ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

France, Germany seize upon US withdrawal from climate pact to push geopolitical interests

பிரான்ஸூம் ஜேர்மனியும் அவற்றின் புவிசார்அரசியல் நலன்களை முன்னெடுக்க, தட்பவெப்ப மாற்ற உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதை பற்றிக்கொள்கின்றன

By Peter Schwarz
3 June 2017

தட்பவெப்ப மாற்றத்திற்கான பாரீஸ் உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதென்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முடிவானது, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மெர்க்கேல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் உட்பட முன்னணி ஐரோப்பிய அரசியல்வாதிகளிடம் இருந்து கண்டங்களைக் கொண்டு வந்துள்ளது.

“நமது அன்னை பூமி விடயத்தில் நாம் வெற்றியடைய" "நம் பூமியின் எதிர்காலத்தை முக்கியமானதாக கருதும் ஒவ்வொருவரும்" தொடர்ந்து ஒன்றுசேர்ந்து பயணிக்குமாறு மேர்க்கெல் அழைப்புவிடுத்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “எதுவும் நம்மை தடுக்க முடியாது, தடுக்காது… உலகின் மொத்த பலத்தையும் ஒருங்கிணைக்க, ஜேர்மனியிலும் ஐரோப்பாவிலும், நாங்கள் முன்பை விட அதிகளவில் தீர்மானமாக உள்ளோம்,” என்றார்.

ட்ரம்ப் அறிவிப்புக்கு ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், மக்ரோன் பிரெஞ்சு மொழியிலும் மற்றும் எலிசே மாளிகை வரலாற்றில் முதல்முறையாக ஆங்கிலத்திலும் ஒரு காணொளி சேதி மூலமாக உலக மக்களுக்கு முறையிட்டார். ஒரு மிகப்பெரும் தவறு செய்வதற்காக அமெரிக்க ஜனாதிபதியைக் குற்றஞ்சாட்டிய அவர், “நம் பூமியை மீண்டும் மகத்தானதாக ஆக்குவோம்" என்று அறிவித்து அவர் தேர்தல் முழக்கத்தையே மீண்டும் பின்தொடர்ந்தார்.

அவர்களின் உணர்ச்சிகரமான அறிவிப்புகளுக்குப் பின்னால், மேர்க்கெலும் மக்ரோனும், உலகளாவிய சந்தைகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் மூலோபாய செல்வாக்கிற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்காவுடன் போட்டியிட தகைமை கொண்ட ஒரு வல்லரசாக கட்டியெழுப்பும் பொருட்டு, அமெரிக்காவுடனான பிளவையும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதையும் சுரண்டிக் கொள்கின்றனர்.

அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ஐரோப்பா நெருக்கமாக நெருங்கி வந்துள்ளது. ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலியும், ஒரு கூட்டறிக்கையில் தட்பவெப்ப மாற்ற தீர்மானங்கள் மீது மறுபேரம்பேசல்களுக்கான ட்ரம்பின் அழைப்பை நிராகரித்தன. பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே அந்த அறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டார் என்றாலும், ட்ரம்பின் முடிவால் அவர் "ஏமாற்றம் அடைந்திருப்பதாக" அறிவித்தார்.

தட்பவெப்ப உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக ட்ரம்ப் வாஷிங்டனில் அறிவித்து கொண்டிருந்தபோது, மேர்க்கெல் முதலில் இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியையும் பின்னர் சீன பிரதமர் லி கெக்கியாங்கையும் பேர்லினில் வரவேற்றுக் கொண்டிருந்தார். திரைக்குப் பின்னால் பில்லியன் கணக்கான வணிக உடன்படிக்கைகள் கையெழுத்தானாலும், தட்பவெப்ப உடன்படிக்கைக்கு கடமைப்பாட்டை அறிவிப்பதே இவர்கள் ஒவ்வொருவரது விஜயத்தின் மையப்பொருளாக இருந்தது.

மோடி விஜயத்திற்குப் பின்னர், மேர்க்கெல் “தட்பவெப்ப உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் தீர்க்கமாக ஈடுபட்டு" வருவதற்காக இந்தியாவை பாராட்டினார். மோடி ஜேர்மனியில் இருந்து ட்வீட்டரில் பதிலளித்தார்: “இந்த விஜயம் பிரமாண்ட விளைவுகளைக் கொண்டு வரும் என்பதிலும், ஜேர்மன்-இந்திய நட்புறவை ஆழப்படுத்தும் என்பதிலும் நான் உறுதியாக உள்ளேன்.”

