ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Lafarge investigation exposes US-French collusion with ISIS in Syria

சிரியாவில் ISIS உடனான அமெரிக்க-பிரெஞ்சு கூட்டுச் சதியை லாஃபார்ஜ் விசாரணை அம்பலப்படுத்துகிறது

By Francis Dubois 
3 August 2018

ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு (Islamic State in Iraq and Syria-ISIS) எனும் குடிப்படையுடன் கொண்டுள்ள உறவுகளினால் ஃபிராங்கோ-சுவிஸ் சீமேந்து மற்றும் கட்டுமான நிறுவனமான லாஃபார்ஜ் (Lafarge) என்பதன் மீது “தீவிரவாதத்திற்கு நிதியளிப்பு” செய்வதாக குற்றம்சாட்டப்பட்டது தொடர்பான விசாரணைகள் பிரெஞ்சு ஆளும் உயரடுக்கு மற்றும் நேட்டோவின் அரசியல் குற்றத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தன. மக்களிடையே அதை பயங்கரவாத குழு என கண்டனம் செய்யும் அதே வேளையில், சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத் ஐ இலக்கு வைக்கின்ற ஆட்சி மாற்றம் குறித்த ஒரு போரில், பிரெஞ்சு அரசாங்கமும் வணிக வட்டங்களும் ISIS க்கு நிதியளிப்பு செய்து பாதுகாத்தன.

2015 இல் பாரிசில் நடந்த தீவிரவாத தாக்குதல்களானாலும் சரி, மற்றும் ஐரோப்பா எங்கிலும் நடந்த அதேபோன்ற தீவிரவாத தாக்குதல்களானாலும் சரி, ஆளும் வர்க்கத்திற்குள் உள்ள சக்திவாய்ந்த சக்திகள் வழங்கும் நிதி மற்றும் அரசியல் உதவிகளால் தான் இவ்வாறு தயாரிக்கப்பட்டன. மத்திய கிழக்கில் நவ-காலனித்துவ இராணுவவாதம் மற்றும் ஐரோப்பாவில் தீவிர சிக்கன நடவடிக்கைகள் போன்ற ஆளும் வர்க்கக் கொள்கைகளை உழைக்கும் மக்கள் மிகப்பெருமளவில் எதிர்க்கின்றனர், எனவே சிரியாவில் ஒரு மோசமான போரைத் தூண்டவும், பிரான்சில் பொலிஸ் அரசு அடக்குமுறையை நியாயப்படுத்தவும் ISIS ஐ பாரிஸ் தந்திரமாக பயன்படுத்தியது. இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல்களை தொடுக்க ஐரோப்பா எங்கிலும் சுற்றித்திரியும் ISIS உறுப்பினர்களை பொலிஸ் கைது செய்யவில்லை என்றால், சிரியாவில் போருக்கான பயனுள்ள பினாமி சக்திகளாக அரசாங்க பாதுகாப்பை அவர்கள் அனுபவித்தனர் என்பதே அதற்கான காரணம்.

2017 இல் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் “ISIS எனது எதிரி” என்று அறிவித்தார். இருப்பினும், நாட்டின் உயர்ந்த உச்சி மாநாடுகளின் போது இந்த எதிரிக்கு ஒத்துழைக்கும் தவறை அதிகாரிகளே செய்துள்ளது ஏன் என்பதுதான் ஒருபோதும் தெளிவானதாக இல்லை, உண்மையில் சிரியாவில் அவர்களது இழிந்த ஏகாதிபத்தியக் கொள்கைக்கான ஒரு கருவியாகவே அது இருந்தது. இதில், அப்போதைய பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட், அவரது ஆலோசகர் இமானுவல் மக்ரோன், அவரது பாதுகாப்பு மந்திரி (இப்பொழுது வெளியுறவு மந்திரி) ஜோன் ஈவ் லு திரியோன், அல்லது ஹோலண்டின் வெளியுறவு மந்திரி லோரோன் ஃபாபியுஸ் ஆகியோரின் பங்கு என்ன? என்ற கேள்வி எழும்பியுள்ளது.

