ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Professor Sean McMeekin revives discredited anti-Lenin slanders (Part I)

பேராசிரியர் சோன் மக்மீக்கன் லெனின் விரோத மதிப்பிழந்து போன அவதூறுகளை புதுப்பிக்கிறார் (பகுதி - 1)

By David North
30 June 2017

ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டை குறிக்கும் வேறுபட்ட கருத்துக்களை விருந்தினர் எழுத்தாளர் கட்டுரைத் தொடரின் ஒரு பகுதியாக, நியூயோர்க் டைம்ஸ் அதன் ஜூன் 19 பதிப்பில் Bard கல்லூரியின் பேராசிரியர் சோன் மக்மீக்கன் (Sean McMeekin) இன் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. புரட்சியை கண்டனம் செய்வதற்கும் புரட்சி சார்பாக அதற்கு கோழைத்தனமாக வக்காலத்து வாங்குவதற்கும் இடையில் ஊசலாடும் கட்டுரைகளை தவிர 1917 நிகழ்வுகளை புரிந்துகொள்ள பங்களிக்க எந்தவொரு கட்டுரையும் இத்தொடரில் இல்லை எனலாம். ஆனால் “லெனின் ஒரு ஜேர்மன் முகவரா?” என்ற தலைப்பை தாங்கும் மக்மீக்கன் இன் கட்டுரை ஐயத்திற்கிடமின்றி எல்லாவற்றிலும் மிக நச்சுத்ன்மை கொண்டதும் நிச்சயமாக மிகமடத்தனமானதுமாகும்.

கட்டுரையானது மக்மீக்கன் இன் அண்மையில் வெளியான புத்தகமான, ரஷ்ய புரட்சி: ஒரு புதிய வரலாறு என்பதை அடிப்படையாக கொண்டிருந்தது. ஸ்பெயினின் ஃபிராங்கோ, சிலியின் பினோசே, அமெரிக்காவின் சொந்த J. எட்கார் ஹூவர் தங்களின் ஓய்வு நேரத்தில் “வரலாற்று எழுத்தை” எழுதுவதாயின் ரஷ்ய புரட்சி பற்றி என்ன எழுதியிருப்பார்களோ அவ்வாறான வகையானது அது என்று சிறப்பாக விவரிக்கப்பட முடியும். அந்த புத்தகம் வரலாறு சம்பந்தமான படைப்பு என்று விவரிக்க முடியாதது ஏனெனில் மக்மீக்கன் இடம் உண்மைகளுக்காக தேவைப்படும் அறிவு மட்டம், உண்மைகளுக்கான மதிப்பு மற்றும் தேர்ச்சிபெற்ற தொழில்முறைத் திறன் பற்றாக்குறையாக இருக்கிறது. மக்மீக்கன் இன் புத்தகம் என்பது சாதாரணமாக சொன்னால் வெறுமனே கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஒரு பயிற்சி எனலாம், அதிலிருந்து ஒருவரும் எதையும் கற்றுக்கொள்ள முடியாது.


1917 ரஷ்ய புரட்சியின் போது லெனின் ஒரு கூட்டத்தில் உரையாற்றுகிறார்

ஏன் அவர் இப்புத்தகத்தை எழுதினார்? எளிதாய் பணம் ஈட்ட ஆசைகாட்டி இணங்க வைப்பதற்கும் அப்பால், (கம்யூனிச விரோத படைப்புக்கள் கணிசமான அளவு விளம்பரத்துடனும் நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வேறுபல வெளியீடுகளில் அதற்கு உடன்பாடாய் மதிப்புரைகள் வரும் என்ற உத்தரவாதத்துடனும் வழக்கமாய் தொடங்கப்படுகின்றன) மக்மீக்கனுக்கு ஒரு அரசியல் நோக்கம் உண்டு. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலக சோசலிச வலைத் தளம் எழுதியது: “உலக முதலாளித்துவத்தை ஒரு ஆவி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது: அது ரஷ்ய புரட்சி என்னும் ஆவியாகும்” என்று. அச்சுறுத்தப்பட்டோருள் மக்மீக்கன் இருக்கிறார். “கம்யூனிசத்தின் ஆவியுரு” என்று தலைப்பிடப்பட்ட புத்தக முன்னுரையில் அவர் எழுதுகிறார்: வளர்ந்து வரும் மக்களின் அதிருப்தியால் முதலாளித்துவம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. போல்ஷிவிசத்தினை நோக்கிய ஈர்ப்பு மீண்டும் தோன்றி இருக்கிறது. 1917ல் தொடக்கி வைக்கப்பட்ட கருத்தியல் ரீதியான யுகத்தில் அணுஆயுதங்கள் தோன்றியதுபோல, லெனினிசம் பற்றிய துன்பகரமான உண்மை என்னவென்றால், ஒருமுறை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அதனை இவ்வுலகத்திலிருந்து அகற்ற முடியாததாக இருக்கின்றது. சமூக சமத்துவமின்மை எப்போதும் நம்முடன் இருக்கும், அதனுடன் அதேபோல் அதனை அழிப்பதற்கான சோசலிஸ்டுகளின் நல்ல நோக்கங்களும் எம்முடன் இருக்கும்.” ஆகையால் லெனினிசத்தை நோக்கிய நாட்டம் என்பது, குறிப்பாக பெரும் தீவிரமான தீர்வுகளுக்கு அழைப்புவிடுப்பதுபோல் காணப்படும் பொருளாதார மந்தநிலையின் போது அல்லது போரின் போது பேராவல் கொண்டவர்களிடையேயும், ஈவிரக்கமற்றவர்களின் மத்தியில் மறைமுகமாக இருக்கும். மக்மீக்கன் தொடர்கிறார்: “கடந்த நூறு ஆண்டுகள் எமக்கு ஏதேனும் கற்றுத் தந்திருக்குமானால், சமூக முழுநிறைவாக்கத்திற்கு உறுதி வழங்கும் ஆயுதமேந்திய தீர்க்கதரிசிகளுக்கு எதிராக நாம் நமது பாதுகாப்பை உறுதியாக நிமிர்த்தி அவர்களை எதிர்க்க வேண்டும்.”[1]

