ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sweden’s investigation into Julian Assange was a political frame-up from the outset

ஜூலியான் அசாஞ்சை ஸ்வீடன் புலனாய்வு விசாரணை செய்வது ஆரம்பத்திலிருந்தே  ஒரு அரசியல்  போலிப்புனைவு

By David Walsh 
20 May 2017

வெள்ளிக்கிழமை அன்று ஸ்வீடிஷ் அதிகாரிகள் விக்கிலீக்ஸ் சக நிறுவனர்  ஜூலியான் அசாஞ்சுக்கு எதிரான பாலியல் துர்நடத்தையை தாங்கள் புலனாய்வு விசாரணை செய்வதைக் கைவிடுவதாக அறிவித்தனர். உண்மையில், எதுவாக இருந்தாலும் அவர்களிடம் அதுதொடர்பான வழக்கே இல்லை மற்றும் ஒருபோதும் அதை நடத்தவே இல்லை. முழு விவகாரமும் எடுத்த எடுப்பிலிருந்தே, விக்கிலீக்ஸை செயலிழக்கச் செய்யவும் செல்வாக்கிழக்கச் செய்யவும் மற்றும் ஜூலியான் அசாஞ்சை வாழ்நாள் சிறையில் இட அல்லது தூக்கிலிடப்பட, அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட அல்லது கடத்தப்படக் கூடிய நிலைமைகளை உருவாக்குதற்கும் நோக்கங்கொண்ட “இழி தந்திரங்கள்” ஆக இருந்தன.

விக்கிலீக்சின் ஒரே “குற்றம்” அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் ஈராக், ஆப்கான் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள அதன் கூட்டாளிகளின் சட்டவிரோத மற்றும் கொலைகார நடவடிக்கைகளை வெளிப்படுத்திக் காட்டியதுதான்.

அசாஞ்சுக்கு எதிரான மோசடி “கற்பழிப்பு” குற்றச்சாட்டு பிரச்சாரமானது, ஒருபுறம் அமெரிக்க இராணுவ-உளவுத்துறை அமைப்பு மற்றும் ஊடகம் எனவும் மறுபுறம் போலி இடதுகள் என இணைந்த சக்திகளால் கடந்த ஏழு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க இராணுவ-உளவுத்துறை  தனது பலத்தையும்  போலி இடதுகள் துன்புறுத்தலில் இருந்து பெண்களைப் பாதுகாத்தல் என்று கூறப்படுவதன் பெயரில், வழியின் ஒவ்வொரு அடியிலும் அசாஞ்சுக்கு எதிரான தாக்குதலை சட்டபூர்வமானதாக்கும் நடவடிக்கையின் “மூளை”யாய் பங்களிப்புச் செய்தது.

ஸ்வீடிஷ் விசாரணை கைவிடுவதானது வாஷிங்டனின் குற்றத்தன்மையை அம்பலப்படுத்துதலை நசுக்குதற்கான உந்துதல் ஒர் நிறுத்தத்திற்கு வந்துவிட்டது என்று பொருள் அல்ல. அதிலிருந்து அதிதூரத்தில் உள்ளது. அதன் அளவும் நிபந்தனைகளும் சாதாரணமாக இடம்மாறி இருக்கிறது அவ்வளவுதான். அமெரிக்க அதிகாரிகளும் அவர்களின் கூட்டாளிகளும் விக்கிலீக்ஸை ஒரு முன்மாதிரியாக்கி தண்டிக்கும் கருத்தை கைவிடும் நோக்கத்தை ஒருபோதும் கைவிடுவதாக காட்டிக்கொள்ளவில்லை.

அமெரிக்கா அசாஞ்சுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தயாரித்திருக்கிறது என்று தெரியப்படுத்தியுள்ளதோடு, வாஷிங்டன் அசாஞ்சை அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதையே பார்க்க விரும்புகின்றது. மேலும், பிரிட்டஷ் அதிகாரிகள் அசாஞ்ச் ஈக்குவடோரிய தூதரகத்தை விட்டுவெளியேறினால் இன்னும் அவரை கைது செய்ய முடியும் என்றனர். அங்கு அவர் தனது இருப்பை அறிவிக்க தவறிய குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகளாக சிக்கவைக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 13 அன்று மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தில் அவருடைய பாசிச உரையை ஆற்றுகையில், டொனால்ட் ட்ரம்பிப்பின் CIA இயக்குநர் மைக்கேல் பொம்பேயோ, “விக்கிலீக்ஸ் ஒரு எதிராளி உளவு சேவைபோல் நடக்கிறது, எதிராளி உளவு சேவைபோல் பேசுகிறது…. விக்கிலீக்ஸ் உண்மையிலே யார் என்று சொல்லும் நேரம் வந்துவிட்டது — ரஷ்யா போன்ற அரசு வேடதாரிகளால் அடிக்கடி தூண்டிவிடப்படும் ஒரு அரசு சார்பற்ற எதிராளி உளவுச் சேவை” என்றார். பொம்பேயோ மேலும் பறைசாற்றினார், “பேச்சு சுதந்திரத்தின் மதிப்புக்களை எமக்கு எதிராக பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடின்மையை, அசாஞ்சுக்கும் அவரது சகாக்களுக்கும் இனியும் நாம் அனுமதி அளிக்ககூடாதவாறு நாம் மறுஒழுங்கு செய்ய வேண்டும்.”