2012-2014 வரையிலான ஆண்டுகளில் ISIS, மற்றும் அல்கொய்தாவுடன் இணைந்த அல் நுஸ்ரா முன்னணி உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுக்கு “நன்கொடைகள்,” “வரிகள்” மற்றும் “விற்பனை பங்கு” என்ற வகைகளில் நிதியளிப்புக்கு வழி செய்யும் நிதி ஒப்பந்தங்களை பலபில்லியன் டாலர் மதிப்புடைய லாஃபார்ஜ் நிறுவனம் மேற்கொண்டிருந்தது குறித்து 2017 இல் ஏற்கனவே விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், ISIS இடமிருந்து பெட்ரோ கெமிக்கல்களையும், ISIS கட்டுப்பாட்டில் உள்ள சுரங்கங்களிலிருந்து சீமேந்து தயாரிப்புக்கான மூலப்பொருட்களையும் கூட லாஃபார்ஜ் நிறுவனம் பெற்று வந்துள்ளது.

எட்டு உயர்மட்ட லாஃபார்ஜ் நிர்வாகிகள் குற்றம்சாட்டப்பட்டனர் என்பதுடன், அதன் இயக்குநர்களுள் இருவரும் பதவி விலகியுள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக, தனிப்பட்ட நிர்வாகிகள் என்றல்லாமல் ஒட்டுமொத்த பன்னாட்டு நிறுவனத்தையும் உள்ளடக்கி இந்த விசாரணை பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டது. “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிலுள்ள சிக்கல்கள்” மீதான குற்றச்சாட்டுக்களும் இந்த பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பு செய்யும் குற்றச்சாட்டுகளுடன் சேர்க்கப்பட்டுள்ளன.

லாஃபார்ஜ் நிர்வாகிகள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர்களுடன் பணிபுரிந்த அரசு அதிகாரிகள் மீது இந்த கொள்கை குறித்து தற்போது குற்றம்சாட்டியுள்ளனர். இதுபோன்ற பல அறிக்கைகள் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சிரியாவில் பிரெஞ்சு புலனாய்வு அதிகாரிகளுடன் லாஃபார்ஜ் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்ததோடு, அவர்களுடன் மிக நெருக்கமாக இணைந்து செயலாற்றியது, ஏனென்றால், அவர்களது உளவு நடவடிக்கைகளின் உதவியின்றி இவர்களது சீமேந்து தயாரிப்பை வரையறுப்பது என்பது சாத்தியமில்லை எனத் தெரிகிறது.

மிக சமீபத்தில் ஏப்ரல் 2018 இல், பல்வேறு புலனாய்வு அமைப்புகளுக்கு ஒட்டுமொத்தமாக அனுப்பிவைக்கப்பட்ட லாஃபார்ஜ் பாதுகாப்பு ஊழியர்கள் தகவல்களை அளித்ததாக லாஃபார்ஜ் நிறுவன பாதுகாப்புத் தலைவர் Jean-Claude Veillard சாட்சியம் அளித்தார். இந்த நேரத்தில், ஹோலண்டின் இராணுவ தொடர்பு ஊழியர்களுடன் அவர்கள் தொடர்பில் இருந்தனர். அப்போது, லாஃபார்ஜ் பாதுகாப்பு ஊழியர்கள் “ஆயுதக் குழுக்களின் தலைவர்களை சந்திக்க வேண்டியிருந்ததா?” என்று விசாரணை நீதிபதிகள் கேட்டனர், அதற்கு, “அவர்களது முக்கிய நோக்கம் துப்பு துலக்குவது தான். அத்தகைய கூட்டங்கள் தகவல் பெறுவதற்கு அவர்களுக்கு உதவக்கூடும் என்றால், அவர்கள் அதைச் செய்ய முடியும்” என்று Veillard பதில் கூறினார்.