“ஆயுதமேந்திய தீர்க்கதரிசிகளுக்கு எதிராக நாம் நமது பாதுகாப்பை உறுதியாக நிமிர்த்தி அவர்களை எதிர்ப்பதற்கான” அவரது அழைப்புடன் மக்மீக்கன் என்ன அர்த்தப்படுத்துகிறார் என்பது அவரது புத்தகத்தில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. புரட்சியின் அச்சுறுத்தலுக்குத் தேவையான பதில் புரட்சியாளர்களை கொல்வதுதான். 1917ன் பெரும் அரசியல் தவறு என மக்மீக்கன் வாதிப்பது யாதெனில், 1917 ஜூலையில் போல்ஷிவிக்குகளை சரீரரீதியாக ஒழித்துக்கட்ட கெரென்ஸ்கிக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தபொழுது அவ்வாறு செய்யத்தவறியதுதான். போல்ஷிவிக் கட்சி ஜேர்மனியிலிருந்து பணம் பெற்றிருந்தது, எனவே லெனின், ஜேர்மன் படையின்  மூலோபாய தலைமைப் பீடத்தின் முகவராக செயல்பட்டார் என்பதை நிரூபிப்பதாக கூறப்படும் “தகவல்” கண்டிபிடிக்கப்பட்டபொழுது, அச்சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

நூற்றாண்டு பழமையான இந்த அவதூறை புதுப்பித்தலில் மக்மீக்கன் 1917ன் கம்யூனிச விரோத மஞ்சள் பத்திரிகைகளுக்காக எழுதிக் கொண்டிருந்த வலதுசாரி மிதவாதிகளின், முடியாட்சியாளரின் அல்லது “கறுப்பு நூற்றுவரின்” (ரஷ்ய பாசிஸ்டுகள்) பத்திரிகையாளர்களின் பாணியை போலச்செய்து காட்டினார்.

இந்த பொய்யை மக்மீக்கன் புத்துயிர்ப்பிப்பதை ஆய்வு செய்யும் முன்னர், ஆசிரியரின் தொழில்சார் திறன் பற்றி சிலவற்றைச் சொல்லியாக வேண்டும். ரஷ்ய புரட்சிகர வரலாற்றின் மீதான தற்கால “ஆளுமைமிக்கவர்கள்” என பரவலாக விளம்பரப்படுத்தப்படும் பலருள் பொதுவாக அடங்குபவர் என்ற வகையில், மக்மீக்கன் அத்துறையில் ஈடுபாடுடைய அறிவோ அல்லது புரிதலோ இல்லாதவர். அவரது இவ்வறியாமைக்கான ஓர் எடுக்காட்டு, ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் (RSDLP), இரண்டாவது காங்கிரசில் ஏற்பட்ட, போல்ஷிவிக் மென்ஷிவிக் கன்னைகளை தோற்றுவித்த 1903 பிளவு பற்றிய மக்மீக்கனின் கூற்றில் காணப்படுகிறது. வாதத்திற்கு எடுத்துக் கொண்டால், ரஷ்ய புரட்சிகர இயக்கத்தின் வரலாற்றில் 1917க்கு முந்தைய தனியொரு மிக முக்கியமான நிகழ்வு இதுதான். இது தொலைதூர அரசியல் விளைபயன்களை கொண்டிருந்தது என்பதை ஒருவர் சேர்த்தாக வேண்டும். மக்மீக்கன் பின்வரும் விவரங்களை அளிக்கிறார்:

பெரும்பாலான வரலாற்றுப் புத்தகங்களில் விளக்கப்படும், 1903 ஜூலையின் மிகப் புகழ்பெற்ற போல்ஷிவிக்-மென்ஷிவிக் பிளவு, லெனின் தனது 1902 சிறுவெளியீடான என்ன செய்ய வேண்டும்? என்பதில் தொழில்முறை காரியாளர் (சிலநேரங்களில் முன்னணிப் படைவாதம் என்று அழைக்கப்பட்ட) தட்டை, லெனின் ஆதரிப்பதால் நிகழ்ந்தது. இது மென்ஷிவிக்குகளால் எதிர்க்கப்பட்டது, அவர்கள் கட்சியில் பெருந்திரள் தொழிலாளர் பங்கேற்புக்கு ஆதரவளித்தனர் என்ற பொது நம்பிக்கைக்கு மாறாக, இரண்டாவது பிரஸ்ஸெல்ஸ் மாநாட்டில் உண்மையான தீவிர விவாதங்கள் யூத பிரச்சினையை சூழ இருந்தன. பதினான்காவது பிளீன கூட்டத்தொடர் இருக்கைவரை கட்சி அமைப்பு விவாதிக்கப்படக் கூட இல்லை. பிரெஸ்ஸெல்சில் லெனினின் மிகப்பெரிய பிரதான இலக்கு புண்ட்டை (Bund) தோற்கடிப்பதாக இருந்தது. அதாவது கட்சிக்குள் யூத-சுயாட்சி அதிகாரத்தை தோற்கடிப்பதாகும். அவரது வெற்றிகரமான வாதம் உண்மையில் யூதர்கள் ஒரு தேசம் அல்ல, அவர்கள் ஒரு பொது மொழியை பகிர்ந்துகொள்வதும் இல்லை, அல்லது ஒரு பொது தேசிய எல்லையை கொண்டிருக்கவுமில்லை. புண்ட் இன் நிறுவனரான மார்ட்டோவ் இதில் பெரிதும் அவமதிப்புக்காளாகி, ஒரு புதிய சிறுபான்மை மென்ஷிவிக் கன்னையை அமைப்பதற்கு வெளியேறினார். தெற்கு உக்ரேனில் கெர்சனில் இருந்து வரும் இளம் புத்திஜீவியும், ஐரோப்பிய மார்க்சிசத்தை ஆதரிப்பதற்கு உதவியவருமான, ஒடிசாவில் உலகின் பலநகரை சேர்ந்தவர்களை கொண்ட ஜேர்மன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த, லெவ் ப்ரோன்ஸ்டைன் (ட்ரொட்ஸ்கி) உட்பட கிட்டத்தட்ட அனைத்து யூத சோசலிஸ்ட்டுகளும் அவரைப் பின்தொடர்ந்தனர். ரஷ்ய யூத எதிர்ப்பாளர்களின் அனைத்து வாதங்களையும் லெனின் பிரதிபலித்ததால், மோர்ட்டோவ், ட்ரொட்ஸ்கி மற்றும் ஏனைய யூத புத்திஜீவிகள் ஏன் எதிர்ப்பில் இணைந்தனர் என்பதை அறிவது ஒன்றும் கடினமானது அல்ல. [2]

