ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UN imposes harsh new sanctions on North Korea

வட கொரியா மீது கடுமையான புதிய பொருளாதாரத் தடைகளை ஐ.நா. விதிக்கிறது.

By Peter Symonds
23 December 2017

கடந்த மாதம், வட கொரியா தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) சோதிப்பை நடத்தியதைத் தொடர்ந்து அதன் மீது கடுமையான புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா உருவாக்கிய தீர்மானத்திற்கு ஐ.நா. பாதுகாப்புக் குழு 15-0 என்ற எண்ணிக்கையில் நேற்று வாக்களித்தது. பியோங்யாங் ஆட்சியை அடிபணியச் செய்யும் அளவிற்கு பட்டினியால் வதைத்து அதனை முழுமையானதொரு பொருளாதார முற்றுகைக்கு உட்படுத்த வாஷிங்டன் அழுத்தம் கொடுத்து வருகின்றது.

நிலக்கரி, கனிமங்கள் மற்றும் கடல்சார் பொருட்கள் ஆகியவை உள்ளிட்ட வட கொரியாவின் முக்கிய ஏற்றுமதிகள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தவிர, வட கொரியாவிற்கான எண்ணெய் விற்பனை மீது கட்டுப்பாடுகளை விதிப்பது மற்றும் பல வட கொரிய அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பது என்ற வகையில் ஐ.நா. வின் சமீபத்திய நடவடிக்கைகள் முன்னணி வகிக்கின்றன. மேலும், வட கொரியாவை மட்டுமல்லாமல், அதனோடு வர்த்தகத் தொடர்பு கொண்டுள்ள தனிநபர்களையும், நிறுவனங்களையும் கூட இலக்கு வைத்து தனது சொந்த ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் அதன் மீது திணித்துள்ளது.

புதிய பொருளாதாரத் தடைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது:

இருப்பினும், ஒரு கடற்படை மோதலை தூண்டிவிடும் வகையிலான ஒரு ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக இந்த வருட தொடக்கத்தில் ட்ரம்ப் நிர்வாகம் முன்மொழிந்தவாறு, ஆழ்கடல் எல்லைப் பகுதிகளுக்குள் கப்பல்கள் நிறுத்தப்படுவதற்கோ, அவற்றை கைப்பற்றுவதற்கோ தீர்மானம் அனுமதியளிக்கவில்லை.

வாக்கெடுப்பிற்கு பின்னர், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, இவ்வாறு அறிவித்தார்: “இன்னும் கூடுதலான மீறல்கள், இன்னும் கூடுதலான தண்டனைகளுக்கும், தனிமைப்படுத்தலுக்கும் வழிவகுக்கும் என்பது குறித்து பியோங்யாங்கிற்கு இது தெளிவான செய்தியை அனுப்புகிறது.” ஆனால் உலகிலேயே மிகவும் தனிமைபடுத்தப்பட்ட ஒரு நாடாக வட கொரியா ஏற்கனவே உள்ளது.

இந்த வார தொடக்கத்தில், வெள்ளை மாளிகை உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் தோமஸ் போஸெர்ட், தடை விதிக்கப்படாமல் ஒருசில பொருட்கள் மட்டுமே விட்டுவைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். “இறக்கும் அளவிற்கும் அவர்களது நடத்தைகளை மாற்றும் அளவிற்கும் வட கொரிய மக்களை பட்டினியில் வாட்டுவதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய எந்தவொரு நெம்புகோலையும் கிட்டத்தட்ட ட்ரம்ப் பயன்படுத்திவிட்டார்,” “எனவே, அவர்களது நடத்தையை மாற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கு எதையும் நாங்கள் மீதமாக விட்டுவைக்கவில்லை” என்று கூறினார்.

உண்மையில், வட கொரியா ஏற்கனவே ஒரு பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் அதிகாரி ஜீத் ராத் அல் ஹுசைன், 18 மில்லியன் வட கொரியர்கள் அல்லது அந்நாட்டின் 70 சதவிகித மக்கள் தொகை கடுமையான உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், மேலும் உதவி நிறுவனங்கள் ஏறக்குறைய 13 மில்லியன் பேருக்கு “உண்மையில் வாழ்வாதாரத்தை” வழங்குகின்றனர் என்றும் ஐ.நா. பாதுகாப்புக் குழு மதிப்பிட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்தார்.

“இராஜதந்திரம்” மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியம் பற்றி ட்ரம்ப் நிர்வாகம் குறிப்பிடுகையில், அணுவாயுத மற்றும் ஏவுகணை திட்டங்களை அகற்றுவது குறித்த அமெரிக்க கோரிக்கைகளுக்கும் மற்றும் அதன் மிகத்தீவிரமான கண்காணிப்புகளுக்கும் வட கொரியா முழுமையாக சரணடையவில்லையானால் அது எதையும் ஒப்புக்கொள்ளாது. வட கொரியாவுடனான மோதலை அதிகரிப்பதன் மூலமாக, பூகோள அளவிலான அமெரிக்க மேலாதிக்கத்திற்கு முக்கிய அச்சுறுத்தலாக கருதப்படும் சீனாவை கீழறுக்கவும் அமெரிக்கா முனைந்து வருகிறது,   

ஐ.நா.வுக்கான சீனாவின் துணை தூதர் வூ ஹெய்ட்டாவோ, கொரிய தீபகற்பம் மீதான பதட்டங்கள் “கட்டுப்பாட்டை இழக்கக்கூடிய” அபாயகரமாக இருந்தது என்று கூறியதோடு, மீண்டும் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்புவிடுத்தார். “ஒருவருக்கொருவர் சரியளவு விட்டுக்கொடுத்து நடத்தும் பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்தாலோசனைகள் மூலமாக மட்டும் தான் அமைதியானதொரு தீர்வை காண முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.