வெளிப்படையாக, செப்டம்பர் 19, 2014 இல் இத்தொழிற்சாலையை ISIS கைப்பற்றிய பின்னர், அங்கு நடந்த நிகழ்வுகளை பல பிரெஞ்சு உளவுத்துறை சேவை அமைப்புகள் தொடர்ந்து நெருக்கமாக கண்காணித்தன. ISIS கட்டுப்பாட்டின் கீழ் தொழிற்சாலையை மீண்டும் திறக்க ஒரு இடைத்தரகர் மூலமாக ISIS முன்மொழிந்ததாகவும் கூட வெய்லார்டு கூறினார்.

மேலும், 2013 கோடை காலத்தில், ஒபாமா நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் ஹோலண்ட் நிர்வாகம் சிரியா மீதான இராணுவ தாக்குதலுக்கு தயாரிப்பு செய்துவந்த நிலையில், வாஷிங்டனுடன் பாரிஸ் தொடர்ந்து தொடர்பில் இருந்தது.

லு மொன்ட் இன் கருத்துப்படி, “டமஸ்கஸூக்கு எதிராக ஒரு இராணுவத் தலையீட்டை உருவாக்க, லோரோன் ஃபாபியுஸ் அவரது அமெரிக்க சக அதிகாரி ஜோன் கெர்ரி உடன் பல பரிமாற்றங்களைக் கொண்டிருந்தார்” என்பதாகும். லாஃபார்ஜ் தொழிற்சாலையை ISIS கைப்பற்றிய பின்னர் அதே தினத்தன்று, Christian Herrault மற்றும் Jean-Claude Veillard போன்ற லாஃபார்ஜ் நிர்வாகிகள் Quai d’Orsay இல் உள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு சென்று, அமெரிக்க விமானப்படை மூலமாக தொழிற்சாலை குண்டுவீசி தாக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்ய வாஷிங்டனை அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டுமெனக் கோரினர்.

விசாரணையில் ஒரு சாட்சியாக பேசுகையில், 2012-2016 வரையிலான ஆண்டுகளில் சிரியாவில், ஹோலண்டின் வெளியுறவு மந்திரியாக பதவியில் இருந்த லோரோன் ஃபாபியுஸ் அப்போது, லாஃபார்ஜ் —பிரான்சின் 40 மிகப்பெரிய நிறுவனங்கள் குறித்த CAC-40 குறியீட்டில் பட்டியலிடப்பட்டுள்ள பல பில்லியன் யூரோ மதிப்பு கொண்ட ஒரு நிறுவனம்— இன் செயல்பாடுகள் பற்றி எந்தவித தகவலையும் அவர் பெற்றிருக்கவில்லை எனத் தெரிவித்தார்.

ஜூலை 20 அன்று, “லாஃபார்ஜ் தொடர்பாக எழுப்பப்பட்ட விவகாரம் பற்றி அவர் ஒருபோதும் கேள்விப்படவில்லை என்றும், அது குறித்து அவர் திட்டவட்டமாக உறுதியாக இருக்கிறார்” என்றும் விசாரணை நீதிபதிகளிடம் அவர் தெரிவித்தார். “சிரியாவில் ஒரு லாஃபார்ஜ் தொழிற்சாலை இருந்தது எனக்கு தெரியுமா இல்லையா என்பதை இந்த கேள்வி தான் தீர்மானிக்க வேண்டுமென்றால், எனக்கு அது குறித்து துல்லியமான நினைவுகள் எதுவும் இல்லை” என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

ஃபாபியுஸின் இந்த அறிக்கைகள் எந்தவித நம்பகத்தன்மையையும் கொண்டிருக்கவில்லை. ஏற்கனவே 2014 இல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, வெளியுறவு அமைச்சகத்தை விட்டு அவர் வெளியேறிய போதுதான், சிரியாவில் லாஃபார்ஜின் நடவடிக்கைகள் பற்றி பத்திரிகைகள் அறிக்கை செய்திருந்தன. அதிலும், மிக உயர்ந்த மட்டங்களிலான பாரிஸ் மற்றும் வாஷிங்டனுக்கும் இடையேயான தொடர்புகளுக்கு காரணமாக இருந்த சிரியாவில், அமெரிக்க-பிரெஞ்சு உளவுத்துறை ஒத்துழைப்பின் மையமாக இப்படியொரு தொழிற்சாலை இருந்தது தனக்குத் தெரியாது என்று வெளியுறவு அமைச்சர் கூறுவது நம்பக்கூடியதாக இல்லை.

