ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Danger of global war over Korea shakes Europe

கொரியா மீதான பூகோளப் போர் அபாயம் ஐரோப்பாவை உலுக்குகிறது

By Alex Lantier
6 September 2017

ஞாயிறன்று நடத்தப்பட்ட வட கொரிய ஆட்சியின் அணுஆயுத சோதனைக்கு அமெரிக்க அரசாங்கத்தின் போர்வெறி கொண்ட பதிலிறுப்பு, ஐரோப்பாவையே விரைவில் மூழ்கடிக்ககூடிய ஒரு பூகோளப் போரிலிருந்து ஒரு சில அடிகள் தூர இடைவெளியில் மட்டுமே உலகத்தை வைத்துள்ளது. ஐரோப்பிய அரசாங்கங்கள் வட கொரிய பியோங்யாங் ஆட்சியை கண்டனம் செய்யும் அதேவேளையில், வட கொரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஆக்கிரோஷ நடவடிக்கைகளுக்கும், மேலும் ஐரோப்பாவை அணுஆயுத போருக்கு இட்டுச்செல்லும் வகையில் வட கொரியாவின் அண்டை நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவுடனானதொரு இராணுவ நிலைப்பாட்டிற்கும் அழுத்தம் வாஷிங்டன் கொடுக்கின்றது.

ஐ.நா. வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, பியோங்யாங் “போரை யாசிக்கின்றது” என்று கூறியதோடு, ரஷ்யாவும் சீனாவும் எண்ணெய் ஏற்றுமதிகள் உட்பட வட கொரியாவுடனான வர்த்தகத்தை முறித்துக்கொள்ள வேண்டுமென தெரிவிக்கிறார். இது வட கொரிய பொருளாதாரத்தை விரைவாக ஸ்தம்பிக்க செய்துவிடும். சீனாவும் ரஷ்யாவும் இந்த கோரிக்கைகளுக்கு உடன்பட்டால், அல்லது சீனா மற்றும் ரஷ்யாவின் சாத்தியமான மறுப்புகளுக்கு வட கொரியாவுடன் ஒரு போரை தொடங்குவதன் மூலம் வாஷிங்டன் எதிர்வினையாற்றுமானால், தங்களது நாடுகளில் இருந்து சீன, ரஷ்ய படைகளும் மற்றும் தென் கொரியாவில் இருந்து அமெரிக்க படைகளும் என அனைத்தும் வட கொரியாவில் தலையீடு செய்ய முடியும்.  

குறிப்பாக, வாஷிங்டன் தாக்குதல் நடத்துமானால், வட கொரியாவில் சீனா இராணுவ ரீதியாக தலையீடு செய்யுமா என்பது பற்றி நேரடியாக கேட்டபோது, அதை மறுப்பதை சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷூவாங் திட்டவட்டமாக நிராகரித்தார். இது ஒரு “ஊகமான கேள்வி, இதற்கு விடையிறுப்பது கடினம்” எனக் கூறி ஜெங், வட கொரிய நெருக்கடியை தீர்ப்பதற்கு சீனா பிரயோகிக்க விரும்பும் வழிமுறைகளில் இராணுவ பலம் என்பது அதன் “பட்டியலில் இல்லை” என்று மட்டும் தெரிவித்தார்.

கியேவ் இல் 2014 இல் நேட்டோ ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்புக்கு பின்னர், கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே வெடிக்கும் பதட்டங்களுக்கு மத்தியில், எவ்வித விளைவுண்டாக்கும் ஒரு மோதலிலும் தவிர்க்க முடியாதவகையில் ஐரோப்பா குறித்ததொரு அரங்காக இருக்கும். ஒரு ஆட்சிக்கவிழ்ப்பின் பின்னணியை தொடர்ந்து, 2014 இல் கியேவில் ஒரு ரஷ்ய சார்பு ஆட்சி கவிழ்ந்த நிலையில், ரஷ்ய எல்லைக்கு அருகேயான கிழக்கு ஐரோப்பாவிற்கு நேட்டோ பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை அனுப்பியுள்ளது. மேலும், ஜேர்மனியின் Sueddeutsche Zeitung பத்திரிகை, ரஷ்யாவை இலக்கு வைத்து ஐரோப்பா முழுவதிலும் அணுசக்தி ஏவுகணைகளை நிறுவுவதற்காக வாஷிங்டன் 1987 மத்தியதூர அணுஆயுத தளவாடங்கள் மீதான உடன்படிக்கையை (Intermediate-Range Nuclear Forces Treaty) இரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.

