ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Clashing with Rome, Paris persecutes refugees at Italian border

ரோம் உடனான மோதலில், இத்தாலிய எல்லையில் பாரீஸ் அகதிகளை துன்புறுத்துகிறது

By Athiyan Silva and Alex Lantier
18 June 2018

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் வெள்ளியன்று பாரீசில் இத்தாலிய பிரதம மந்திரி யூசெப்ப கொன்டே ஐ சந்தித்த பின்னர், ஐரோப்பாவில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு எதிரான அவரது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறார். இத்தாலிய அரசாங்கம் Aquarius கப்பலையும் மற்றும் அதன் 629 அகதிகளையும் மூர்க்கமாக மற்றும் வெறித்தனமாக இத்தாலி மண்ணுக்குள் அனுமதிக்க மறுத்ததன் மீது இவ்வார தொடக்கத்தில் அதை சுருக்கமாக விமர்சித்திருந்த மக்ரோன், ஐரோப்பிய ஒன்றியத்தின் தஞ்சம் வழங்கும் சட்டத்தை இறுக்குவதற்கு "ஆழ்ந்த சீர்திருத்தங்களைச்" செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்புவிடுத்தார்.

அக்கண்டம் முழுவதிலும் புலம்பெயர்ந்தோர் மீது மிகப் பெரியளவில் புதிய தாக்குதல்களை நடத்த ஐரோப்பிய சக்திகள் தயாரிப்பு செய்து வருகின்றன என்பதை ஒவ்வொரு அறிகுறியும் சுட்டிக்காட்டுகின்றன. பெருந்திரளான மக்களை நாடு கடத்தும் நடவடிக்கையாக அரை மில்லியன் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்த சூளுரைத்துள்ள மத்தேயோ சல்வீனியின் அதிவலது லெகா கட்சி (இது இரண்டாம் உலக போர் முடிந்ததற்கு பின்னர் முன்னொருபோதும் இல்லாத ஒரு போலிஸ் ஒடுக்குமுறையாக இருக்கும்) மேலாளுமை கொண்ட ஒரு புதிய இத்தாலிய அரசாங்கம் கடந்த மாதம் நிறுவப்பட்டதற்குப் பின்னர் இந்த மோதல் வெடித்தது. அதே நேரத்தில், பிரெஞ்சு போலிஸ் இத்தாலிய-பிரெஞ்சு எல்லையை ஒட்டி, கேட்பாரற்று இருக்கும் குழந்தைகள் உள்ளடங்கலாக அகதிகளைச் சட்டவிரோதமாக இன்னலுக்கு உட்படுத்தும் அதன் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.

பாரீஸ் சந்திப்புக்கு மூன்று நாட்களுக்கு முன்னர்தான், மக்ரோன் "சிடுமூஞ்சித்தனம் மற்றும் அடாவடித்தனம்" என்று குற்றஞ்சாட்டி, இத்தாலிய துறைமுக தளத்தில் அக்குவாரியஸ் (Aquarius) கப்பலுக்கு அனுமதி மறுத்ததற்காக ரோமைத் தாக்கி இருந்தார். இது கொன்டே அரசாங்கத்துடன் ஓர் இராஜாங்க பூசலைத் தூண்டியது, இத்தாலிக்கான பிரெஞ்சு தூதர் கத்ரீன் கொலொன்னாவை ஆஜராகுமாறு உத்தரவிட்டு இத்தாலி அதன் எதிர்ப்பைத் தெரிவித்தது. இத்தாலிய பொருளாதார அமைச்சர் Giovanni Tria பாரீசுக்கு திட்டமிட்டிருந்த ஒரு விஜயத்தை இரத்து செய்தார், உள்துறை அமைச்சரான சல்வீனி மக்ரோனின் அறிக்கையைக் கூர்மையாக கண்டித்தார்.

“கருணையோடு தானே முன்வந்து செயல்படும் நமது வரலாறு மீது பிரெஞ்சு அரசு பிரதிநிதிகள் இந்தளவுக்கு கடுமையாக உபதேசிக்க தகுதியானவர்கள் இல்லை என்பது தான் பிரச்சினை, அவர்கள் சாத்தியமானளவுக்கு விரைவில் அதிகாரபூர்வமாக மன்னிப்பு கோருவார்கள் என்று நான் கருதுகிறேன், நம்புகிறேன்,” என சல்வீனி தெரிவித்தார். “அதிகாரபூர்வ மன்னிப்பு கோரவில்லை என்றால், பிரதம மந்திரி கொன்டே பிரான்சுக்கு செல்ல மாட்டார்.”