பேர்லினில் லி அறிவித்தார்: “சீனா அதன் சர்வதேச பொறுப்புறுதிகளில் நிற்கிறது.” அவர் கூறுகையில், பூகோள வெப்பமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தில் அதன் கடமைபாட்டில் அது "உறுதியாக" இருப்பதுடன், புகை வெளியேற்றுவதற்கான நிர்ணய இலக்குகளை “படிப்படியாக" எட்டுவதற்கு உத்தேசித்திருப்பதாக தெரிவித்தார். பேர்லினில் இருந்து அவர் புரூசெல்ஸிற்குச் சென்றார், அங்கே பாரீஸ் உடன்படிக்கைக்கு அவர்களது பொறுப்புறுதியை மறுஉறுதிப்படுத்தும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் ஒரு கூட்டு அறிக்கை திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் வர்த்தக கொள்கை பிரச்சினைகள் மீதான கருத்துவேறுபாடுகளால் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை.

“சீனா தன்னை ஒரு பொறுப்பான உலக சக்தியாக காட்ட விரும்பும் அதேநேரத்தில், அமெரிக்க சகாப்தத்தின் முடிவை அது தொடங்கி வைக்கிறது,” என்று Frankfurter Allgemeine Zeitung கருத்துரைத்தது. அதே பத்திரிகையில் வெளியான மற்றொரு கருத்துரை குறிப்பிட்டது: “டொனால்ட் ட்ரம்ப் எந்த பிரமைகளும் கொண்டிருக்கக்கூடாது. தட்பவெப்ப கொள்கை மற்றும் வர்த்தக கொள்கை பகுதிகளில் ஜேர்மன் தற்போது புதிய கூட்டணிகளை உருவாக்க கடுமையாக வேலை செய்து வருகிறது. சீனா மற்றும் இந்தியாவுடன்.”

2015 இல் கொண்டு வரப்பட்ட பாரீஸ் உடன்படிக்கை, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்த நாட்டையும் நிர்பந்திக்கவில்லை. ஒவ்வொரு நாடும் அதன் சொந்த இலக்குகளை அமைத்துக் கொள்ளலாம், அமெரிக்காவை அடுத்து அதிகளவில் CO2 (கார்பன்டை ஆக்சைடு) வெளியிடும் சீனா 2030 க்குப் பின்னர் தான் அதன் வெளியீடுகளைக் குறைக்க உள்ளது.

ஆனால் தட்பவெப்ப மாற்ற கொள்கை, நீண்டகாலமாகவே வல்லரசு அரசியலுக்கான ஒரு முக்கிய கருவியாக இருந்து வருகிறது. அமெரிக்கா வெளியேறுவதானது, ஜேர்மன் வணிகத்திற்கும் வெளியுறவு கொள்கைக்கும் என்ன வாய்ப்புகளை வழங்குமென Spiegel Online பத்திரிகை இரண்டு கட்டுரைகளில் உற்சாகத்துடன் ஆய்வு செய்திருந்தது.

“குறைகூறுவது உதவாது" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில், Feit Medick, அந்த உடன்படிக்கையிலிருந்து ட்ரம்ப் வெளியேறுவதை "அமெரிக்காவின் அரசியல் மற்றும் தார்மீக திவால்நிலையின் பிரகடனம்" என்று வர்ணித்தார். “அடுத்து என்ன நடக்கும் என்பதை வாஷிங்டன் அல்ல, நாம் தீர்மானிக்கலாம்" என்பது இதிலிருக்கும் நல்ல விடயம் என்றார்.

தட்பவெப்பநிலை பாதுகாக்க வேண்டியிருப்பதை "பல இடங்களில் இன்று ஒரு நெருக்கடியாக அல்லாமல் ஒரு வாய்ப்பாக" பார்க்கப்படுவதாக எழுதிய Medick தொடர்ந்து குறிப்பிடுகையில், பணயத்தில் இருப்பவை “வேலைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொடர்புகள் மற்றும் முக்கியத்துவத்தில் குறைவின்றி அரசியல் தலைமை … ஒருவரின் தலைவிதியை அவரின் சொந்த கரங்களில் எடுப்பது குறித்த அவர் வார்த்தைகளில் சான்சிலர் தீர்க்கமாக இருந்தால், இங்கே வணிகம் பேச தொடங்கலாம் என்பதுடன், வாரயிறுதியில் தட்பவெப்பம் மீதான கூட்டணியை நடத்துவதற்கும் அவர் சிறந்த வழியைக் காணலாம்,” என்றார்.