நேற்று, ரஷ்யாவின் ஐரோப்பிய எல்லைக்கு அருகே உள்ள திவெர்வில் இருந்து மங்கோலியா மற்றும் சீனாவுக்கு அருகே உள்ள இர்குட்ஸ்க் வரை ரஷ்யா அதன் முக்கிய மூலோபாய அணுஆயுத படைகளின் பெரிய அளவிலான பயிற்சிகளை நடத்தியது. “டாப்போல், டாப்போல்-எம் மற்றும் யார்ஸ் ஏவுகணைகளைக் கொண்ட பதினொரு ஏவுகணைப் படையணிகள் திவெர்வில் இருந்து இர்குட்ஸ்க் வரையிலுமான பகுதிகளில் தற்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன. அதில் மூன்றில் ஒரு பகுதியினர் தீவிர பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்,” என்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் TASS செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. “இந்த பயிற்சி, நாட்டின் 20 பிராந்தியங்களை உள்ளடக்கியது.”

சீனா நாட்டைச் சார்ந்த ஜியாமெனில் நடைபெற்ற BRICS (பிரேசில்-ரஷ்யா-இந்தியா-சீனா-தென் ஆபிரிக்கா) உச்சிமாநாட்டில் பேசுகையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், வட கொரியாவிற்கு எதிரான அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் ஆக்கிரோஷமான நடவடிக்கை உலக யுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று எச்சரித்ததோடு பின்வருமாறு கூறினார்: “அத்தகைய சூழ்நிலைகளில் இராணுவ வெறித்தனத்தை வளர்த்துக் கொள்வது முட்டாள்தனமானது; அது ஒரு கொடிய முடிவாக இருக்கும். அது பூகோள அளவிலான, கிரக அளவிலான பேரழிவுக்கும் மற்றும் மனித வாழ்க்கையின் பெரும் இழப்பிற்கும் இட்டுச்செல்லக் கூடும். அமைதி பேச்சுவார்த்தையை தவிர வட கொரிய அணுஆயுத பிரச்சினையை தீர்க்க வேறு வழி எதுவும் இல்லை.”

2003 இல் ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க ஆக்கிரமிப்பு போரை அல்லது 2011 இல் லிபியாவில் நேட்டோ போரை தொடங்குவதில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய சக்திகள் முன்னணிப் பாத்திரம் வகித்தது உட்பட, இத்தகைய தாக்குதல்களைத் தடுக்கும் ஒரு பெரும் முயற்சியாக பியோங்யாங்கும் தனது அணுஆயுதத் திட்டத்தை பொறுப்பற்ற முறையில் முன்கூட்டியே நடத்திமையும்  இருந்ததாக புட்டின் தெளிவுபடுத்தினார்.   

மேலும் அவர், “ஈராக் மற்றும் சதாம் ஹுசைனுடன் என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் நினைவுகூருகிறோம். அவரது குழந்தைகள் கொல்லப்பட்டனர், அவரது பேரனும் சுடப்பட்டார் என்று நினைக்கிறேன், நாடும் முழுவதும் அழிக்கப்பட்டதோடு சதாம் ஹுசைனும் தூக்கிலிடப்பட்டார்…. இது எப்படி நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும், மேலும் ஈராக்கில் என்ன நடந்தது என்பதை வட கொரிய மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் புல்லை கூட சாப்பிடுவார்கள், ஆனால் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணராதவரை தங்கள் திட்டத்தை நிறுத்த மாட்டார்கள்” என்று கூறினார்.

1991 இல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச அதிகாரத்துவம் கலைக்கப்பட்டதில் இருந்து, வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் தொடர்ந்து நடத்திய கால் நூற்றாண்டு கால ஏகாதிபத்திய போரின் விளைவே இந்த கொரிய நெருக்கடியாகும். அந்த ஆண்டில் ஈராக்கிற்கு எதிரான வளைகுடா போரில் இணைவதன் மூலமாக, நவகாலனித்துவ போர்களை நடத்துவதில் சோவியத் இராணுவத்தின் எதிர்ச்செயல்பாடு குறித்த முறிவை அவர்களும் சுரண்டக்கூடும் என்பதை ஐரோப்பிய சக்திகள் சமிக்ஞை செய்தன. இந்த சூழலில், அணுஆயுதங்களை கொண்டிருப்பது மட்டுமே ஹுசைனின் விதியை அனுபவிப்பதில் இருந்து குறைந்தபட்ச பாதுகாப்பை கொடுக்கும் என்று பியோங்யாங்கில் திவாலான ஆட்சி வெளிப்படையாக முடிவு செய்துள்ளது.   

