ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Statement of the Political Committee of the SLL in reply to an attack by Pierre Frank

பியர் பிராங்கின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் சோசலிச தொழிலாளர் கழகத்தின் அரசியல் குழு அறிக்கை

July 20, 1964

NEWS LETTER பத்திரிகையின் செய்தியாளரும் சோசலிச தொழிலாளர் கழகத்தின் செயலருமான ஜி. ஹீலி, இலங்கையில் இருந்து திரும்பிய பின்னர், (லங்கா சம சமாஜக் கட்சியான) 'ட்ரொட்ஸ்கிச' கட்சி அந்நாட்டில் செய்த காட்டிக்கொடுப்பு இப்பொழுது அனைத்து ட்ரொட்ஸ்கிசவாதிகளுக்கும் உலகின் முதல்தர பிரச்சினையாக எழுந்துள்ளது என்று எழுதியுள்ளார்.

1938ம் ஆண்டு ட்ரொட்ஸ்கியும் அவருடைய தோழர்களும் நான்காம் அகிலத்தை நிறுவியபோது, அவர்கள் "இதுவரை வர்க்க காட்டிக் கொடுப்புக்களால் கறைபடாத தூய பதாகைக்குள்" வருமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தனர். இருந்தும் 26 ஆண்டுகளுக்கு பின்னர் இப்பொழுது, பரந்துபட்ட வெகுஜனங்கள் பின்பற்றிய ஒரு கட்சியின் அங்கீகாரம்மிக்க வேலைத்திட்டமாக ட்ரொட்ஸ்கிசம் இருந்த இலங்கையில், அத்தகைய காட்டிக்கொடுப்பு நடைபெற்றிருக்கிறது.

ஒரு முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் LSSP தலைவர்கள் பதவியை வகிக்கின்றனர்; கட்சியின் ஒரு சிறுபான்மை பிரிவான LSSP (புரட்சிகரப் பிரிவு) தொழிலாள வர்க்கத்திற்காக தொடர்ந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முந்தைய Newsletter கட்டுரைகள், இப்படி விலைபோனதின் வரலாறு பற்றிக் கோடிட்டுக் காட்டியதும் அதன் படிப்பினைகளும் இப்பொழுது ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் தத்துவம் மற்றும் கொள்கைகளுக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, ஜூலை 17, 1964 World Outlook பதிப்பில் அண்மையில் பியர் பிராங்க் எழுதியுள்ள கட்டுரையை ஆராய்தல் பயனுடையதாக இருக்கும். World Outlook என்னும் இதழ், தன்னைத்தானே நான்காம் அகிலத்தின் (பாரிஸ்) ஐக்கிய செயலகம் எனக் கூறிக்கொள்ளும் அமைப்பின் ஒரு கருவியாகும்; இதன் சார்பாக பிராங்க் LSSP இன் சமீபத்திய மாநாட்டில் கலந்து கொண்டார்; அம்மாநாட்டில்தான் கூட்டணிக்கான முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

இந்த ‘ஐக்கிய செயலகம்’ ஆனது, 1963ம் ஆண்டில் "சர்வதேச செயலகம் (IS) மற்றும் அனைத்துலகக் குழுவின் சில உறுப்பினர்களுக்கும் இடையேயான மறு ஐக்கியத்தின்” விளைவாக அமெரிக்காவின் சோசலிச தொழிலாளர் கட்சித் தலைமையின் ஆதரவுடன் ஸ்தாபிக்கப்பட்டது.

சோசலிச தொழிலாளர் கட்சியினால் (SWP) ஆதரவளிக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவாகவும், மிஷேல் பப்லோ தலைமையிலான சர்வதேச செயலகமாகவும் (IS) 1953 டிசம்பரில் பிளவு ஏற்பட்டது.

இலங்கையின் தாக்கங்களை உள்ளீர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், இந்தப் பிளவிற்கான காரணத்தையும், கோட்பாடற்ற "1963 இன் மறு ஐக்கியத்தையும்" அறிதல் மிக முக்கியமானதாகும்.

பப்லோ ஒரு தத்துவத்தை அபிவிருத்தி செய்தார்; அதன்படி ஏகாதிபத்தியத்திற்கும் தொழிலாளர்கள் அரசுகளுக்கும் இடையே ஒரு மூன்றாம் உலகப்போர் என்பது தவிர்க்கப்பட முடியாதது. இரண்டு அமைப்பு முறைகளுக்கும் இடையே உள்ள மோதல் மற்றும் அதன் விளைவாக வரும் "வெகுஜன அழுத்தம் ஸ்ராலினிச தலைவர்களை எங்கும் முதலாளித்துவத்திற்கு எதிராக போரிடக் கட்டாயப்படுத்தும்" என்றும் அவர் கூறினார்.

