ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

THIS WEEK IN THE RUSSIAN REVOLUTION
March 6-12: February Revolution erupts in Petrograd

ரஷ்ய புரட்சியில் இந்த வாரம்

மார்ச் 6-12: பெட்ரோகிராட்டில் வெடித்த பிப்ரவரிப் புரட்சி

6 March 2017

பெட்ரோகிராட்டில் பிப்ரவரி புரட்சி வெடித்தபோது ரஷ்ய மார்க்சிசத்தின் இரு மாபெரும் மனிதர்களான விளாடிமிர் லெனினும் லியோன் ட்ரொட்ஸ்கியும் புலம்பெயர் நிலையில் இருந்தனர். 1900லிருந்து ரஷ்யாவிலிருந்து புலம்பெயர்ந்து வாழ்ந்த, போல்ஷிவிக் கட்சியின் தலைவரான லெனின் சுவிட்சர்லாந்தில் சூரிச்சில் இருந்தார். 1905 ரஷ்ய புரட்சியின் முன்னணி பிரபலமாக, அதற்காக சிறையிடப்பட்டு நாடுகடத்தப்பட்ட ட்ரொட்ஸ்கி, இப்பொழுது நியூயோர்க்கில் Bronx இல் வாழ்ந்து கொண்டிருந்தார். பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் நியூயோர்க்கில் புலம்பெயர்ந்தோரின் ரஷ்ய பத்திரிகையான நோவி மீர் (Novy Mir) க்காக எழுதி வந்தார். லெனினும் ட்ரொட்ஸ்கியும் புலம்பெயர்ந்த நிலையில் வாழும் ஏனைய சில அரசியல் தலைமைகளுடன் சேர்ந்து தாங்கள் நாடு திரும்புவதற்கான வாய்ப்பை எதிர் நோக்கி, ரஷ்யாவில் நடைபெறும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வந்தனர்.

பெட்ரோகிராட், மார்ச் 7 (பிப்ரவரி 22, O.S.): புட்டிலோவ் தொழிலாளர் கதவடைப்பு

சாரிலிருந்து லெனின்வரைபடம் Herman Axelbank ஆல் தயாரிக்கப்பட்டு Max Eastman ஆல் விளக்கப்பட்ட ஒரு காட்சி.

டூமா திரும்ப திறக்கையில் புட்டிலோவ் தொழிற்சாலையில் சுமார் 30,000 தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் உட்புகாது நிர்வாகத்தால் தடுக்கப்பட்டிருந்தனர். புட்டிலோவ் தொழிலாளர்களால் முயற்சிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை பொலிசார் தடுத்துவிட்டனர். ஆலைமூடலானது நகரில் பதட்டங்களை தூண்டி விட்டன. வேலை நிறுத்தத்தின்பொழுது, புட்டிலோவ் தொழிலாளர் குழுக்கள் நிக்கோலாய் ஷெக்கின்ஸ மற்றும் அலெக்ஸாண்டர் கெரன்ஸ்கி எனும் டூமாவின் இரு பிரதிநிதிகளை தொடர்பு கொண்டனர். கெரன்ஸ்கியுடனான சந்திப்பில் தொழிலாளர்கள், வேலைநிறுத்தமானது பெரும் அரசியல் இயக்கத்தை கிளர்ந்தெளச்செய்யும் என்றும் “மிக முக்கியமான ஏதோ ஒன்று நிகழும்“ என்றும் தொழிலாளர்கள் எச்சரித்தனர்.

புட்டிலோவ் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்கள், 1905 ரஷ்ய புரட்சியில் தீர்க்க்கரமான பாத்திரத்தை ஆற்றியிருந்தனர். அந்த ஆண்டு புட்டிலோவ் தொழிற்சாலை தொழிலாளர்களால் நடத்தப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டத்தில் பாதிரியார் காப்போன் தலைமையில் ஆயிரக்கணக்கான ஏனைய தொழிலாளர்களும் இணைந்தனர். அது பொலீசாரால் வன்முறை கொண்டு உடைக்கப்பட்டது மற்றும் “இரத்த ஞாயிறு” என்று அழைக்கப்பட்ட அச்சம்பவங்களில் ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டதுடன் காயமுமடைந்தனர்.

மேற்கண்ட துண்டுக் காட்சி சாரிலிருந்து லெனின்வரை எனும் படத்தில் எடுக்கப்பட்டது. இப்படத்தை மெஹ்ரிங் வெளியீட்டகத்தில் வாங்கலாம்.