வட கொரியா அதன் அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதிப்பை இடைநிறுத்தம் செய்வதற்கு பதிலாக அமெரிக்காவும், தென் கொரியாவும் அவற்றின் இராணுவ பயிற்சிகளை நிறுத்தி வைக்கும் என்ற வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்த ஏதுவாக சீனாவும் ரஷ்யாவும் நிறுத்தினால் நிறுத்தப்படும் திட்டத்தை முன்மொழிந்தனர். ஆனால், அமெரிக்கா மீண்டும் மீண்டும் இந்த முன்மொழிவை நிராகரித்துள்ளது.

வட கொரியாவை எதிர்ப்பதாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளினால் தங்களது எல்லைப் பகுதிகளில் ஒரு போர் நிகழவிருப்பதை தடுக்கும் முயற்சியாக சீனாவும் ரஷ்யாவும் சமீபத்தில் முன்வைக்கப்பட்ட ஐ.நா.தீர்மானத்திற்கு வாக்களித்தன. இருப்பினும், ட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்காவை சென்று தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுவாயுத ஏவுகணையுடன் கூடிய வட கொரியாவை அது சகித்துக் கொள்ளாது என்பதுடன் அதை தடுக்க “அனைத்து தேர்வுகளையும்” பயன்படுத்தும்.

லண்டனைச் சார்ந்த டெலிகிராப் பத்திரிகை மூன்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வாரம், வட கொரியா மீது ஒரு முன்கூட்டிய தாக்குதலுக்கு வெள்ளை மாளிகை முன்னேறிய திட்டமிடல்களை வகுத்துள்ளதாக தெரிவித்தது. அடுத்த சோதனையை நிகழ்த்துவதற்கு முன்பாக ஏவுகணை ஏவுதளத்தை குண்டுவீசி தகர்ப்பது மற்றும் ஆயுத கையிருப்பையும் அழித்துவிடுவது ஆகியவற்றை இந்த தேர்வுகள் உள்ளடக்கியுள்ளது.

“வட கொரியர்களின் மூக்கை உடைத்து அவர்களது கவனத்தை ஈர்த்து, நாங்கள் தீவிரமாக இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கு அவர்களை அனுமதிக்கும் வகையிலான தேர்வுகளை கண்டுகொள்ள பென்டகன் முயற்சித்து வருகிறது” என்று ஒரு பெயர் குறிப்பிடாத முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி செய்தித்தாளுக்கு தெரிவித்தார்.

தற்போதைய பதட்டமான சூழ்நிலையில், எந்தவொரு சம்பவமோ அல்லது விபத்தோ, வேண்டுமென்ற ஒரு அமெரிக்க தாக்குதலாக மட்டுமே இருக்கும் என்பது எந்தளவு வரையறை கொண்டது என்பது ஒருபுறம் இருக்க, அதுவே கொரிய தீபகற்பத்தை விரைவாக அப்பிரச்சினைக்குள் மூழ்கடித்து ஏனைய சக்திகளையும் அதற்குள் இழுத்துப்போடக்கூடிய ஒரு போரைத் தூண்டும் அச்சுறுத்தலாகவே அது உள்ளது. அதில், நூறாயிரக்கணக்கானவர்கள் அல்லாமல், மில்லியன் கணக்கில் மக்கள் கொல்லப்படுவார்கள்.

வியாழனன்று, குவாண்டநாமோ வளைகுடாப் பகுதியில் பேசுகையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ், “இராஜதந்திரம்” தோல்வியுறுமானால் அமெரிக்க துருப்புக்கள் “போர் தொடுக்க தயாராக” இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், “வட கொரியா இதுவரை அமெரிக்காவுக்கான உடனடி அச்சுறுத்தலாக இல்லை என்றாலும், அதற்கான ஒரு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது” என்று அறிவித்தார்.

“நாங்கள் இதை (இராணுவ ரீதியாக) செய்தோமானால், அந்த நாள் வட கொரிய வாழ்விற்கு மிக மோசமான நாளாக உருவெடுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று அவர் தெரிவித்தார். போர் வருமானால், “அவரது (வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்) ஒவ்வொரு நீர்மூழ்கிக் கப்பலும் மூழ்கடிக்கப்பட்டுவிடும் என்பதோடு அவரது ஒவ்வொரு கப்பலும் மூழ்கடிக்கப்பட்டுவிடும்” என்றும் தெரிவித்தார்.

அமெரிக்கா தயாரிப்பு செய்து வருவது குறித்த ஒரு அச்சுறுத்தும் அறிகுறியாக, அணுவாயுத போரை விரும்பாத ஏனைய அணுவாயுத சக்திகளான ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளை அமெரிக்கா நம்பிக் கொண்டிருந்ததாக மாட்டிஸ் தெரிவித்தார். இது வட கொரியாவை எப்பொழுது இலக்கு வைத்தது என்பது, “நாம் உருவாக்க முடியாத ஒரு யூகமாக இருக்கலாம்” என்று மாட்டிஸ் தெரிவித்தார்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தேவைப்பட்டால் வட கொரியாவையும், அதன் சிறியளவிலான மற்றும் தொழில்நுட்ப வரையறைக்கு உட்பட்ட அணுவாயுதங்களையும் அழிக்கும் வகையிலான ஒரு அணுவாயுதப் போரை தொடுக்க அமெரிக்கா தயாரிப்பு செய்து வருகிறது என்பதாகும்.