ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Thousands protest police murder of Liu Shaoyo in Paris

Liu Shaoyo என்பவரை பொலிஸ் கொலை செய்தது குறித்து பாரிஸில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

By Alex Lantier
4 April 2017

மார்ச் 26 அன்று சீன குடியேற்றவாசியான Liu Shaoyo பொலிஸால் கொலை செய்யப்பட்டதற்கு எதிராக ஆசிய அமைப்புக்கள் ஞாயிறன்று பாரிஸில் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 8,000 பேர் இணைந்துகொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள், 56 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தைக்கு சட்ட விரோதமாக மரணதண்டனை வழங்கப்பட்டது குறித்த அவர்களது எதிரப்பில், சாதாரணமாக, சீனாவின் மூலமாக தொடங்கப்பட்ட ஒரு அரசு நடவடிக்கை என்ற பிரெஞ்சு உள்நாட்டு புலனாய்வு சேவைகள் மூலமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு பிற்போக்குத்தனமான ஊடக பிரச்சாரத்தை புறக்கணித்தனர்.

“பொலிஸ் கொலையாளிகளே, எங்களுக்கு நீதி வேண்டும்” என்ற வாசகமிடப்பட்ட ஒரு பதாகை Republic Square இன் மையத்தில் அமைந்துள்ள சிலையை சுற்றிலும் கட்டப்பட்டிருந்தது. மேலும், “உண்மை, நீதி, கண்ணியம்” அல்லது “நான் பிரான்சை நேசிக்கிறேன்” ஆகிய வாசகங்கள் எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில் பிடித்திருந்தனர்.

Chen Hui, என்ற ஒரு இளைஞன், “இன்னும் ஒருவர் பொலிஸால் கொல்லப்படக்கூடாது என்பதற்காகவே” ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்திருப்பதாக கூறினார், மேலும் இன்றும் பொலிஸின் வன்முறைக்கு ஆசிய சமூகம் “இலக்காக” உள்ளனரோ என்று அச்சமுறுவதாகவும் அவர் பத்திரிகைக்கு தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர்களில் ஒருவரும், “பிரான்சில் சீனர்களின் வாழ்க்கை” (Chinese Living in France) என்ற அரசு சாரா நிறுவனத்தை வழிநடத்துபவருமான Sacha Lin-Jung, தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைத்து பிரெஞ்சு மக்களையும் பொலிஸின் வன்முறை பாதிப்படைய செய்கிறது. எனவே, எங்களது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு இன்றே நாங்கள் குரல் எழுப்பிவருகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், “வலியுறுத்தி இந்த குடும்பத்திற்கு உதவி செய்யவைப்பது, உண்மையை நிலைநாட்டுவது, மற்றும் பொலிஸ் வன்முறைக்கு எதிராக போராடுவது” இவை தான் இந்த ஆர்ப்பாட்டத்தின் இலட்சியம் என்றும் தெரிவித்தார்.

இந்த கொலை, Aulnay-sous-Bois இன் தொழிலாள வர்க்க பகுதியில் Theo என்பவர் மீது இழைக்கப்பட்ட பொலிஸ் பலாத்காரத்திற்கு பின்னர் ஒரு சில வாரத்தில் நடந்தது என்பது பிரெஞ்சு அரசின் அவசரகாலநிலை பிரகடனத்தின் கீழ் அனைத்து இனங்களை சார்ந்த பூர்வீக மக்களுக்கு எதிராக விரைவாக அதிகரித்துவரும் பொலிஸின் அராஜகத்தையே குறிப்பிட்டுக்காட்டுகிறது.

Liu வின் மகள்களின் படி, பாரிஸின் தொழிலாளர் குடியிருப்பில் உள்ள அவர்களது அடுக்குமாடி வீட்டிற்குள் பொலிஸ் திடீரென்று கதவை உடைத்து நுழைந்து முன்னறிவிப்பின்றி அவர்களது தந்தையை சுட்டனர் என்றும், அப்போது அவர் சமைத்துக்கொண்டிருந்ததால் மீன் வெட்டுவதற்காக அவரது கரங்களில் கத்திரிகோலை வைத்திருந்தார் என்றும் கூறினர். மேலும், பொலிஸ் மீது Liu உடல் ரீதியிலான தாக்குதல் எதையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Liu வை அவர்கள் எதற்காக சுட்டனர் என்பது குறித்து ஒருபோதும் விளக்காமல் நிகழ்வுகள் தொடர்பான பல்வேறுவகையான கதைகளை பொலிஸார் முன்வைத்தனர். முதலாவதாக, அவர் கத்திரிக்கோலை கையில் எடுத்து பொலிஸ் ஒருவரை தாக்கினார் என்றும், மேலும் அவரை காயப்படுத்தி “ஒப்பீட்டளவில் அவசர நிலையில்” மருத்துவமனையை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளினார் என்றும் கூறினர். பின்னர், உண்மையில் பொலிஸ் எவ்வித காயமும் அடையவில்லை, மேலும் அவரது குண்டு துளைக்காத கவசம் Liu இன் கத்திரிக்கோலை தடுத்து நிறுத்திவிட்டது என அறிவித்தனர். இருப்பினும், பொலிஸ் ஏன் Liu வை சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்கான எந்தவித விளக்கத்தையும் முன்வைக்கவில்லை.

