ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UK: Strikers at Fujitsu support release of framed-up Maruti Suzuki workers

இங்கிலாந்து: Fujitsu நிறுவனத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி தொழிலாளர்களின் விடுதலைக்கு ஆதரவளிக்கின்றனர்

By our reporters
29 March 2017

இந்தியாவில் ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள 13 மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு இந்த மாத தொடக்கத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வாரம், Fujitsu, தகவல் தொழில்நுட்ப கூட்டுகுழுமத்தின் மான்செஸ்டர் தளத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், அவர்களை விடுதலை செய்ய கோரும் பிரச்சாரத்தின் மூலமாக தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் இந்த வாரம் திங்கட்கிழமையன்றும், உபரியாகவுள்ள 1,800 தொழிலாளர்களின் பணிநீக்கம், ஓய்வூதிய வெட்டுக்கள், மற்றும் உயிர்வாழ்விற்கு தேவையான சம்பள கோரிக்கை ஆகியவற்றை நிறைவேற்றவது குறித்த நிறுவனத்தின் திட்டங்களுக்கு எதிராக பிரிட்டனில் Fujitsu தொழிலாளர்கள் இங்கிலாந்தின் அனைத்து தளங்களிலும் வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

600 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்ற Fujitsu மான்செஸ்டர் தளம், நியூட்டன் ஹீத் மாவட்டத்தின் ஒரு நகரத்தில் நோர்த்ஹாம்டன் சாலையில் அமைந்துள்ளது.

SEP உறுப்பினரான டென்னிஸ் மூர் மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்க அழைப்புவிடுப்பதை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட Fujitsu தொழிலாளர்கள் கேட்டனர்.

திங்களன்று, சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் மான்செஸ்டரில் மறியலில் ஈடுபட்டிருந்த சுமார் 15 வேலை நிறுத்தகாரர்களிடம் பேசியதுடன், “ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்!” என்ற தலையங்கமிட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கையின் நகல்களையும் விநியோகித்தனர், இந்த அறிக்கை 13 மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீது ஆயுள் தண்டனை சுமத்தப்பட்டதற்கும், மேலும் மார்ச் 18 அன்று இந்திய நீதிமன்றம் ஏனைய 18 தொழிலாளர்களுக்கு தண்டனையாக மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனைகளை விதித்துள்ளதற்கும் கண்டனம் தெரிவிக்கிறது. மேலும், இந்திய அரசாங்கத்திடம் அனைத்து மாருதி சுசூகி தொழிலாளர்களின் விடுதலைக்கு கோரிக்கை விடுப்பதற்காக அது ஒரு இணையவழி மனுவில் கையெழுத்திட சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

சோசலிச சமத்துவ கட்சியின் உறுப்பினர் டென்னிஸ் மூர் பின்னர் மறியலில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு ஒரு அறிக்கையை படித்து காண்பித்தபோது அவரது கருத்துக்களை அவர்கள் கவனமாக செவிமடுத்தனர். “சோசலிச சமத்துவக் கட்சியும், எமது செய்தி தளமான உலக சோசலிச வலைத் தளமும், இன்று காலை உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றன. நாங்கள் இந்த போராட்டம் பற்றி அறிவித்து கொண்டே இருக்கிறோம். மேலும், வேலைகளை பாதுகாக்கவும், ஓய்வூதிய உரிமைகளை பெறுவதற்கும், சிறந்த விகிதங்களுடனான ஊதியத்தை பெறுவதற்குமென நீங்கள் ஈடுபடும் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்” என்று மூர் கூறினார்.

“உலகம் முழுவதிலும் பல தொழிலாளர்கள் தங்களது வேலையிட நிலைமைகள் மீது எப்போதும் அதிகரித்துவரும் தாக்குதல்களை எதிர்கொள்கின்ற நிலையில் இன்று நீங்கள் இந்த நடவடிக்கையை எடுக்கிறீர்கள்.

“உலக நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும், அடிக்கடி அதிகரித்த முறையில் கடுமையாக மாறிவருகின்ற அவரகளது வேலையிட நிலைமைகளுக்கு மத்தியில், இதுபோன்ற அல்லது இதற்கும் குறைவான ஊதியத்திற்கு கடினமாக உழைக்கவேண்டுமென்றே எதிர்பார்க்கப்பட்டு வருகின்றனர்.”

“இந்திய நாட்டின் தில்லி நகரத்திலுள்ள ஒரு வாகனத் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள 13 சக தொழிலாளர்களின் அவலநிலை போன்ற ஒரு விடயத்தின் அவசரதன்மையினை பொறுத்து இதை பரப்புவதில் நான் உங்களது கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்” என்று மூர் தொடர்ந்து கூறினார்.

“இந்திய மாநில அரசாங்கம் வேலைகள் மீதான அவர்களது நிபந்தனைகளை பாதுகாக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, அதன் மூலமாக இந்த தொழிலாளர்கள் ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர், மேலும் அடிப்படையில் தங்களது உரிமைகளை பாதுகாக்க வேலை நிறுத்தம் செய்யவும், சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நேரிட்டதால் தற்போது சிறையில் ஆயுள் தண்டனைகளை எதிர்கொள்கின்றனர்.”

