ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ලංකාවේ ශාස්ත‍්‍රාලිකයන් හා කලාකරුවන් කන්ඩායමක් ජවිපෙ මැතිවරන ව්‍යාපාරයට ආවඩයි

இலங்கை கல்வியாளர்கள் மற்றும் கலைஞர்களின் குழு ஜே.வி.பி தேர்தல் பிரச்சாரத்தை ஆதரிக்கின்றது

By K. Ratnayake 
14 February 2018

நிர்மல் ரஞ்சித் தேவசிறி, ஹரிணி அமரசூரிய, லியனகே அமரகீர்த்தி உட்பட பல்கலைக்கழக கல்வியாளர்களதும் கலைஞர்கள் சிலரதும் குழுவொன்று “மாற்றத்தின் தொடகம்” என்ற பெயரில் வரவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே.வி.பி.) வாக்கு கேட்கும் ஒரு இயக்கத்தை அறிமுகப்படுத்தியது. இந்த இயக்கம், அதனுடன் சம்பந்தப்பட்ட மத்தியதர வர்க்க குழுவினதும் முதலாளித்துவ-சார்பு நோக்கங்களையும் அறிவுசார் திவால்நிலையையும் காட்சிப்படுத்துகின்றது.

அதன் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஜனவரி 25 அன்று இந்த குழு, மகரகம இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் ஜேவிபீ.க்கு மேடை அமைத்துக் கொடுக்கும் கூட்டம் ஒன்றை நடத்தியது. ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திசாநாயக்க பிரதான பேச்சாளராக கலந்து கொண்டார். ஜே.வி.பி.யின் போலி ஊழல் எதிர்ப்பு அரசியல் இயக்கம் பற்றி நாம் ஏற்கனவே எழுதியுள்ளோம். பார்க்க: இலங்கையில் ஜே.வி.பி.யின் போலி ஊழல் எதிர்ப்புப் போர் உழைக்கும் மக்களின் கண்களுக்கு மண் தூவும் நடவடிக்கை. முதலாவதாக, இந்த கல்வியாளர்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த அவர்களது பேச்சை சுருக்கமாக மேற்கோள் காட்டுவது அவசியம்.

கலாநிதி தேவசிறி, ஜே.வி.பி.க்கு வாக்களிப்பதற்கு உள்ள தகுதியைப் பற்றி பின்வருமாறு கூறினார்: "2015 ஜனவரி 8 அன்று எடுத்து வைத்த முக்கியமான அடியெடுப்பை முன்நோக்கி நகர்த்துவதற்காக, அதற்கு பங்களிப்பு செய்த சக்திகளின் மத்தியில் தூய்மையான உரிமையை கொண்டுள்ள ஒரே அமைப்பு ஜே.வி.பி. தான். எனவே, நான் ஜே.வி.பி.க்கு வாக்களிக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் சந்தேகமின்றி இருக்கின்றேன். இரண்டாவதாக, செல்வந்தர்கள் மிக ஊழல் மிக்கவர்கள். அதில் உள்ளூராட்சி மன்ற மட்டத்திலேயே அதிக அளவு உள்ளனர். அதனால் ஊழல் மிக்க உயரடுக்கை தூக்கி வீசும் முதல் நடவடிக்கையை உள்ளூராட்சி மன்றத் துறையிலேயே முதல் கட்டமாக மேற்கொள்ள வேண்டும். அதற்காக நமக்கு ஒரு மாற்று குழு வேண்டும்," என கூறிய அவர், ஜே.வி.பி.க்கு உள்ள விசேட தன்மை பற்றி குறிப்பிட்டு, அதன் உறுப்பினர்கள் ஒழுக்கமான கட்சியினால் இயக்கப்படுவதனால் அவர்கள் மோசடியானவர்களாக இருப்பதற்கா வாய்ப்பு குறைவு என அவர் கூறினார்.

