ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Delivery drivers strike in China, Korean Airline pilots and workers demand dismissal of company chairman

சீனாவில் விநியோகம் செய்யும் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம், கொரிய விமான ஓட்டிகள் மற்றும் தொழிலாளர்கள் நிறுவனத்தின் தலைவரை நீக்க கோரிக்கை

Workers Struggles: Asia
12 May 2018

சீன விநியோகம் செய்யும் செய்யும் தொழிலாளர்கள் சம்பள வெட்டுக்கு எதிராக வேலைநிறுத்தம்

லாலாமூவ் விநியோகம் செய்யும் செய்யும் வண்டி ஓட்டுநர்கள் கடந்த 2 வாரங்களுக்கு மேல் குறைந்தது ஐந்து சீன நகரங்களில் திடீர் சம்பள வெட்டுகளுக்கு எதிராக வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கடந்த மாதம் அவர்கள் ஒரு விநியோகத்திற்கு பெறும் தொகை ஓரே இரவில் குறைக்கப்பட்டிருந்தது.

லாலாமூவ் 2013 இல் ஹாங்காங் இல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் ஆசியா முழுவதிலும் 100 நகரங்களுக்கும் மேல் இயங்கிவருகிறது. அது 2,00,000 பதிவுசெய்யப்பட்ட வண்டிகள், டிரக்குகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை வைத்து 15,000,000 பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவையளித்துவருவதாக கூறப்படுகிறது.

ஒப்பந்த தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள சீன ஓட்டுநர்கள் ஒரு விநியோகத்திற்கு 38 யுவான் பெற்றுள்ளனர். இது முதற்கட்டமாக 30 யுவானாக குறைக்கபட்டிருந்தது  கடந்த மாதம் அது மேலும் 28 யுவானாக குறைக்கப்பட்டுவிட்டது. ஒரு கிலோமீட்டருக்கு கொடுக்கப்பட்டுவந்த கொடுப்பனவும் நிறுத்தப்பட்டுவிட்டது.

மே 6 அன்று, ”ஒரு தலைபட்ச ஊதிய வெட்டுக்களை” எதிர்க்கும் சுலோக அட்டைகளை மாட்டிக்கொண்டு 50 வண்டிகளை ஒரு வரிசையாக சென்ஷென் சாலைளில் மெதுவாக ஓட்டினார்கள். சான்ங்ஸா, சென்ங்டு, குன்மிங் மற்றும் சீயான் மாவட்டங்களில் மற்ற ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஓட்டுநர்கள் எரிபொருள் விலையேற்றத்தினையும் மற்றும் அவர்களின் சொந்த வண்டிகளை பராமரிப்பதற்கான செலவை அவர்களே செலுத்தவேண்டும் என்ற விஷயத்தையும்  கண்டனம் செய்தார்கள்.

கொரியன் விமான ஊழியர்கள் போராட்டம்

சியோலில் மே 4 அன்று நிறுவனத்தின் தலைவர் சோ யங் ஹோ மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் எனக் கோரி நூற்றுக்கணக்கான கொரியன் விமான ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். கடந்த மாதம் நடந்த ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து இந்தப் பேரணி நடந்தது, நிறுவனத்தின் ஒரு நிர்வாகியாக இருக்கும் யங் ஹோவின் மகளான சோ ஹியுன்-மின் ஒரு வணிகக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது ஒரு பங்கேற்பாளர் மீது தண்ணீரை வீசி எறிந்துள்ளார்.

விமான ஓட்டிகள், விமான ஊழியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் அடங்கிய தொழிலாளர்கள் ”கருணை வேண்டாம்” மற்றும் ”சோ யங் ஹோ வெளியேறு” போன்ற சுலோக அட்டைகளை சுமந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் நிறுவனத்தின் செயல்பாட்டில் உயர்ந்த வெளிப்படைத்தன்மை வேண்டும் எனவும் அவர்கள்  கோரிக்கை வைத்தனர்.