“2012ல், சர்ச்சை நிகழ்ந்த நேரத்தில், 2,300 தொழிலாளர்களை கொண்ட பாரிய பணிநீக்கம் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து ஆலையில் ஒரு கைகலப்பு ஏற்பட்டது.

“அப்போது ஆலையில் நெருப்பிடப்பட்டதானது மனிதவள அணியின் ஒரு அங்கமாக இருந்த அவனிஷ் குமார் தேவ் இன் இறப்பிற்கு இட்டுச்சென்றது.

“இதை தொடர்ந்து இந்த தொழிலாளர்கள் நீதித்துறை மற்றும் பொலிஸின் மூலமாக போலிகுற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணையின்போது, மரண தண்டனையை எதிர்கொள்ள இந்த தொழிலாளர்களுக்கு வாதிதரப்பு அழைப்புவிடுத்தது.

“இந்தியாவிலுள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் உடந்தையுடன் தான் இந்த அவமானகரமான பாசாங்குத்தனம் நடந்தேறியுள்ளது.

“இந்த தொழிலாளர்கள், இனி இவர்களுடன் நீண்டகாலத்திற்கு தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் அது தொடர்பாக ஏதாவது செய்ய தீர்மானித்து, பொறுத்துக்கொள்ள முடியாத அளவிலான மலிவுகூலி உழைப்பு வேலையிட நிலைமைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், வெளிநடப்புகள், உள்அமர்ந்தநிலை வேலைநிறுத்தங்கள் போன்றவை உள்ளிட்ட தொடர்ச்சியான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்” என்று மூர் விளக்கமளித்தார்.

“மாருதி சுசூகி தொழிலாளர் சங்கத்தின் (MSWU) 12 நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்ட 13 மாருதி சுசூகி தொழிலாளர்களும், குறைந்த குற்றச்சாட்டுக்களின் பேரில் இன்னும் ஏனைய 18 தொழிலாளர்களும் போலியாக சிக்க வைக்கப்பட்டுள்ளனர். தொழில் வழங்குநர்களுக்கு எது தேவையோ அதைமட்டுமே செய்வதற்கு வலியுறுத்தப்படுகின்ற ஒரு தலையாட்டி தொழிற்சங்கத்தை அமைத்துள்ள அவர்களுக்கு எதிராக தொழிலாளர்கள் ஆலையில் இந்த தொழிற்சங்கத்தை அமைத்தனர்.

“அடுத்து வரவிருந்த நீதிமன்ற வழக்கில், இந்த தீர்ப்புக்களை கொண்டுவருவதற்கு ஜோடிக்கப்பட்ட ஆதாரங்களை பயன்படுத்தியது, ஜப்பானுக்கு சொந்தமான வாகனத் தயாரிப்பாளர் நிறுவன நிர்வாகத்திற்கு பொலிஸ் உடந்தையாக இருந்ததை எடுத்தக்காட்டுவதாக இது அமைந்திருந்தது. ஆலையில் நெருப்பிடப்பட்டதற்கு அதில் ஏதோவொரு தொழிலாளிக்கும் தொடர்பு உள்ளது பற்றியோ, இன்னும் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 13 பேரில் யாராவது அதில் சம்பந்தப்பட்டிருக்கின்றார் என்பது பற்றியோ ஒரு சிறிய ஆதாரம் கூட முன்வைக்கப்படவில்லை”.

“அதிகரித்த உற்பத்தி, 21ம் நூற்றாண்டில் இந்த மனித இனம் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமைகளின் கீழ் வேலை பார்த்தே ஆகவேண்டும் என்பது போன்ற சூழ்நிலையில் இந்த நிறுவனங்கள் மலிவு ஊதிய முறையை செயல்படுத்த முயலுகின்ற நிலையில், இந்த நிறுவனங்கள் பெறுகின்ற இலாபங்களை பாதிக்ககூடிய எந்த வகையான எதிர்ப்பும் பொறுத்துக்கொள்ளப்படமாட்டாது என்ற விதமாக இந்திய மாநில அரசாங்கம் மற்றும் அரசியல் ஸ்தாபகம் மூலமாக அனுப்பப்பட்ட செய்தி தெளிவாக இருக்கிறது” என்று மூர் தொடர்ந்தார்.

“நாங்கள் வழங்கியுள்ள துண்டு பிரசுரங்களை தயவுசெய்து பாருங்கள் என்று இன்று இங்கிருக்கும் அனைவரையும் நான் வலியுறுத்துகிறேன். மேலும், இந்த தாக்குதலை எதிர்க்கவும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மூலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கவும் நாங்கள் உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்” என்ற முறையீட்டுடன் மூர் நிறைவு செய்துகொண்டார்.

“இந்த 13 தொழிலாளர்களின் சுதந்திரத்திற்காக போராட உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறோம்.

