ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Class struggle developing on Indian sub-continent

Workers Struggles: Asia, Australia and the Pacific

இந்திய துணைக்கண்டத்தில் வளர்ச்சியடையும் வர்க்கப் போராட்டம்

தொழிலாளர் போராட்டங்கள்; ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் ...

3 June 2017
Asia

இந்தியா: பெங்களூர் நகராட்சித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நிரந்தர வேலை மற்றும் நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்கக் கோரி மே 25 ன்று BBMP (அகன்ற பெங்களூர் ஆட்சிக்குட்பட்ட பகுதி) லிருந்து சுதந்திரப் பூங்கா பகுதிக்கு சுமார் 10,000 தினக்கூலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பேரணியாக சென்றனர். இந்த போராட்டக்காரர்கள் மாநிலத்தில் குறைவான கூலி பெறுகிற பெரும்பாலும் தெரு துப்புரவாளர்கள் மற்றும் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் ஆவார். அவர்களுக்கு வழங்கப்படுகிற அற்ப கூலியில் வாழ முடியாதுள்ளது என்றும் அது அடிக்கடி பல மாதங்கள்  தாமதப்படுத்தப்படுகிறது அவர்கள் கூறினார்கள்.

நிரந்தர வேலை, ஒரு ஊதிய உயர்வு மற்றும் காலதாமதமான ஊதியங்களைச் செலுத்துதல் ஆகிய கோரிக்கைகளை தொழிலாளர்கள் வைத்தனர். இந்த வருடம் மார்ச்சில் கொண்டு வரப்பட்ட ஒரு புதிய வேலைவாய்ப்பு திட்டம் மூலம் எங்களை நிரந்தரமாக்குவேன் என்று பொய்யான வாக்குறுதியை முதலமைச்சர் வழங்கிய பின்னர் முந்தைய போராட்டம் மே 2016 இல் முடிவுக்கு வந்தது என்று தொழிற்சங்க தொடர்பாளர் ஒருவர் கூறினார். யூன் 12 க்குள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.

ஹரியானா பொது போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

ஹரியானா சாலைவழி தொழிலாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் திங்கட்கிழமையன்று 273 வழிகளில் பேருந்துகளை ஓட்டுவதற்கு தனியார் உரிமையாளர்களை அனுமதித்தற்காக மாநில அரசாங்கத்தின் முடிவினை எதிர்த்து மாநிலம் முழுவதும் ஒரு வேலைநிறுத்தப்போராட்டத்தினை மேற்கொண்டனர். சேவையைத் தனியார் உரிமையாளர்கள் இயங்கத் தொடங்கியதால் இந்த பிரச்சனைக்காக மே 24ன்று சிர்சா பணிமனைத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.  இந்த வெளிநடப்புப் போராட்டத்தால் சுமார் 3500 மாநில பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.  ஏப்ரல் 10ன்று ஒரு 24 மணிநேர மாநில அளிவிலான வேலைநிறுத்தம் மூலம் அவர்களின் போராட்ட நடவடிக்கை தொடர்ந்தது.

தனியார்மயமாக்கல் ஆணையை நியாயப்படுத்துவதற்காக போக்குவரத்து சேவைகளை கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கத்தை தொழிலாளர்கள் குற்றம் சாட்டினார்கள்.  சுமார் 96,000 தொழிலாளர்களுக்கு 16,000 அரசுப் பேருந்துகள் மூலம் வேலை வழங்கியிருக்க வேண்டும் என அவர்கள் கோரியிருந்தார்கள். தற்போது 4,000 பேருந்துகள் மட்டுமே இருக்கிறது என்று ஒரு தொழிலாளி கூறினார்.

கர்நாடகா BASF  இரசாயண ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம்

கர்நாடகா, மங்களூர் இல் உள்ள ஜெர்மனிக்கு சொந்தமான BASF இரசாயண ஆலையில் மே 22 இலிருந்து தொழிற்சாலையின் உள்வளாகத்துக்குள் நிறுவனத்தின் தொழிற்சங்கத்திற்கு எதிரான பாகுபாட்டினை எதிர்த்து உற்பத்தி பிரிவில் இருக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தினை நடத்தியிருக்கிறார்கள். தொழிலாளர்களின் போராட்டத்தினால் உற்பத்தி பாதிக்கப்படாது என்று தொழிற்சங்கம் கோரியுள்ளது. மும்பாய் மற்றும் குஜராத் போன்ற இடங்களில் இருக்கும் BASF தொழிற்சாலையின் தொழிலாளர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு எதிரான நிர்வாகத்தின் பாகுபாடு குறித்து புகார் தெரிவித்திருக்கின்றனர்.