அசாஞ்சுக்கும் விக்கிலீக்ஸ்க்கும் எதிரான அச்சுறுத்தல் புதியதொன்றும் அல்ல. முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோசப் பைடன் அசாஞ்ச் “உயர் தொழில்நுட்ப பயங்கரவாதி” என்று கூறுகையில், அவையின் முன்னாள் தலைவர் நியூட் ஜிங்க்ரிச், விக்கிலீக்ஸ் நிறுவனர் “ஒரு எதிரிகளின் போராளியாக நடத்தப்பட வேண்டும்” என்றார்.

1984ல் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் வால்ட்டர் மொன்டேல் இன் பிரச்சார மேலாளரும் ஃபாக்ஸ் நியூஸ் வர்ணனையாளருமான பொப் பெக்கல் நுட்பமாய் பின்வருமாறு கூறினார், “இந்தப் பேர்வழி ஒரு துரோகி, அவர் தேசத்துரோகமிழைத்து அமெரிக்க சட்டம் ஒவ்வொன்றையும் மீறிவிட்டார்... அதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது: சிறுக்கி மகனை சட்டவிரோதமாக சுட வேண்டும்” என்றார்.

விக்கிலீக்ஸை கொடுமைப்படுத்துவதை வக்காலத்து வாங்குபவர்கள், அவ்வமைப்புக்கு எதிரான ஒரு “சதி” எனும் கருத்தை ஏளனமாகப் பார்க்கிறார்கள்.  அதுபற்றிய இரகசியம் ஏதும் அரிதாகவே இருந்தாலும், உண்மையில் அங்கு ஒரு சதி இருந்தது.

2010ல் அசாஞ்சின் தவறான செயல்கள் என்று கூறப்படுபவை தொடர்பாக ஸ்வீடிஷ் அதிகாரிகளால் விசாரணைகள் தொடங்குகையில், ஒபாமா நிர்வாக அதிகாரிகளால் இயக்கப்பட்ட FBI மற்றும் பெண்டகன் செயற்பாட்டாளர்களை கொண்ட சிறு இராணுவம் ஏற்கனவே  எப்படி விக்கிலீக்ஸை மூடுவது மற்றும் அதன் முன்னணி அலுவலர்களை செயல்பாடற்றவர்களாக செய்வது என்பது பற்றி அதிக காலம் வேலை செய்திருந்தது.

2010ல் வந்த Daily Beast கட்டுரையானது விவரித்ததாவது: “விக்கிலீக்ஸ் அதன் பிடிக்கமுடியாத தலைவர் ஜூலியான் அசாஞ்ச் ஆப்கானிஸ்தானின் அமெரிக்கப் போர் பதிவுகளிலிருந்து நம்பிக்கைக்குரிய ஆயிரக்கணக்கான கோப்புக்கள் கொண்ட இரண்டாவது தொகுதியை வெளியிடுவதாக அச்சுறுத்துகையில், விக்கிலீக்ஸ் போர் அறை (சில அதிகாரிகள் அவ்வாறே அழைத்தனர்) உளவாளிகளால் 24 மணி நேர நடவடிக்கைக்காக உயர் எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டிருந்தது.”

ஸ்டாக்ஹோம் தலைமை அரசு வழக்கறிஞர் ஏவா பின்ன (Eva Finne) ஆல், 24 மணி நேரத்திற்குள்ளேயே 2010 ஆகஸ்டில் பொருத்தமாக கைவிடப்பட்டிருந்த வழக்குத் தொடர்பானதில், இரண்டு மாதங்கள் கழித்து அசாஞ்சுக்கு சர்வதேச கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. “அவர் [அசாஞ்ச்] கற்பழித்திருக்கிறார் என்று சந்தேகப்படுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை” என்று அவர் கண்டார். ஆயினும், பின்னர், மிக சக்திவாய்ந்த அரசியல் சக்திகள் அதில் தலையீடு செய்தன.