பாரீஸ் மற்றும் ரோம் க்கு இடையிலான பூசல், ஜேர்மன் அரசாங்கத்திற்குள் ஒரு மிகப்பெரிய வெடிப்பாக வெடித்ததுடன், புலம்பெயர்வு பிரச்சினையையும் தூண்டியது. சல்வீனி மற்றும் ஆஸ்திரிய சான்சிலர் செபஸ்டியான் குர்ஸ் இருவரையும் சந்தித்த ஜேர்மன் உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீகோவர் சான்சிலர் அங்கேலா மெர்க்கலை எதிர்க்கவும் ஜேர்மன் எல்லைகளை மூடவும் அச்சுறுத்தினார், இது ஜேர்மன் அரசாங்கமே பொறியும் அபாயத்தை ஏற்படுத்தியது.

எவ்வாறிருப்பினும் இத்தருணத்தில் கொன்டே வெள்ளியன்று பாரீஸ் சென்று, மக்ரோனுடன் நட்புறவாக ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார், அங்கே அவ்விருவரும் அகதிகள் மீதான அவர்கள் தாக்குதல்களை வரைந்தளித்தனர். தஞ்சம் கோரும் ஒருவர் முதலில் எந்த நாட்டை வந்தடைகிறாரோ, அவர் ஆணோ பெண்ணோ, அவரது விண்ணப்பத்தை அந்நாடே கையாள வேண்டும் என்று உத்தரவிடும், டப்ளின் உடன்படிக்கையில் மாற்றம் செய்ய அவ்விருவருமே அழைப்பு விடுத்தனர். கொன்டே அந்த முறையை "எதிர்ப்பதாக" தெரிவித்த நிலையில், மக்ரோன் "ஒவ்வொரு நாட்டின் யதார்த்தங்களுக்கும் அது ஏற்புடையதாக" இருக்கும் வகையில் அம்முறையின் "அடித்தளத்தை மாற்றியமைக்க" விரும்புவதாக தெரிவித்தார்.

மக்ரோன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஃப்ரொன்டெக்ஸ் எல்லை பாதுகாப்பு அமைப்பை (Frontex border agency) மீளப்பலப்படுத்த அழைப்பு விடுத்த நிலையில், ரோமில் பிரான்கோ-இத்தாலிய இருதரப்பு "இலையுதிர் கால" சந்திப்பு ஒன்றுக்கு கொன்டே அழைப்பு விடுத்தார்.

ஜூன் இறுதியில் வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தஞ்சம் கோரும் விதிமுறைகளை மாற்றுவதற்கும் மற்றும் புலம்பெயர்பவர்கள் மீது கடுமையான தாக்குதல்களை அதிகரிக்கவும், பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய சக்திகளும் புதிய முயற்சிகளை எடுத்துக்காட்டும் என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. மக்ரோன் அரசாங்கம் ஒரு கடுமையான தஞ்சம் கோரும் சட்டத்தை நிறைவேற்றி உள்ளது, இது தஞ்சம் கோரும் விண்ணப்பதாரர்களின் கோப்புகள் மீது நடைமுறையளவில் போலிஸ் க்கு வீட்டோ வகையிலான தடுப்பதிகாரத்தை வழங்குகிறது, அதேவேளையில் பிரான்ஸ் இந்தாண்டு பத்தாயிரக் கணக்கான அகதிகளைப் பாரியளவில் நாடு கடத்துகிறது. இவ்வாறிருக்கையிலும் ரோமும் பாரீசும் இத்தகைய பாசிசவாத தாக்குதல்களை அதிகரிப்பதற்கு அழுத்தமளித்து வருகின்றன.

மக்ரோன் மற்றும் கொன்டே இருவருமே “அகதிகளின் எல்லைப்புற” முகாம்கள் என்றழைக்கப்படுவதை, அதாவது நூறாயிரக் கணக்கான அல்லது மில்லியன் கணக்கான அகதிகளை அடைத்து வைக்கக்கூடிய வட ஆபிரிக்காவில் உள்ள தடுப்புகாவல் முகாம்களைப் போன்றதை, இன்னும் அதிகமாக உருவாக்க ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தினர். கொன்டே கூறினார், புலம்பெயர்வோர் ஐரோப்பாவை நோக்கி "ஓடி வருவதைத்" தடுக்க "வரும் நாடுகளிலேயே நாம் ஐரோப்பிய மையங்களை உருவாக்க வேண்டும்,” என்றார். மக்ரோன், கொன்டே இன் பிற்போக்குத்தனமான திட்டங்களை ஆதரித்ததுடன், “இந்த பிரச்சினையைக் கையாள, நமது தஞ்சம் வழங்கும் முகமைகளது கிளைகளை மத்திய தரைக்கடலின் அடுத்த பக்கத்தில்" அமைக்க அழைப்பு விடுத்தார்.

