ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Media, political establishment treat dropping of biggest bomb since Hiroshima as nonevent

ஹிரோஷிமாவுக்கு பிந்தைய மிகப்பெரும் குண்டு போடப்பட்டதை சம்பவமே இல்லை என்பதைப் போல ஊடகங்களும், அரசியல் ஸ்தாபகங்களும் நடத்துகின்றன

Barry Grey
15 April 2017

இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஹிரோஷிமா மற்றும் நாகாசாகியை அழிப்பதற்குப் பயன்படுத்திய அணுகுண்டுகளுக்குப் பிந்தைய மிகப்பெரும் குண்டை வியாழக்கிழமையன்று அமெரிக்க இராணுவம் போட்டிருந்தது. அதற்குப் பின் இருபத்தி நான்கு மணி நேரம் கடந்து விட்டிருந்த நிலையிலும் கூட, எந்த ஒரு அளவுகோலின் படியும் ஒரு பெரும் உலக சம்பவமாக இருக்கக் கூடிய இந்த அபிவிருத்தியானது, முக்கியத்துவம் அற்ற ஒன்றாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஊடகங்களால் நடத்தப்பட்டது.

இந்த 22,000 பவுண்டு பாரிய வெடிமருந்து வான் வெடி குண்டு (MOAB) பயன்படுத்தும் முடிவு அசாதாரணமான வகையில் திடீரென ஒரு கணத்தில் எடுக்கப்பட்டதைக் குறித்தும் எந்தக் கவலையும் வெளிப்படுத்தப்படவில்லை. பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆப்கானிஸ்தான் மாகாணத்தின் மீது குண்டுவீசும் நடவடிக்கையில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு தான் கேட்டுக் கொள்ளப்படவில்லை என்பதை வியாழக்கிழமையன்று ட்ரம்ப் சுட்டிக் காட்டினார். வெள்ளிக்கிழமையன்று, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தளபதி இந்த ஆயுதத்தைப் பிரயோகிக்கும் முடிவு அவருடையதே என்று கூறினார்.

வெள்ளிக்கிழமை மாலை அமெரிக்க செய்தி ஒளிபரப்புகளின் நேரத்திற்கெல்லாம், “அத்தனை குண்டுகளின் தாய்” குண்டு போடப்பட்டதை குறித்த கிட்டத்தட்ட எந்தக் குறிப்புமே அங்கே இல்லாமல் போய்விட்டது. இத்தகையதொரு நிகழ்வு பாராட்டப்படுகிறது அல்லது அலட்சியத்துடன் கையாளப்படுகிறது என்பது இத்தகைய ஆயுதங்களின் பிரயோகம் உலகெங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்துகின்ற சாதாரண நடவடிக்கைகளின் பகுதியைப் போல் அல்லது இன்னும் மோசமாய் அதுவே ”புதிய இயல்பு” என்பதாக கையாளப்பட இருக்கிறது.

வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவின் முக்கிய செய்தித்தாள்கள் இந்தத் தாக்குதலைப் பாராட்டின அல்லது ஒரு தலையங்க மவுனத்தைப் பராமரித்தன. ஐரோப்பிய ஊடகங்களும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இந்த குண்டுவீச்சு குறித்து ஜேர்மன், பிரெஞ்சு, அல்லது பிரிட்டிஷ் அரசாங்கத் தலைவர்கள் எந்த ஒரு அறிக்கையும் விடுக்கவில்லை, பிரிட்டிஷ் தொழிற்கட்சியைச் சேர்ந்த ஜேரிமி கோர்பின் மற்றும் ஜேர்மன் இடது கட்சி உள்ளிட ”இடது” என்று சொல்லப்படுகின்ற அரசியல் தலைவர்களும் கட்சிகளும் கூட அதேபோல் வாய்மூடி இருந்து கொண்டன.

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னிலை அங்கத்தவர்கள் -செனட்டின் சிறுபான்மைப் பிரிவு தலைவரான சார்லஸ் சூமர் மற்றும் அவையின் சிறுபான்மை பிரிவு தலைவரான நான்சி பெலோசி தொடங்கி கட்சியின் “இடது அணி”யாக சொல்லப்படுவதன் பேர்னி சாண்டர்ஸ் வரையிலும்- எவருமே எதுவும் கூறவில்லை.