இந்த விளக்கத்துடன் உள்ள பிரச்சினை, அர்த்தத்திலும் மற்றும் அரசியல் விளக்கம் இரண்டிலும் முற்றிலும் பொய்யானதாகும். அவரது பிளவு தொடர்பான தப்பான தேதியை ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு (அது நிகழ்ந்தது ஆகஸ்டில் ஜூலையில் அல்ல), மக்மீக்கன் லெனினை யூத எதிர்ப்பாளர் என அவதூறு செய்யும் நோக்குடன் இட்டுக்கட்டுவதில் மென்ஷிவிக்குக்கும் போல்ஷிவிக்குக்கும் இடையிலான முறிவைக் குறிப்பிடுவது வரலாறு மற்றும் அரசியலுடன் தொடர்புபட்டிருக்கவில்லை. ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி (RSDLP) யூத புண்ட் தொடர்பாக பிளவுபடவில்லை. புண்ட்டின் “நிறுவனர்” ஆக இருப்பதிலிருந்தும் தொலைவில், கட்சிக்குள் புண்ட்டின் சுயாட்சிக்கு லெனினது எதிர்ப்புக்கு வெளிநடப்புச் செய்ததாக கூறுவது இருக்கட்டும், மோர்ட்டோவ் எழுதிய RSDLP தீர்மானம்தான் வெளிநடப்புக்கு தூண்டியது. புரட்சிகர தொழிலாளர் கட்சியில் யூத சுயாட்சிக்கு மார்ட்டோவின் எதிர்ப்பானது லெனினைவிடவும் மிகக் கடுமையானதாக இருந்தது. மென்ஷிவிசத்தின் வரலாறு பற்றிய முன்னணி வல்லுநரான காலஞ்சென்ற Leopold Haimson அவரது முக்கியமான அறிவார்ந்த படைப்பான ரஷ்ய மார்க்சிஸ்டுகளும் போல்ஷிவிசத்தின் மூலத் தோற்றமும் என்றதில் எழுதினார், “மார்ட்டோவ் இந்தப் பிரச்சினை இரண்டாவது கட்சிக் காங்கிரசில் எழுந்த பொழுது புண்ட் பிரதிநிதிகளுடன் முரட்டுத்தனமாக மோதினார். இந்த விவாதங்களின் பொழுது அவரது முகாமை சேர்ந்த மற்றெந்த உறுப்பினர்களை காட்டிலும் அவரது அரசியல் தொனியில் கடுமை அதிகமாக இருந்தது.”(3) சுயாட்சிக்கான புண்ட்டின் கோரிக்கைக்கு ஆதரவாக 1903 காங்கிரசிலிருந்து ட்ரொட்ஸ்கியும் வெளிநடப்புச் செய்தார் என்று மக்மீக்கன் கூறுவது இன்னொரு மதிப்பிழந்த, மடமையின் காட்சிப்படுத்தல் ஆகும். நம்பவியலாத அறியாமையின் வெளிப்பாடாகும். ட்ரொட்ஸ்கி புண்ட்டின் இடைவிடாத எதிராளியாக இருந்தார் மற்றும் அவரது வாதங்களின் எழுத்துபூர்வ வடிவங்கள் (ஆங்கிலத்தில் உள்ளன) மார்ட்டோவின் தீர்மானத்திற்கான ஆதரவில் அவர் திரும்பத்திரும்ப தலையீடு செய்தார் என்று காட்டுகிறது.


1917 இல் ஜூலியஸ் மார்ட்டோவ்

இது ஒன்றும் சிறு பிழை அல்ல. 1903 பிளவு பற்றிய மூலத்தோற்றம் பற்றிய “பொது நம்பிக்கை” யை மறுதலிப்பதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு, ரஷ்ய புரட்சிகர இயக்கத்தை பற்றி தனக்கு ஒரு அடிப்படை அறிவு கூட இல்லை என்பதை மக்மீக்கன் எடுத்துக்காட்டுகிறார். மக்மீக்கன், ஹைம்சன் (Haimson) இன் முக்கிய படைப்பையோ (இந்த புத்தகத்தின் குறிப்பில் பட்டியலிடப்படவில்லை) அல்லது ஓரடி முன்னால், ஈரடி பின்னால்” என்ற நூலில் இரண்டாவது காங்கிரசை பற்றிய லெனினின் சொந்த விரிவான விவரிப்பையோ வாசித்திருக்கவில்ல என்பதை ஒருவர் தாராளமாக அனுமானிக்கலாம். போல்ஷிவிக்-மென்ஷிவிக் பிளவைத் தூண்டிவிட்ட விடயங்களை முறையாக இனங்காணவோ மற்றும் விவரிக்கவோ இயலாமல், மக்மீக்கன் ரஷ்ய சோசலிச வரலாற்றில் ஒரு துறைவல்லுநர் என்ற வகையில் அக்கறை எடுத்துக்கொள்பவராய் இருப்பதிலிருந்து தன்னைத்தானே தகுதியிழக்கச் செய்து கொள்கிறார்.