அதே வேலையைச் செய்யும் தொழிற்சங்கத்தில் இல்லாத உறுப்பினர்களூக்கு குறைவான நேர அளவு மற்றும் சிறந்த வேலைவாய்ப்பு பலன்களுடன் அதிகமான சம்பள பதவிகளைக் கொடுத்து வகைப்படுத்துகிறது என்று மங்களூர் தொழிலாளர்கள் கோரினார்கள். அன்மையில் நிர்வாகம் ஊழியர்களை அச்சுறுத்தும் முயற்சியில் 60 தொழிற்சங்க உறுப்பினர்களை பணிநீக்கம் செய்துள்ளது என்று தொழிலாளர்கள் கூறினார்கள்.

பாகிஸ்தான்: கைபர் எல்லைப்புற மாகாண மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

அபொடாபாத்தில் இருக்கும் ஆயூப் போதனா மருத்துவமனையில் பேராசிரியர்கள் மற்றும் மூத்த நிலையில் இருப்பவர்கள் உட்பட மாகாண மருத்துவர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் மே 24ன்று நீண்டகாலமாக இருக்கும் பிரச்சனைகளுக்காக ஒரு வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர். வகுப்புக்கள் நிறுத்தப்பட்டன மேலும் உடனடி கவனிப்புக்குறிய நோயாளர்களுக்கான அறுவைச்சிகிச்சை பிரிவு மட்டுமே இயங்கியது.

சிறந்த விடுதிகள் மற்றும் பணி அழைப்பிற்கான பணம்செலுத்துதல் போன்றவைகள் வேண்டும் என்று மருத்துவர்கள் கேட்டனர். அண்மையில் இரண்டு கீழ்நிலை மருத்துவர்கள் விவரிக்கமுடியாத வகையில் இறந்ததற்கு மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே வெறுக்கத்தக்க தங்குமிடமே காரணமாக இருந்துள்ளது என அவர்கள் கோரினார்கள். 

அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை தொடர்ச்சியாக வேலைநிறுத்தத்தை தொடர்வதற்கு மருத்துவர்கள் ஏகமனதாக ஈடுபட்டதால் திங்கட்கிழமையன்று அந்த வேலைநிறுத்தத்தை நிறுத்துவதற்கு மாகாண அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தோற்றுப்போயிருந்தன. வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களை அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கையாக உடனடியாக வேலைக்கு திரும்பவேண்டும் அல்லது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை அளித்தனர்.

அதேவேளை, மற்றொரு பிரச்சனையாக இளம் மருத்துவர்கள் சங்கத்தின் (YDA) உறுப்பினர்கள் மே 23 ன்று மாகாண அளவில் ஒரு வேலைநிறுத்தத்தினை தொடங்கியிருந்தனர். பெஷாவரில் லேடி ரீடிங் மருத்துவமனைக்கு வெளியே ஒரு எதிர்ப்புப்போராட்ட முகாமினை தொடர்ந்து செயல்படுத்திவந்தனர். ஒரு சேவைக் கட்டமைப்புக்காவும், முதுநிலை மருத்துவ கல்லூரியை (PGMI) மத்திய கட்டுப்பாட்டிலிருந்து  நீக்குவதிலிருந்து பாதுகாப்பதற்கும் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.

மாகாணத்தின் பல போதனா மருத்துவமனைகளின் வாழ்க்கைத் தொழிலுக்குரிய தரத்தினை குறைப்பதற்கு PGMI  ஐ மத்திய கட்டுப்பாட்டிலிருந்து  நீக்குவது அரசாங்கத்தின் திட்டமாக இருப்பதாக மருத்துவர்கள் அச்சப்படுகிறார்கள். கடமையில் இருக்கும்போது மருத்துவர்கள் இறந்தால் அவர்களுடைய குடும்பத்துக்கு இழப்பீட்டின்பொருட்டு அரசாங்கம் பணம் வழங்கவேண்டும் என்றும் YDA யும் கோரிக்கைவிடுத்துள்ளது.

லாகூர் இருப்புப்பாதை (ரயில்வே) தொழிலாளர்கள் போராட்டம்

பாகிஸ்தான் அரசு நடத்தும் இருப்புப்பாதை நிறுவனத்திலிருந்து மே 29ன்று லாகூரில் இருப்புப்பாதை தொழில்கூடத்திற்கு வெளியே இருப்புப்பாதை தொழிலாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ஒரு 100 சதவீத சம்பள உயர்வு, சேவை கட்டமைப்பு, ஓய்வு பெற்ற மற்றும் நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளிலிருந்து 60 சதவீத புதிய தொழிலாளர்களை தெரிவு செய்யவேண்டும் மேலும் அரசாங்கத்தின் பொதுச் சேவையை தனியார்மயப்படுத்துவதற்கான திட்டத்தை நிறுத்தவேண்டும் ஆகியவற்றை அவர்கள் கோரினார்கள்.