முன்னர் ஒருபோதும், 2003 ஈராக் படையெடுப்பின் போதும் கூட, பயன்படுத்தியிராத அளவுக்கான தீவிரமான ஆயுதத்தை பயன்படுத்துகின்ற முடிவானது உடனடி இராணுவ கருதிப்பார்த்தல்களின் அடிப்படையிலான ஒரு தந்திரோபயமான ஒன்று மட்டுமே என வெள்ளிக்கிழமை அன்று ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க படைத்தளபதி ஜெனரல் ஜோன் நிக்கல்சன் ஊடகங்களிடம் தெரிவித்தார். “போர்க்களத்தில் சரியான இலக்குக்கு எதிராய் தந்திரோபாயரீதியாக பயன்படுத்துவதற்கு சரியான சமயமாக அது இருந்தது” என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் கூற்று அபத்தமானதாகும். கிழக்கு ஆப்கானிஸ்தானின் குகைகளில் ஒளிந்திருக்கின்ற பரிதாபகரமான ஆயுதவலிமை கொண்டிருக்கின்ற ஒரு சில நூறு கெரில்லாக்களுக்கு எதிராக இத்தகைய ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கு, முழுக்க இராணுவ கோணத்தில், எந்த அறிவுநியாயமும் அங்கே இருக்கவில்லை. சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல், சிரிய ஆட்சிக்கு ஆதரவு தருவதை நிறுத்துமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வெளியுறவுச் செயலர் றெக்ஸ் ரிலர்சன் கெடு விதித்தமை ஆகியவற்றை ஒட்டியும், வடகொரியாவுக்கு எதிராக ஒரு உடனடியான வலிந்த இராணுவத் தாக்குதலுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுப்பதற்கு மத்தியிலும், இந்த நடவடிக்கைக்கான நோக்கங்கள் அரசியல்ரீதியானவை என்பது தெளிவுபடத் தெரிகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களின் பேரில் அமெரிக்க இராணுவம் பிரயோகப்படுத்தத்தக்க வன்முறைக்கு எந்த எல்லையும் கிடையாது என்பதை சிரியா, ஈரான், வட கொரியா, ரஷ்யா, சீனா மற்றும் அத்தனை பிற இப்போதைய அல்லது வருங்கால எதிரிகளுக்கும் விளங்கச் செய்வதே இந்தக் குண்டுவீச்சின் நோக்கமாய் இருந்தது. MOAB க்கு அடுத்தபடியாக அணு ஆயுதங்களின் பயன்பாடு தான் இருக்கும், அந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கு, தான் தயாராகவே இருப்பதான செய்தியை அனுப்புவதற்கே பென்டகன் நோக்கம் கொண்டிருந்தது.

இந்த அரசியல் நோக்கங்களை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெள்ளிக்கிழமையன்று MOAB தாக்குதலைப் பாராட்டி வெளியிட்டிருந்த ஒரு தலையங்கத்தில் சுருங்க வெளிப்படுத்தியிருந்தது. அது எழுதியது:

”GBU-43 நிலைநிறுத்தப்பட்டிருப்பதை வட கொரியாவிலுள்ள ஏவுகணை ஏவும் கூட்டம் கவனித்திருக்கும் என்று நாம் அனுமானிக்கலாம். வட கொரியாவின் அணுஆயுத உற்பத்திச் சாலை மீது அமெரிக்கா ஒன்றைப் போட வேண்டும் என்று யோசனை கூறுவதற்கெல்லாம் நாம் போகாமல் இருக்கலாம். ஆனால் ஒரு வார இடைவெளியில், அமெரிக்கா தனது எதிரிகளின் “மூர்க்கத்தனத்திற்கு” எதிராக பதிலுக்கு நெருக்குவதை அதன் நலன்களுக்கு உட்பட்ட ஒன்றாகவே கருதுகிறது என்பதை கிம் ஜோங் உன், விளாடிமிர் புட்டின், பஷார் அசாத், ஜி ஜின்பிங் மற்றும் ISIS தலைவரான அபு பக்கர் அல்-பக்தாதி -அவர் எங்கே ஒளிந்திருந்தாலும்- ஆகியோர் கற்றுக் கொண்டுள்ளனர்.”

ாஷிங்டன் போஸ்ட் இந்த குண்டுவீச்சுக்கு உள்பக்கத்தில் தான் இடம் ஒதுக்கியிருந்தது என்பதோடு அதனை தலையங்கத்தில் நேரடியாகவும் பேசவில்லை. ஆயினும் கடந்த இரண்டு வார காலத்தின் சமயத்தில் ட்ரம்ப்பின் வெளியுறவுக் கொள்கை தலைகீழாக்கங்களுக்கு அரசியல் ஸ்தாபகம் அளித்திருக்கும் பொதுவான ஏற்பை “தலைகீழ் மாற்றங்கள் வரவேற்கப்படுகின்றன” என்ற தலைப்பிலான ஒரு தலையங்கத்தில் வார்த்தைகளில் விவரித்தது.