"இந்த கட்சியில் திருடர்கள் இல்லை, இவர்கள் தூய நம்பிக்கை வைக்கக் கூடிய தரப்பினர்" என்ற நிலைப்பாடு மக்களுக்கு உள்ளது என கூறினார். கலாநிதி என்பதால் தனக்கு உள்ள நிலைப்பாட்டை மக்களின் நிலைப்பாடாக கூற முடியும் என்ற தலைக்கனத்துடனேயே தேவசிறி இவ்வாறு கூறினார். ஜே.வி.பி. இந்த முதலீட்டில் “பிரயோசனம் பெற வேண்டும்” என கூறிய தேவசிறி, அந்தக் கட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களும் “ஊழல் முறைமைக்கு அடிபணியக் கூடியவர்களாக இருந்தாலும், அதற்காக நீண்ட காலம் எடுப்பதால், அந்த கால இடைவெளியில் எம்மால் இந்த சமூகத்தில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்த முடியும்,” என அவர் கூறினார்.

கலாநிதி ஹரிணி அமரசூரிய, தனக்கு “அருவருப்பின்றி வாக்களிக்கக் கூடிய தரப்பினர்" என ஜே.வி.பி.யை சுட்டிக் காட்டி, கூட்டத்திற்கு முதல் நாள் காலியில் வைத்து தேவசிறி உட்பட ஒரு குழுவுடன், "இந்த சமயத்தில் நாம் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்த ஜே.வி.பி.யை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்," என்று பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிவெடுத்ததாக அவர் கூறினார். "2015 மாற்றத்தை எதிர்பார்த்து நம்மில் அநேகமானோர் ஒன்றிணைந்தோம். அது சிறிசேன மீது நம்பிக்கை இருந்த தால் அல்ல. அந்த நேரத்தில் இருந்த சூழ்நிலையில் சிறிசேனவுக்கு வாக்களிக்க வேண்டியிருந்தது. சிவில் சக்திகளுக்கு அரசாங்கத்தை மாற்ற முடியாது. எமக்கு ஜே.வி.பி பற்றி விமர்சனம் உள்ளது. நான் அதன் உறுப்பினரும் அல்ல. உறுப்பினராகும் எதிர்பார்ப்பும் கிடையாது. அதில் எமது முற்போக்கான பயணத்திற்கு வழி கிடைக்கின்றது," என்று அவர் கூறினார்.

அவர்கள் இருவரும், "ஊழல் அற்ற, தூய நம்பிக்கை வைக்கக்கூடிய கட்சி என்பதால் ஊழல் முறைமையை மாற்றுவதற்கு “அருவருப்பின்றி வாக்களித்து பலப்படுத்தி ஜே.வி.பி.யைப் பயன்படுத்துவதற்கு” அவர்கள் திட்டமிட்டு முடிவெடுத்துள்ளதாகவே அவர்கள் கூறுகின்றனர். மேலும் அதன் மூலம் ஊழலை அகற்றி, நல்லாட்சி ஒன்றை உருவாக்கிக்கொண்டு “ஜனநாயக சந்தர்ப்பம் ஒன்றை” பெற்றுக்கொள்ள முடியும் என அவர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கூற்றுக்களை ஏற்றுக்கொண்ட கலைஞர்களான சன்ன பெரேரா, சுனில் பெரேரா மற்றும் நதீக குருகேயும் சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவருவதன் மூலம் ஜனநாயகத்தை உருவாக்கிக்கொள்வது பற்றி தான் கண்ட “கனவு கலைந்து போயுள்ளதால்” அந்த கனவை ஜே.வி.பி. மூலம் "யதார்த்தமாக்கிக்கொள்ள” முடியும் என கூறினர்.

அதன் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் லஞ்சம் பெறுவது மோசடி செய்வது போன்ற துஷ்பிரயோகங்களில் ஈடுபடாதவர்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதால் தேவசிறியும் அமரசூரியயவும் ஜே.வி.பி.யின் தூய்மை பற்றி வருணிக்கின்றனர் போலும். இது பொது மக்களை தவறாக வழிநடத்துவதற்கு பின்னியுள்ள ஒரு அரசியல் பொய்யாகும். ஏனெனில், ஜே.வி.பி. இலங்கையில் உள்ள அரசியல் ரீதியாக மிகவும் ஊழல் நிறைந்த அமைப்புகளில் ஒன்றாகும்.

