ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US, Australian officials warn China over North Korea, South China Sea

வட கொரியா மற்றும் தென் சீனக் கடல் பகுதி குறித்து அமெரிக்க, ஆஸ்திரேலிய அதிகாரிகள் சீனாவை எச்சரிக்கின்றனர்

By Peter Symonds
6 June 2017

சிட்னியில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலிய-அமெரிக்க அமைச்சரவை ஆலோசனை (Australia-US Ministerial Consultations-AUSMIN) கூட்டத்தின்போது, அமெரிக்க வெளியுறவு செயலரான றெக்ஸ் ரில்லர்சன், தென் சீனக் கடல் பகுதியில் சீனா அதன் திரும்பிப்பெறும் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவரவும், வட கொரியா அதன் அணுஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களை கைவிட சீனா அதனை இன்னும் அதிகமாக நிர்ப்பந்திக்க வலியுறுத்தியும் சீனாவிற்கு ஒரு தெளிவான செய்தியை விடுத்தார்.

பொதுவாக ஆண்டுதோறும் நடைபெறுவதுபோல, இந்த ஆண்டும் நடைபெற்ற AUSMIN பேச்சுவார்த்தைகளில் ரில்லர்சன் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மாட்டிஸூம், அவர்களது ஆஸ்திரேலிய சமதரப்பினர்களான ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மரைஸ் பெய்ன் ஆகியோருடன் பங்கேற்றனர். மேலும், ஆசியாவில் பெரிய அமெரிக்க கட்டமைப்பிற்கு பொறுப்பாளர்களாகவுள்ள இரண்டு உயர்மட்ட இராணுவ அதிகாரிகளான, பணியாளர்களின் கூட்டுத் தலைவர்களின் தலைவர் (Chairman of the Joint Chiefs of Staff) ஜோசப் டன்ஃபோர்ட் மற்றும் பசிபிக் கட்டளையகத்தின் தலைவர் (head of Pacific Command) அட்மிரல் ஹாரி ஹாரிஸ் ஆகியோருடன் ரில்லர்சனும், மாட்டிஸூம் சேர்ந்து கலந்துகொண்டனர்.

ஆஸ்திரேலிய அமைச்சர்களுடன் ஒரு கூட்டு பத்திரிகையாளர் மாநாட்டில் ரில்லர்சன் பேசுகையில், வட கொரியா அணுஆயுத ஒழிப்பை மேற்கொள்ள கோரிக்கை விடுப்பதிலும், தென் சீனக்  கடல் பகுதியில் சீனாவின் செயற்கைத் தீவு கட்டுமானம் மற்றும் அவர்களின் இராணுவமயமாக்கல் அம்சங்கள் ஆகியவற்றை எதிர்ப்பதிலும் அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் சேர்ந்து “ஒரே குரல் கொடுக்கின்றனர்” என்பதை வலியுறுத்தினார்.

சீனாவின் வளர்ந்துவரும் பொருளாதார செல்வாக்கைப் பற்றி குறிப்பிடுகையில், “தென் சீனக் கடல் பகுதி தீவுகளில் அதன் இராணுவமயமாக்கம் அல்லது வட கொரியா மீது சரியான அழுத்தம் கொடுக்க தவறுவது போன்ற ஏனைய சிக்கல்களை தவிர்த்துவிட்டு, சீனா தனது பொருளாதார வல்லமையை அங்கு பயன்படுத்திக்கொள்ள நாங்கள் அனுமதிக்க முடியாது” என்று தேசிய பாதுகாப்பு செயலர் அறிவித்தார்.

இந்த கருத்துக்கள் சீனாவின் மீதான வெறும் எச்சரிக்கையாக மட்டுமல்லாமல், வாஷிங்டனிலிருந்து விலகி, பெய்ஜிங்கை நோக்கி தனது பொருளாதார உறவுகளை ஊக்குவிப்பதற்கான ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ள பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாடுகள் மீதான எச்சரிக்கையாகவும் அவை இருந்தன. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்ற தனது முன்னோடிகளின் ஆக்கிரோஷமான சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை மாற்றியுள்ளதுடன், தென் சீனக் கடல் பகுதிகளில் சீனாவுடனான தனது நாட்டின் பிராந்திய மோதல்களையும் குறைத்துக்கொண்டுள்ளார்.