இன்னும் கூட, அதைப் பற்றி எதையும் கேள்விப்பட்டதில்லை என்று ஃபாபியுஸ் கூறுவாரானால், அது வெறுமனே பின்வரும் கேள்விகளை எழுப்பும்: உண்மையில், சிரியாவில் லாஃபார்ஜின் செயல்பாடுகளைப் பற்றி எதையாவது தெரிந்து வைத்திருந்த உயர் அதிகாரிகள் யார்? மேலும், இது தொடர்பாக ஹோலண்ட், மக்ரோன், லு திரியோன் அல்லது மற்ற உயர் அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள் என்ன அறிந்திருந்தனர்?

இந்த வழக்கின் மற்றொரு பேரழிவுகர அம்சத்தையும் விசாரணையாளர்கள் ஆய்வு செய்கின்றனர்: அது ISIS க்கு சீமேந்து விற்பனை செய்தது பற்றியது. தொழிற்சாலையை ISIS கைப்பற்றி மூன்று மாதங்களுக்குப் பின்னர், பயங்கரவாத குழுக்களுக்கு சீமேந்து விற்பனை செய்யும் வாய்ப்பைப் பற்றி லாஃபார்ஜ் தலைவர்கள் இன்னும் பகிரங்கமாக விவாதித்தனர்.

லபார்ஜூக்கு எதிராக புகார் அளித்த தொண்டு நிறுவனமான ஷேர்ப்பா வின் வழக்கறிஞர் பின்வருமாறு கேள்வி எழுப்பினார்: “பயங்கரவாதத்தால் சூழப்பட்டு போரினால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் தங்குவதற்கான ஒரு பிரெஞ்சு பெருநிறுவனத்தின் முடிவைப் போன்ற ஒரு முக்கியமான விவகாரம் பற்றி அறிதலின்றி பிரான்சில் ஒரு வெளியுறவு மந்திரி தானாகவே இருட்டில் வைக்கப்பட்டிருந்தார் என்பதுதான் இதன் அர்த்தமா? அதாவது, அதன் வணிக நடவடிக்கைகளைத் தொடர்வதை முன்னிட்டு ISIS க்கு நிதியளிப்பதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை என்பதும் காரணமா?”

அல்கொய்தா மற்றும் ISIS போன்ற குழுக்களுடனான உத்தியோகபூர்வ மற்றும் பெருநிறுவன உடந்தையை பற்றி கிடைக்கக்கூடிய அனைத்து தகவல்களும், இவற்றின் உறுப்பினர்கள் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதிலுமான பயங்கரவாத தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்து வந்தனர் என்பதை குறிக்கின்றன. ஜனவரி 2015 இல் Charlie Hebdo மீதான தாக்குதலை ஒழுங்கமைவு செய்த அரேபிய தீபகற்பத்தில் உள்ள அல்கொய்தா உறுப்பினர்களான குவாச்சி சகோதரர்கள், 2014 கோடை காலத்தில் அவர்களது நான்கு ஆண்டுகால கண்காணிப்பில் இருந்து தளர்த்தப்பட்டிருந்தனர். பாரிசில் நவம்பர் 13, 2015 தாக்குதல்களை நடத்திய ISIS உறுப்பினர்கள் பற்றி அரசாங்கம் நன்கு தெரிந்திருந்தும் கூட, அவர்கள் ஐரோப்பா எங்கிலும் சுதந்திரமாகப் பயணிக்கவும், அவர்களது தாக்குதல்களுக்குத் தயாரிப்பு செய்யவும் அனுமதிக்கப்பட்டனர்.