பெட்ரோகிராட், மார்ச் 8 (பிப்ரவரி23, O.S.): ரஷ்ய தலைநகரில் திடீரென எழுந்த ரொட்டிக்கான கலவரங்கள்


பெட்ரோகிராட்டில் பெண்களின் பேரணி

சர்வதேச பெண்கள் தினத்தன்று, கடுங்குளிரில் ரொட்டிக்காக வரிசையில் காத்திருந்த பெண்கள் மத்தியில் வெடித்த குழப்பங்கள் முடியாட்சியைத் தூக்கி எறிந்து போருக்கு முடிவு கட்ட அழைக்கும் பெரும் ஆர்ப்பாட்டங்களாக எழுந்தன. மென்ஷிவிக்குகளும் போல்ஷேவிக்குகளும் வேலை நிறுத்த்திற்கு விடுத்த அழைப்பை எதிர்த்த போதிலும் சுமார் 90,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

ட்ரொட்ஸ்கி பின்னர் இதனை இவ்வாறு குறிப்பிட இருந்தார்: “உண்மை என்னவென்றால், பிப்ரவரி புரட்சியானது அதன் சொந்த புரட்சிகர அமைப்புகளின் தடைகளையும் மீறி கீழிருந்து ஆரம்பித்தது, இந்த முன்முயற்சியானது, பாட்டாளி வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட கீழ்மட்டத்திலிருந்த பிரிவினரான துணி ஆலை பெண் தொழிலாளர்கள், சந்தேகமே இல்லாமல் அவர்களுடன் படையினரின் மனைவியராலும் தன்னியல்பாக எடுக்கபட்டது. அளவுக்கதிகமாய் வளர்ச்சியுற்று வந்த உணவின்மையானது கடைசித் தூண்டலை வழங்கியிருந்தது.”

நியூயோர்க், மார்ச் 8, டெப்ஸ் மற்றும் ட்ரொட்ஸ்கி ஒன்றாய் கூப்பர் தொழிற்சங்கத்தில்


யூஜின் டெப்ஸ்

அமெரிக்க சோசலிசத்தின் முன்னணிப் பிரமுகரான யூஜின் டெப்ஸ், நியூயோர்க்கில் கூப்பர் தொழிற்சங்கத்தில் நடைபெறவிருந்த பெருந்திரள் போர் எதிர்ப்பாளர்கள் முன்னே தன்னுடன் இணையுமாறு ட்ரொட்ஸ்கிக்கு அழைப்பு விடுத்தார். நியூயோர்க்கில் குறுகிய காலமே தங்கியிருந்த பொழுது, நியூயோர்க்கில் உள்ள சீர்திருத்தவாத சோசலிச தலைவர், போர் ஆதரவு நிலைப்பாட்டை சோசலிஸ்ட் கட்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய Morris Hillquit உடன் ட்ரொட்ஸ்கி பகிரங்க மோதலுக்குள் இறங்கினார். இதில் டெப்ஸ் ட்ரொட்ஸ்கியை ஆதரித்தார்.

கூப்பர் தொழிற்சங்க பார்வையாளர்களிடம் “எனக்காக பேசுவதாக” டெப்ஸ் இடியென முழங்கினார், லிங்கன் தனது புகழ்பெற்ற “கூப்பர் தொழிற்சங்க” உரையை நிகழ்த்திய அதே இடத்தில் சரியாக 52 ஆண்டுகளும் ஒரு வாரமும் கழித்து, டெப்ஸ் பின்வருமாறு முழங்கினார், “இந்தப் பூமியிலுள்ள எந்த முதலாளித்துவ அரசாங்கத்திற்காகவும் ஒரு யுத்தத்திற்கு போகவே மாட்டேன், மறுப்பேன். எனது தேர்வு இது. தொழிலாள வர்க்கத்திற்கு துரோகியாக இருப்பதை காட்டிலும் வால் ஸ்ட்ரீட்டின் தேசத்துரோகத்திற்காக சுட்டுக் கொல்ல சுவரைப்பார்த்தபடி வரிசையில்தான் நிற்பேன்” என்றார்.

ட்ரொட்ஸ்கி பின்னர், எனது வாழ்க்கை என்ற நூலில் டெப்ஸ் சோசலிசத்தின் “உட் சுவாலையின் தீரா வேட்கை” பற்றி எழுதுகிறார். ”எப்பொழுதெல்லாம் நாங்கள் சந்திக்கிறோமோ, அப்போது என்னை ஆரத் தழுவி முத்தமிடுவார்.” டெப்ஸ் “நேர்மையான புரட்சியாளர். ”Hillquit அப்படி அல்ல. ட்ரொட்ஸ்கி அவரை “Babbitt களுக்கு எல்லாம் ஒரு Babbitt....வெற்றிகரமான பல் மருத்துவர்களுக்கான சரியான சோசலிச தலைவர்” என்று ட்ரொட்ஸ்கி அவரைப் பற்றிக் கூறுகிறார்.