தமது நோக்கத்தை அடைவதற்கும் முதலாளித்துவ முறைமைய பாதுகாப்பதற்கும் ஜே.வி.பி. அதன் இனவாத சிந்தனையினால் மட்டுமே தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் தவிர இலங்கையில் உள்ள அனைத்து முதலாளித்துவ அரசியல் கட்சிகளுடனும் கூட்டணிக்கு சென்றுள்ளது. ஜே.வி.பி. அந்த கட்சிகள் மற்றும் அரசாங்கங்களின் ஜனநாயக-விரோத மற்றும் வாழ்க்கை நிலைமைகளை குதறுவதற்கு எடுத்த நடவடிக்கைகளுக்கு உதவி செய்த கட்சி என்பதை மூடி மறைப்பதற்கு இந்த கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்களால் முடியாது.

ஜே.வி.பி.யை தங்கள் நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொள்வதற்கே அன்றி அதன் அரசியலை ஏற்றுக்கொள்வதனால் அதற்கு வாக்களித்து பலப்படுத்துமாறு இந்தக் குழுக்கள் கேட்கின்றன என்பதை இந்த கலாநிதிகள் மீண்டும் மீண்டும் கூறினர். அதற்காக கோபம்கொள்ள வேண்டிய அவசியம் ஜே.வி.பி.க்கு கிடையாது. கூட்டத்திறப்கு அழைக்கப்பட்டிருந்த பெரும்பான்மையானவர்களாக ஜே.வி.பி. உறுப்பினர்களே இருந்தனர். அவர்கள் அந்த கருத்துக்களுக்கு ஒப்புதல் கொடுத்து கைதட்டினர். மறுபுறம், ஜே.வி.பி.யும் இந்த குழுக்களை பயன்படுத்தி வருகிறது.

கலாநிதிகள் ஜே.வி.பி.யைப் பயன்படுத்திக்கொள்ளப் போவது எதற்காக?

2015 ஜனவரி 8 அன்று நல்லாட்சிக்காக மிகவும் முக்கியமானது மாற்றம் ஏற்பட்ட போதிலும், "துரதிருஷ்டவசமாக" அந்த வற்றியின் மூலம் அதிகாரத்தை பற்றிக்கொண்ட கட்சிகள் மற்றும் குழுக்ளும் மிகவும் வெறுக்கத்தக்க வகையில் "தமது சொந்த குறுகிய நிகழ்ச்சி நிரலின்படி அந்த மக்கள் ஆணையை நாசம் செய்தன," "காட்டிக்கொடுத்தன" என தேவசிறி திகைப்படைந்திருதந்தார்.

தேவசிறி, அமரசூரிய, லியனகே உட்பட கும்பல் சுட்டிக் குழந்தைகள் அல்ல. அவர்கள் திட்டமிட்டு சிறிசேனவை சுற்றி இரண்டு தேவைகளுக்காக அணிதிரண்டனர். முதலில், முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராக, "நல்ல ஆட்சி" ஒன்றை ஏற்படுத்துவதன் பெயரில், சிறிசேனவின் பின்னால் இந்த "சிவில் ஆர்வலர்கள்" மற்றும் போலி இடதுகளும் கூட்டுச் சேர்ந்தது, தமக்கு "ஜனநாயக வாய்ப்பை" பெற்றுக்கொள்வதற்க்கவே ஆகும். அவர்கள் "ஜனநாயக வாய்ப்பு" மற்றும் “நல்லாட்சி” என்ற வஞ்சத்தனமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது கபடத்தனமான நலன்களை மூடிமறைத்துக் கொள்வதற்கே ஆகும்.

இராஜபக்ஷவைச் சூழ அணிதிரண்ட ஆளும் வர்க்கத்தின் பிரபுக் குழுவும் மற்றும் இராணவத் தலைவர்கள் உட்பட மெல்லிய தட்டு ஒன்று, சலுகை மற்றும் குடும்ப ஆட்சி முதலியனவுடன் பொருளாதார இலாபங்களை சுரண்டிக் கொள்வதே, இராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் ஓரங்கட்டப்பட்ட முதலாளித்துவ வர்க்கத்தின் குறிப்பிடத்தக்க தட்டினரதும், மத்தியதர வர்க்க உயர் தட்டினரதும் சீற்றத்திற்கு காரணமாகும். அவர்கள் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் என்ற பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் முன்னெடுத்த இயக்கத்திற்கு ஒத்துழைத்தனர்.

இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத ஆட்சிக்கும் தமிழ் மக்களை ஒடுக்கி முன்னெடுத்த யுத்தத்துக்கும் முழுமையாக ஒத்துழைத்த வாஷிங்டனின் நோக்கம், சீனா உடன் நெருக்கமாக இருந்த அவரது ஆட்சியை கவிழ்த்து இலங்கை தங்கள் மூலோபாய நலன்களுடன் அணிதிரட்டிக்கொள்வதே ஆகும். விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் உதவியுடன், சிறிசேனவை தூக்கிப் பிடிக்கும் ஒரு அரசியல் சதி மூலம், அமெரிக்கா கொழும்பில் ஒரு ஆட்சி மாற்றத்தை செயல்படுத்தியது. "சிவில் ஆர்வலர்கள்" மற்றும் போலி இடதுகளும் தமக்கு நிலைமைகளை சரிசெய்துகொள்வதற்காக ஏகாதிபத்திய முகாமிற்கு தாவின.

இந்த குழுவின் இரண்டாவது மற்றும் எரியும் தேவை எதுவெனில், முதலாளித்துவ வர்க்க ஆட்சிக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கும், ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக வளரும் சமூக வெடிப்பு சூழ்நிலைகளை தடுத்து, இந்த மக்களை திசை திருப்பிவிடும் முயற்சியே ஆகும். அவர்களின் உதவியுடன் இந்த மக்களின் எதிர்ப்பை சிறிசேன சுரண்டிக்கொண்டார்.

சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வரும்போது அவர்களுக்கு இருந்த "ஆசைகள்" தகர்ந்து போயின. அவர்கள் இப்போது, சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழும் தங்கள் எதிர்பார்ப்புகள் நொருங்கிப் போயுள்ளதை காண்கின்றனர். அதற்குப் பதிலாக, தாமே அதிகாரத்திற்கு கொண்டு வந்த அரசாங்கத்தின் கீழும் முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களே பலனை அறுவடை செய்துகொள்வதை அவர்கள் காண்கின்றனர். தமது பங்கை உண்மையில் எப்படி பெற்றுக்கொள்வது? மேல் நடுத்தர வர்க்கப் பகுதியினருக்கு இது ஒரு பெரிய பிரச்சினை ஆகும். ஆனால், அவை அனைத்துக்கும் மேலாக, முதலாளித்துவ நெருக்கடியின் சமைகளைத் திணித்து மக்களின் வாழ்க்கை, சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டுள்ள நிலைமையின் கீழ், உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வளரும் எதிர்ப்பு மீண்டும் சக்திவாய்ந்த முறையில் வளர்ச்சி காண்பதையிட்டு இந்தக் குழு பீதியடைந்துள்ளது.

ஜே.வி.பி.யின் இரத்தம் மற்றும் அசிங்கத்தை கழுவி, எப்படியாவது பலப்படுத்திக்கொண்டு ஆளும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மற்றும் நெருக்கும் ஒரு கருவியாக பயன்படுத்திக்கொள்ளவே அவர்கள் நனவுப் பூர்வமாக முடிவெடுத்துள்ளனர். என்று தெரியும். ஊழல் எதிர்ப்பு அமைப்பாக ஜே.வி.பி, மிகைப்படுத்தி மக்களை பொறிக்குள் சிக்க வைக்கும் ஒரு தீவிரமான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஜே.வி.பி. மட்டுமன்றி, அதனுடன் போட்டிக்கு சிறிசேன, விக்கிரமசிங்க மற்றும் இராஜபக்ஷவும் ஊழல்-எதிர்ப்பு பிரச்சாரம் ஒன்றை முன்னெடுப்பதை தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளும் இப்போது காண்கின்றனர். முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு தொகை கொள்ளைக்காரர்கள் மேற்கொள்ளும் காதுகளை செவிடாக்கும் பிர்ச்சாரத்தின் நோக்கம், உழைக்கும் மக்களை நசுக்கி ஒடுக்கி முன்னெடுக்கும் தாக்குதல்களின் உண்மையான தோற்றுவாய் முதலாளித்துவ முறைமையே என்பதை மூடி மறைப்பதற்கே அன்றி வேறொன்றுக்கும் அல்ல. ஜே.வி.பி. ஸ்தாபனத்தின் ஏனைய கட்சிகளுடன் அன்னியப்பட்டிருப்பதாக பாசாங்கு செய்து கொண்டு இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக அறிவிக்கப்படாத ஒரு கூட்டணியில் உள்ளது. தேவிசிரி, அமரசூரிய மற்றும் லியனகே உட்பட குழு இந்த ஊர்வலத்தின் முன்னணி தாளவாத்திய கும்பலாகும்.

