assembly Plant) வாகனத்துறை தொழிலாளர்களிடம் பேசியது. மேலும் அவர்கள் மாருதி சுசூகி வழக்கின் மீதான ஒரு அறிக்கையுடன் WSWS இன் மிக சமீபத்திய வாகனத்துறை தொழிலாளர்களின் செய்தி மடலின் நகல்களையும் விநியோகித்தனர்.

 

வார்ரென் டிரக் அசெம்பிளி ஆலையில் தொழிலாளர்கள்

ஒரு இளம் தொழிலாளி, மாருதி சுசூகி ஜோடிப்பு வழக்கினை பற்றி அப்பொழுதுதான் கேள்விப்பட்டு, அதன் உண்மைகளை அறிந்து “அதிர்ச்சியடைந்து” இருந்ததுடன் WSWS இடம் பின்வருமாறு தெரிவித்தார். “நாங்கள் இதைப்பற்றி எதையும் தெரிந்துகொள்வதை அவர்கள் விரும்பவில்லை. இது நிர்வாகத்துடன் இணைந்து தொழிற்சங்கம் செயல்படுவது போன்றே தெரிகிறது.”

மற்றொரு இளம் தொழிலாளி WSWS இடம் பேசுவதற்காக நின்றார். பின்னர், “அனைவரும் ஒரே விடயத்தையே விரும்புகிறோம். ஆனால் நாம் ஐக்கியப்பட்டால்தான் பலத்துடன் இருக்கமுடியும். எங்களது வேலையை அவர்கள் வெளிநாட்டிற்கு அனுப்ப இருப்பதாகவே எப்பொழுதும் எங்களிடம் கூறிவருகிறார்கள், ஆகையினால் நான் இந்த சர்வதேச ஒற்றுமை அவசியம் என்றே என்னால் பார்க்கமுடிகின்றது. எவரும் ஒரு பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படக்கூடாது.” என்று அவர் கூறினார்.  

இந்த வழக்கு பற்றியும், ஏனைய முக்கியமான பிரச்சினைகள் பற்றியும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து தகவலளித்து வருகின்றதாகவுள்ள WSWS இன் வாகனத்துறை தொழிலாளர்களின் செய்தி மடல் குறித்து அவர் பாராட்டுவதாக தெரிவித்தார். மேலும், “என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நிச்சயமாக எங்களை அறிந்துகொள்ள செய்கிறது. அங்கு நடக்கின்ற எதையும் நாங்கள் அறிந்துகொள்ள அவர்கள் அனுமதிப்பதில்லை,” “இவற்றையல்லாமல் நாங்கள் எதை தெரிந்துகொள்ள வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள்.” என்று தொழிற்சாலையை சுட்டிக்காட்டி அவர் கூறினார்.

மாருதி சுசூகி வழக்கு குறித்து ஊடகமும், அத்துடன் ஐக்கிய வாகன தொழிலாளர்களும் (United Auto Worke-UAW) முழுமையாக மௌனம் சாதிப்பதை பல தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர். “இதைப்பற்றி எதையும் நாங்கள் அறிந்துகொள்வதை அவர்களை விரும்பவில்லை,” மேலும் “உண்மை என்னவென்பதை நாங்கள் படித்து தெரிந்துகொள்வதையும் அவர்கள் விரும்பவில்லை” என்று ஒரு தொழிலாளி தெரிவித்தார். 

General Motor’s Indianapolis Stamping Plant நிறுவனத்தை சேர்ந்த ஒரு முன்னாள் தற்காலிக தொழிலாளியான ஜென்னி என்பவரும், மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசினார். அப்போது அவர், 2010ல், ஐக்கிய வாகன தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் நிறுவனத்தின் மூலமாக சுமத்தப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக அவரது ஆலையில் தொழிலாளர்கள் போராடினார்கள் என்றும், அதன் மூலமாக தொழிலாளர்கள் அவர்களது போராட்டத்திற்கு உலகம் முழுவதிலிருந்தும் ஆதரவை பெற்றனர் என்றும் கூறினார்.

“இந்த தொழிலாளர்களை கைது செய்வது, அவர்களுக்கு ஆயுள் தண்டனைகளை வழங்குவது போன்றவை அவர்களை வாயடைத்து போக செய்வதற்கான ஒரு அச்சுறுத்தும் பிரச்சாரமாகவே உள்ளது. மாருதி சுசூகி தொழிலாளர்கள் அவர்கள் பெறவேண்டியது என்ன என்பது குறித்தே போராடுகிறார்கள்.