வட கொரியாவிற்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகத்தின் வெறித்தனமான அச்சுறுத்தல்களும் கூட அம்பலப்படுத்தப்பட்டுள்ளன, அதுமட்டுமன்றி, வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளாக கருதப்படும் நாடுகளுக்கு இடையே ஆழ்ந்த பிளவுகளும் வெளிப்பட்டுள்ளன. பியோங்யாங் ஆட்சியின் அணுஆயுத சோதனைகளை கண்டனம் செய்யும் போதும், வட கொரியாவிற்கு எதிராக பெருகி வரும் ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்களை ஆமோதிக்க ஐரோப்பிய அரசாங்கங்கள் மறுத்துவிட்டன. குறிப்பாக சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை (China’s Asian Infrastructure Investment Bank) 2015 இல் புறக்கணிப்பதற்கு விடுக்கப்பட்ட அமெரிக்க அழைப்புகளை மீறியதன் மூலமாக,  ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு” உடன் ஆசியாவில் தொடங்கும் அமெரிக்க கொள்கை குறித்த அவர்களது எதிர்ப்பை தொடர்ந்து தெரிவிக்கின்றனர். 

தற்போது, ஐரோப்பிய சக்திகள் பியோங்யாங்கை கண்டனம் செய்கின்றன, ஆனால் கொரிய நெருக்கடியைத் தணிக்க பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கின்றன. ஜேர்மனிய சான்சலர் அங்கேலா மேர்க்கேல் மற்றும் பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ஆகியோர் பொருளாதாரத் தடைகளுக்கு அழைப்பு விடுத்து ஒரு கூட்டு அறிக்கையை பின்வருமாறு வெளியிட்டனர்: “பியோங்யாங்கில் உள்ள ஆட்சியாளரால் இந்த சமீபத்திய ஆத்திரமூட்டல் ஒரு புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. … ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவிற்கு கூடுதலாக, ஐரோப்பிய ஒன்றியமும் இப்போது செயல்பட வேண்டும். சான்சலரும், ஜனாதிபதியும் வட கொரியாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய தடைகளை இறுக்கமாக்குவதற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.” இருப்பினும், மேர்க்கேல் செவ்வாயன்று ஜேர்மனிய பாராளுமன்றத்தில், நெருக்கடிக்கு “சமாதான, இராஜதந்திர தீர்வுகளை” மட்டுமே காண முடியும் என்று தெரிவித்தார்.      

இதேபோல், லண்டன் “வட கொரியாவின் இந்த அபாயகரமான மற்றும் ஸ்திரமற்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென” கோரிய போதும், பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே இன் செய்தித் தொடர்பாளர்களும் கூட, “அழுத்தத்தை அதிகரிக்க முனையவும், அமைதியான தீர்வுக்கு வரவும்… அழைப்பு விடுத்ததோடு, … நமது பார்வையில் இங்கிலாந்தில் அமைதியான இராஜதந்திர வழிமுறைகள் என்பது மிகப்பெருமளவில் சிறந்தது” என்றும் தெரிவித்தனர். 

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங்-உன் படித்த பேர்ன் நகரில் இருக்கும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள்  இந்த நெருக்கடிக்கு மத்தியஸ்தம் செய்ய முயல்கின்றனர். உலக சாதுரியத்தில் ட்ரம்பின் ட்விட்டர் பயன்பாட்டை பரிகசிப்பது மட்டும் ஒரு “போதுமான கருவி” அல்ல என்று கருதி சுவிஸ் ஜனாதிபதி டோரிஸ் லியுதார்ட் பின்வருமாறு அறிவித்தார்: “ஒரு மத்தியஸ்தராக நல்ல சேவைகளுக்கு எங்களது பங்கை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். வரவிருக்கும் வாரங்களில் இந்த நெருக்கடியில் அமெரிக்காவும் சீனாவும் எவ்வாறு செல்வாக்கை கொண்டிருக்க முடியும் என்பதையே நிறைய பேர் சார்ந்திருப்பர் என்றே நான் நினைக்கிறேன். அதனால் தான் சுவிட்சர்லாந்தும், சுவீடனும் திரைக்குப் பின்னால் ஒரு பாத்திரத்தை வைத்திருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.”   