இதே பிரச்சனைகளுக்காக ஜனவரியில் லாகூர் பத்திரிகையாளர் கழக அலுலகத்திற்கு முன்னால் சுமார் 1000 இருப்புப்பாதை தொழிலாளர்கள் எதிர்ப்புப் போராட்டத்தினை நடத்தியிருந்தனர்.

சிந்து மாகாண மின்சார மற்றும் நீர் பயன்பாட்டுத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வரப்போகும் வரவு-செலவு திட்டத்தில் ஒரு தொகை கோரிக்கைகளை சேர்த்து க் கொள்ள வேண்டும் என்று கோரி மே 25 அன்று சிந்து மாகாண முழுவதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக மே 25 அன்று சுமார் 1000 அனைத்து பாகிஸ்தான் வப்டா ஹைட்ரோ மின்சாரத் தொழிலாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.  வந்திருந்தவர்களில் ஹைதாராபாத் மின்சார அளிப்பு நிறுவனத்திலிருந்தும் (Hyderabad Electric Supply Company), ஷுக்குர் மின்சார அளிப்பு  நிறுவனத்திலிருந்தும் (Sukkur Electric Power Company) தொழிலாளர்கள்   கலந்துகொண்டனர்.

100 க்கும் 150 சதவீதத்திற்கும் இடைப்பட்டளவில் சம்பள உயர்வு, ஓய்வூதி அதிகரிப்பு மற்றும் வீட்டுவாடகை படி, இறப்பு மற்றும் திருமண மானியம், அவசரகால உதவித்தொகை, வேலைப் பாதுகாப்பு, தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு பணியில் சேர்வதற்கு வேலை ஒதுக்கீடு, ரம்ஜான் வெகுமானம் மற்றும் தனியார்மயமாக்களுக்கு ஒரு முடிவு போன்றவற்றை மின்சாரத் தொழிலாளர்கள் கோரினார்கள்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிலிருந்து வரும் கோரிக்கைகளின் கீழ் ஒரு பொதுப்பயன்பாட்டு நிறுவனத்தை தனியார்மயமாக்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை எதிர்த்து ஒரு நீண்ட பிரச்சார போராட்டத்தில் நீர் மற்றும் மின்சார மேம்பாட்டு ஆணைய (WAPDA) தொழிலிளார்களும் ஈடுபட்டனர்.

பிலிப்பைன்ஸ்ஆடம்பர ஹோட்டல் தொழிலாளர்கள் வேலைநிறுத்த அறிவிப்பினை வெளியிட்டனர்

தீபகற்ப மணிலா ஆடம்பர ஹோட்டல் இல் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தீபகற்ப தொழிலாளர்கள் சங்கமானது ஹோட்டலால் முன்னிறுத்தப்பட்ட புதிய கூட்டுப்பேர ஒப்பந்தம் மற்றும் உரிமைகள் மற்றும் வேலைநிலைமைகள் மீதான ”தீவிர” தாக்குதல்தல் போன்ற அவர்களின் பிரச்சனைகளில் ஒரு தொழில்துறை நடவடிக்கை எடுக்கப்போவதாக தாக்கல் செய்துள்ளது.  நிர்வாகம் பிரேரிக்கும் புதிய உடன்படிக்கையானது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் வேலைநிலைமைகளை குறைப்பதற்கு வழிவகுக்கும் என தொழிலாளர்கள் கூறினார்கள்.

சென்றவருடம் நடந்த தொழில்துறை நடவடிக்கையில் வேலைநீக்கம் செய்த தொழிற்சங்கத்தின் ஒரு தலைவரை திரும்பவும் வேலையில் சேர்ப்பதற்கும் ஹோட்டல் நிரந்தர நிலையில் 405 சாதாரண தொழிலாளர்களை வைத்திருக்கவேண்டிய ஒரு அரசாங்கத்தின் உத்தரவை கடைப்பிடிக்கவேண்டும் என்றும் தொழிற்சங்கம் கோரியது.  ஜனவரியில் கூட்டுப்பேர ஒப்பந்தத்தின்மீது பேச்சுவார்த்தைபேரங்களைக் குறைப்பதற்கு ஒரு நிறுவன தொழிற்சங்கத்தை நிறுவ ஹோட்டல் முயற்சித்தது.  அது தொழிலாளர்களின் பெருமளவிலான வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.