குடும்பமாக நடத்தும் பெருநிறுவனத்தின் செயல்பாடுகளுக்கும் அவர்களின் அரைபிரபுத்துவ நடைமுறைகளுக்கும் தொழிலாளர்கள் மத்தியில் பரந்த விரோதப் போக்கு உள்ளது. 2014 இல் யங் ஹோவின் மற்றொரு மகளான சோ ஹுயுன்-அக் நியுயோர்க்கிலிருந்து வந்த விமானத்தில் முதல்வகுப்பில் அவருக்கு கடலை   பரிமாறப்பட்ட விதத்தை எதிர்த்து விமானம் மேலே கிளம்புவதற்கு முன் அதனை ரத்து செய்யக் கோரியிருக்கிறார்.

சமீபத்திய எதிர்ப்பு காரணமாக யங்-ஹோ மற்றும் மகள்கள் விமான நிலையத்தில் அவர்களுடைய நிலைகளிலிருந்து கீழிறங்கினர். மேலும் அவர்களுடைய நடத்தைகளுக்காக மக்கள் மத்தியில் மன்னிப்பும் கேட்டனர்.

இந்தியா: தமிழ்நாட்டில் தோட்டக்கலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்.

மே 5, நீலகிரியில், நிரந்தர வேலை மற்றும் முழுநேர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அதே சலுகைகளை வழங்கக் கோரி தோட்டக்கலைத்துறையிலிருந்து சுமார் 600 ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தினை மேற்கொண்டனர். பெரும்பாலான தொழிலாளர்கள் 20 வருடங்களுக்கு மேலாக ஒப்பந்தமுறையில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள் மேலும் அவர்களுக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் ($US3.70) மட்டும் தான் வழங்கப்படுகிறது.

திங்கட்கிழமையன்று, வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேசுகையில், அவர்களுடைய கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மாநில அதிகாரிகளிடம் கலந்தாய்வு செய்வார்கள் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். எனினும் போராட்டக்காரர்கள் வேலைக்கு திரும்ப மறுத்துள்ளார்கள், அவர்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்று அறிவித்துள்ளார்கள். மறுதினம், அவர்கள் அரசாங்க தாவரவியல் பூங்காவிற்கு வெளியே ஒரு உள்ளிருப்புப் போராட்டத்தினை மேற்கொண்டனர்.  ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்டு கட்சி (CPI) யின் கட்டுப்பாட்டிலிருக்கும் அனைத்திந்திய தொழிற்சங்கம் இந்த தொழில்முறை நடவடிக்கையினை ஏற்பாடு செய்திருந்தது.

அஸ்ஸாம் ஓலா - உபேர் ஓட்டுநர்கள் 72 மணிநேரம் வேலைநிறுத்தப் போராட்டம்

அஸ்ஸாமில் மே 7 அன்று, தினம் ஒரு குறைந்தபட்சமாக 2,500 ரூபாய் வழங்கவும், ஊக்கத்தோகையினை அதிகரிக்கவும், எட்டு மணிநேரத்திற்கு மேல் செய்யப்படும் வேலைக்கு  போனஸும், புதிய வண்டிகள் பதிவுசெய்வதை நிறுத்தவும் மேலும் பல கோரிக்கைகளை வைத்து மூன்று நாள் வேலைநிறுத்தப்போராட்டத்தினை  ஓலா - உபேர் ஓட்டுநர்கள் தொடங்கியிருந்தனர்.