என்ன செலவு செய்தும் சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொணர்வது மற்றும் பிரான்சிற்குள் கடுமையான செல்வாக்கற்ற சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பது போன்ற PS அரசாங்கத்தின் பரந்த மூலோபாய நோக்கங்களுக்கு வெளியே இத்தகைய அபிவிருத்திகள் பற்றிப் புரிந்து கொள்வது சாத்தியமற்றதாகும்.

2013 கோடைக் காலத்தில், லண்டனும் வாஷிங்டனும் கடைசி நிமிடத்தில் பின்வாங்கிய நிலையில், வாஷிங்டன் உடன் ஹோலண்ட் சதி செய்ததான ஆசாத் மீதான இராணுவ தாக்குதல் என்பது நடத்தப்படவில்லை. அதனடிப்படையில், அமெரிக்க  விநியோக ஆதரவுடன் கட்டார் மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து நிதியுதவி பெற்று நாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பு செய்திருந்த அல் நுஸ்ரா மற்றும் ISIS ஆகிய இரண்டு குழுக்களும் அசாத்தின் இரண்டு மோசமான ஒழுங்கமைக்கப்பட்ட எதிரிகளாக இருந்தனர்.

“ஒரு சர்வாதிகாரி” க்கு எதிராகப் போராடும் “ஜனநாயக சக்திகளுக்கு” ஆதரவளித்தது என்று அது பிரெஞ்சு மக்களுக்கு PS கூறிக்கொண்ட போதிலும், ஒரு முன்னாள் பிரெஞ்சு காலனியை இலக்கு வைக்கும் ஆட்சி மாற்றம் மீதான ஒரு வன்முறை முயற்சியில், ஒற்றர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் ஆதரவுடனான ஒரு நவ-காலனித்துவ போரைத் தொடுப்பதாகவே உண்மையில் அது இருந்தது.

லாஃபார்ஜ் விசாரணையில் வெளிவரும் விபரங்கள், நவம்பர் 2015 அவசரகால நிலைமையின் கீழ் ஜனநாயக உரிமைகளை தற்காலிகமாக பறிப்பதற்காக புகுத்தப்பட்ட காரணங்களை செல்லாததாக்கின என்பதுடன், மக்ரோனால் அழைக்கப்பட்ட பயங்கரவாத-எதிர்ப்பு சட்டம் என்பதாக அது உருமாறியது. அவசரகால நிலை, ஒரு பொலிஸ் அரசின் கட்டமைப்பையும் நடைமுறைகளையும் நிறுவ உதவியது, மேலும் ஹோலண்டின் சிக்கன நடவடிக்கைகள் குறித்த தொழிலாளர்கள் எதிர்ப்பையும் எதிர்த்தது. தற்போது, இரயில்வே துறை தனியார்மயமாக்கம், மற்றும் பொது சுகாதார பாதுகாப்பு, ஓய்வூதியங்கள், வேலையின்மை காப்பீடு மற்றும் பிற அத்தியாவசிய சமூக சேவைகளைக் குறைப்பது போன்ற மக்ரோனின் தொழிலாளர் நியமன ஆணைகளின் வடிவங்களில் இது தொடர்கிறது.

அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இந்த தாக்குதல்கள் நிறுவனத்தை மேற்பார்வை செய்யும் அரசாங்க அதிகாரிகள் மூலமாக வழிநடாத்தப்படுகிறது, மேலும், முறையான தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒடுக்குவதை நியாயப்படுத்த மக்களுக்குப் பின்னாலிருந்து நடத்தப்படும் கொலைபாதக விளைவுகளைக் கொண்ட முற்றிலும் குற்றம்சார்ந்த நடவடிக்கைகளை அவர்கள் பயன்படுத்தினர்.