காலவரிசைப் பட்டியைக் கூர்ந்து ஆயும்பொழுது, நிகழ்வுகள் இன்னும் கண்டணத்திற்கு ஆளாகக் கூடியதாக இருந்தன. 2010 நவம்பர் 28 அன்று விக்கிலீக்ஸ், டிசம்பர் 1966க்கும் 2010க்கும் இடையில் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு தூதரகங்கள், தூதுவர் துணைஅலுவகங்கள், திட்டப் பணிக்குழுக்களால் அனுப்பப்பட்ட வகைப்படுத்தப்பட்ட 250,000 தகவல்களை வெளியிட தொடங்கியது. அமெரிக்க அரசாங்கம் கோபத்துடனும் அச்சுறுத்தலுடனும் அதற்குப் பதில் கொடுத்தது. எனவே விக்கிலீக்ஸ் நிதிரீதியான மற்றும் பிறவகையான திட்டமிட்ட தாக்குதல்களுக்கு ஆளானது.

இரண்டு நாட்கள் கழித்து, நவம்பர் 30 அன்று, ஸ்வீடிஷ் அரசு வழக்குரைஞர் Marianne Ny இன் வேண்டுகோளின் பேரில், சர்வதேச போலீஸ் அமைப்பு (இண்டர்போல்) ஸ்வீடிஷ் ஆரம்பநிலை  விசாரணை (அதற்கான குற்றச்சாட்டுக்கள் அல்லது குற்றம் சாட்டல் இருக்கவில்லை) தொடர்பானதில் அசாஞ்சை கைது செய்ய 188 நாடுகளுக்கு சிவப்பு அறிக்கை வழங்கியது. இண்டர்போல் அதன் வேண்டுகோளை பகிரங்கமாக அறிவித்தது. அசாஞ்ச் லண்டனில் டிசம்பர் 7 அன்று போலீசால் சிறைப்பிடிக்கப்பட்டார்.

கொஞ்சநஞ்சம் நேர்மையுடன் இருக்கும் எவரும் அல்லது அரசியல் கூர்மதி உடைய எவரும் இவற்றிற்று இடையிலான தொடர்பை கண்டுகொள்ள முடியும். அமெரிக்க அரசியல் நிறுவனத்தில் கணக்குத் தீர்ப்பதற்கு விருப்பமுள்ள வழிமுறைகளுள் ஒன்றாக பல்வேறு அமெரிக்க அரசு முகாமைகள் பாலியல் ஊழல்களை ஒழுங்கு செய்தன அல்லது சாதகமாக எடுத்துக்கொண்டன. “அமெரிக்க பாதுகாப்புச்செயலர், றொபேர்ட் கேட்ஸ் புன்னகையுடன், [லண்டனில் அசாஞ்ச்] கைது ‘எனக்கு நல்ல செய்தியாக ஒலிக்கின்றது’ என்று கூறியதாக செய்தி அறிக்கைகள் டிசம்பர் 2010ல் குறிப்பிட்டன.

ஆங்கிலேய மிதவாதக் கசடுகளின் ஊதுகுழலான கார்டியனின் Marina Hyde போன்ற இயல்பாகவே, எரிச்சலுற்ற, சுயதிருப்தி கொண்ட முட்டாள்கள், வழக்குக்கு இன்னும் போதிய காரணமிருக்கிறது என்று தொடர்ந்து வலியுறுத்தினர். “நான் நினைக்கிறேன், நாம் அனைவரும் இங்கு உண்மையான முக்கிய படிப்பினையைப் பெற்றோம், நீங்கள் உண்மையில் நீண்டகாலம் காத்து இருந்தாலும் மற்றும் அவற்றை எதிர்கொள்ள முற்றிலும் மறுத்தால், மோசமான நிகழ்வுகள் மறைந்துபோய்விடும்” என அப்பெண்மணி வெள்ளிக்கிழமை எழுதினார்.

ஹைட் ஒருபோதும் மிகவும் தீவிரத்துடன் முன்னெடுக்காத, போருக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் தங்கள் எதிர்ப்பை, குப்பையில் போட்டுவிட்ட முன்னாள் இடது மற்றும் பெண்ணியவாதிகளுக்காக பேசுகிறார். செல்வம் மிக்க முன்னாள் தீவிரப்போக்குத் தட்டு தோலுரிக்கப்பட்டு, ”மறுபுறம்” போவதற்கு வழிவகுக்கப்பட்ட இன்னுமொரு இயங்குமுறையாக அசாஞ்ச் வழக்கு இருக்கிறது. இந்நிகழ்ச்சிப்போக்கும், 1990களின் தொடக்கத்திற்கு பின்னர் இருந்து போய்க்கொண்டிருக்கிறது.