பெட்ரோகிராட், மார்ச் 9 (பிப்ரவரி 24, O.S.): பொது வேலைநிறுத்தம் ஆரம்பம்

படமானது பெட்ரோகிராட்டில் 1917ல் ரஷ்ய புரட்சிகளின் முக்கிய இடங்களை காட்டுகிறது

224 தொழிற்சாலைகளில் 2,14,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். நகரின் பிரதான சதுக்கங்கள் சிலவற்றில் நடந்த பெருந்திரள் கூட்டங்கள் நண்பகலில் நூறாயிரக் கணக்கான மக்களின் கூட்டங்களை இடம்பெறச் செய்தன. நகர மேயர் அலெக்சாண்டர் பால்க், பெட்ரோகிராட் இராணுவ மாவட்ட தளபதி சேர்ஜி காபாலோவ் இடம், “மக்கள் ஒன்று கூடலையும் இயக்கத்தையும் தடுக்க” பொலீசால் இயலாததாக இருக்கிறது என்றார். இரண்டு டசின் பொலிசார் நையப்புடைக்கப்பட்டனர். ஜார் நிக்கொலாய் II மற்றும் அவரது குடும்பம் குழப்பம் நிறைந்த பெட்ரோகிராட்டை விட்டு பறந்து விட்டது, இப்பொழுது அவர்கள் மோகிலேவ் இல் உள்ள இராணுவத் தலைமையகத்தில் உள்ளனர். ட்ரொட்ஸ்கி பின்னர் அவரது ரஷ்யப் புரட்சியின் வரலாறு என்பதில் சுட்டிக்காட்டியவாறு, “புரட்சியானது அதன் முதலாவது பிரச்சினைகளை அணுகுவதற்கு இன்னும் நேரம் இருந்த நிலையில் கூட, சாம்ராஜ்யம் அதற்கு முன்னரே, அழுகிய பழத்தைப் போல, உலர்ந்து வீழ்ந்தது.”

நியூ யோர்க், மார்ச் 10 (பிப்ரவரி 25, O. S.): ஜே.பி மோர்கன் 41 மில்லியன் டாலர்களை பிரிட்டிஷ் தங்கத்தில் பெற்றது


ஜே.பி மோர்கன் பூமி மீது கொண்ட பணப் பேராசை, Kansan Henry Worrall ஆல் வரையப்பட்டது.

பிரிட்டிஷ் அரசாங்கம், கனடாவிலிருந்து ஜே.பி மோர்கன் சேஸ் & கம்பெனிக்கு  41 மில்லியன் டாலர்களை தங்ககட்டிகளாக அனுப்பியதானது, ஒரு நாளில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கம் அனுப்புகை ஆகும். 25 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய தங்கம் நியூ யோர்க் அஸ்ஸே அலுவலகத்தில் கையிருப்பு செய்யப்பட்டது, மீதி பிலடெல்பியா நாணயசாலைக்கு அனுப்பப்பட்டது. ஒவ்வொரு புதிய பங்குடனும் உலகின் நிதிய மையமானது லண்டன் மாநகரிலிருந்து வோல் ஸ்ட்ரீட்டுக்கு மாறியது.

இந்த அனுப்புகையானது அமெரிக்க போர்க் கடன்களுக்காக பிணையாக வைக்கப்பட்டது, அமெரிக்க ஆதரவின் மீது அதன் கூட்டாளிகள் சார்ந்திருப்பதை தீவிரமயப்படுத்தியது. வாஷிங்டன் அதன் முதலீடுகளை ஊறுநேராதபடி திரும்பப்பெற்றுக்கொள்ளும் பொருட்டு கூட்டணியின் வெற்றிக்காக வாஷிங்டன் தீவிரமாக ஈடுபடும் தேவையை காட்டியது. நடப்பிலுள்ள கையிருப்புத்தேவை வீதத்தின் அடிப்படையில் பெற்ற 41 மில்லியன் டாலர்கள், பிரிட்டிஷ்க்கு 200 மில்லியன் டாலர்கள் போர்க் கடன்களுக்கு வசதி வாய்ப்புக்களை நல்கியது.

பெட்ரோகிராட் மார்ச்10: வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புகளும்  பரவுகின்றன