அனைத்து அஸ்ஸாம் வண்டி ஓட்டுநர்கள் சங்கம் (AACOU) இந்த தொழில்முறை நடவடிக்கையினை ஏற்பாடு செய்திருந்தது. ஒரு நல உதவி திட்டத்தினையும் ஓட்டுநர்கள் கோரியிருந்தனர்.  மேலும் பயன்பாட்டுக் கருவி பயன்படுத்தும் இயக்குவர்களுக்கு அதிக பட்சமாக 10 சதவீத கழிவுகள் வழங்கவேண்டும் எனவும் கோரினார்கள் அதன் மூலம் ஓட்டுநர்கள் குறைந்தபட்ச கட்டணமாக 100 ரூபாயினைப் பெறுவார்கள்

உபேர் கார் ஓட்டுநர்களுக்கு குறைந்தது இரண்டு மாதங்களாக ஊக்கத்தொகையினை வழங்கவில்லை என AACOU தலைவர் இஸ்மாயில் அலி ஊடகத்திற்கு கூறினார் . "இந்த நேரத்தில் அதிகாரிகள் பதிலளிக்கவில்லையென்றால் நாங்கள் அனைத்திந்திய அளவில் வேலைநிறுத்தபோராட்டத்திற்கு அழைப்பு விடுப்போம். நாடுமுழுவதிலுமுள்ள கார் ஓட்டுநர்கள் இதேபோன்ற பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்” என்று அவர் கூறினார்.

இந்த தொழில்முறை நடவடிக்கைக்கு ”வன்முறை மற்றும் காழ்புனர்ச்சியனை” ஓட்டுநர்கள் மீது சுமத்தி உபேர் நிர்வாகத்தினர் பதிலளித்தனர். இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவைகள் என்று  AACOU நிராகரித்தது.

அனைத்திந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு இந்த தொழில்முறை நடவடிக்கைக்கு ஆதரவளித்த அதேவேளை அது வேலைநிறுத்தப்போராட்டத்தினை விரிவுபடுத்த எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. இந்த நகரத்தில் 15,000 வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன.

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய கிராமப்புற சுகாதார மற்றும் குழந்தைகள் பராமரிப்புப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்

நூற்றுக்கணக்கான அங்கன்வாடி (கிராமப்புற சுகாதார மற்றும் குழந்தைகள் பராமரிப்பு) பணியாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தினை மேற்கொண்டனர் மேலும் மே 6 அன்று சம்பள உயர்வு கோரி பஞ்சாப் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பல்வேறு சட்டசபை உறுப்பினர்கள் மற்றும்  மாநில ஆளும் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்திலிருந்து அமைச்சரவை அமைச்சர்கள் வீடுகளுக்கு வெளியே போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அபோகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்புநிற கொடிகளை பறக்கவிட்டனர் மேலும் மாநில அரசாங்கத்தினை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இந்த தொழில்முறை நடவடிக்கையினை அனைத்து பஞ்சாப் அங்கன்வாடித் தொழிலாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்து ஹரியானா மாநிலத்திலுள்ள அங்கன்வாடித் தொழிலாளர்கள் போன்று பஞ்சாப்பிலுள்ள உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரினர்.

பாகிஸ்தான்: லாகூர் மருத்துவர்கள் போராட்டம்

சேவைக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதில் மற்றும் தகுந்த கால பதவி உயர்வுகளுக்கு அதிக காலம் எடுப்பதை கண்டித்து மே 3 அன்று லாகூரில் இளம் மருத்துவர்கள் சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். வீட்டு அலுவலர், மருத்துவ அதிகாரி மற்றும் முதுகலை பட்டதாரி பயிற்சியில் உள்ளவர்களுக்கு உயர் ஊதிய தொகுப்புக்களை வழங்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர் மேலும் அரசாங்க சுகாதார வேலைகளை தனியார்மயப்படுத்துவதையும் எதிர்த்தார்கள்.

ஜின்னா மருத்துவமனை, சேவைகள் மருத்துவமனை, ஷாய்க் ஷயட் மருத்துவமனை, பொது மருத்துவமனை மற்றும் பஞ்சாப் இதயநோய் கல்விநிறுவனத்தின் மருத்துவர்கள் இதில் ஈடுபட்டிருந்தனர். இந்த வேலைநிறுத்தமானது நகரத்தின் பிரதான சாலைகளில் மூன்று மணிநேரத்திற்கு மேலாக தடையை ஏற்படுத்தியிருந்தது.