இலங்கை முதலாளித்துவ வர்க்கம் ஒரு அடிப்படை பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளது. இலங்கை பொருளாதாரம் உள்ளார்ந்த விதத்தில் பின்னிப் பிணைந்துள்ள பூகோள முதலாளித்துவத்தின் பொருளாதார சரிவு காரணமாக இந்த நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள், உலகத்தின் மீது ஆதிக்கத்தை ஸ்தாபித்துக்கொள்வதற்காக, யுத்ததங்களை நாடி, உலகப் போர் நிலைமைகளை உருவாக்கி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், தங்கள ஜனநாயக மற்றும் சமூக பிரச்சனைகளில் எதையும் முதலாளித்துவ முறைமைக்குள் தீர்த்துக்கொள்ள முடியாது என்பதை, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகள் மத்தியில் உள்ள சிந்திக்கும் பகுதியினர் புரிந்துகொண்டுள்ளனர். உழைக்கும் மக்களுக்கு உள்ள ஒரே மாற்றீடு சோசலிசத்திற்காக போராடுவதே ஆகும். அதற்காக தொழிலாள வர்க்கம் ஐ.தே.க., ஸ்ரீ.ல.சு.க., ஸ்ரீ.ல.பொ.ஜ.மு., ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட முதலாளித்துவ கட்சிகளில் இருந்து பிரிந்து, ஏனைய ஒடுக்கப்பட்டவர்களின் தலைவனாக எழுந்து நின்று, முதலாளித்துவத்தை தூக்கியெறிய செயற்பட வேண்டும். நல்லாட்சி கல்வியாளர்கள் மற்றும் போலி இடதுகள், இதைத் தடுக்க முழு முயற்சியையும் எடுக்கின்றனர்.

தங்களது கண் கட்டிவித்தை இயக்கத்தை முன்னெடுக்கும் போது, இந்த கலாநிதிகள் தத்துவார்த்த மற்றும் அறிவார்ந்த வங்குரோத்தை வெளிக்காட்டுகின்றனர். அவர்கள் "ஊழல் முறைமை" பற்றி கூச்சலிடுகின்றனர். இது வானத்தின் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு முறைமையா? ஊழல்காரர்கள் பாவத்தினால் உருவாகியுள்ளனரா? தனிப்பட்ட தோல்விகளாலா? ஊழல்காரர்களின் கோட்டைகள் எனப்படுவனவற்றில் மோசடி முறைமை ஒன்று உருவானது எவ்வாறு?

தேவசிறரி, அமரசூரிய, அனுர குமார திசாநாயக்க கம்பனிக்கு இந்த பிரச்சினைகளை விளக்க முடியாது. ஏனென்றால், அவர்கள் ஏற்கனவே முதலாளித்துவ சமூக பொருளாதார ஒழுங்கை அங்கீகரிக்கின்றனர். அவர்கள தமது பேச்சுகளில் முதலாளித்துவ முறைமையைப் பற்றிய வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருந்தது அதை ஒரு தடைசெய்யப்பட்ட சொல்லாகக் கருதுவதாலாகும். முதலாளித்துவத்தின் தோல்வி பற்றி அவர்கள் பேசுவதில்லை. அவர்கள் 1991ல் ஸ்டாலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை கலைத்த பின்னர் தூக்கிப் பிடிக்கப்பட்ட, முதலாளித்துவம் நிரந்தரமானது என்ற பிற்போக்குத்தனமான கருத்தியல் தாக்குதலுடன் சேர்ந்திருப்பவர்கள். அவர்கள் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கும், சோசலிசத்திற்கான போராட்டத்திற்கும் விரோதமாக உள்ளனர்.

இந்த பிற்போக்கு குழிபறிப்புகளுக்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக இலங்கையில் சோசலிச வேலைத்திட்டத்தை அமுல்படுத்துகின்ற தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராடுகிறது. கொலன்னாவை, ஊர்காவற்துறை மற்றும் அம்பகமுவ உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்தி, சோ.ச.க. இந்த வேலைத் திட்டத்திற்காகவே போராடுகின்றது.