ஒரு கூட்டு AUSMIN அறிக்கை தென் சீனக் கடலில், “சட்டபூர்வமான, சுதந்திரத்துடன் கூடிய கடல்வழி போக்குவரத்தை அடைவதன் முக்கியத்துவம் பற்றியும்,” “விதிகள் அடிப்படையிலான உத்தரவை பின்பற்றவது பற்றியும்” வலியுறுத்தியது. கடந்த வார இறுதியில், சிங்கப்பூரில் ஆசியாவின் முன்னணி வருடாந்திர பாதுகாப்பு மாநாடான Shangri La Dialogue நடைபெறுவதற்கு முன்னதாக, ட்ரம்ப் நிர்வாகத்தின் முதல் “கடல்வழி போக்குவரத்து சுதந்திர” நடவடிக்கை ஒன்றை அமெரிக்க கடற்படை நடத்தியதுடன், ஒரு தீவுப் பகுதி சுற்றிலும் சீனா உரிமைகோரும் பகுதியில் 12 கடல்வழி-மைல் வரம்பிற்குள் செயல்படும் வகையில் வழிகாட்டி ஏவுகணையுடன் கூடிய அழிப்புக்கப்பல் ஒன்றையும் அங்கு அனுப்பியது.

தென் சீனக் கடல் பகுதியில் உள்ள பிராந்திய மோதல்களுக்கு தீர்வு காண்பதற்கு, ஹேக்கில் உள்ள நிரந்தர மத்தியஸ்த நீதிமன்றத்தின் கடந்த வருட தீர்ப்பு ஆதாரமாக மாறியதாக AUSMIN அறிக்கையும் ஆத்திரமூட்டும் வகையில் முன்மொழிந்தது. பிலிப்பைன்ஸ் ஆல் கொண்டுவரப்பட்டு பலமான அமெரிக்க ஆதரவுபெற்ற இந்த வழக்கையும், இந்த நீதிமன்றத்தின் அதிகார எல்லையையும், தீர்ப்பையும் சீனா அங்கீகரிக்கவில்லை.

வட கொரியா தனது அணுஆயுதங்களை இல்லாதொழிக்க அழுத்தம் கொடுக்க ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே சீனாவிற்கு மிகுந்த அழுத்தம் கொடுத்து வந்துள்ளது, எனினும் சீன முயற்சிகள் குறித்தும், சமீபகாலம் வரை ஏனைய அபாயகரமான வெடிப்புப் புள்ளிகள் இன்னும் மோசமான நிலையை அடைவதிலிருந்து தவிர்த்து வந்துள்ளது குறித்தும், அதனை புகழ்ந்து பாராட்டியுள்ளது. தென் சீனக் கடலில் சீனாவின் நடவடிக்கைகளை ரில்லர்சனின் கருத்துக்கள் எதிர்ப்பதுடன், “வட கொரியா மீது சரியான அழுத்தம் கொடுக்க” அது தவறிவிட்டதானது, பெய்ஜிங் ஒரு கடும் அணுகுமுறையை செயல்படுத்துவதற்கான நேரத்தையும் கடந்துபோகச் செய்துவிட்டது என்பதை சுட்டிக்காட்டுவதாக மறைமுகமாக குறிப்பிடுகின்றது. வட கொரிய பிரச்சனைக்கு சீனா “தீர்வு” காணவில்லை என்றால் இராணுவ வழிமுறை ஊடான தாக்கத்துடன் அதனை அமெரிக்கா நிறைவேற்றுமென ட்ரம்ப் அறிவித்தார்.

ஐரோப்பாவில் அமெரிக்க நட்பு நாடுகளுடன், குறிப்பாக ஜேர்மனியுடன் பிளவுகளை எதிர்கொள்கையில், ட்ரம்ப் அதிகாரிகள் சிட்னி பேச்சுவார்த்தைகளின் போது சீனாவிற்கு ஒரு கடுமையான செய்தியை பகிரங்கமாக விடுக்க தேர்ந்தெடுத்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது. “நமது உலக கண்ணோட்டத்தில் நாம் ஒரேமாதிரி சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறோம்” மேலும், “ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவுகளின் வலிமையை AUSMIN ஒருமுறை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது” என்ற வகையில் வலியுறுத்துவதன் மூலமாக அவர்களது ஆஸ்திரேலிய சமதரப்பினரான ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பிஷப், வாஷிங்டனின் செய்தியையே எதிரொலிக்கச் செய்தார்.