பிப்ரவரிப் புரட்சியின் பொழுது Nikolayevsk-ல் தொழிலாளர்கள்

இப்பொழுதுவரை வேலைநிறுத்தங்களின் எண்ணிக்கை அதிகரித்து 421 தொழிற்சாலைகளிலிருந்து சுமார் 305,000 தொழிலாளர்களாக அதிகரித்தனர். நகர மையத்தில் டசின்கணக்கான மக்கட் திரள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. “அரசாங்கம் ஒழிக!” “யுத்தம் ஒழிக!” “ரொட்டி, அமைதி, சுதந்திரம்!” மற்றும் “வாழ்க குடியரசு!” உட்பட பல முழக்கங்கள் இடம்பெற்றன. ஆர்ப்பாட்டங்கள் பெரும் எண்ணிக்கையிலான அறிவுஜீவிகளையும் கைவினைஞர்களையும் கூட ஈர்த்தன. உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். தொழிலாளர்கள், பொலிசாருடனான வன்முறை மோதல்களுக்காக கத்திகள், கையில் கிடைத்த ஆயுதங்கள் மற்றும் உலோகத் துண்டுகளைக் கொண்டு தங்களை ஆயுதபாணி ஆக்கிக் கொண்டார்கள். கூட்டத்தினர் மீது பொலீஸ் சுட்டதால் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். புரட்சிகர கொந்தளிப்பு இராணுவத்தில் பரவிக் கொண்டிருந்தது என்பதன் முதலாவது அறிகுறியாக, ஆர்ப்பாட்டத்தினருக்கு எதிராக ஈடுபடுத்தப்பட்ட சில கொசாக்குகள் அவர்களோடு தோழமை கொள்ள ஆரம்பித்தார்கள்.

ஜார் நிக்கோலாய் II மாலையில் புரட்சி பற்றி அறிந்தபொழுது, தலைநகரில் எழுச்சியை ஒரு முடிவுக்குக் கொண்டுவருமாறு தளபதி காபாலோவ் ஐ பணித்தார். அதே இரவு பொலிசார், போல்ஷிவிக்குகளின் பெட்ரோகிராட் குழுவைச் சேர்ந்த ஐவர் உட்பட, சோசலிச அரசியல்வாதிகளை பரந்த அளவில் கைது செய்யத் தொடங்கினர்.

பெட்ரோகிராட்டில் போல்ஷிவிக் கட்சி செல்வாக்கின் பலமான கோட்டையாக அமைந்த Vyborg பிராந்தியக் குழுவானது, தலைநகரில் கட்சி நடவடிக்கைகளின் உண்மையான தலைமையாக ஆனது.

பெட்ரோகிராட், மார்ச் 11 (பிப்ரவரி 26 O.S.): ரஷ்ய அரசாங்கம் வன்முறை கொண்டு ஒடுக்கத் தொடங்கியது


ஜார் நிக்கோலாய் II கொசாக்குகளை மேற்பார்வை செய்தல்

தொழிலாளர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் வேலைநிறுத்தம் செய்ய முடியாது, ஆனால் அவர்கள் தொடர்ந்து வெகுஜன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அரசாங்கமானது புரட்சிகர இயக்கத்தின் மீது இரத்தம் தோய்ந்த ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. கூட்டத்தை கலைக்க பொலிஸ் கடும் துப்பாக்கிச்சூட்டை நடத்தியது, அவர்கள் பெரும்பாலும் மேற்கூரைகளிலிருந்தும் உயரமான ஜன்னல்களிலிருந்தும் சுட்டனர். அன்று இடம்பெற்ற மிகவும் வன்முறை கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், இராணுவக் காவலர்கள் அரண்மனை சதுக்கத்தில் சுமார் 40 ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுக் கொன்றனர், 40 பேர் காயமடைந்தனர். இருப்பினும் அரசாங்கத்தால் இயக்கத்தை தனது கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. படையினர் இராணுவத்தைக் கைவிட்டுவிட்டு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சேருவதாக பல செய்திகள் வந்தன. ஜார் அன்று மாலையே, டுமாவின் வேலையை காலவரையற்று இடைநிறுத்த முடிவெடுத்தார்.

பெய்ஜிங் மார்ச் 11: சீனா ஜேர்மனியுடனான உறவுகளை துண்டித்துக் கொண்டது


சன் யாட்-சென்

சீனப் பாராளுமன்றமானது ஜேர்மன் மற்றும் ஆஸ்ட்ரோ-ஹங்கேரியன் அரசாங்கங்களுடனான அனைத்துவிதமான ராஜீய உறவுகளையும் துண்டிப்பதற்கு செனெட்டில் 158க்கு 37 என்ற வீதத்திலும் அவையில் 331க்கு 87 என்ற வீதத்திலும் வாக்களித்தது. முதலாவது உலகப் போரில் பகைகொண்ட ஏகாதிபத்திய அரசுகளுக்கிடையில் தந்ததிரமாகக் கையாளுவதற்காக பிரதமர் Tuan Chi-jui இன் தேசியவாத அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நகர்வு இருந்தது. இது நேசநாடுகளின் சார்பாக இந்த மோதலுக்குள் சீனா நேரடியாக நுழைவதற்கு வழி அமைத்தது.