அமெரிக்கா அது விலகியதன் மீதான தாக்கத்தை "பகுதியாக தானாகவே" உணரும், “என்றாலும் பகுதியாக நாம் என்ன செய்கிறோமோ அதன் மூலமாகவும் கூட தான்,” என்று Spiegel Online அச்சுறுத்தியது. ட்ரம்ப் "விளையாட்டுத்தனமாக உடன்பாட்டை இரத்து செய்து தன்னைத்தானே ஒரு பயங்கர நிலைமையில் நிறுத்தியுள்ளார்.” “வர்த்தகத்தில் இருந்து, நிதித்துறை வரையில் மற்றும் ஆயுத ஏற்றுமதிகள் வரையில் … பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு அங்காலும், வாஷிங்டனின் விருப்பத்திற்கு இணங்கி இருக்க தயாராக இருந்த நிலை வேகமாக வீழ்ச்சி [அடையும்].”

“அமெரிக்கா வெளியேறுவது உலகிற்கு என்ன அர்த்தப்படுத்துகிறது" என்ற Spiegel Online இல் வெளியான மற்றொரு கட்டுரை, வெளியேறுவதால் ஏற்படும் பாதகங்களை அடுக்கடுக்காக விவரிக்கிறது.

அது குறிப்பிடுகிறது, “ஐ.நா. தட்பவெப்ப பேச்சுவார்த்தைகள்,” “இராஜாங்க தொடர்புகளுக்கான ஒரு முக்கிய கட்டமாக இருந்துள்ளது.” முன்னிருக்கும் பிரச்சினை, பசுமைசேத வாயுக்களைக் (greenhouse gases) குறைப்பதல்ல, மாறாக "வளர்ச்சி உதவி, பொருளாதார ஊக்குவிப்புகள், எரிசக்தி ஒதுக்கீடுகளை மறுஒழுங்கு செய்தலும் ஆகும்—அனைத்திற்கும் மேலாக, ட்ரம்ப் கூறுவதைப் போல, அது வணிக 'உடன்படிக்கைகள்' ஆகும். அப்பேச்சுவார்த்தைகளில் யாரெல்லாம் பங்கு வகிக்கவில்லையோ அவர்கள் செல்வாக்கை இழக்கிறார்கள்.”

ஒரு நாட்டிற்கு “நாடுகளை மற்ற விடயங்களில் இணங்குவிக்க வேண்டிய" தேவையிருந்தால் "… தட்பவெப்ப பேச்சுவார்த்தைகள் மீதான வணிக உடன்படிக்கைகளை [கொண்டு] இணங்குவிக்கலாம்.” சீனா “ஆபிரிக்க உள்கட்டமைப்பை துரிதகதியில்" கட்டமைத்து வருகிறது, “இது அங்கே சீன மக்கள் குடியரசின் செல்வாக்கை மற்றும் வர்த்தக உறவுகளைப் பாதுகாக்கிறது.”

உலகளாவிய தட்பவெப்ப உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவது, “அமெரிக்காவின் உலகளாவிய அரசியல் செல்வாக்கின் மீது இழப்புக்களை" ஏற்படுத்தும். அது, அந்த உடன்படிக்கையை உருவாக்கும் போக்கில் எட்டப்பட்ட "வணிக உடன்படிக்கையில் பல பில்லியன்களையும்" கூட இழக்கக்கூடும். அந்த உடன்படிக்கையின் பாகமாக ஏழை நாடுகளுக்கு வழங்க உறுதியளிக்கப்பட்ட நிதிகள் "பிரதானமாக நன்கொடைகள் அல்ல, மாறாக அந்த தொகைகளை வழங்கும் நாடுகளின் நிறுவனங்கள் அபிவிருத்தி திட்டங்களில் சம்பந்தப்பட்டிருக்கும்.”

“தட்பவெப்ப உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதென்பது" “மறுசுழற்சி எரிசக்தி எனும் மிகப்பெரிய வணிக வாய்ப்புகளை மற்ற நாடுகளுக்கு" வெளிப்படையாக விட்டுவிடுகிறது என்று Spiegel Online நிறைவு செய்தது. ஜேர்மனி "தட்பவெப்ப பேரம்பேசல்களின் கட்டமைப்பிற்குள், இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை விரிவாக்க உடன்பட்டுள்ளது—இத்திட்டம் இவ்விரு நாடுகளுக்கும் ஆதாயமானது,” என்றது குறிப்பிட்டது.