“ஒரு நிர்பந்தமான நிலைக்குட்பட்டுள்ள சீனா அதன் அண்டை நாட்டினர் தங்களது சுயாதீன மற்றும் மூலோபாய இடைவெளியை அவர்களுக்கு வழங்கக்கோரும் ஆத்திரமூட்டும் வகையிலான கோரிக்கையை முன்வைப்பதை கண்டறிய வேண்டும்” என்று ஆஸ்திரேலிய பிரதம மந்திரி மால்கம் டர்ன்பல் Shangri La Dialogue இன் போது அவராற்றிய முக்கிய உரையில் எச்சரிப்பதுடன், “வட கொரியாவின் சட்டவிரோத, பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான நடத்தையைக் கட்டுப்படுத்த” அதன் “பெரும் செல்வாக்கை பயன்படுத்துவதற்கும்” பெய்ஜிங்கை வலியுறுத்துகிறார். மேலும், அமெரிக்காவினால் நிறுவப்பட்ட “சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஆணையினை” சீனா ஒத்துக்கொள்ளவும், ஆசியாவில் பிராந்திய மேலாதிக்கத்தை ஸ்தாபிக்க முனையவேண்டாம் என்றும், டர்ன்பல் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் மாட்டிஸ் இருவரும் வலியுறுத்தினர்.

கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்த செனட் இராணுவ சேவை குழுவின் தலைவரான அமெரிக்க செனட்டர் ஜோன் மெக்கெய்ன், டர்ன்பல் இன் கருத்துக்களை பின்பற்றி, ட்ரம்பை பகிரங்கமாக விமர்சித்தார், ஆனால் ஆஸ்திரேலியா போன்ற அமெரிக்க நட்பு நாடுகள் அமெரிக்காவுடன் நிற்கவேண்டும் என்றும், மாட்டிஸ் மற்றும் ரில்லசர்சன் போன்ற அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒத்துழைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். நேற்றைய இரவு விருந்தின்போது, ட்ரம்ப் அதிகாரிகள் இருவரை டர்ன்பல் தனியாக சந்தித்தார்.

நேற்றைய பத்திரிகையாளர் மாநாட்டில், ட்ரம்பின் “முதலில் அமெரிக்கா” கொள்கைகள் அப்பிராந்தியத்தில் ஆசியாவிலிருந்து அல்லது அமெரிக்க நட்பு நாடுகளிலிருந்து அமெரிக்கா பின்வாங்குவதை சுட்டிக்காட்டவில்லை என்பதை அழுத்திக் கூறுவதில் ரில்லர்சனும், மாட்டிஸூம் சிரமப்பட்டனர். பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் மற்றும் பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை (Trans Pacific Partnership-TPP) போன்ற ஒப்பந்தங்களை “ஒதுக்கித் தள்ள” முனையும் ட்ரம்பின் முடிவு ஒத்துழைப்பை குறைக்குமா என்று கேட்கப்பட்டபோது, ஆஸ்திரேலியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உள்ள “பகிர்ந்துகொள்ளும் நலன்கள்” மற்றும் ஏனைய பல பகுதிகளிலுள்ள இத்தகைய வலுவான பரஸ்பர நலன்களையும், ஒத்துழைப்பையும் ரில்லர்சன் வலியுறுத்தினார்.

வெளியுறவு அமைச்சர் பிஷப் வேறுபாடுகளை குறைத்துக்காட்ட முனைந்தார். ஆஸ்திரேலியா எப்போதுமே அதன் தேசிய நலன்களையே கணக்கில் எடுத்துக் கொண்ட நிலையில், அவர் பின்வருமாறு கூறினார்: “நாங்கள் பகிர்ந்துகொள்ளும் மதிப்புக்களையும், பகிர்ந்துகொள்ளும் நலன்களையும் கொண்டுள்ளோம்… மேலும், விதிகள் அடிப்படையிலான உத்தரவை ஆதரிப்பதில் நாங்கள் நிச்சயமாக முற்றுமுழுதாக அமெரிக்காவுடன் இணைந்திருக்கிறோம், என்பதுடன் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆஸ்திரேலியா ஈடுபடவேண்டும் என்ற நிலை ஏற்படுகின்றபோது, ஆஸ்திரேலியா அதற்கேற்ப செயலாற்றியே ஆகவேண்டுமென நாங்கள் எங்களது சொந்த சிந்தனையை தயார்படுத்தி வைத்துள்ளோம். அது நடக்கும்போது, அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் இதேபோன்ற கருத்துக்களையே பகிர்ந்து கொள்கின்றன.”