“இந்தியாவில் அரசாங்கம் முதலில் உரிமைக்காக எழுந்து நின்று போராடும் தொழிலாளர்களை கொல்வதற்கே விரும்பியது. அது திகிலூட்டுவதாகவுள்ளது. அவர்கள் போராடுவதை பார்க்கும்போது நாம் இன்டியானாபோலிஸில் எதிர்நோக்கியது மிகவும் மிருதுவானது போலாகின்றது. 50 சதவிகிதம் ஊதிய வெட்டை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்பிய GMக்கும் UAWக்கும் எதிராக நாங்கள் எழுந்து நின்றோம். அப்போது அவர்கள் எங்கள் ஆலையை மூடினர். நாங்கள் வேலை தேடி மற்ற மாநிலங்களுக்கு செல்ல நேரிட்டது.”

“நீங்கள் அமெரிக்கரா, இந்தியனா என்பது ஒரு விடயமே இல்லை. மக்கள் அதை ஒதுக்கிவைத்துவிடவேண்டும். நிறுவனங்கள் நமது முதுகில் குத்துவதை தடுத்து நிறுத்துவதற்கும், நாம் வாழ தகுதியானவற்றை பெற்றுக்கொள்வதற்கும் தான் நாம் அனைவரும் ஒரு கண்ணியமான வாழ்க்கைக்காக போராடி வருகிறோம். மக்களை அடிபணிய வைக்கும் விதமாக அச்சுறுத்தும் தந்திரோபாயங்களை பெரும் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

 

வாரன் டிரக் அசெம்பிளி ஆலையில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம்

“மற்ற நாடுகளிலுள்ள தொழிலாளர்கள் நமது வேலைகளை பறித்து செல்கிறார்கள் என்று எமக்கு கூறப்படுகின்றது. இல்லை, அவர்கள் வாழ முயலுகின்றனர். அவர்களும் உணவளிக்கவேண்டிய குழந்தைகளையும், பணம் செலுத்த கட்டண ரசீதுகளையும் கொண்டிருக்கின்றனர். இது `இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ அல்லது `அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது’ என்பது பற்றியதல்ல. நிறுவனங்களும், தொழிற்சங்கங்களும் எங்களை வாயைமூடி இருக்க சொல்வதுடன், உங்களுக்கு ஒரு வேலை இருப்பது பற்றி சந்தோஷப்படுங்கள் என்று கூறுகின்றன. Indianapolis இல் UAW எங்களுக்கு இதையேதான் கூறியது. இல்லை, நாங்கள் சந்தோஷமாக இருக்க போவதில்லை. நாங்களும் ஒரு கண்ணியமான வாழ்க்கையை தான் விரும்புகிறோம்.”

“தொழிலாள வர்க்கத்தினால் ஒரு உலகளவிலான முயற்சி எடுக்கப்படும். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அனைவரும் உலகம் முழுமையிலுமான ஒரு நாள் வேலை நிறுத்தத்தை நடத்த முன்வரவேண்டும், அதனால் அனைத்தும் முறிந்துகொட்டிவிடும். தொழிலாளர்கள்தான் தான் அவர்களை செல்வந்தர்களாக்குவதை பற்றி அவர்கள் உணரவேண்டும்.

டெட்ராய்ட்டில், ஒரு இளம் Fiat Chrysler தொழிலாளியான டிஃப்பானி, “நான் இதை பற்றி படித்து மனுவில் கையெழுத்திட்டேன். நான் அதிர்ச்சி அடைந்தேன். ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேலை நிறுத்தம் செய்யவும், எழுந்து நின்று போராடவும், பெருமளவிலான மக்கள் தயாராகவுள்ளனர். 

“13 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது நம்பமுடியாத ஒன்றாக உள்ளது. அவர்கள் தொழிலாளர்களை பலிகடாக்களாக பயன்படுத்திவருகிறார்கள். அவர்கள் யாரையும் கொன்றதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. இந்திய அரசாங்கத்துக்கு அமெரிக்க அரசாங்கம் ஆதரவளிக்கிறது என்பது ஆச்சரியப்படகூடியதில்லை, ஏனென்றால் இங்கும் அவர்கள் நமக்கு அதையேதான் செய்ய விரும்புகிறார்கள்.

“சிறையிலடைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் நம்பிக்கையுடன் இருப்பதுடன் அவர்களது முயற்சியை கைவிட்டுவிடவில்லை. அது அவர்களது குணாம்சத்தை பற்றி நிறைய கூறுகிறது. தமது உரிமைக்காக எழுந்து நிற்பதற்காகவே அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை பற்றி ஒருவருக்கும் தெரியாது என்று இந்திய அரசாங்கம் நினைக்கின்றபோதிலும், தொடர்ந்து அதிலிருந்து வெளிவர அவர்கள் முயற்சிப்பார்கள். நாம் அவர்களது கதையை பகிர்ந்துகொள்ள வேண்டும். நான் உலக சோசலிச வலைத் தளத்தில் அதை படிக்கும்வரை அதைப்பற்றி எனக்கு எந்தவித கருத்தும் கிடையாது. ஏனைய தொழிலாளர்களுக்கு மத்தியிலும் இந்த வழக்கு பற்றிய விழிப்புணர்வை நாம் கொண்டுவரவேண்டும்.

“அமெரிக்க வாகனத் தொழிலாளர்கள் அவர்களுடன் இணைந்து நிற்கவேண்டும். அது எங்களுக்கு எளிதாக இருக்கக்கூடும். அவர்கள் அங்கு இருக்கிறார்கள், நாங்கள் இங்கு இருக்கிறோம், ஆனால் வித்தியாசம் எதுவுமில்லை. அவர்களது போராட்டம் எங்களது போராட்டம். அவர்கள் அனைவரும் எழுந்துவிட்டனர், அவர்கள் தடுமாறவும் இல்லை, மேலும் அவர்கள் எதை நம்பினார்களோ அதற்காக போராடினார்கள்.”

“அமெரிக்க தொழிலாளர்கள் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும். 2015ல் நாம் ஒப்பந்தத்தை நிராகரித்த சமயத்தில் இருந்தது போன்று நாம் ஒரே நேரத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும், ஆனால் நாம் அச்சுறுத்தப்பட்டு நம்மிடமிருந்து உரிமைகள் அபகரிக்கப்பட்டபோது, நாம் போராட்டத்தை கைவிட்டுவிட்டோம். இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள் அதை செய்யவில்லை. இதுபோன்ற திடமான நம்பிக்கைதான் நமக்கு தேவை. அவர்களை போல் நாமும் எழுந்து நிற்கவேண்டும். கசப்பான இறுதி முடிவு வரை நீங்கள் போராட வேண்டும். அரசாங்கங்களும், தொழிற்சங்கங்களும் உங்கள் எதிர்ப்பை அடக்க முனைகின்றனர், ஆனால் அவர்கள் இந்திய தொழிலாளர்களை அடக்க முடியவில்லை.”

“ஒரு முழு நேர தொழிலாளி ஒரு மாதத்திற்கு சம்பாதிக்கும் தொகையில் பாதியளவான, 214 டாலர் தொகையை தான் ஒரு தற்காலிக தொழிலாளர் சம்பாதிக்கிறார் என்று படித்தேன். அது கொடுமையானதாக இருக்கிறது. அவர்களெல்லாம் பில்லியன் டாலர் மதிப்பிலான பெருநிறுவனங்களாக உள்ளனர், ஆனாலும் நமக்கு எது தேவையோ அதை அவர்கள் நமக்கு கொடுப்பதில்லை என்ற நிலையில் நாம் ஏன் நமது உரிமைகளுக்காக எழுந்துநின்று போராட கூடாது என்றே எண்ணத்தோன்றுகிறது?’

ஒன்ராறியோ, இங்கர்சாலில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் அசெம்பிளி ஆலையில் ஒரு தொழிலாளியான சூ வும் மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசினார். இங்கர்சால் தொழிற்சாலை, சுசூகி மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாக 1989ல் திறக்கப்பட்டது. டொரான்டோவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது, இது முதலில் கனேடிய தானியங்கி தயாரிப்பு, இன்க் (Canadian Automotive Manufacturing, Inc-CAMI) இன் கீழ் இயங்கிவந்தது. 2009ல் சுசூகி வாபஸ் பெற நேரிட்டதைத் தொடர்ந்து ஆலையின் முழு கட்டுப்பாட்டையும் ஜெனரல் மோட்டார்ஸ் எடுத்துக்கொண்டது, மேலும் அது 2016ல் ஆலையை விரிவாக்கம் செய்த பின்னர், அரசாங்கத்தில் வரி இடைவெளிகளாகவும், மற்றும் ஏனைய சலுகைகளாகவும் ஒரு அரை பில்லியன் டாலர் தொகையை பெற்றது.

“இந்த பெரு நிறுவனத்திற்கு எதிராக பேசுவதில் எனக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இந்த ஆலையின் கூட்டு உரிமையை சுசூகி பயன்படுத்தவேண்டியிருந்தது. மாருதி சுசூகி தொழிலாளர்களை பற்றிய கட்டுரையை நாங்கள் படித்தோம், மேலும் எங்களது தொழிற்துறையில் சில நண்பர்களுக்கும் இந்த இணைய இணைப்பை அனுப்பியுள்ளோம், அவர்களும் கூட அதை பார்த்துவிட்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். நாங்கள் அதை அச்சிட்டு ஆலை முழுவதிலும் விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம்.   