இஸ்லாமாபாத் ஆசிரியர்கள் நான்கு மாத வேலைநிறுத்தத்தை முடித்துக்கொண்டனர்

இஸ்லாமாபாத்தில் கல்விக்கான மத்திய இயக்குனரகத்திற்கு (FDE) சொந்தமான அரசாங்கம் நடத்தும் கல்வி நிறுவனங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தினக் கூலி பெறும் ஆசிரியர்களின் நான்கு மாத வேலைநிறுத்தம் செவ்வாய் அன்று அதிகாரிகள் நிரந்தர வேலைவாய்ப்பினை வழங்குவதாக உறுதியளித்தபின்னர் தினக் கூலி ஆசிரியர்கள் சங்கத்தால் (DWTA) முடித்துக்கொள்ளப்பட்டது.

FDE ஆல் மாதிரி பள்ளிகள் என அழைக்கப்படும் பள்ளிகளில் 2,000 க்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மிக குறைந்த அளவில் மாதம் 12,500 ரூபாய் ($US108.14) வழங்கப்படுகிறது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகளான ஆசிரியர்களுக்கு இரட்டிப்பு ஊதியங்கள் மற்றும் கடந்த ஒன்பது மாதங்களாக நிலுவையிலிருக்கும் தொகையினை வழங்குவதற்கு அரசாங்கம் ஒப்புக்கொண்டதா என்பதற்கு தெளிவாக இல்லாத நேரத்தில்  DWTA யானது இந்த தொழில்முறை நடவடிக்கையினை முடித்துக்கொண்டது.

பாகிஸ்தான்: பெஷாவர் மர தச்சர்கள் ஆர்ப்பாட்டம்

பேஷாவரில் பாக் ஜேர்மன் மரவேலை மைய தொழிலாளர்கள் செவ்வாய் அன்று அவர்களின் நிரந்தர வேலைக்கான கோரிக்கையை ஆதரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தப் போராட்டம் பெஷாவரிலுள்ள சிறுதொழில் மேம்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு வெளியே நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இந்த கம்பனிக்காக 18 வருடங்களாக நிலைப்படுத்தப்பட்ட ஊதிய முறையிலும் முறையான சேவை கட்டமைப்பு இல்லாமலும் வேலை செய்துவருகிறார்கள்.  மார்ச்சிலிருந்து இரண்டாவதாக நடக்கும் இந்த வேலைநிறுத்தமானது பாக்-ஜேர்மன் மரவேலை தொழிலாளர்களின் தொழிற்சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிர்வாகத்தினர் தொடர்ச்சியாக நிராகரித்துவருகின்றனர்.

இலங்கை ரயில்வே தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக் கோரிக்கை வைத்துள்ளனர்

நிலைய அதிகாரிகள், இயந்திர ஓட்டுநர்கள், பாதுகாவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் ஆகிய 11வது வகைப்பிரிவிலிருக்கும் இரயில்வே தொழிலாளர்கள் மே 9 அன்று மதியம் ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளுக்காக நாடுதழுவிய ஒரு வேலைநிறுத்த போராட்டத்தினை நடத்தினர்.

ரயில்சேவைகள் கூட்டுத் தொழிற்சங்கத்தின் தலைவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முடித்துக்கொண்டனர். அவர்கள் மூத்த அரசாங்க அமைச்சர்களை தொடர்புகொண்டதாகவும், அமைச்சரவை சங்கத்தின் சம்பளக் கோரிக்கையை  ஏற்றுக்கொண்டதாக கூறியதாகவும் தெரிவித்தனர்.

எப்போது சம்பள உயர்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமோ அல்லது காலவரையறையோ வெளியிடப்படவில்லை. 14,000 க்கு மேற்பட்ட தொழிலாளர்களை இலங்கை ரயில்வே வேலைக்கு அமர்த்தியிருக்கிறது.