1917 ஜூலை–ஆகஸ்ட் எதிர்ப்புரட்சிகர அலையின்போது உருட்டிவிடப்பட்ட அவதூறுகளை நடத்தும்விதம், மக்மீக்கன் தனது சொந்த புத்திஜீவித மட்டத்தை அடிப்படையாகக் கொண்டிராமையுடன் ஒத்துப்போகிறது. “ஜேர்மன் தங்கம்” (German gold) என்று மக்மீக்கன் குறிப்பிடுவது ஒன்றும் புதிதல்ல. ரஷ்ய புரட்சியின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் அலெக்சாண்டர் ரபினோவிட்ச், 1968ல் வெளியிட்ட புரட்சிக்கு முன் நிகழ்வு என்ற நூலில் லெனின் மீதான தாக்குதலின் அரசியற் பின்புலத்தை விவரித்தார்.

1917ல் ஜேர்மன் அரசாங்கமானது, போல்ஷிவிக்குகளை நோக்கி பணத்தை திருப்புவதற்கு முயற்சித்திருக்கலாம். ஏகாதிபத்திய யுத்தத்தில் ரஷ்யா பங்கேற்பதற்கு எதிரான சோசலிச எதிர்ப்பானது தனது எதிரிகளுள் ஒருவரைப் பலவீனமாக்கும் என்று கணித்து, தனது சொந்தக் காரணங்களுக்காக அது அப்படிச் செய்தது. இந்த முயற்சிகள் —ரஷ்ய நிகழ்வுகளின் திசைவழியில் செல்வாக்கைச் செலுத்த பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்களால் செய்யப்பட்ட அதேபோன்ற முயற்சிகளிலிலிருந்து எந்த வகையிலும் வேறுபட்டதில்லை— ஜேர்மன் அரசாங்கத்தின் திட்டங்களில் லெனினின் பங்கேற்பு இல்லாமல் எடுக்கப்பட்டன.

புரட்சிக்கு முன்நிகழ்வு என்ற நூலில் ரபினோவிட்ச் எழுதுகிறார்: “லெனினின் கொள்கைகளும் செயல்தந்திரங்களும், எந்தவகையிலும் ஜேர்மானியரால் வழிநடத்தப்பட்டது அல்லது செல்வாக்கு கொண்டிருந்தது என்ற கருதுகோளுக்கு ஆதரவாக ஏதாவது சான்று காணப்படக் கூடியதாக” “இவ்விடயத்தின் மீதான பரந்த எழுத்துக்கள் எதிலும் எங்கணும் இல்லை.” [4]

1917 ஜூலை நிகழ்வுகள் பற்றிய மிக முக்கிய ஆய்வுகள் மத்தியில், அவரது கட்டுரைக்கு ஆதாரமான நூற்பட்டியலில், ரபினோவிட்ச்சின் நூலை மக்மீக்கன் பட்டியலிடாதது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஆனால் ரபினோவிட்ச்சின் முடிவு, அறிஞர்கள் மத்தியில் கருத்தொற்றுமையை பிரநிதித்துவம் செய்கிறது. லெனினுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அவதூறைத்தவிர வேறு எதுவாகவும் கருதக்கூடிய சீரிய வரலாற்றாசிரியர் ஒருவர் கூட இல்லை.


ட்ரொட்ஸ்கி 1917 இல் பெட்ரோகிராட்டை வந்தடைகிறார்

“மூடப்பட்ட புகையிரதத்தில்” ஏற்றி ஜேர்மனி வழியாக ரஷ்யாவுக்குள் லெனின் திரும்பிய கணத்திலிருந்து, புரட்சி எதிர்ப்பு வலதுசாரிகள் போல்ஷிவிக் தலைவரை ஜேர்மன் அரசரின் (கைசரின்) முகவராக சித்தரிக்க முனைந்தனர். புரட்சியின் ஆரம்ப மாதங்களில், இந்த பொய், மிதவாத மற்றும் பாசிச வட்டாரத்திற்கு வெளியே எந்த ஆதரவையும் பெறவில்லை. ரஷ்ய தொழிலாளர்களால் தங்களுக்குத் தேவைப்படும் மிகத் துணிவான மற்றும் அறிவார்ந்த தலைவர்களுள் ஒருவராகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு மனிதர் புரட்சிகர பெட்ரோகிராட்டுக்கு விரைவாய் வரும் வழியைக் காண்பார் என்று கருதப்படும் நிலையில், அவரது விரைவாய் திரும்புதலின் சாத்தியம் நன்கு புரிந்துகொள்ளக் கூடியதே. மோர்ட்டோவ் பெரிதும் அச்சமுற்ற பின், ஒரு மாதம் கழித்து அவரும் கூட ஜேர்மன் ஊடான வழியைப் பயன்படுத்தினார். மேலும் 1917 மார்ச்-ஏப்ரலில் ட்ரொட்ஸ்கியின் அனுபவமும் கூட லெனின் முடிவை மேலும் மதிப்புடையதாக்கியது. நியூயோர்க் நகரிலிருந்து அட்லாண்டிக் வழியாகப் பயணம் செய்த ட்ரொட்ஸ்கி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஹலிஃபாக்ஸ் கடற்கரைக்கு முன்பே அவரது கப்பலிலிருந்து பலவந்தமாக அகற்றப்பட்டார். “லெனினை விட மோசமானவர்” ஆக இருப்பார் என்று பலர் நம்பிய, மிகவும் அஞ்சக் கூடிய புரட்சியாளர் ரஷ்யாவுக்கு திரும்புவதை தடுக்கும் முயற்சியில், பிரிட்டிஷ் அவரை போர்முகாமில் அரசியல் கைதியாக சிறையிலடைத்தது. பெட்ரோகிராட் சோவியத்தின் எதிர்ப்புக்கள் மற்றும் அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்ற இடைக்கால அரசாங்கத்தின் தயக்கம் கொண்ட கோரிக்கை ஆகியவற்றை எதிர்கொண்ட நிலையில், ட்ரொட்ஸ்கி இறுதியில் ரஷ்யாவுக்கு திரும்பி வருவதற்கு அவரது பயணத்தை தொடருவதற்கு அனுமதிக்கப்பட்டார். அவர் லெனினை விட ஒரு மாதம் கழித்து வந்து சேர்ந்தார்.

தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி அச்சுறுத்தலுக்கு அலெக்சாண்டர் கெரென்ஸ்கியின், இடைக்கால அரசாங்கம் மற்றும் பாசிச வலதுகளின் திகிலூட்டும் ஒரு பதிலாக, லெனின் ஒரு ஜேர்மன் முகவர் என்ற குற்றச்சாட்டு ஜூலை நாட்களின் உச்சக் கட்டத்தில் (ஜூலை 3-4) புதுப்பிக்கப்பட்டது. போல்ஷிவிக் கட்சியானது, எழுச்சி இன்னும் பக்குவமடையவில்லை என்று நம்பி தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்த முயற்சித்தபோதும் இடைக்கால அரசாங்கமும் அதன் கூட்டாளிகளும் லெனினுக்கு எதிராக ஈவிரக்கமற்று எதிர்த்தாக்குதல் நடத்தினர். வலதுசாரி சாக்கடை பத்திரிகை, பெட்ரோகிராட்டில் களையெடுப்பு போன்ற சூழலை உருவாக்க இக்குற்றச்சாட்டை பயன்படுத்திக் கொண்டது. லெனினுக்கு எதிரான அவதூறுகளின் தீய தன்மை அடையாளங் காணப்பட்டது. நிக்கோலாய் சுக்கானோவ் தனது சுயசரிதையில் நினைவு கூருகிறார்:

உண்மையில் புரட்சியோடு தொடர்புடைய நபர்களில் ஒருவர் கூட [லெனினுக்கு எதிரான] இந்த வதந்திகளின் அபத்தங்களை பற்றி ஒரு கணமேனும் சந்தேகப்படவில்லை என்று சொல்லாமற் போகிறது. ஆனால் —ஐயகோ!— நகரம் மற்றும் நாட்டிலிருந்த சராசரி அறியாமையிலுள்ளோர், தன்னலக் குழுக்கள் மற்றும் சிறுபான்மையினர் மத்தியில் எவ்வாறான உரையாடல் தொடங்கியது. [5]

லெனினுக்கு எதிரான அவதூறு, வியப்பூட்டும் சக்தி பெற்ற பொய்கள் மற்றும் வன்முறை சூழலைப் பற்றி சுக்கானோவ், உணர்வுவயப்பட்டு விவரித்தார். அவர் “எமது மிதவாதப் பத்திரிகைகளின் கோழைத்தனத்தின்” மட்டம் பற்றி வெறுப்புடன் எழுதினார். அவை, லெனினை அவதூறு செய்யும் முயற்சிக்கு ஊறுநேராவண்ணம் செயல்பட்டன. லெனினைக் குற்றஞ்சாட்டுவதாக கூறப்படும் ஆவணங்கள் பற்றி எந்த குறிப்பிட்ட அக்கறையும் எடுத்துக் கொள்ள ஒருவரும் கவலைப்படவில்லை என்று நினைவு கூருகிறார்.

அதனைத் தொடர்ந்த நாட்களில் இது தொடர்பான மேலதிக விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. ஆனால் (அரசியல் பிற்போக்கின்) ஆரம்பமாகிக் கொண்டிருந்த காலகட்டத்தை பொறுத்தவரை, இது போதுமானதென நிரூபித்தது. லெனினின் ஊழல் பற்றிய சான்றை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ பத்திரிகைகளில் தொடங்கிய யுத்த–தாண்டவத்தை கற்பனை செய்ய ஒருவருக்கு மேற்கோள்கள் தேவைப்படவில்லை. ஜாரிச இரகசிய பொலீசும் ஜேர்மன் படைத்தளபதிகளின் மேல்மட்ட அலுவலரின் உண்மையான முகவர்களும் ஜூலை குழப்பங்களில் சதிராட ஐயத்திற்கிடமின்றி முயற்சிசெய்து கொண்டிருந்தனர். தலைநகரில் உள்ள அனைத்து வகைக் குப்பைகளும் குழப்பத்தை, சேறுவீசலை, சத்தம்போடும் சண்டையை மற்றும் முன்னைய நாளின் இருந்த மனோநிலையில் மாற்றங்களை சுரண்டிக் கொள்ளவே முயற்சித்துக் கொண்டிருந்தனர். அனைத்துக் குற்றங்களுக்கும் குற்றவாளிகளாய் போல்ஷிவிக்குகளே இருப்பதாக ஏகமனதாக அறிவிக்கப்பட்டார்கள். ஜூலை 5 அன்று பிற்போக்கினது முதல் நாளன்று, “பெரும் பத்திரிகைகள்” போல்ஷிவிக் வேட்டை பற்றிய பிரச்சாரத்தால் நிரம்பி வழிந்தன. [6]

அண்மையில் வெளியிடப்பட்ட அவரது, நன்கு ஆய்வு செய்யப்பட்ட மற்றும் புரட்சி பற்றி உயிரோட்டமாய் உரைத்த, அக்டோபர் எனத் தலைப்பிடப்பட்ட நூலில், China Miéville லெனினுக்கு எதிரான வழக்கு பற்றி தொகுத்துத் தருகிறார்:

அவதூறு செய்யும் வண்ணமூட்டும் விவரங்கள் ஒரு லெஃப்டினென்ட் ஜேர்மோலென்கோ (Yermolenko) மற்றும் ஒரு வணிகர் Z. பேர்ஸ்ரைன் (Z. Burstein) அவ்வாறு கூறியதாகக் கூறப்படும் விவரங்களை அடிப்படையாக கொண்டிருந்தன. பின்னவர், மார்க்சிச தத்துவார்த்தவாதியாக இருந்து ஜேர்மன் தேசபக்தராக மாறிய, பார்வஸ் ஆல் தலைமை தாங்கப்பட்ட ஸ்டாக்ஹோமிலுள்ள ஜேர்மன் உளவு வலைப்பின்னல் போல்ஷிவிக்குகளுடன் தொடர்புகளை பராமரித்து வந்தது என்று குற்றம் சாட்டினார். ஜேர்மோலென்கோ அவரது பங்கிற்கு, அவர் சிறைக்கைதியாக இருந்தவேளை (ஒரு குழப்பமான தவறாக இனங்காணப்படும் சாத்தியத்தின் படி) ஜேர்மனியர்கள் ஆட்சேர்க்க முயன்றிருந்த, இறுதியில் தாங்கள் வெற்றிகரமாக செய்ததாக ஒரு எண்ணத்தை அவர்களுக்கு  ஏற்படுத்திய, அவர்களால் லெனினின் பாத்திரம் பற்றி தனக்குச் சொல்லப்பட்டதாக கூறிக்கொண்டார்.

இந்தக் கூற்றுக்கள் சீர்படுத்தல், கண்டுபிடித்தல் மற்றும் நன்னடத்தைப் பாங்கின் ஒரு சிக்கல் முடிச்சாக இருந்தன. அவரது சொந்த அரசாங்க கையாட்களே பேர்ஸ்ரைன் முற்றிலும் நம்பிக்கைக்குரியவர் அல்லர் என்று விவரித்த வேளையிலும், ஜேர்மோலென்கோ ஒரு புதுமைத் தன்மையராய் கற்பனாவாதியாக இருந்தார். ஆவணமானது கசப்புற்றிருந்த, மற்றவர்க்கு தீங்கிழைப்பதில் தொல்லை கொடுப்பதில் பேர்பெற்றிருந்த, சோவியத்துக்குள் நுழைய மறுக்கப்பட்ட அளவுக்கு அந்த அளவு பேர் பெற்றிருந்த முன்னாள் போல்ஷிவிக் அலெக்ஸின்ஸ்கி (Alexinsky) ஆல் தயாரிக்கப்பட்டிருந்தது. வலது புறத்திலும் கூட, அக்கறை கொண்ட சிலபேர் அந்தக் கணத்திற்கு இதில் எதையாவது நம்பக் கூடியதாய் இருந்தனர் என்பது, ஏன் சொற்பஅளவே மரியாதைக் குறைவானவர்கள் அல்லது மிக வலதுசாரியினர் இதை வெளியிடுவதற்காக Zhivoe slovo (அவதூறு பிரச்சாரத்தை தொடங்கிய வலதுசாரி வடிகால் பத்திரிகை வாழும் உலகு) உடன், தீவிரம் கொண்டிருந்தனர் என்பதை விளக்குகிறது. [7]

மக்மீக்கனின் புத்தகமும் நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையும், Miéville இன் “மலத்தைக் கிளறலின்” கடுமையான வெளிப்பாட்டை செய்யும் மேம்படுத்தப்பட்ட பயிற்சியை தவிர வேறொன்றுமில்லை. அவரது கட்டுரை இந்த முடைநாற்றத்தில் தயாரிக்கப்படும் மோசடிக் கூற்றுக்களின் ஒரு திரட்சியை கொண்டிருக்கிறது.

ஜூலை நாட்கள் என்று அறியப்பட்ட இரண்டாவது ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பின்னர், லெனினும் மற்றய 10, போல்ஷிவிக்குகளும் “தேசத்துரோக மற்றும் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியை ஒழுங்கமைத்ததாக” குற்றம் சுமத்தப்பட்டார்கள். ஜேர்மன் இறக்குமதி வர்த்தகத்தின் மூலம் பணம் வெள்ளையாக்கப்பட்டது பற்றி, போல்ஷிவிக் செய்தித்தாளான (முன்னணியில் நிற்கும் துருப்புக்களை இலக்குக் கொண்ட பதிப்புக்கள் உட்பட) பிராவ்தாவுக்கு ஜேர்மன் நிதியூட்டல் பற்றி, வீதிகளில் போல்ஷிவிக் முழக்க அட்டைகளை உயர்த்திப் பிடிக்க (ஒரு நாளைக்கு 10 ரூபிள்கள்), அல்லது செஞ்சேனேயில் சேர்ந்து போராட (ஒரு நாளைக்கு 40 ரூபிள்கள்) விலை வீதம் போய்க்கொண்டு இருப்பதாக குறிப்பிட்டு ஸ்டாக்ஹோமிலிருந்து பணம் வந்ததற்காக சான்றளிக்க பலர் முன்வந்தனர். லெனின் பின்லாந்துக்கு பயணிக்கும் வேளையில், அவரது பெரும்பாலான தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். கண்கவரும் சோடனை வழக்கு விசாரணைக்காய் மேடை அமைக்கப்பட்டது.

உண்மையில், இடைக்கால அரசாங்கம் “கண்கவரும் சோடனை வழக்குவிசாரணை காட்சிக்கு” தயாரிக்கவில்லை. அது அவதூறுப் பிரச்சாரத்தை, லெனின் போலீஸ் நிலையத்திற்கு வரும் முன்னர், அவரை வேட்டையாடி வரும் இராணுவ மற்றும் பாசிச குண்டர்களின் கரங்களில் அவர் சிக்கிக் கொல்லப்படக்கூடிய நிலையிலான ஒரு சூழலை உருவாக்கப் பயன்படுத்திக் கொண்டிருந்தது. ஜூலை நாட்களைப் பின்தொடர்ந்த பிற்போக்கு களியாட்டத்தில், முழு அரசியல் இடதும் தாக்குதலுக்கு ஆளாகினர்.