உண்மையில், கொன்டே மற்றும் மக்ரோன் முன்மொழிந்த அந்த "மையங்கள்" நரகத்திற்கு ஒத்தவை, ஏகாதிபத்திய போர்கள் மற்றும் முடிவற்ற வறுமையிலிருந்து தப்பிக்க மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலிருந்து வந்த பெருந்திரளான புலம்பெயர்ந்தோர்களை அடைத்து வைக்க 2011 நேட்டோ போருக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் லிபியாவில் சிறைமுகாம்கள் அமைக்கப்பட்டன. லிபிய முகாம்களில் பெரும்பாலும் சித்திரவதை, பாலியல் வன்முறை மற்றும் படுகொலைகள் நடத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் அறிக்கை வெளியிட்ட பின்னரும், அந்த முகாம்களில் ஆபிரிக்க புலம்பெயர்ந்தோர் அடிமைகளாக விற்கப்படுவதாக CNN ஒரு காணொளி ஒளிபரப்பிய பின்னரும், சர்வதேச பொதுமன்னிப்பு சபை கடந்த ஆண்டு அவற்றைக் குறித்து மனதை உருக்கும் ஒரு அறிக்கை வெளியிட்டது. இந்த அட்டூழியங்கள் நடத்தப்பட்ட முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி வழங்கி இருந்ததை அந்த அறிக்கை உறுதிப்படுத்தியது.

பெருந்திரளான அகதிகள் உயிராபத்தான மத்தியத் தரைக்கடலைக் கடந்து ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிப்பதை முடக்க, சாட், நைஜர், மொரோக்கோ மற்றும் வட ஆபிரிக்க எங்கிலுமான நாடுகளிலும் கூடுதல் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பாரீஸ் மற்றும் ரோமுக்கு இடையிலான கசப்புணர்வு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உலகளாவிய கொள்கையின் கதி குறித்து ஐரோப்பிய ஆளும் வர்க்கத்திற்குள் வெடித்து வரும் கடுமையான போராட்டங்களைப் பிரதிபலிக்கிறது. அகதிகள் பிரச்சினை இந்த நெருக்கடியில் ஒரு மிகப்பெரும் பாத்திரம் வகிக்கிறது. பல தசாப்த காலமாக அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய போர்கள், ஈராக்கில் இருந்து, ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, யேமன், மாலி, புர்கினோ பாசோ மற்றும் அதற்கு அங்காலும் ஒட்டுமொத்த நாடுகளையும் பிரதேசங்களையும் சீரழித்துள்ளன, மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பத்து மில்லியன் கணக்கானவர்கள் அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். பத்தில் இருந்து பதினைந்து ஆயிரம் அகதிகள் மத்தியத்தரைக்கடலில் மூழ்கி இறந்துள்ளனர், இது ஐரோப்பா எங்கிலும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களிடையே அதிர்ச்சியையும், சீற்றத்தையும் தூண்டிவிட்டு வருகிறது.

அமெரிக்கா உடனான உறவுகளில் ஆழமடைந்து வரும் நெருக்கடி, வாஷிங்டன் உடனான ஜி7 மாநாட்டு பேச்சுவார்த்தைகள் சமீபத்தில் தோல்வியடைந்தமை, மற்றும் ஐரோப்பாவுக்கு எதிராக அமெரிக்காவின் ஆரம்ப வர்த்த போர் நடவடிக்கைகள் என இவையெல்லாம் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு உள்ளேயே இத்தகைய அரசியல் மோதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன, அதேவேளையில் ஐரோப்பிய இராணுவ கொள்கை மூலமாக அழுத்தமளிப்பதற்காக அது ஒரு புதிய, இராணுவவாத மற்றும் புலம்பெயர்வு-விரோத அரசியலை வடிவமைக்க முனைகின்றது.

ஐரோப்பிய சக்திகள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவரை தங்களுக்குள் எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பதில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. கொன்டே இன் பத்திரிகையாளர் சந்திப்பில் மக்ரோன் கூறுகையில், “ஆஸ்திரியா, ஹங்கேரி, மற்றவர்களும், இந்த சிறப்பு தொடர்புகளுக்கு நன்றி கூற வேண்டும், இத்தாலிக்கு அவசியமான நல்லிணக்கத்தை வழங்கினால், அது இத்தாலிக்கும் மற்றும் ஒவ்வொருவருக்கும் நல்ல சேதி தான்.” சீகோவர், அவர் பங்கிற்கு, “பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வு மீது உள்துறை அமைச்சர் மட்டத்தில் செயலாற்ற ஜேர்மனியுடன் தங்களை கூட்டு சேர்க்குமாறு" ஆஸ்திரியாவுக்கும் இத்தாலிக்கும் அழைப்புவிடுத்தார்.