1914ல் யுத்தம் வெடித்ததிலிருந்து சீனா நடுநிலையாக காட்டிக்கொள்வதை பராமரித்து வந்தது. ஜேர்மனியில் இருந்து அதன் விலகலானது, பகுதி அளவில் Tianjin மற்றும் Hankou இல் ஜேர்மனி அளிக்கும் சலுகைகளில் இருந்து விடுபடவும், நூற்றாண்டின் திருப்பத்தில் பாக்சர் கிளர்ச்சி தொடர்பாக சீனாவிலிருந்து கறந்தெடுக்கப்படும் பேர்லினின் இழப்பீட்டுத் தொகையிலிருந்து விடுபடும் ஆவலினால் பகுதி அளவில் இயக்கப்பட்டிருந்தது. இந்த நகர்வு நேச நாடுகளையும் இழப்பீடுகளுக்கான தங்கள் கோரிக்கைகளையும் எளிதாக்கும் மற்றும் பொருளாதாரத்தின் மீதான தங்களின் பிடியை வைத்திருக்கவும் எளிதாக்க தூண்டும் என்று சீனத் தலைவர்களும் கூட நம்பினர். ஆயினும், பேர்லினோடு உறவை திடீரென்று முறிக்க சீனா மீது அழுத்தம் கொடுக்கும் அமெரிக்க அரசாங்கம், சீனாவில் டோக்கியோவின் நிதிய நலன்கள் மற்றும் சலுகைகளுக்கு உத்தரவாதம் கொடுக்கும் ஜப்பானுடனான ஒரு இரகசிய உடன்படிக்கையில் கையெழுத்திட்டதன் மூலம் பதில் கொடுத்தது.

வாக்களிப்பானது, போரில் நேடியாக பங்கேற்பதற்கு ஜனாதிபதி Li Yuan-hung மற்றும் ஏனையோரிடமிருந்து எதிர்ப்புடனான அரசியல் நெருக்கடியை தூண்டி விட்டது. 1911ல் புரட்சியில் முன்னணிப் பாத்திரம் வகித்த, ஜேர்மன் அரசாங்கத்துடன் நிதிய அரசியல் உறவுகளை வளர்த்திருந்த சன் யாட்-சென், சீன மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு பற்றி எச்சரித்தார். “சீன மக்களுக்கு பல்வேறு தேசிய இனங்களை சார்ந்த வெளிநாட்டவர்களை வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாது போகலாம். எளிய மற்றும் நேர்மையான மக்கள் Teutons களைக் கொல்லுமாறு கற்பிக்கப்படுவார்களாயின், நாட்டிலுள்ள அனைத்து வெள்ளை வெளிநாட்டவர்களையும் வெட்டிச் சாய்ப்பதற்கு அவர்களை இட்டுச்சென்று விடும்.”

பாக்தாத், மார்ச் 11, புராதன தலைநகர் பிரிட்டிஷிடம் வீழ்ந்தது


பாக்தாதில் நுழையும் பிரிட்டிஷ் துருப்புக்கள்

புராதன தலைநகர் மீதான பிரிட்டனின் வெற்றிகரமான உந்துதலானது, மேற்கொண்டும் நகரத்தினை பாதுகாக்க முடியாமல் செய்து ஒட்டோமான் பேரரசின் துருப்புக்களை பாக்தாதைக் கைவிடச் செய்தது. Khalil Pasha கீழான ஒட்டோமான் துருப்புக்கள் வடக்கில் கிர்க்குக் மற்றும் மொசூல் நோக்கி அனடோலியன் தீபகற்பத்தின் வாயிலில் வரை மேலும் பின்வாங்கின. ஒட்டோமான் பேரரசானது பாக்தாத், பாஸ்ரா, சிரியா, லெபனான் மற்றும் பாலஸ்தீனம் உள்பட மத்திய கிழக்கு பிராந்தியத்தை 16ம் நூற்றாண்டிலிருந்து ஆட்சி செய்து வந்துள்ளது.

சுமார் 50,000 பெரும்பாலும் காலனித்துவ படைவீரர்களை உள்ளடக்கிய இந்திய விடுவிக்கும் படை கொண்ட ஒரு சேனையின் தலைவராக நகருக்குள் நுழைகையில், அதன் லெஃப்டினென்ட் ஜெனரல் Sir Frederick Stanley Maude குறிப்பிட்டார்: “எமது சேனைகள் உங்களது நகருக்கும் நிலங்களுக்கும் ஒரு வெற்றிகொண்டவர்களாகவோ அல்லது பகைவர்களாகவோ வரவில்லை, மாறாக விடுவிப்பாளர்களாக வந்துள்ளோம்” என்றார்.