இந்த ’திரும்பவியலாத’ புறநிலைப் போக்குகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இதன் காரணமாக, முதலாளித்துவ ஆட்சியதிகாரம் உடைந்து நொருங்குவதற்கு முன்னர் சுயாதீனமான புரட்சிகர ட்ரொட்ஸ்கிச கட்சிகளக் கட்டுவதற்கு நிலைமை அங்கே அனுமதிக்காது. இதன் காரணமாக ஊனமுற்ற தொழிலாளர் அரசுகளின் ‘நூற்றாண்டுகள்’ உயிர்வாழும்.

இங்கு நீண்டதொரு பகுப்பாய்வை மேற்கொள்ளாமல், இக்கருத்தானது அதிகாரத்துவத்திற்கு நிபந்தனையற்ற சரணடைவு என சோசலிச தொழிலாளர் கட்சியாலும் அனைத்துலகக் குழுவாலும் நிராகரிக்கப்பட்டது என்பதை நாம் எளிதாக சுட்டிக்காட்டுவோம்.

நான்காம் அகிலமே அனைத்து அதிகாரத்துவங்களுக்குமான எதிர்ப்பில்தான் திட்டவட்டமாக ஸ்தாபிக்கப்பட்டது. அதிகாரத்துவங்களை தோற்கடிப்பதன் மூலம்தான்: அதிகாரத்துவ தலைவர்களைத் தோற்கடிப்பதன் மூலம்தான், தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கு போராடி மனிதகுலத்தை காப்பாற்ற முடியும்.

அதைச் செயல்படுத்த நான்காம் அகிலமும் புரட்சிக் கட்சிகளும் அவசியமாகும்.

இந்த அடிப்படை வேலைத்திட்டத்தில் இருந்தும் இதன் பின்னணியில் இருந்த அடிப்படை மார்க்சிச தத்துவத்தில் இருந்தும் பப்லோவாதம் விலகிச் சென்றது. அதாவது, தொழிலாள வர்க்கத்தின் விடுதலை என்பது தொழிலாள வர்க்கத்தின் பணிதான் என மார்க்கிசம் கூறியிருந்தது. ஆனால் பப்லோவோ, அதிகாரத்துவத்தால் விடுதலை செய்யப்படக்கூடிய சக்திதான் தொழிலாள வர்க்கம் என்று கண்டார்; எனவே அதிகாரத்துவத்தினர் "திரும்பிச் செல்லமுடியாத" புறநிலைச் சக்திகளின் உண்மையான கருவிகள் என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்த ஆண்டுகளில், தவிர்க்க முடியாத போர் எனும் தத்துவம் கைவிடப்பட்டது. ஆனால் சாராம்சம் தொடர்ந்தது; பப்லோவும் அவருடைய முழு அமைப்பும் பல ஆண்டுகளும் அல்ஜீரியாவில் இருந்த தேசிய இயக்கத்தின் எடுபிடி அமைப்பாகத்தான் விளங்கின. இப்பொழுது பென் பெல்லாவின் அரசாங்கத்தில் பப்லோ ஒரு அலுவலராக உள்ளார்.

அவருடைய சமீபத்திய செய்தி வெளியீட்டில் அவர் குறிப்பிடுவதாவது: "அதன் பொதுக் காரணங்கள், விளைவுகள் ஆகியவற்றின் ஒரே பொருளுடைய அர்த்தத்தில் ஸ்ராலினிசமயம்- அகற்றுதல்" என்பது அரசியல் புரட்சியின் நிகழ்ச்சிபோக்கினால் சோவியத் ஒன்றியத்திலும் மற்ற தொழிலாளர் அரசுகளில் இருந்தும் அகற்றுவதற்கு ஒத்த கருத்தாகும். இந்த சிந்தனைகளும் செயல்களும் பப்லோவாத திருத்தல்வாதத்தின் தர்க்கரீதியான விளைவுகளாகும்.

அனைத்தையும் விட இலங்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், படிப்பினையைக் கொடுப்பதாகவும் உள்ளது. மேலும் இது நான்காம் அகிலத்தின் ஒரு ஒட்டு மொத்த வளர்ச்சிக் கட்டத்தின் முடிவையும் குறிக்கிறது. பப்லோவின் அணிகளில் மீண்டும் நுழைவதற்கு இதுதான் நேரம் என்று SWP தலைவர்கள் நினைத்த ஓராண்டிற்குள் இதுவும் வந்தது சரிதான்!

LSSP யின் சீரழிவிற்கு காரணங்களை காட்டி, பியர் பிராங் ஒரு தத்துவத்தை முன்வைக்கிறார்; அது பப்லோவாத வழிவகையிலே வேரூன்றியுள்ளது. தன்னுடைய கட்டுரைக்கு "புரட்சிகரத் தலைமை" என்று தலைப்பு கொடுத்துள்ளார்.