“போல்ஷிவிக்குகள் மட்டுமே அஞ்சுவதற்கு காரணம் இருந்திருக்கவில்லை” என்று Miéville எழுதுகிறார். பாசிச கறுப்பு நூற்றுவரின் “பிறர் துன்பத்தில் மகிழ்பவர்கள்” “வீதிகளில் அலைந்தார்கள், “துரோகிகள்” மற்றும் “தொல்லை தருவோரை” வேட்டையாடும் வழியில் வீடுகளை அடித்து நொருக்கினார்கள்.[8] யூதர்கள் குறிப்பிட்ட ஆபத்தில் இருந்தார்கள். நாடு முழுவதும் மிகவும் தீக்குறியாய் இருந்தது, குறிப்பிட்ட அதிவலது, செமிட்டிச விரோத இன அழிப்பாளர்களின் குறிப்பிட்ட எழுச்சிதான். Groza (இடிபுயல்) என வைத்துக் கொண்ட, புனித ரஷ்யா என்று அழைத்துக்கொண்ட குழுவானது, வன்முறைக்காக திரும்பத் திரும்ப அழைப்பு விடுத்தது. வீதியில் இறங்கிய கிளர்ச்சியாளர்கள் யூதர்களுக்கு எதிராக வெடித்து எழுந்தார்கள்.” [9]


ஜூலை நாட்கள், நெவிஸ்கி புரோஸ்பெக் தெரு ஆர்ப்பாட்டம், இடைக்கால அரசாங்க துருப்புக்கள் இயந்திர துப்பாக்கிகளால் சுட்ட பின்னர்

தனது நூலில், மக்மீக்கன் ஜூலை நாட்களுக்குப் பின்னரான அரசியல் நிலைமை பற்றிய அங்கீகரிக்கும் தொகுப்புரைப்பை வழங்குகிறார்: “அதி இடது எழுச்சியானது போல்ஷிவிக் தேசத்துரோகத்திற்கு எதிராக தேசபக்த உணர்வுடன் அணிதிரண்ட காரணத்தால் சற்று முன் நசுக்கப்பட்டிருந்தது.” [10]

மக்மீக்கனின் நூல் மற்றும் கட்டுரையின் இதயத்தானமாக இருந்த அடிப்படை பித்தலாட்டம், இரண்டாம் அகிலத்தின் 1914க்கு முந்தைய அரசியல் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்த —ஏகாதிபத்திய யுத்தத்திற்கு லெனினது கோட்பாட்டு ரீதியான சோசலிச எதிர்ப்பை— ஜேர்மன் முகவரால் மேற்கொள்ளப்பட்ட ரஷ்ய எதிர்ப்பு தேசத்துரோகத்தோடு அடையாளப்படுத்தல் ஆகும்.

ரஷ்ய பாசிச தேசியவாதியைப் போல எழுதிக்கொண்டு அவர் அறிவிக்கிறார்: “சக ரஷ்ய சோசலிஸ்டுகளுடன் இருந்து லெனினை தனிமைப்படுத்தியது யுத்தத்திற்கு அவரது வெறிகொண்ட எதிர்ப்பு மற்றும் உக்ரேனிய சுதந்திரத்திற்கு, மைய அதிகாரத்திற்கான ஒரு முக்கிய இலக்குக்கு அவரது ஆதரவாகும்.” எனவே நாம் இங்கு கொண்டிருப்பது: 1907 இல் ஸ்ருட்கார்ட்டில், 1910 இல் கோபன்ஹேகனில் மற்றும் 1912 இல் பாசெலில் இரண்டாம் அகிலத்தால் நிறைவேற்றப்பட்ட யுத்த எதிர்ப்பு தீர்மானங்களுக்கு லெனினது அர்ப்பணிப்பு மைய அதிகாரம்! என்பதற்கான குற்ற உடந்தையாக அவரை ஆக்கியது. யுத்தத்திற்கு முந்தைய போல்ஷிவிக்குகளின் வேலைத்திட்டத்தில் ஒரு முக்கிய கூறாய் இருந்த சுய நிர்ணயத்திற்கான தேசங்களின் உரிமையை லெனின் பாதுகாத்தது, அவரை ஒரு ஜேர்மன் முகவர்! என குறிப்புரைத்தது.

மக்மீக்கன், லெனினது 1915 “சோசலிசமும் யுத்தமும்” என்ற அறிக்கையை மேற்கோள் காட்டுகிறார். அது புரட்சிகர தோற்கடிப்புவாத வேலைத்திட்டத்தை முன்னெடுத்தது, அது அவரது நம்பிக்கை துரோகத்திற்கான அடுத்த உதாரணமாக இருந்தது. 1914க்கும் 1917க்கும் இடையில் லெனினால் எழுதப்பட்ட ஏனைய பிரதான பத்திரங்கள் பலவற்றைப் போலவே இதுவும் யுத்தத்தில் தங்களின் அரசாங்கத்தை ஆதரித்ததற்காக ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் துரோகத்தை அனைத்திற்கும் மேலாக கண்டனம் செய்தது என்பதை மக்மீக்கன் கவனிக்கத் தவறுகிறார். அனைத்து சோசலிஸ்டுகளும் தங்களது ஏகாதிபத்திய அரசாங்கத்தின் போர் நோக்கங்களை எதிர்க்க வேண்டும் மற்றும் அதன் தோல்விக்காக வேலை செய்ய வேண்டும் — மக்மீக்கன் கூறுவதுபோல நாசவேலை செய்வதன் மூலம் அல்ல மாறாக படைவீர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் போர் எதிர்ப்புப் பிரச்சாரத்தை வளர்த்தெடுப்பதன் மூலம் ஆகும்.