“இந்த வாரத்திலேயே ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அநியாயமாக தற்காலிக பகுதி நேர தொழிலாளர்களுள் (temporary part-time workers-TPTs) சிலரை பணிநீக்கம் செய்துள்ளது. எங்களது நிர்வாக குழு சாத்தியமில்லாத தரப்படுத்தப்பட்ட வேலையை செய்துள்ளது, ஆனாலும் அவர்கள் கட்டுப்பாடு அல்லது தொழிலாளிகளின் தகமை குறைவின் அடிப்படையில் இலக்குவைத்து தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டனர்.

“பெரு நிறுவனமும், எங்களது சொந்த தொழிற்சங்கங்களும் மற்றும் ஊடகங்கள், தொழிலாளர்களை சோம்பேறிகளாகவும் பேராசை கொண்ட வாகனத் தொழிலாளர்களாக காட்டி, தாக்கப்பட்டுள்ளனர் என்பது ஒரு சோகமான உண்மையாகவே உள்ளது. அவர்கள் அப்பட்டமாக நன்னெறிசாராத செயல்களை நோக்கி குருட்டு கண்ணை திருப்பும்போதும், மேலும் மற்ற நாடுகளில் இதே நிறுவனங்கள் மூலமாக அறம் பிறழ்ந்த நடவடிக்கைகளினால் தொழிலாளர்களை அவர்கள் சுரண்டுகின்றபோதும், கேள்வி எழுப்புதல் மற்றும் ஆய்வின் குவிமையமாக தொழிலாளர்களின் நெறிமுறைகளும், ஒழுக்க நெறிகளுமே உள்ளன.

“மிச்சிகன் லான்சிங் அருகே உள்ள General Motor Delta Township plant இன் ஒரு ஓய்வு பெற்ற வாகனத் தொழிலாளரான புரூஸ் என்பவர், “இந்தியாவில் என்ன நடக்கின்றது என்பது பற்றி நாம் சீற்றமடையவேண்டும். இந்த தொழிலாளர்களை போலவே நாமும் அதே நலன்களை கொண்டிருக்கிறோம்.” என்று கூறினார்.

“சிறு ஆதாரத்தைகொண்டு வழக்கை எதிர்கொள்ளும் பெருநிறுவனத்தின் பாதையையே நீதிமன்றங்களும் பின்தொடர்கின்றன. அவர்கள் மரண தண்டனையை விரும்புகிறார்கள் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. உலகம் முழுவதும் இந்த வழக்கை கொண்டு சென்று பயன்படுத்த, இதை ஒரு உதாரணமாக காட்ட அவர்கள் விரும்புகிறார்கள்.

“ஏதோவொரு வகையிலான பாகுபாடு அங்கு நடைமுறையில் இருக்கவேண்டும். அவர்கள் ஆதாரங்களுடனான பிரச்சினைகளை கொண்டிருந்தனர் என்பதை நீதிபதி கூட ஒப்புக்கொண்டுள்ளார். இது எனக்கு 1937ல் ஃபிளின்டில் அவர்கள் தேசிய பாதுகாப்பு படையை கொண்டுவந்தபோது இருந்த ஒரு நிலைமையினை கொஞ்சம் நினைவுபடுத்துகிறது. அவர்கள் மலை உச்சியின் மீது இயந்திர துப்பாக்கிகளை இடம்பெற செய்தனர், மேலும் குண்டர்களும் தொழிலாளர்களை அச்சுறுத்தும் முயற்சியில் இருந்தனர்.

“உலக சோசலிச வலைத் தளத்தை தவிர்த்து அமெரிக்காவின் எந்தவொரு ஊடகத்திலும் இந்த வழக்கு குறித்த செய்தி எதையும் நீங்கள் பார்க்க முடியாது. அமெரிக்க தொழிலாளர்களுக்கு எங்களிடையே வர்க்கங்கள் இல்லை என்றும் சமூகத்தில் மேல்நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாகவே எப்போதும் கூறிவந்துள்ளார்கள். ஜப்பானிலும், கொரியாவிலும் மற்றும் எல்லா இடங்களிலும், உள்ள தொழிலாளர்களை போலவே நாமும் அதே நலன்களை கொண்டிருக்கிறோம் என்பது இப்போது புரிந்துகொள்ளப்படுகின்றது.