பப்லோவை போலவே இவரும் மார்க்சிச ரீதியிலான பார்வையை கைவிட்டுள்ளார்.

புரட்சிகர தலைமை புறநிலை போக்குகளின் பலியாட்கள் மட்டும் அல்ல, மாறாக உலகை மாற்றுவதற்கு தொழிலாள வர்க்கத்தை வழிநடத்துவதற்கு போராடும் நனவான சக்தியாகும்.

ஒரு புரட்சிகரக் கட்சியின் "தேய்மானம்" என்பது ஒரு வர்க்கப் போராட்டத்தின் "தேய்மானம்" என்று பொருளாகும்; இதை நனவுடன் மனத்தில் கொண்டு வர்க்கப் போராட்டத்திற்கு போராடுவது மார்க்சிசவாதிகளுடைய பொறுப்பு ஆகும். தொழிலாள வர்க்கத்தை வழிநடத்தும் பொறுப்புக்களின் கண்ணோட்டத்தில் இருந்தே இத்தகைய விவாதங்களை மார்க்சிசவாதிகள் நடத்துகின்றனர்.

ஆனால் பியர் பிராங்கோ இப்பொறுப்பை தட்டிக் கழிப்பதில் முற்றிலும் கொள்கையற்ற முறையில் நடந்து கொள்கிறார்.

LSSP இனுள் (சர்வதேச செயலகம் மற்றும் "மறு ஐக்கியம்" ஆகியவற்றுடன் முறையாக இணைந்திருந்த) இருந்த அரசியல் பயிற்றுவித்தலின் பலவீனம், "ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இருந்த தலைவர்களிடையே சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்டிருந்தது.... இந்தப் பிரச்சினை பற்றி பொதுவான கவலை இருந்தது... 1953ம் ஆண்டு பிளவு இதற்கு உதவவில்லை; சர்வதேச செயலகம் (IS) மற்றும் அனைத்துலகக் குழு (IC) இதை நன்கு உணர்ந்திருந்தன; கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மறு ஐக்கியம், இந்த சூழ்நிலையில் வலுவான, ஆரோக்கியமான புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளுவதற்கு போதுமான நேரத்தை வழங்கவில்லை." (எமது அழுத்தம்)

இந்த வழிமுறை, பரிதாபத்திற்கு உரிய வகையில் தவிர்க்கப்பட்டதைத் தவிர, இந்த அறிக்கையும் பொய்களின் தொகுப்பாக உள்ளது.

LSSP தலைவர்களுடைய அரசியல் பலவீனத்தை நிலைநாட்டிய 1953 பிளவில் நான் இல்லை; ஆனால் பப்லோவாதிகளின் திருத்தலினால் கட்சி உடையவில்லை என்பது உண்மையாம்!

LSSP யின் பலவீனம் வெறுமனே ‘பிளவுடன்’ பக்கமாக இல்லாமல், சர்வதேச செயலகத்திற்குள் தொடர்ந்தது மற்றும் வளர்ந்தது, என்ற உண்மை விளக்கப்படாதது எத்தகைய அவமானகரமான பாசாங்குத்தனம், "பிளவு இதற்கும் உதவவில்லையாம்"!

சர்வதேச செயலகத்தின் திருத்தல்வாதம்தான் காட்டிக் கொடுப்பை விரைவுபடுத்தி ஊக்கம் கொடுத்தது என்பதைக் காண்போம்.

"ஐக்கியப்பட்ட மற்றும் 'ஆரோக்கியமான' முயற்சிகளை மேற்கொள்வதற்கு "போதுமான நேரம் வழங்கப்படாதிருந்தது” என்பது மறு ஐக்கியம் பற்றிய பிரச்சினை அல்ல. மறு ஐக்கியத்தைப் பற்றிய ஒவ்வொன்றும் அரசியல்ரீதியாக ஆரோக்கியமற்றது. பிராங்க் உட்பட அதில் பங்கு பெற்றவர்கள் அனைவரும் பெரேரா மற்றும் பிற இலங்கை ஓடுகாலிகளும் நேரடிப் பொறுப்பை ஏற்கவேண்டும்.

இது அத்தியாயரீதியாகவும் வரிவரியாகவும் நிரூபிக்கப்படலாம்.

தன்னுடைய கட்டுரையில், ஐக்கிய செயலகம் "இடது சாரிப் போக்கிற்கு" ஆதரவு கொடுத்தது என்றும், அதன்பின் ... இடதுசாரியானது ஐக்கிய செயலகத்தின் ஆலோசனையுடன் கடந்த ஆண்டும் தன்னுடைய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது…. என்றும் பிராங்க் குறிப்பிட்டுளார்.