இச்சம்பவம், பிரான்ஸ் மண்ணில் சீனா தனது குடிமக்களை பாதுகாக்கவும், மேலும் “இந்த விடயத்தில் என்ன நடந்தது என்பதை முற்றிலும் வெளிச்சத்திற்கு கொண்டுவரவும்” பிரான்சை நோக்கி பகிரங்கமாக கேட்க சீன அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியது.

பிரான்ஸ் உள்நாட்டு உளவுத்துறை ஒரு பிற்போக்குதனமான ஊடக பிரச்சாரத்தை தொடங்கிவைத்ததன் மூலமாக பொதுமக்களின் எதிர்ப்புக்கு விடையிறுத்ததுடன், Liu குடும்பத்தின் ஆதரவாளர்களையும், பொலிஸ் வன்முறைக்கு எதிரான சீன சமூகத்திலுள்ள அனைத்து அமைப்புக்களையும் மிகப் பரந்தளவில் இழிவுபடுத்தவும் முனைந்து வருகின்றனர். இது அவர்களை பெய்ஜிங் அல்லது சீன கலகக் குழுவின் முகவர்களாக இருக்கலாம் என்பதையே குறிக்கிறது.

Le Parisien பத்திரிகை மார்ச் 30 அன்று, உள்நாட்டு பாதுகாப்பிற்கான பொது இயக்குனரகத்தின் (General Directorate of Internal Security - DGSI) குறிப்பு ஒன்றை சுருக்கி ஒரு கட்டுரையாக வெளியிட்டிருந்தது. விபச்சாரத்திற்கும், சூதாட்டத்திற்கும் தொடர்புடைய ஒரு “பெரிய மீன்” உட்பட இந்த சீன கும்பல் ஆர்ப்பாட்டங்களுக்குள் “ஊடுருவ” முயற்சித்து வருகின்றன என்று நம்பத்தகுந்த தகவல்களின்படி இது குற்றஞ்சாட்டியது. “சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் மற்றும் ஒரு இரகசிய உளவாளி இருவருமே பிரான்சில் இல் நடந்த NGO இயக்கத்தில் ஊடுருவியுள்ளதுடன்,” ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டனர், ஏனென்றால், “மாஃபியா வலைப்பின்னல்களின் நடவடிக்கைகள் குறித்து பெய்ஜிங் மிகுந்த பதட்டமாகவே உள்ளது” என்று இது மேலும் கூறியது.

அதே நேரத்தில், Le Parisien பத்திரிகையின் படி, பெய்ஜிங் அல்லது இந்த கும்பலின் மூலமாக சூழச்சியுடன் கையாளப்பட்டுவருகின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கின்றனர் என்று DGSI புகார் கூறியது. “உண்மையில், இந்த இயக்கம் பெய்ஜிங் இன் செல்வாக்கு அல்லது மாஃபியா குழுக்கள் பற்றி எதையும் கேட்க விரும்பாத மிகுந்த போர்குணமுள்ள பல இளைஞர்களை ஒன்று திரட்டிவருகிறது.”

அடுத்த நாள், FranceInfo பத்திரிகை DGSI இன் மற்றொரு குறிப்பின் சாராம்சத்தை வெளியிட்டிருந்ததுடன், இந்த முறை, “ஆர்ப்பாட்டங்களை வழிநடத்துவதில் தீவிரமாக ஈடுபடுவதாக,” “சீன அதிகாரிகள்” மீது வெளிப்படையாக குற்றம் சுமத்தியது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இந்த குறிப்பிலிருந்து பத்திகளை மேற்கோள் காட்டி சந்தேகத்தையும், பீதியும் கிளறிவிட முயற்சித்தது. பிரான்சில் உள்ள சீன NGO க்கள் “சீன தூதரகம் மற்றும் துணை தூதரக அதிகாரிகள் மூலமாக மிகநேரடியாக சூழ்ச்சியுடன் இயக்கப்படுவதுடன்” மேலும் “வழமைக்கு மாறாக அணிதிரட்டப் படுவதாகவும் தோன்றுகிறது” என்றும் குறிப்பிட்டது.

Liu இன் குடும்ப வழக்கறிஞரான Calvin Job, ஆர்ப்பாட்டக்காரர்களை “தீங்கானவர்கள்” என்று அழைப்பதுபோன்ற அவர்களுக்கு எதிரான புலனாய்வு நிறுவனங்களின் அவதூறுகளை நிராகரித்தார்.