முதலாம் உலகப் போருக்கு வித்திட்ட மோதலில் உள்ள ஒரு முக்கிய காரணி இந்த பிராந்தியத்தில் ஜேர்மனியின் வளர்ந்து வரும் செல்வாக்குதான். அது பாக்தாத்- பேர்லின் இரயில் பாதையில் அதன் வெளிக்காட்டலில் எதிரொலித்தது. மேலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் பிரெஞ்சு ஏகாதிபத்தியமும் போரின் கொள்ளைப் பொருட்களாக ஒட்டோமான் பேரரசின் மத்திய கிழக்குப் பகுதியை தமக்குள் பிரித்துக் கொள்வதில் இரகசிய ஒப்பந்தத்தை போட்டன. இதன்படி லண்டன், பாக்தாத், பாஸ்ரா மற்றும் பாலஸ்தீனத்தை எடுக்கும்; பாரிஸ், லெபனான் மற்றும் சிரியாவை பெறும். இஸ்தான்புல், துருக்கி ஜலசந்தி மற்றும் ஆர்மீனியாவிற்காக ரஷ்ய பேரரசு இவ் உடன்பாட்டிற்கு அதிகாரபூர்வமாய் இசைவளித்தது. ஜேர்மனியுடனான அதன் உறவைத் துண்டித்துக் கொள்வதற்காகவும் நேச சக்திகளுடன் சேருவதற்காகவும் இத்தாலிக்கு தென்கிழக்கு அனடோலியா மற்றும் அதன் தீவுகள் தரப்படுமென வாக்குறுதி அளிக்கப்பட்டது.

மெக்சிக்கோ நகரம் மார்ச் 11: Carranza மெக்சிக்கோவின் ஜனாதிபதியாக தேர்வு


வில்லா (இடது), லெப்ட் மற்றும் சப்பாட்டா (மடியில் தொப்பியுடன்), 1914ல் ஆதரவாளர்கள் புடைசூழ

எல்லா மனிதர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையுடன் மெக்சிக்கோ புரட்சிக்குப் பின்னர் நடைபெற்ற முதலாவது தேர்தல், வடபுலத்து நிலஉடைமையாளரும் அரசியற் சட்டப்படியான இராணுவத்தின் தலைவருமான Venustiano Carranza வின் வெற்றியில் முடிந்தது. புரட்சியானது நிலம்படைத்த வர்க்கத்திற்கு எதிராகத் திரும்பக்கூடும் என அஞ்சி, வலதுசாரி Huerta அரசாங்கத்தை எதிர்க்கும், தேசியவாத Carranza தேரந்தெடுக்கப்பட்டதானது, அரசியலில் வலுப்படுத்தும் முறைகளை ஆழப்படுத்தியதுடன், Pancho Villa மற்றும் Emiliano Zapata வின் விசாயப் படைகளை நசுக்குவதற்கான வழியையும் தயார் செய்தது.

Carranza அமெரிக்க நலன்களை மறுக்கும் 1917ல் இயற்றப்பட்ட அரசியல் யாப்பு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். ஷரத்து 27 (இனவாரி ejidos க்கள் மற்றும் விவசாயிகளுக்கு வரையறுக்கப்பட்ட நில மறுவிநியோகம் மற்றும் எண்ணெய் போன்ற முக்கிய தாதுப் பொருட்களை தேசியமயமாக்கல்) மற்றும் ஷரத்து 123 (தொழிலாளர் பாதுகாப்புக்கள் மற்றும் சமூக நலன்களுக்காக அழைக்கும்) குறிப்பாக Doheny Petroleum மற்றும் Guggenheim Smelting and Refining போன்ற நிறுவனங்கள், அமெரிக்க முதலாளித்துவ சொத்துக்களின் பெறுமதியை அச்சுறுத்தின.

அமெரிக்க ஜனாதிபதி வில்சன் போருக்குள் நுழைய அழுத்தம் கொடுக்கையில், அவர் ஜேர்மனிக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையிலான சிம்மர்மான் தந்தியை இடைமறித்துப் பெற்றதை உள்நாட்டில் போர்வெறியைத் தட்டி எழுப்புவதற்கும் யுத்தத்திற்கு தயாரிப்பு செய்துவந்த Carranza அரசாங்கத்தை அமெரிக்க நிதிய நலன்களின் விருப்புக்கு வளையச் செய்யவும் இறுகப் பற்றிக்கொண்டார். தளபதி Pershing கீழான அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் வில்லாவை நசுக்கும் தங்களது முயற்சியில் தோல்வியுற்று வட மெக்சிக்கோ மீதான தங்களது ஆக்கிரமிப்பை அண்மையில்தான் கைவிட்டன.

பெட்ரோகிராட், மார்ச் 12 (பிப்ரவரி 27, O.S.): சோவியத் அமைக்கப்பட்டது; ஆயுத எழுச்சி பரவுகிறது


பிப்ரவரி புரட்சியின்பொழுது பெட்ரோகிராட்டில் அரண்மனை சதுக்கத்தில் கூடிய கூட்டம்

ஜாருக்கு பதட்டத்துடன் விடுத்த தந்தியில் டுமாவின் தலைவர் Mikhail Rodzianko எழுதுகிறார்: “கிளர்ச்சியை நசுக்குவதற்கு அரசாங்கம் முற்றிலும் திறனற்றதாக ஆகிவிட்டது. கோட்டைக் காவற்படை மீது இனி நம்பிக்கை வைக்க முடியாது. காவலரின் ஆயத்த கையிருப்பு படையணிகள் கிளர்ச்சியில் இறங்கிவிட்டன. அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள். ஒரு உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி விட்டது மற்றும் பற்றி எரிகிறது…” உண்மையான விரக்தியில் Rodzianko ஜாரிடம் “டூமாவைக் கலைக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். ஜார் அவரே அழைக்கும் “தொப்பை வயிறான் Rodzianko” வின் எச்சரிக்கைகளை புறந்தள்ளினார்.