மக்ரோனின் புலம்பெயர்ந்தோர் விரோத நிலைப்பாடும் மற்றும் வலதுசாரி இத்தாலிய அரசாங்கத்துடனான அவரது உறவுகளும், கடந்த ஆண்டு பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் நிலைப்பாட்டை மேற்கொண்டும் ஊர்ஜிதப்படுத்துகின்றன.

சில வாதங்களின் அடிப்படையில், சான்றாக, மக்ரோனை விட லு பென் புலம்பெயர்ந்தவர்களுக்கு மிகவும் விரோதமானவர் என்ற அடிப்படையில், நவ-பாசிசவாத வேட்பாளர் மரீன் லு பென்னை விட மக்ரோனை தீமை குறைந்தவர் என்று கூறி இவரை ஆதரிக்க முடியாது என்பதை பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தியது. அதற்கு பதிலாக சோசலிச சமத்துவக் கட்சி, இரண்டு வேட்பாளர்களையும் எதிர்த்து தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதும் மற்றும் மீளெழுச்சி பெறும் தொழிலாள வர்க்க இயக்கத்திற்கு புரட்சிகர தலைமையை வழங்குவதுமே பணி என்று வலியுறுத்தியது—குறிப்பாக இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்து பெருந்திரளான வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் இதை எடுத்துக்காட்டி உள்ளன.

இதேபோல, மிக வெளிப்படையான தேசியவாத இத்தாலிய அரசாங்கத்திடம் ஆகட்டும் அல்லது புலம்பெயர்ந்தோரை இன்னலுக்கு உட்படுத்த மிகப் பரந்தளவில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட முனையும் மக்ரோன் அரசாங்கத்திடம் ஆகட்டும், பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்குவதற்கு முற்போக்கானது எதுவும் இல்லை.

இதன் ஒரு அறிகுறி தான், புலம்பெயர்ந்த குழந்தைகள் உள்ளடங்கலாக புலம்பெயர்ந்தோரை அவமதிக்கும் பிரெஞ்சு போலிஸ் குறித்து வரும் கொடூரமான செய்திகளாகும், அகதிகள் இத்தாலியில் இருந்து பிரான்சுக்கு எல்லை கடந்து தப்பி பிழைக்க முயலுகையில், பிரான்கோ-இத்தாலிய எல்லையான ஆல்ஃப்ஸ் பகுதியை ஒட்டி இவையெல்லாம் நடக்கின்றன. அகதிகளை மறுபக்கத்தில் தள்ள பிரெஞ்சு போலிஸ் இத்தாலிக்குள் எல்லை கடந்து வந்ததன் மூலமாக தங்களின் இறையாண்மையை மீறியதாக இந்தாண்டின் தொடக்கத்தில் இத்தாலிய அரசாங்கம் பிரெஞ்சு அரசாங்கத்தைக் கண்டித்தது.

வென்டிமில்லியாவுக்கு அருகே இத்தாலிய எல்லையை ஒட்டிய ஆல்ஃப்ஸ் பகுதியில் பிரெஞ்சு எல்லை பாதுகாப்புப்படைகள் சுமார் 12 வயதுடைய இத்தாலிய இளம் குழந்தைகளைக் கூட மானபங்கப்படுத்துவதாக, கைது செய்வதாக, சட்டவிரோதமாக நாடு கடத்துவதாக கடந்த வாரம் ஆக்ஸ்ஃபோம் இன் புதிய அறிக்கைகள் வெளியாயின. அவர்கள் குழந்தைகளின் காலணிகளது அடித்தோல்களை வெட்டிவிடுவதாகவும், அவர்களின் செல்பேசிகளது சிம் கார்டுகளைத் திருடுவதாகவும், அவர்களுக்கு இருக்க இடமளிக்கவோ, பள்ளிக்கூடம் அனுப்பவோ, நல்ல தண்ணீர் வசதி மற்றும் கழிவறைகள் வழங்குவதற்கோ மறுக்கிறார்கள், மற்றும் இளம் கர்ப்பிணி பெண்கள் உட்பட பருவ வயதடையாத பெண் பிள்ளைகளுக்கு மருத்துவ உதவி கூட வழங்க மறுக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

“இன்னல்களில் இருந்தும் போரில் இருந்து தப்பிக்க முயலும் குழந்தைகளும், பெண்கள் மற்றும் ஆண்களும் பிரான்ஸ் மற்றும் இத்தாலி அதிகாரிகளின் கரங்களில் இனிமேல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படக்கூடாது, அவர்கள் அலட்சியப்படுத்தப்படக் கூடாது,” என்று கருத்துரைத்த ஆக்ஸ்ஃபோமின் Elisa Bacciotti, தொடர்ந்து கூறுகையில், “குழந்தைகளை ஒருபோதும் சிறைக்கூடங்களில் வைக்கக்கூடாது, அவர்கள் குரூரமாக மானபங்கப்படுத்தப்படக் கூடாது,” என்றார்.