“பொலிஸ் வன்முறை என்றொரு பிரச்சினை உருவாகும்போது திட்டமிட்டமுறையில் இதைத்தான் விடையிறுப்பாக நாங்கள் பார்க்கிறோம்,” என்று Job குறிப்பிட்டார். “சமீபத்திய வழக்குகளை கருத்தில்கொண்டால், Théo போன்றோரின் வழக்கு, உண்மையிலேயே பலரின் கவனத்தை ஈர்க்க தொடங்கியபோது, அந்த இளம் Théo இன் குடும்பம் பொது நிதியை தவறாக வேண்டுமென்றே பயன்படுத்தியதாக பின்னர் விடயங்கள் வெளிவந்தன. இன்று அவர்கள், சீன சமூகத்தின் குடிமக்கள் தங்களை ஒழுங்கமைவு செய்வதிலும், அவர்கள் சூழ்ச்சியினால் கையாளப்பட்டுவருவதனால் அவர்களை பாதிப்படைய செய்யும் அநீதியை எதிர்க்கவும் போதுமான அளவிற்கு முதிர்ச்சியடைந்தவர்களாக இல்லை என்று நம்மை நம்பவைக்க அவர்கள் விரும்புகிறார்கள்”

Republic Square ஆர்ப்பாட்டத்தை, ஒற்றர்களின் நடவடிக்கைகள் மற்றும் அச்சுறுத்தலான கும்பல்களுடன் கலப்பது என்பது அபத்தமான ஆத்திரமூட்டலாகும், இந்த முயற்சிகள், பொலிஸ் வன்முறைக்கும், பிரான்சில் அவசரகால நிலை அறிவிப்புக்கும் எதிரான அனைத்து எதிர்ப்புக்களையும் அடிப்படையில் சட்டபூர்வமற்றதாக்கவும், இறுதியில் சட்டவிரோதமாக்கவும் நோக்கம் கொண்டிருக்கின்றன.

ஒரு அப்பாவி மனிதர் பொலிஸால் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸின் நகரங்களிலும், புறநகர் பகுதிகளிலும் வாழும் அனைத்து இன மக்களும் அடுத்தது தாமாக இருக்கலாம் என அச்சப்பட வைத்துள்ளது. ஆதாரம் எதையும் முன்வைக்காமல், வெறுமனே அடையாளம் தெரியாத உளவுத்துறை அதிகாரிகளின் கூற்றின் பேரில் ஒரு அல்லது மற்றொரு NGO வுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை வீசுவதன் மூலமாக, அரசியலமைப்பின் கீழ் பாதுகாப்பு பெறும் தங்களது உரிமையை நிறைவேற்ற பாடுபட்ட ஆயிரக்கணக்கானவர்களின் சட்டபூர்வமான கோபத்தை இழிவுபடுத்த பாதுகாப்பு படைகள் முயன்றுவருகின்றனர்.

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் வர்க்க பதட்டங்கள் வெடிப்பு நிலையில் உள்ளன. பத்து மில்லியன் கணக்கிலான ஐரோப்பிய தொழிலாளர்கள் வேலையற்ற நிலையில் உள்ளனர்; சோசலிஸ் கட்சி அரசாங்கம், அதன் மதிப்பிழந்த தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நசுக்கிய பின்னர் மிகவும் செல்வாக்கற்ற நிலையில் உள்ளது; மேலும், அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஒன்றரை வருட காலமாக நிறுத்திவைத்துள்ள ஒரு அரை நிரந்தர அவசரகால நிலையில் பிரான்ஸ் இருந்துவருகிறது. இருப்பினும், பிரான்ஸின் ஒற்றர்களின்படி, தற்போதுள்ள சமூக சீற்றமும், எதிர்ப்பும் சீன முகவர்களின் தவறுகளாகவே உள்ளன!

பாதுகாப்பு படையினர் இத்தகைய வாதங்களை முன்வைப்பதை உழைக்கும் மக்கள் ஒரு எச்சரிக்கையாக எடுக்கவேண்டும். வெகுஜனங்களிடமிருந்து உயரடுக்கினரை பிரிக்கின்ற சமூக இடைவெளி அதிகரித்து வரும் நிலையில், ஆர்ப்பாட்டங்கள், மற்றும் NGO அல்லது அமைப்புக்கள் எதுவாயினும் ஒரு தடையாக இருக்கிறது என்று அவர்கள் கருதுவதை தடைசெய்வதை அரச துரோகத்துடன் இணைத்து நியாயப்படுத்தமுடியும் என்ற விதமான வாதங்களை தயார் செய்துவருகின்றனர். இறுதியில் இது, பிரான்சில் ஆழமான அரசியல் நெருக்கடியினதும், ஆளும் வர்க்கத்தினரிடையேயான பீதி மற்றும் அவர்கள் தனிமைப்படலினதும் அறிகுறியாகும்.