ஸ்வீடனில் அசாஞ்ச் மீதான தாக்குதலை தூண்டிவிடும் முக்கியமானவர்களுள் ஒருவர் வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான Claes Borgström, 2000லிருந்து 2007 வரையில் இருந்த, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையெடுப்புக்கு ஆதரவாக இருந்த, சமூக ஜனநாயக அரசாங்கத்தின் ஒரு உறுப்பினர் ஆவார். அசாஞ்ச் மீது குற்றம் சாட்டியோருக்கு வழக்கறிஞரான Borgström, பாலியல் சமத்துவத்திற்கான சமூக ஜனநாயக கட்சியின் பேச்சளராகவும் சேவை செய்தார். முழு ஆண்பாலினரையும் தலிபானுடன் ஒப்பிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு அனைத்து ஆண்களுமே கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும் என வாதிட்டவர் இவர். Borgström இப்பொழுது ஸ்வீடனில் இடது கட்சியின் உறுப்பினராக இருக்கிறார்.

நேஷனின்  Katha Pollitt ம் அசாஞ்சுக்கு எதிரான பிரச்சாரத்தில் சேர்ந்து, “கற்பழிப்பு என்று வரும்பொழுது, இடதுகள் இன்னும் அதை எடுக்காமல் இருக்கின்றனர்” என்று வாதித்தார்.

“விக்கிலீக்ஸை பாதுகார், கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்களை அற்ப கருத்தாக்காதே” (ஆகஸ்ட் 2012) என்றதில், Socialist Worker “அசாஞ்ச் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்களை முக்கியமானதாக எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள். அவரது சொந்த வழக்கறிஞர்களே பெண்களை ஒரு “தேன் பொறி” என அழைத்து ஒரு சதித் தத்துவத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள்…. கற்பழிப்புக் குற்றச்சாட்டு ஒரு போதும் அற்பத்தனமாக்கப்படக் கூடாது அல்லது ஒதுக்கித் தள்ளிவிடப்படக் கூடாது” என்று கூறியது.

செப்டம்பர் 2013 அன்று International Viewpoint, “ஸ்வீடனில் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுக்கள் மீதாக கேள்வி கேட்பதை அசாஞ்ச் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான அழைப்பு ஒரு நியாயமானதே” என்று வாதித்தது.

கடந்த பல வருடங்களாக, சர்வதேச போலி-இடதுகள் அப்பட்டமாக அசாஞ்ச் பெயரைக் குறிப்பிடுகின்றனர். அவர்களது பிற்போக்கு பாலின அரசியல் ஆதவாளர்களை திருப்திப்படுத்துவதற்கு, அவர்கள் சந்தோஷமாக அவரை ஓநாய்களிடம் தூக்கி எறிகின்றனர்.

இந்த “இடது” மற்றும் மிதவாத சக்திகள் ஒரு புறநிலையான சமூகப் பங்கை ஆற்றுகின்றனர். நவகாலனித்துவ தலையீடு, ஆக்கிரமித்தல் மற்றும் யுத்தம் ஆகியவற்றின் யதார்த்தங்கள், எல்லாவற்றையும்விட மோசமானவை. பெண்டகன் மற்றும் சிஐஏ-இன் குண்டர்கள் இடைத்தரகர்கள் அல்லது விளக்கம் கூறுபவர் என எவரும் இல்லாமல் தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும்படி தங்களின் சொந்த அமைப்புகளுடன் மட்டும் அமெரிக்க மக்களை வெளிப்படையாக எதிர்கொள்ளும்படி நேர்ந்தால், அவர்களின் உண்மைத்தோற்றங்களை உடனடியாகவே கண்டுகொள்ள முடியும்.

நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் போன்ற மிதவாத ஊடகங்களின் சேவைகளும் மற்றும் முன்பு ஒரு நேரத்தில் இந்த அமைப்புமுறையின் எதிராளிகளாக இருந்த, இப்பொழுது வசதியாக இருக்கும் “இடதுகள்” ஆகியோரின் சேவை அவர்களுக்கு தேவையாக உள்ளது. “ஜனநாயகம்”, “மனித உரிமைகள்” அல்லது “பெண்கள் உரிமைகள்” என்ற போலிவார்த்தைகளின் மூலம், ஏகாதிபத்திய அடிமைப்படுத்தல்களை அல்லது விக்கலீக்ஸ் போன்றவற்றின் மீதுள்ள அரசியல் கொடுமைப்படுத்தல் போன்ற கொடூரமான முறைகளைப் புனிதப்படுத்துவதற்கு தேவைப்படுகிறார்கள்.

இந்த பிரிவினர் அனைவரையும் இகழ்ந்து ஒதுக்குதலே இந்த நாளின் அத்தியாவசியமான அரசியற் கல்வியூட்டல் பணியாகும்.