ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

A conversation with Raoul Peck, director of The Young Karl Marx

இளம் கார்ல் மார்க்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் ராவுல் பெக்குடன் ஒரு கலந்துரையாடல்

By Fred Mazelis
1 March 2018

பின்வருவது இளம் கார்ல் மார்க்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் ராவுல் பெக்குடன் உலக சோலிச வலைத் தளத்தால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் ஆகும். 1843க்கும் 1847க்கும் இடையில் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் இனது வாழ்க்கைவரலாற்றின் நிழலோவியமான இத்திரைப்படம், பிப்ரவரி 23 அன்று நியூயோர்க் மாநகரம் மற்றும் லாஸ்ஏஞ்சலஸில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, இது பரவலாய் அமெரிக்கா முழுதும் பின்தொடரப்படும். கடந்த மார்ச் அன்று உலக சோலிச வலைத் தளம் இத்திரைப்படத்தை திரைவிமர்சனம் செய்தது.

Fred Mazelis: இந்த செயற்திட்டத்தின் மூலத்தைப் பற்றி சிறிதளவு கூறமுடியுமா? இது நிறைவேறுவதற்கு எவ்வளவு காலம் பிடித்தது?


ராவுல் பெக்

ராவுல் பெக்: செயற்திட்டத்தின் முழு உள்ளடக்கத்தையும் கொடுக்க நான் விரும்பினேன். எனது அனைத்து வேலைகளையும் போலவே, நான் வாழும் இச்சமூகத்தில், நான் ஜேர்மனியில் இருந்தாலும் சரி, பிரான்சில் இருந்தாலும் சரி, ஹைத்தியில் இருந்தாலும் சரி அல்லது அமெரிக்காவில் இருந்தாலும் சரி, அது எனது சொந்தப் போராட்டத்தில் இருந்து வந்தது.

செயற்திட்டமானது 10 ஆண்டுகளுக்கும் முன்னரே, நான் உங்களது நீக்ரோ அல்ல (I Am Not Your Negro) என்பதை ஆரம்பித்த கிட்டத்தட்ட அதே சமயத்தில் முன்னெடுக்கப்பட்டது. என்னைப் பொறுத்தவரை, ஒரு படம் எடுப்பவன் என்ற முறையில், இன்று இந்த உலகில் என்னைச்சுற்றிலும் நிகழ்வதில் என்ன பார்த்திருக்கிறேன் என்று கூறுவது எனது பொறுப்பு ஆகும்.

ஒரு திரைப்படம் எடுப்பவன் என்ற முறையில், நான்  CNN இடம் போய் இரண்டு நிமிடம் வாங்கி எதனையோ சொல்ல வேண்டும் என்று போகமாட்டேன். நான் நியூயோர்க் டைம்ஸ்-க்குப் போக மாட்டேன். பரந்த கலந்துரையாடலைச் செய்வதற்கு அது வழி அல்ல. நான் சினிமாவை பயன்படுத்துகின்றேன்.

உலக சோசலிச வலைத் தளத்தை நம்பவைப்பது எனக்குத் தேவை இல்லை, அவர்கள் ஏற்கனவே அறிவார்கள். இயலுமான அளவில் பரந்த பொது மக்களிடம் நான் செல்ல வேண்டும். இரண்டு மணிநேர திரைப்படத்தை தயாரிக்கையில், அந்த மூன்று இளையோரின் (மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் ஜென்னி) வாழ்க்கையின் மிக தீர்க்கமான தருணத்தில் அவர்களின் யதார்த்தத்துடன் மற்றும் இன்று இச்சமூகத்தில் எமது போராட்டம் தொடர்பானதில், நெருக்கமாக ஒட்டிக்கொள்வதற்கு முயற்சித்தேன். அதுதான் சவால். அங்கே ஜென்னி மற்றும் ஏங்கெல்ஸ் பற்றி, பொறாமை பற்றி, மார்க்சின் தடைகள் பற்றி, மற்றும் இவ்வாறாக நான் கண்டுபிடித்து இருந்திருக்கக் கூடிய நிலையில், ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல் எப்படி இதைச் செய்தேன்?