“உங்களுடன் தொடர்புபட்டவர்களுடன் இந்த விடயத்தை எடுத்துக்காட்ட சாத்தியமானதை செய்யுமாறும் மற்றும் நீங்கள் உலக சோசலிச வலைத் தளம் மூலமாக நமது இணையவழி மனுவில் கையெழுத்திடுமாறு” வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

“இன்று உலகம் முழுவதையும் நீங்கள் பார்த்தால், உழைக்கும் மக்கள் அவர்களது வேலை நிலைமைகளுக்கும், வாழ்க்கை தரங்களுக்கும் எதிராக ஏதோவொரு தாக்குதலை எதிர்கொள்கின்றனர். பன்னாட்டு மற்றும் பெரும் பெருநிறுவனங்கள் தங்களது இலாபங்களை அதிகரிக்க முனைகின்றன நிலையில், உங்களை போன்ற தொழிலாளர்களின் செலவுகளை குறைப்பதனால் மட்டுமே இதை நிறைவேற்றமுடியும்.

“பெருநிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை அடிப்படையாககொண்டு தேர்வு செய்யும் நாடுகளில் அரசியல் உயரடுக்கின் முழு ஆதரவுடன் தான் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

“அதே நேரத்தில் தொழிலாளர்கள் ஊதிய வெட்டுக்கள், தங்களது வாழ்க்கையின் அனைத்து அம்சங்கள் மீதான வேகப்படுத்துதல்கள் மற்றும் தாக்குதல்கள், யுத்தங்களின் மீது செலவிடப்பட்டுவருகின்ற பெருந்தொகை போன்ற இவற்றின் மூலமாக சூறையாடப்பட்டு வருகின்றனர்.”

“உங்களை போன்ற தொழிலாளர்களே பணிநீக்கத்தை எதிர்கொள்கிறார்கள். நீங்கள் தான் ஊதிய வெட்டுக்களுக்கு ஆளாகிறீர்கள், நீங்கள் தான் குறைந்த ஊதியத்திற்கு கடுமையாக உழைக்கின்றீர்கள். உங்களை போன்ற தொழிலாளர்கள் முன்னோக்கி வருவதற்கும், மேலும் வேலைகளையும், வேலையிட நிலைமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்கும் நீங்கள் தான் கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறீர்கள்.

“ஆயினும் ஒருவருக்கொருவர் பாதுகாத்துக்கொள்ளும் போராட்டங்களில் தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து ஈடுபடும் பட்சத்தில்தான் வெற்றியடைய முடியும், மேலும் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியப்படுதலிலிருந்து தொடங்ககூடியதான ஒரு அரசியல் வேலைதிட்டத்தை அடிப்படையாக கொண்டதாக இது இருக்கவேண்டும். மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுவிக்க இந்த பிரச்சாரத்திற்கு தயவுசெய்து ஆதரவளியுங்கள்.”

மூரை கைதட்டி பாராட்டியதன் மூலமாக மறியலில் ஈடுபட்டிருந்தவர்கள் மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்யக்கோரும் பிரச்சாரத்திற்கு அவர்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

மூரின் முறையீட்டிற்கு முன்னதாக, வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள யுனைட் தொழிலாளர் சங்கத்துடன் SEP அரசியல் ரீதியிலான வேறுபாடுகளை கொண்டிருந்தது குறித்து SEP உறுப்பினர்கள் தொழிலாளர்களுக்கு விளக்கினர். ஒரு தொழிலாளி இதற்கு விடையிறுப்பாக, “நல்லது, இந்தியாவிலுள்ள இந்த தொழிலாளர்களுக்கு நாம் ஆதரவளிக்கவேண்டும் என்பது ஒரு குறிப்பான கொள்கையாகவுள்ளது” என்று கூறினார். மேலும், “இந்த வழக்கு பற்றி இந்திய தூதரகத்திற்கு நான் எழுதவேண்டுமென்று விரும்புகிறீர்களா?” என்றும் கேட்டார்.

மூரின் முறையீட்டிற்கு பின்னர், ஒரு வேலை நிறுத்தக்காரர், “நாம் அனைவரும் தொழிலாளர்கள் என்பதால் இந்தியாவிலுள்ள அத்தகைய தொழிலாளர்களுக்கு நாம் ஆதரவளிக்கவேண்டும்” என்று கூறினார்.

மற்றொருவர், “சுசூகி தொழிலாளர்களுக்கு நான் ஆதரவளிக்கிறேன், மேலும் இணையவழி மனுவை பார்த்து கையெழுத்திடுவேன்” என்று கூறினார்.

மற்றொரு வேலை நிறுத்தக்காரர், “இந்திய தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கவேண்டிய தேவையை என்னால் பார்க்கமுடிகிறது” என்று கூறினார்.

மறியலில் ஈடுபட்டிருந்த மற்றொரு தொழிலாளி மூரிடம், அவர் இந்திய தொழிலாளர்களின் கூற்றுக்கு ஆதரவளித்ததாகவும், “நான் இன்றே மறியல் நடக்கும் இடத்திற்கு திரும்பபோவேனோ என்பது நிச்சயமில்லாது இருந்தேன். ஆனால் நீங்கள் இப்பொழுது கூறியதை கேட்ட பின்னர் இது தகுதியானதாகவே உள்ளது. நீங்கள் கூறியதில் நான் மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன்” என்றும் கூறினார்.