ஒரு நாள் முன்னரே இன்னொரு படைப்பிரிவில் தோல்வியடைந்த ஒரு கலகத்திற்குப் பின்னர், அன்று மாலையே Volynsky Guard Regiment இல் பயிற்சிப் படைப்பிரிவில் ஆயுதந்தாங்கிய ஆயுத எழுச்சி தொடங்கியது. பல படைப் பிரிவுகளில், ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர் பகுதிகளில் இருந்து பெரிதும் ஆட்சேர்க்கப்பட்டவர்கள், முந்தைய நாட்களில் வேலைநிறுத்தம் செய்தவர்களுடனும் ஆர்ப்பாட்டக்காரர்களுடனும் கலந்துரையடல்களில் ஈடுபட்டிருந்தனர் மற்றும் போரை முடிவுக்கு கொண்டுவரும் தங்களின் ஆவலை பகிர்ந்து கொண்டிருந்தனர். இந்தக் காலங்களில் தொழிலாள வர்க்கத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலான உறவு பற்றி ட்ரொட்ஸ்கி பின்வரும் வார்த்தைகளில் விளக்குகிறார்: “மக்களில் இராணுவம் உள் ஊடுருவி நுழைதல் தொடர்ந்து கொண்டிருந்தது. தொழிலாளர்கள் இராணுவத்தின் நிலைமையை கவனித்துக் கொண்டிருந்தார்கள், அது முக்கிய கட்டத்தை அடைந்ததையும் உணர்ந்தனர். துல்லியமாக இதுதான் மக்களின் தாக்குதலுக்கு அத்தகைய வெல்லமுடியாத சக்தியை, வெற்றி மீதான நம்பிக்கையை கொடுத்தது.”

பெட்ரோகிராட் இராணுவச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஆயினும், ட்ரொட்ஸ்கி பின்னர் அவதானித்தவாறு, நகர் முழுவதும் இராணுவச் சட்ட அறிவிப்பை ஒட்டுவதில் கூட அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. நகரத்தின் தலைவரான Balka வினால் பசையையும் கண்டு பிடிக்க முடியவில்லை தூரிகையையும் கண்டு பிடிக்க முடியவில்லை. அத்தகைய செயற்பாட்டாளர்களால் ஒன்றையும் ஒன்றாக ஒட்டச்செய்ய முடியவில்லை; அவர்கள் ஏற்கனவே நிழல்களின் இராச்சியத்தை சேர்ந்தவராக ஆகியிருந்தனர்”.

டூமாவின் குறிப்பிட்ட தலைவர்கள் டூமா குழுவை அமைத்து, இன்னும் கலகம் இடம்பெறா படை அலகுகளில் தங்களின் கட்டுப்பாட்டை நிலைநாட்ட முயற்சித்தனர்.

அன்று மாலை, 9 மணிக்கு Tauride அரண்மனையில் சுமார் 250 தொழிலாளர்கள், படைவீரர்கள் புத்திஜீவிகள் கொண்ட குழு, பெட்ரோகிராட் சோவியத்தை அமைத்தது. அங்கு ஒரு நிர்வாக குழு ஏற்படுத்தப்பட்டது, அதற்குத் தலைவராக மென்ஷிவிக் Nikolay Chkheidze தேர்ந்தெடுக்கப்பட்டதானது, குறிப்பாக பெட்ரோகிராட் சோவியத்தின் ஆரம்ப மாதங்களில் மென்ஷிவிக்குகளின் ஆதிக்கம் மேலோக்கி இருந்ததைப் பிரதிபலித்தது.