கருத்துக்களின் பரிணாமம் பற்றியது இந்தப் படம். கருத்துக்களை பற்றி மட்டுமல்ல, மாறாக மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் அந்த சிறப்பான கருத்துக்கள், அவற்றின் சிக்கலான தன்மையில், பரிணாமம் பற்றிய கருத்துக்களின் ஒரு திரைப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? என கூறுங்கள்.

இது முனைவர் பட்டம்பெறும் ஆய்வு இல்லைத்தான், ஆனால் அது உங்களுக்கு ஒரு கருத்தைத் தருகிறது, பின்னர் நீங்கள் சென்று ஒரு புத்தகத்தை வாசிக்கலாம். குறைந்தபட்சம் நீங்கள் பார்க்கவேண்டும் என அறிவுறுத்தும் ஒரு குட்டிச்சாத்தான் அல்ல அது. கார்ல் மார்க்ஸ் பற்றி மேற்கத்திய உலகில் இந்தப்படம்தான் முதல் என்பது ஏன் என்பதற்கு காரணம் இருக்கிறது.

நான் ஒரு வேறுபட்ட தலைமுறையிலிருந்து வருகிறேன். நான், ஏற்கனவே வழக்கமாக ஈடுபட்டிருக்கும் படத் தயாரிப்பாளர்களிடமிருந்து, போர்க்குணமிக்க படத் தயாரிப்பாளர்களிடமிருந்து பயன் அடைந்திருக்கிறேன். ஆனால் அதே நுட்பங்களை, அதே உருவங்களை, அதே ஒளியை முன்னர்போல் அதே கதையை - ஒரு சிறு சிறுபான்மையினருக்கான ஒரு படத்தை நான் தயாரிக்க விரும்பினாலன்றி, நான் பயன்படுத்தக் கூடாது என்று பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை அரசியல் போராட்டம் என்பது மக்கள் இருக்கும் இடத்திற்குச் செல்வது, அவர்களை நம்பவைக்க முயற்சிப்பது, அவர்களுக்குச் சொல்லப்பட்டிருப்பதை விட இன்னொரு கதையை அவர்களுக்கு கூறுவது.

FM: இளம் கார்ல் மார்க்ஸ்-ஐ தயாரிக்கும்பொழுது எழுந்த பிரச்சினைகளில் சிலவற்றை கலந்துரையாட முடியுமா?

ராவுல் பெக்: நான் கூறியவாறு, அந்த செயற்திட்டத்தை அபிவிருத்தி செய்ய 10 ஆண்டுகள் எடுத்ததன. உண்மைக் கதையுடன் நான் ஒட்டிக்கொள்ள விரும்பினேன் என்று கூறும்பொழுது, அதன் பொருள் வழக்கமான வாழ்க்கை வரலாற்றுப் படம் எடுப்பதல்ல, மாறாக என்ன நிகழ்ந்தது என்பதையே சொல்ல விரும்பினேன். அது அரசியலாக இருக்க வேண்டும், அது நீங்கள் பொறுப்பெடுத்த வரவுசெலவுத் திட்டத்திற்குள்ளானதாக இருக்க வேண்டும், மற்றும் உங்களுக்கு விடயத்துடன் முழு சுதந்திரமுள்ளதாக இருக்க வேண்டும். அவைதான் கட்டுப்பாடுகள்.

எடுத்துக்கொண்ட விடயத்திற்கான வாழ்க்கை வரலாறுகளுக்கு, பல வாழ்க்கை வரலாறுகள், சில விவகாரங்களில், அவற்றின் முரண்பாடான விவரங்களுடன் உள்ளநிலையில், நாம் போக விரும்பவில்லை என்று முடிவெடுத்தோம். மார்க்சிசம் என்பது என்ன என்று சுருங்கக் கூறும் புத்தகங்களுக்குப் போக விரும்பவில்லை. நாம் சொன்னோம், நாங்கள் தொடர்புகளுக்குப் போவதற்கு போய்க்கொண்டிருக்கிறோம், பால்ட்வின் (ஜேம்ஸ்)-னுக்காக நான் செய்த அதே வழியில் - இந்த விடயத்தில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ஜென்னி மற்றும் அவர்களது நண்பர்களுக்கு இடையிலான கடிதத் தொடர்புகளைப் பயன்படுத்திக் கொண்டு. திரைப்படத்துக்கான விஷயதானத்தின் எண்பது விழுக்காடு அந்த தொடர்புகளிலிருந்துதான் கிடைத்தது. அதனால்தான் காட்சிகள் துலக்கமாக இருக்கின்றன.

