ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் 50 வது ஆண்டு நிறைவு

மூன்றாவது விரிவுரை

26 July 2018

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), அதன் 50 வது ஆண்டு நிறைவிற்காக நடத்தி வரும் விரிவுரை தொடரில், இனவாத யுத்தத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும் எதிராக அனைத்துலக சோசலிசத்துக்கான போராட்டம் என்ற தலைப்பிலான மூன்றாவது விரிவுரையை, ஆகஸ்ட் 2 மாலை 4 மணிக்கு கொழும்பு, பொரளையில் உள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் நடத்தவுள்ளது.

சோ.ச.க. மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும் (பு.க.க.) 50 ஆண்டு கால வரலாற்றில் பெரும் பகுதி, கொழும்பு அரசாங்கங்கள் முன்னெடுத்த தமிழர் விரோத இனவாத யுத்தத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரவினைவாதத்துக்கும் எதிராக, அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்பட்ட கொள்கை ரீதியான போராட்டத்துக்கே அர்ப்பணிக்கப்பட்டது.

26 ஆண்டுகால இனவாத யுத்தத்தை, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் அவர்களின் சமூக மற்றும் ஜனநயக உரிமைகளை நசுக்குவதற்கும் ஆளும் வர்க்கம் பயன்படுத்திக்கொண்டதோடு புலிகளின் பிரிவினைவாதம் அதை மேலும் ஊக்குவவிப்பதை மட்டுமே செய்தது. புலிகள் வடக்கு கிழக்கில் தனியான அரசு ஒன்றை ஸ்தாபித்துக்கொள்ளும் இலக்குடன், ஏகாதிபத்தியங்களின் ஆதரவை நாடியதோடு, கொழும்பு அர்சாங்கங்ளின் குற்றங்களுக்கு அப்பாவி சிங்கள தொழிலாள வர்க்கத்தின் மீது பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தினர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைமையில், பூகோளமயமயமான முதலாளித்துவ பொருளாதாரத்துக்குள், தேசியவாத இயக்கங்களின் வங்குரோத்தை பகுப்பாய்வு செய்த சோ.ச.க., புலிகளின் தோல்வியை முன் கணித்ததோடு மட்டுமன்றி, போரின் போது அபிவிருத்தி செய்யப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறைகளும் ஒடுக்குமுறைச் சட்டங்களும் ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்துக்கும் எதிராகப் பயன்படுத்தப்படும் என்றும் எச்சரித்தது.

அந்த முன்கணிப்பை நிரூபித்த வகையில், 2009ல் பத்தாயிரக்கணக்கான மக்களின் படுகொலையுடன் புலிகள் தோல்வி கண்டது மட்டுமன்றி, தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை வாழ்க்கை நிலைமை முழுமையாக நாசமாக்கப்பட்டது.

இன்று யுத்தத்தினாலும் உலக பொருளாதார நெருக்கடியினாலும் பெரும் கடன் சுமையில் சிக்கிக்கொண்டுள்ள கொழும்பு ஆளும் வர்க்கம், அதன் கடன் சுமையை மக்கள் மீது சுமத்தி வருவதோடு அதற்கு எதிராக போராட்டத்திற்கு வரும் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இராணுவத்தையும் பொலிசையும் கட்டவிழ்த்து விடுகின்றது. இந்த சூழ்நிலையிலேயே இனவாதத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும் எதிரான சோ.ச.க.யின் போராட்டத்தின் படிப்பினைகள் முக்கியத்துவம் கொண்டதாக உள்ளன.

கொழும்பு, காலி, கண்டி, யாழ்ப்பாணம் உட்பட ஏனைய நகரங்களிலும் நடத்தவுள்ள ஆண்டுவிழா விரிவுரைகளில் பங்குபற்றுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மாணவர்களுக்கும் சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.

 

விரிவுரை தலைப்புக்கள், திகதிகள் மற்றும் இடங்கள்

 கொழும்பு என்.எம். பெரேரா நிலையம், கொடா ரோட், பொரளை.


இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு எதிராக சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டம்.

ஆகஸ்ட் 2, வியாழன், மாலை 4 மணி

 

முதலாளித்தவ அரசாங்கங்களுக்கு எதிராக சோசலிசக் குடியரசுக்கான போராட்டம்.

ஆகஸ்ட் 16, வியாழன், மாலை 4 மணி


குட்டி முதலாளித்து தேசியவாத்துக்கு எதிராக சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டம்.

ஆகஸ்ட் 30, வியாழன், மாலை 4 மணி

 

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபம்

 

பகிரங்க கூட்டம்:

ட்ரொட்ஸ்கிசத்துக்கான கொள்கைப் பிடிப்பான போராட்டத்தின் அரை நூற்றாண்டு

ஆகஸ்ட் 7, செவ்வாய், மாலை 4 மணி

 

விரிவுரைகள்:


செப்டெம்பர் 11, செவ்வாய், பி.ப. 4 மணி
ஒக்டோபர் 11, வியாழன், பி.ப. 4 மணி

ஒக்டோபர் 31, புதன், பி.ப. 4 மணி
நவம்பர் 15, வியாழன், பி.ப. 4 மணி

 

காலி மாநகரசபை விளையாட்டு கூடம்

 
ஆகஸ்ட் 5, ஞாயிறு, பி.ப. 3 மணி
ஆகஸ்ட் 26, ஞாயிறு, பி.ப. 3 மணி
செப்டம்பர் 9, ஞாயிறு, பி.ப. 3 மணி

 

கண்டி, ஜனமெதுர மண்டபம் (குட் ஷெட் பஸ் நிலையத்துக்கு அருகில்)

ஆகஸ்ட் 15, புதன், பி.ப. 4 மணி

செப்டெம்பர் 4, செவ்வாய், பி.ப. 4 மணி

செப்டெம்பர் 27, வியாழன், பி.ப. 4 மணி

 

ஏனைய இடங்களில் விரிவுரைகளுக்கான திகதி மற்றும் இடங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும்.