ஆஸ்திரேலியாவிற்கு மட்டுமல்லாமல், ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கும் வாஷிங்டனின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். “அதனால்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம். அதனால்தான் இந்த பிராந்தியத்திற்கு நாங்கள் பயணம் செய்தோம், மேலும் அதனால்தான் நாங்கள் எங்களது சமத்தரப்பினரையும் இதில் ஈடுபடுத்தியுள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார். ட்ரம்ப் நிர்வாகம், கிழக்கு ஆசிய மாநாடு (East Asia Conference) மற்றும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (Asis Pacific Economic Cooperation-APEC) மாநாடு போன்ற வகையிலான பிராந்திய கூட்டங்களில் “மிகத் தீவிரமாக” செயலாற்ற முனைந்ததாக மேலும் அவர் சேர்த்துக் கூறினார்.

லண்டன் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, ட்ரம்ப் நிர்வாகத்தினால் முடுக்கிவிடப்பட்டு, சிரியா. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கின்ற அமெரிக்கத் தலைமையிலான போர்களை நியாயப்படுத்துவதற்காக “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற சாக்குப்போக்கை ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் மீண்டும் தமக்கு சாதகமாக பயன்படுத்தினர். “அடிக்கடி அப்பாவி பொது மக்கள் மீது கொடூரமான தாக்குதல்களுக்கு வழிவகுக்கின்ற பயங்கரவாதத்தையும், விஷத்தன்மையுடைய சித்தாந்தத்தையும் எதிர்த்து போராட நாங்கள் எடுத்த தீரமானத்தில் உறுதியான நோக்கம் கொண்டிருக்கிறோம்” என்று பிஷப் அறிவித்தார். கடந்த வாரம், ஆஸ்திரேலிய இராணுவம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு மற்றொரு 30 துருப்புக்களை அனுப்ப உறுதியளித்தது.

அமெரிக்க கடற்படை, கடற்படை கப்பல்கள் மற்றும் போர்கப்பல்கள் ஆகியவற்றின் ஆஸ்திரேலிய தளங்கள் மீதான பயன்பாட்டை எப்பொழுதும் விரிவுபடுத்துகின்ற வகையில், அமெரிக்க, ஆஸ்திரேலிய இராணுவத்தினர் ஏற்கனவே ஆழமாக ஒருங்கிணைந்துள்ளனர். மத்திய ஆஸ்திரேலியாவில் பைன் காப்பில் உள்ள கூட்டு உளவுத்துறை வசதி உள்ளிட்ட ஒற்றர் மற்றும் தகவல்தொடர்பு தளங்கள், மத்திய கிழக்கிலிருந்து கிழக்கு ஆசியா வரையிலுமான ஒரு பெரிய பரந்த பிரதேசத்தின் மீது யுத்தத்தை முன்னெடுப்பதற்கான அமெரிக்க இராணுவத்தின் இயலுமைக்கு இன்றியமையாதவையாக உள்ளன.

AUSMIN பேச்சுவார்த்தையின் போது, புதிய இராணுவ அடிப்படையிலான ஏற்பாடுகள் அல்லது ஆஸ்திரேலிய இராணுவ பயன்படுத்தல்கள் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், “எங்களது ஆயுதப்படைகளின் உட்புற இயங்குதன்மையை இன்னும் வலுப்படுத்தும் கூட்டு உறுதிப்பாட்டையும், மேலும் திறன் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம் குறித்த நெருக்கமான ஒத்துழைப்பு, அத்துடன் ஏற்கனவே இருக்கும் அடிப்படை ஒப்பந்தங்களின் “முழுமையான செயல்பாடு” ஆகியவற்றை தொடர்வதையும் இந்த அறிக்கை வலியுறுத்தியது.