ஒரு ஜேர்மன் முகவராக லெனின் பற்றிய இன்னொரு குற்றஞ்சாட்டும் உதாரணம் பற்றியதில் மக்மீக்கன் எழுதுகிறார்: “ரஷ்யாவிற்கு திரும்பிய பின்னரும் லெனினால் அவரது போர் எதிர்ப்புக் கண்ணோட்டங்களை மறைக்க முடியவில்லை.” இல்லை, நிச்சமாக அவர் செய்யவில்லை. ரஷ்யா திரும்பிய பின்னர் லெனின் 1915 செப்டம்பரின் சிம்மர்வால்ட் மாநாட்டில் அவர் முன்னெடுத்திருந்த சர்வதேசிய யுத்த எதிர்ப்பு வேலைத்திட்டத்திற்காக அவர் போராடினார்.


1917 இல் கெரென்ஸ்கி

அவரது புத்தகத்தை அடியொற்றி, மக்மீக்கன் கட்டுரை “ஜூலை நாட்களை” ஒரு தவறவிட்ட சந்தர்ப்பமாக முன்வைக்கிறது. ட்ரொட்ஸ்கி 1917 ஜூலையை பொருத்தமாக விவரிப்பதைப் போல் “மாபெரும் அவதூறு மாதத்தின்” பொழுது, கெரென்ஸ்கி போல்ஷிவிக்குகளை கைதுசெய்ய ஆணையிட்டார். ஆனால் அவர் அவர்களைத் தீர்த்துக் கட்டுவதில் தோல்வியுற்றார். ஆகஸ்ட்டில் ஜாரிச தளபதி கோர்னிலோவ் அவரது பாசிச ஆட்சிக் கவிழ்ப்பை தொடங்கியபோது, கெரென்ஸ்கி ஆதரவு பெற இடது பக்கம் திரும்பினார். “குறுகிய பார்வை கொண்ட நகர்வில், கெரென்ஸ்கி போல்ஷிவிக் இராணுவ அமைப்பை மீளவும் ஆயுதம் தரிக்க அனுமதித்தார், இவ்வாறு பெற்ற ஆயுதங்கள் இரு மாதங்களுக்குப் பின்னர் அவரை வெளியேற்றுவதற்குப் பயன்படுத்தப்பட இருந்தன.”

இவ்வாறு, கெரன்ஸ்கியின் “குறுகிய பார்வை நகர்வின்” காரணமாக, பெட்ரோகிராட்டை ஆக்கிரமிக்கவும் இலட்சக் கணக்கான தொழிலாளர்களை வெட்டிச்சிதைக்கவும் கோர்னிலோவிற்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. தனது நூலில், கெரென்ஸ்கியின் பிழையுடனான அவரது ஏமாற்றத்தை மக்மீக்கனால் மறைக்க முடியவில்லை. “கெரென்ஸ்கியின் சிந்தனை பூமியில் என்னவாக இருந்தது” என அவர் கூறிக்கொள்ளவில்லை. [11]

மக்மீக்கனின் கட்டுரையின் முடிவுரையானது சில அரசியல் பதட்டத்தை காட்டிக்கொடுக்கிறது. அவர் எழுதுகிறார்:

1917 இல் ரஷ்யா போலல்லாமல், இன்றைய பெரும் வல்லரசு அரசாங்கங்கள், வாஷிங்டனில், பாரிசில், பேர்லினில் அல்லது மாஸ்கோவில் இருந்தாலும், அவை ஒரு லெனின் வேட்டையில் இறங்குவதற்கு அதி பலத்துடன் இருக்கின்றன. அல்லது அவ்வாறு நாம் நம்பியாக வேண்டும்.

மக்மீக்கனை பொறுத்தவரை, ரஷ்ய புரட்சியின் பாடம் என்பது தெளிவாக இருந்தது: புரட்சியாளர்கள் கட்டாயம் அழித்தொழிக்கப்பட வேண்டும்” 1917 ஜூலையின் “தவறு” என்பது கட்டாயம் திரும்பச் செய்யப்படலாகாது. ஆனால் மக்மீக்கனுக்கு நீண்டகாலம் முன்னரே 1917 இன் படிப்பினையை முதலாளித்துவ வர்க்கம் கற்றுக்கொண்டது. 1919 ஜனவரியில், பாசிச துணைநிலை இராணுவ சக்திகள், சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கி, ஜேர்மன் புரட்சியின் இரு ஒப்பற்ற தலைவர்களை ரோசா லுக்செம்பேர்க் மற்றும் கார்ல் லீப்க்நெக்ட் ஐ கொலை செய்தன.

1917 ஜூலை அவதூறுகள் இருப்பினும் மற்றும் எதிர்ப்புரட்சிகர வன்முறை உறுதிப்படுத்தப்பட்டபொழுதும், போல்ஷிவிக்குகள் விரைவில் மீண்டனர். ஆகஸ்ட் செப்படம்பர் மாதங்களில் போல்ஷிவிக் கட்சி திடீர் வளர்ச்சியைப் பெற்றது. லெனினுக்கு எதிரான பொய்கள் பரந்த மக்களால் பொய்கள் என மறுதலிக்கப்பட்டன. இதுதான் வரலாற்றின் தீர்ப்பு மற்றும் இது மலத்தைக் கிண்டும் பேராசிரியர் மக்மீக்கனின் முயற்சியால் மாறப் போவதில்லை.

** ** ** ** **

[1] Sean McMeekin, The Russian Revolution: A New History (New York: Basic Books, 2017), pp. 351–52

[2] Ibid, pp. 22–23, Emphasis added

[3] Boston: Beacon Press, 1955, p. 64

[4] Indiana University Press, 1968, p. 286

[5] The Russian Revolution 1917, by N. N. Sukhanov, edited by Joel Carmichael (New York: Harper Torchbook, 1962), pp. 453–54

[6] Ibid, p. 459

[7] October: The Story of the Russian Revolution, by China Miéville (Verso, 2017), pp. 185–86

[8] Ibid, p. 186

[9] Ibid, p. 192

[10] The Russian Revolution, p. 179

[11] Ibid, p. 198

Copyright