சிரியா மற்றும் ரஷ்யா விடயத்தில் கடுமையான நிலைப்பாட்டை ட்ரம்ப் ஏற்றுக் கொண்டிருப்பதையும், நேட்டோ என்பது “இனியும் பொருத்தமானதாக இல்லை” என்று அவர் அறிவித்திருப்பதையும் மேற்கோள் காட்டி போஸ்ட் எழுதியது: “இத்தகைய தலையாய பிரச்சினைகளில் ஒரு ஜனாதிபதி மிகவும் தவறாக இருப்பதில் இருந்து மிகவும் சரியான நிலைக்குப் போகின்ற போது, மிகக் கவனமாகத் தான் என்றாலும் கூட, புகாரிடுவதாய் அல்லாமல் கொண்டாடுவதே பொருத்தமான பதிலிறுப்பாக இருக்கும்.”

தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக மைக்கல் ஃபிளின்னை நீக்கியதையும் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து ஸ்டீபன் பானனை நீக்கியதையும் தனியாய் குறித்துக் காட்டி, “திரு.ட்ரம்ப் உருக்கொடுக்கத் தொடங்கியிருக்கும் அருமையான தேசியப் பாதுகாப்பு அணி”யை புகழுமளவுக்கு இந்த செய்தித்தாள் சென்றது. குறிப்பாக புதிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான எச்.ஆர்.மெக்மாஸ்டர் மற்றும் பாதுகாப்புச் செயலரான ஜேம்ஸ் மாட்டிஸ் ஆகியோர் மீது குறிப்பான உற்சாகத்தை போஸ்ட் வெளிப்படுத்தியது, முதலாமவர் ஒரு பதவியில் இருந்த தளபதி, இரண்டாமவர் ஓய்வு பெற்ற தளபதி இதன் மூலம் அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை உறுதிபட இராணுவத்தின் கரங்களில் சென்று சேர்ந்திருக்கிறது என்பதை அது குறிப்பிடவில்லை.

ோஸ்டின் பத்தியாளரான டேவிட் இக்னேஷியஸும் இதேபோன்றதொரு தொனியில், “வெளியுறவுக் கொள்கையில், ட்ரம்ப் வெற்றியின் சுவையைக் காண்கிறார்” என்ற தலைப்பின்கீழ் எழுதினார்: “ஜனாதிபதி ட்ரம்ப், மிக நாசகரமான முதல் இரண்டு மாதங்களுக்குப் பின்னர், கடந்த இந்த இரண்டு வார காலமாக வெளியுறவுக் கொள்கையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். சிரியா விடயத்தில் தீர்மானகரமாய் செயல்பட்டார், வட கொரியாவைக் கையாளுவதில் சீனாவை ஒரு சாத்தியமான கூட்டாளியாக ஆக்கிக் கொண்டார், நேட்டோவுடனான உறவுகளைப் பழுதுபார்த்தார், ரஷ்யாவுடனான தீவிர பதட்டங்களை நிவர்த்தி செய்வதில் இறங்கத் தொடங்கினார்.

ியூ யோர்க் டைம்ஸ் MOAB குண்டுவீச்சு குறித்து தலையங்கமோ கருத்தோ வெளியிடாமல், அமெரிக்காவின் இராணுவ மூர்க்கத்தனத்திற்கு ஆதரவிலான அதன் “மனித உரிமை” அலட்டல் மோசடியில் அம்பலப்பட்டிருக்கிறது.

ஜனநாயகக் கட்சியின் இடது அணியாக சொல்லப்படுகின்ற ஒன்றுக்காகப் பேசுகின்ற Vox இணைய தளம் Zack Beauchamp எழுதியிருந்த ஒரு கருத்தை வெளியிட்டிருந்தது. இக்கருத்து “அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் அமெரிக்க இராணுவம் கண்டிருக்கவில்லை” என்ற பென்டகனின் நிலையை விமர்சனமின்றி ஒப்பித்ததோடு MOAB குண்டுவீசல் முழுமையாக முறையான செயலாகவே இருந்ததாக தொடர்ச்சியாய் வலியுறுத்தியது.

“இந்த குண்டு அமெரிக்க இராணுவம் வழக்கமாய் பயன்படுத்துகின்றவற்றை விடவும் பெரியது தான் என்றபோதிலும் கூட, அங்கே ஏதோ தவறாகி விட்டிருந்தது என்பதாய் அனுமானிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை” என்று அவர் எழுதினார். “இந்த குண்டுவீச்சைப் பயன்படுத்துவதென்பதை உண்மையில் புரிந்து கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது” என்று மேலும் சேர்த்துக் கொண்ட அவர், “சுருக்கமாய் சொல்வதானால், ஊகமானது உச்சத்தில் இருந்தது” என்று நிறைவு செய்தார்.