வாஷிங்டன் மார்ச் 12: Gompers, AFL போர் முயற்சிகளுக்கு ஆதரவு என உறுதி அளிப்பு


AFL தலைவர் சாமுவேல் கோம்பர்ஸ்

இரவு முழுதுமான கூட்டத் தொடருக்குப் பின்னர், அமெரிக்க தொழிற்சங்க அமைப்பு மற்றும் இருப்புப்பாதை தொழிற்சங்கத்தின் (AFL) சுமார் 3 மில்லியன் தொழிலாளர்களின் இணைந்த அமைப்பின் தலைவர்கள், “ஐரோப்பிய மோதல்களின் நீர்ச்சுழிக்குள் இழுக்கப்படும் நிகழ்விலும்” அமெரிக்காவிற்கு “ஒவ்வொரு செயற்பாட்டுப் புலத்திலும் எமது நாட்டிற்கு” ஏகமனதாக தங்களின் ஆதரவைத் தருவதாக உறுதி அளித்தனர். தீர்மனமானது ஒரு வகை வேலைநிறுத்தம் இல்லை எனும் உறுதி வழங்கலை நிறுத்திவிட்டது, பதிலாக அரசாங்கத்தோடும் நிறுவனங்களோடும் ஒத்துழைப்பதில் AFL ஐ வரவேற்பதன் மூலம் கிளர்ச்சி தவிர்க்கப்பட முடியும் என்று கருத்துரைத்தது. அரசாங்கமானது ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்க இயக்கத்தை கூலிபெறுபவருடன் அது ஒத்துழைப்பதற்கான ஒரு முகவாண்மையாக அங்கீகரிக்க வேண்டும்” என்று அத்தீர்மானம் அறிவிக்கிறது.

கோம்பர்ஸ், “தேசத்தை பாதுகாக்க” ஏகாதிபத்திய யுத்தத்திற்கு ஆதரவளிப்பது என்ற காரணத்தை கூறி ஐரோப்பாவின் தொழிலாளர் இயக்கங்களின் பாதச்சுவட்டை பின்பற்றினார். புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பிற்கான குழுவிற்கு அவர் ஏற்கெனவே வில்சனால் அழைக்கப்பட்டிருந்தார். இராணுவ வாதத்திற்கு எதிர்ப்பு பெருமளவு ஆதரவு இருந்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான யுத்தத்திற்கு தயாரிக்க ஆதரவளிக்க உதவ அழைக்கப்பட்டிருந்தார்.

வரலாற்றாசிரியரான சிமியோன் லார்சன் பின்வருமாறு எழுதியிருந்தார். “இராணுவத்திற்கான எதிர்ப்பு மிக ஊடுருவி இருந்ததுடன் உணர்மையுடன் வெளிப்படுத்தப்பட்டும் இருந்தது. இராணுவமானது அனைத்து மக்களினதும் பக்கசார்பற்ற பிரதிநிதிகள் அல்ல, மாறாக வேலைநிறுத்தங்களை உடைப்பதற்காக பெரு வணிகத்தால் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். கடந்தகால தொழிற்துறை போராட்டங்களின் ஞாபகங்கள், அதாவது இராணுவத்தால் தொழிற்சங்க ஆண்களும் பெண்களும் கொல்லப்பட்டமையும், Ludlows மற்றும் Calumets பற்றியும் தொழிற்சங்க பிரசுரங்கள் அமெரிக்கா மீளாயுதப்படுத்தல் குறித்த அபாயத்தை பற்றி மீண்டும் குறிப்பிட்டு வந்தன.

இந்த வாரத்தில் இன்னொன்று: Gance’s Mater Dolorosa பாரிசில் திறப்பு

Mater Dolorosa விலிருந்து ஒரு காட்சி

பிரெஞ்சு இயக்குநர் Abel Gance (J’AccuseNapoleon) Mater Dolorosa- வை வெளியிட்டார். மனோவியல் சார்ந்த இந்த மிகை உணர்ச்சிப் படைப்பு கவனியாது விடப்பட்ட ஒரு மனைவியான Manon Berliac (Emmy Lynn) கதையை தொடர்கிறது. பின்னர் அப்பெண் தனது கணவனின் சகோதரரிடம் காதலைக் கண்டு கொள்கிறார். இந்த நாடகம் Gance’s ஒத்துழைப்பாளர், Léonce-Henri Burel-ன் chiaroscuro நகரும் படத் தொழில் நுட்பத்தால் முன்னே கொண்டு வரப்பட்டது. அமெரிக்காவில் பெரும் வெற்றியை ஈட்டிய The Torture of Silence போல நிர்வாணக் காட்சி மற்றும் திரைப்படத்தின் அடிப் பகுதியில் காட்டப்படும் வசனங்கள் தணிக்கை செய்யப்பட்டன அல்லது மாற்றப்பட்டன.

பிரெஞ்சு திரைப்பட வசனகர்த்தா Jean Mitry எழுதுகிறார், Mater Dolorosa “ஒளி அமைப்புக்கள் மூலம், காட்சிகளின் திருப்பத்தை ஆழப்படுத்திக் காட்டும், ஒப்பனையின் துல்லியத்தை நெருக்கமாய் காட்டும், குறிப்பிட்ட விவரங்களை தனிப்படுத்திக் காட்டும் வகையில் வெளிச்சம் மற்றும் நிழலைப் பயன்படுத்த தெரிதல், ஒரு பிரெஞ்சு திரைப்படத்திற்குள்ள ஆயிரக்கணக்கான வழமைக்குமாறான புதிய பண்புகள் என இவற்றால் இப்படம் ஆச்சரியத்தை உண்டுபண்ணியுள்ளமை வியப்பூட்டும்படி உள்ளது.”