FM: ஏங்கெல்ஸ் மார்க்சை பென்தாம், ஆடம்ஸ்மித், ஆங்கில அரசியற் பொருளாதாரத்தைப் படிக்க வலியுறுத்திய பொழுது போல........

ராவுல் பெக்: சரியாக, ஆம், அதுதான் வசனம். கடிதத்தொடர்புகளை நீங்கள் அறிந்தால், கடிதத்தொடர்புகளை நீங்கள் பார்த்தால், நீங்கள் அந்த வசனத்தைக் கண்டுபிடிப்பீர்கள். Weitling உடனான ஒன்றைப் போல ஒரு காட்சியில் கூட, பெல்ஜியத்தில் நடந்த சர்ச்சை..... அது உண்மையில் Annenkov, Pavel Annenkov-ஆல் எழுதப்பட்டது, அவர் படத்தில் காட்டப்படுகிறார் (பாவெல் அன்னென்கோவ் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் காலத்தில் மிக நெருக்கமாக இருந்த ரஷ்ய இலக்கிய விமர்சகர், இவர் மேற்கு ஐரோப்பாவில் பல காலம் வாழ்ந்தார்.)

மார்க்ஸ் மற்றும் எங்கெஸ்சிற்கு இடையிலான கூட்டுழைப்பு ஒரு வடிவத்தை எடுத்த பொழுது, அவர்களுக்கு இடையிலான உண்மையான உறவை காட்டுவது மிக முக்கியமானதாகும். தங்களின் சொந்த நலன்களுக்காக இதனைத் தவறாகப் பிரதிநிதித்துவம் செய்யும் சிலர் சோசலிஸ்டுகள் மத்தியில் இருக்கிறார்கள். மார்க்சிஸ்டுகள் மத்தியிலான சர்ச்சைகளில் கலப்பதில் எனக்கு விருப்பமில்லை; முதலாளித்துவ சமுதாயத்தின் அடிப்படை பகுப்பாய்வுக்கும் அது இன்று எப்படி பயன்படுத்தப்பட முடியும் என்பதற்கும் திரும்பவே நான் விரும்புகிறேன்

FM: திரைப்படத்தின் முடிவுரைக்கும் நற்சான்றுகளின் பொழுது காட்டப்பட்ட உருவங்களுள் 1960களுடன் மற்றும் காலனித்துவப் புரட்சிகளுடன் தொடர்புடையவர்கள் சேர்க்கப்பட்டிருந்ததை, ஆனால் முதலாளித்துவத்தை வெற்றிகரமாகத் தூக்கி வீசுவதில் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சின் கருத்துக்கள் முதலாவதாக நிஜமாக்கப்பட்ட ரஷ்யப் புரட்சி பற்றி ஒன்றுமில்லாததை நான் கவனித்தேன்.

ராவுல் பெக்: அது எனது தனிப்பட்ட அரசியல் தேர்வு. நான் ஒரு குறிப்பிட்ட உள்ளடக்கத்தில் படத்தை எடுத்தேன். Netflix முழு வரலாற்றையும் அலச எனக்கு 10 மணிநேரம் கொடுத்திருந்தால், நான் மகிழ்ந்திருப்பேன். ஆனால் இது விஞ்ஞான சோசலிசத்தின் பிறப்பு மட்டுமே.

லெனின் அவரது வாழ்வின் கடைசி இரண்டு ஆண்டுகளில், மொத்தத்தில் அவரது புரட்சியையே அவரால் அடையாளம்கண்டுகொள்ள முடியவில்லை. அவர் முழு அதிகாரத்துவத்தையும் விமர்சித்தார். ட்ரொட்ஸ்கியும் கூட, அவர் கொல்லப்படும் வரை அப்படித்தான்.

இது போன்ற படம் ஒரு அற்புதமே. இரண்டு மணி நேர திரைப்படத்தில் கடந்த நூற்றாண்டின் அனைத்துப் பிரச்சினைகளையும் என்னால் தீர்க்க முடியாது. இந்த அற்புதம் கொண்டாடப்படவேண்டும், அங்கிருந்து மேலே செல்வோம்.