அமெரிக்க இராணுவம் கையில் கொண்டிருக்கக் கூடிய ஒரு அணுகுண்டுக்கு நெருக்கமான ஒன்றை வீசுவதில் -ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் பொதுவான சம்மதம் மற்றும் ஏற்புடன்- உச்சமடைந்திருக்கக் கூடிய, கடந்த இரண்டு வார காலத்தின் திகிலூட்டும் நிகழ்வுகளில் இருந்து ஒரு அடிப்படையான அரசியல் பாடம் புரிந்து கொள்ளப்பட்டாக வேண்டும். சிரிய ஜனாதிபதி அசாத் விடயத்தில் “மென்மையாக” நடந்து கொள்வதற்காகவும் புட்டினின் வளர்ப்புப்பிராணி போல நடந்துகொள்வதற்காகவும் ட்ரம்ப் கண்டிக்கப்பட்ட நிலையைக் கண்ட, அமெரிக்க அரசு மற்றும் அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளான கடுமையான மோதலானது, முழுக்கமுழுக்க ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் மீதே கவனம்குவித்ததாய் இருந்தது.

மிக உடனடியான கவனக்குவிப்பை சீனாவுடனான மோதலுக்கு அளிக்க விரும்பி, சிரிய ஆட்சி மற்றும் ரஷ்யாவுடனான மோதலைத் தணித்து விளையாட ட்ரம்ப் முனைந்ததை சகித்துக் கொள்ள முடியாத உளவுத்துறை மற்றும் இராணுவ ஸ்தாபகத்தின் செல்வாக்கான பிரிவுகளுக்கு ஜனநாயகக் கட்சி முன்னிலை கொடுத்தது. ட்ரம்ப்புக்கு நெருக்குதலளிக்கவும் அவரது தேசியப் பாதுகாப்பு அமைப்பில் ஒரு பெரும் மாற்றம் கொண்டுவரவும் ஜனநாயகக் கட்சியினர், 2016 தேர்தலில் ரஷ்யா ஹேக் செய்ததாகச் சொல்லி இட்டுக்கட்டப்பட்ட கதைகளைப் பயன்படுத்தினர்.

இராணுவ மற்றும் உளவு எந்திரத்தின் மிகக் கடினநிலைப்பாடு கொண்ட மற்றும் இராணுவவாத கன்னைகளுக்கு அவர்கள் அளிக்கின்ற எந்த நிபந்தனையுமற்ற ஆதரவுடன் ஒப்பிட்டால் உள்நாட்டு மற்றும் சமூகக் கொள்கை தொடர்பாக ட்ரம்ப்புடன் அவர்கள் கொண்டிருக்கிற பேதங்கள் ஒன்றுமேயில்லை என்றாகி விடும்.

ட்ரம்ப்பின் புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அடிப்படை சமூக வேலைத்திட்டங்களை இல்லாதொழிப்பதற்கான திட்டங்கள் ஆகியவற்றின் காரணத்தால் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் வெடித்த வெகுஜன ஆர்ப்பாட்டங்களின் தலைமையில் இருந்த நடுத்தர வர்க்க தாராளவாத மற்றும் போலி-இடது அரசியல் சக்திகள், எதிர்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக ஜனநாயகக் கட்சியினரின் பின்னால் திருப்பி விட்டன, இதன்மூலம் வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்சியான இக்கட்சியானது, ட்ரம்ப்-விரோத எதிர்ப்பை மத்திய கிழக்கிலான இராணுவ அதிகரிப்புக்கும் அணு-ஆயுத வல்லமை பெற்ற ரஷ்யாவுக்கு எதிரான ஒரு போருக்கு தயாரிப்பு செய்வதற்குமான அதன் பிரச்சாரத்தின் பின்னால் திருப்பி விடுவதற்கு வழிவகுத்தன.

புலம்பெயர்ந்தவர்கள் மீதும் சமூக வேலைத்திட்டங்கள் மீதுமான ட்ரம்ப்பின் போர் குறித்த விமர்சனத்தை ஜனநாயகக் கட்சியினர் ஏறக்குறைய கீழேபோட்டு விட்டனர். இப்போது அவர்களது வெளியுறவுக் கொள்கை நிலையை ட்ரம்ப் ஏற்றுக் கொண்டு விட்ட நிலையில், அவர்கள் அவரது சமூகத் தாக்குதல்களில் இன்னும் நேரடியாக ஒத்துழைத்து செயலாற்றுவார்கள்.