ஆளும் உயரடுக்குகள் இராணுவ செலவினங்களில் பெரும் அதிகரிப்புக்கு அழுத்தம் கொடுக்கின்ற ஐரோப்பிய நாடுகளின் ஒரு பாகமாக அமைதிக்கானதொரு விருப்பமாக இல்லை என்பதை இது பிரதிபலிக்கின்றது என்றாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு இடையே போட்டிகள் வளர்ந்து வருகின்றன. ட்ரம்ப் தேர்வானதில் இருந்து, ஜேர்மன் வாகன ஏற்றுமதிகள் மீதான ஒரு வர்த்தக யுத்தத்தை ஆரம்பிக்கப்போவதாக அவர் அச்சுறுத்தியதற்கு பின்னர், அவரை சந்திப்பதற்கு முன்பாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை மேர்க்கேல் தொடர்ந்து தொடர்புகொண்டு வந்துள்ளார்.  

ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கையின் ஒரு பரந்த மறுஒழுங்கமைவுக்கான அழைப்புகள் உட்பட கொரிய நெருக்கடியைப் பற்றி ஐரோப்பிய ஊடகங்கள் மூலமாக கொரியாவில் அமெரிக்கக் கொள்கையை விமர்சிக்கும் கருத்துகளின் அலைகளில் இந்த அழுத்தங்கள் பிரதிபலிக்கின்றன.

பியோங்யாங்கில் படித்த ஒரு முன்னாள் கிழக்கு ஜேர்மனி குடிமகனான பேராசிரியர் ரூடிகெர் ஃப்ராங்க் ஐ ஜேர்மன் தொலைக்காட்சி ZDF பேட்டி எடுத்தபோது, அவர் வட கொரியாவில் ஒரு “தீவிர மறுஆய்வு தேவை” என்று கூறினார். “கடுமையான தடைகள் வட கொரியா தன்னை ஆயுதபாணியாக்கிக் கொள்வதில் இருந்து தடுக்காது,” என்று ஃப்ராங்க் கூறினார், மேலும் ட்ரம்ப் நிர்வாகத்தை அதனுடனான பேச்சுவார்த்தைக்கு இணங்க வைக்கும் ஒரு முயற்சியில் பியோங்யாங் அதன் அணுசக்தி திட்டத்தைத் தொடர ஏதுவாக ஒரு “மூலோபாய முடிவை” எடுத்துள்ளது என்றும் சேர்த்துக் கூறினார். 

பியோங்யாங் உடனான பேச்சுவார்த்தைக்கு ஃப்ராங்க் அழைப்பு விடுத்ததோடு, அவ்வாறு இல்லையெனில், என்ன நடக்கும் என்பது பற்றி குறிப்பிட்ட கணிப்புகள் “அருந்தக யூகமாக” மட்டுமே இருக்கும் என்றும் கூறினார். வட கொரியா மோதலை உந்துவிப்பதாக கூறப்படுவதை அவர் மறுத்ததோடு, பின்வருமாறு கூறுகிறார்: “அவர்கள் சொல்கிறார்கள், நீங்கள் எங்களைத் தாக்கினால், உதாரணமாக நீங்கள் எங்கள் தலைவரை தாக்கினால், அணுஆயுதங்கள் உட்பட நாங்கள் கொண்டிருக்கும் அனைத்து வழிமுறைகள் மூலமாகவும் பதிலடி கொடுப்போம். ஏனென்றால், வட கொரியாவில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட கலசினிகோவ் துப்பாக்கிகளைக் கண்டாலும் நாங்கள் பயப்படமாட்டோம் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். 

கொரியா குறித்த ட்ரம்பின் ட்விட்டர் கருத்துக்கள் பற்றி பிரான்சின் மூலோபாய ஆய்வு மன்றத்தின் (France’s Strategic Research Foundation-FRS) சிந்தனையாளரான Antoine Bondoz இடம் Le Monde பத்திரிகை கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறினார்: “அவரது வெடிப்புக்கள் முற்றிலும் எதிர்மறையானவை. நாம் அணுஆயுதங்களை பயன்படுத்துவதன் மூலம் வட கொரியாவை பூகோள வரைபடத்தில் இருந்து முற்றிலும் நீக்கிவிட முடியும் என்று கூறுவது நாட்டினுள்  தனது அணுசக்தி திட்டத்தை மேலும் சட்டப்பூர்வமாக்குவதற்கு மட்டுமே மேலும் உதவும் என்று அவர் கூறுகிறார்.” மேலும், ஐரோப்பாவிற்காக “பேச்சுவார்த்தையை எளிதாக்க ஒரு இடைத்தரகராக பணியாற்றவும், ஆசியாவில் ஐரோப்பிய நலன்களுக்கு ஒரு வியத்தகு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான இராணுவ விரிவாக்கத்தை தவிர்க்கவும்” Bondoz அழைப்பு விடுத்தார்.