மே 1964 இல் அண்மையில் வெளிவந்த ஐக்கிய செயலகத்திற்காக வெளியிடப்பட்ட உள்சுற்று ஆவணங்களால் இந்த பொய் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது, அத்தேதிகளில் உள்ள அவர்களுடைய உள்சுற்று அறிக்கைகள், (பப்லோவின் தலைமையில்) அவர்கள் பிரிவிலேயே ஒரு சிறுபான்மை குழு கொண்டுவந்த தீர்மானத்தையும் அதற்கு ஐக்கிய செயலகம் கொடுத்த பதிலையும் அவை கொண்டுள்ளன. இதைச் சற்று விரிவாக மேற்கோளிடுவோம்.

01. இலங்கை பற்றி (பப்லோ சிறுபான்மைக்காக) ஆண்டர்சன் கொண்டுவந்த தீர்மானம்:

... நாங்கள் ... (a) 7 வது உலக மாநாட்டில் LSSP க்கு விடுக்கப்பட்ட கடிதம் உள்செய்திகளிலோ, வெளித்தகவல்களிலோ வெளியிடப்படாததற்காக கண்டனம் செய்கிறோம்; மேலும் அது உடனடியாக, உள்சுற்றாக; அதன் பின் அடுத்த நான்காம் அகிலம் (Quatrieme Internationale) சஞ்சிகையில் வெளியிடப்பட வேண்டும்.

(b) ஐக்கிய செயலகத்தின் காரியாலயத்தால் (Bureau of the United Secretariat) திருத்தம் செய்யப்பட்ட, பின்னர் 7வது உலக காங்கிரசால் ஒப்புக் கொள்ளப்பட்ட கடிதத்தில் செய்த திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்; இத்திருத்தங்கள் LSSP சிறுபான்மையின் விமர்சனங்களை மென்மைப்படுத்துகின்றன, இன்னபிறவற்றைச் செய்கின்றன.

02 ஐக்கிய செயலகத்தின் பதில் மிகவும் வெளிப்படுத்தும் தன்மையுடையதாக, கீழ்க்கண்டவற்றை கூறுகிறது:

ஐக்கிய செயலகம்... ஏழாம் உலக மாநாட்டில் LSSP பற்றி கூறப்பட்ட விமர்சனங்களை சிறிதும் மாற்றவில்லை. அது செய்தது அனைத்தும் LSSP யின் தலைமையிடத்தில் இந்த விமர்சனங்களுக்கு விடையிறுக்கக்கூடியதாய் பொறுப்பை நிரூபணம் செய்ய வேண்டுமெனக் கூறி, அதனிடம் நம்பிக்கையை வைத்ததுதான். ...இலங்கைப் பிரிவின் மீது இத்தகைய விசுவாசமான, தோழமை மிகுந்த அணுகுமுறையை ஐக்கிய செயலகம் தக்கவைத்துக்கொள்ள முயன்றுள்ளது; அதே நேரத்தில் அதன் உறுப்பினர்கள் LSSP யின் இடதுசாரி கன்னையுடன் அரசியல் ரீதியாக ஆதரவு காட்டுவதற்கு சாதகமாக இருப்பவர்கள் என்பதையும் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறது.

LSSP தலைமை "தேய்ந்து போயிற்றா" — அல்லது ஐக்கிய செயலகத்திலிருந்து "விசுவாசமான மற்றும் தோழமையான" அணுகுமுறையினால் காட்டிக் கொடுக்க அது உதவி பெற்றதா?

ஆயினும், இயக்கம் முழுவதையும் பிரதிபலிக்கும் அமைப்பு என்னும் முறையில் அது LSSP பெரும்பான்மை தலைமையின் அறிக்கைகளை தூக்கி எறிவதோ மற்றும் ஐக்கிய இடது முன்னணியுடனான (United Left Front) தங்களுடைய நிலைப்பாட்டில் இருக்கும் நேர்மையையும் மற்றும் அவர்களின் உறுதிமொழிகள் இருந்தால் அவற்றில் நன்னம்பிக்கை வைப்பதை செயலில் நிரூபிப்பதற்கு தேவையான நேரத்தை வழங்க மறுப்பதோ தவறாக இருக்கும் என்று ஐக்கிய செயலகம் உணர்கிறது.

அப்படியானால்! இலங்கையில் தலையீடு செய்வதற்கு ஐக்கிய செயலகத்திற்கு போதுமான நேரம் கொடுக்கப்படவில்லை என்று பிராங் கூறுகிறார். ஆனால் இங்கு, அவர்களின் சொந்த வாயாலேயே அவர்களே "போதுமான அவகாசம்" பெரேராவிற்கு கொடுக்க முடிவெடுத்ததாக கூறுகின்றனர் ...!

வாதத்தின் முக்கிய பகுதிக்கு வருவோம்

LSSP பற்றிய விமர்சனங்கள் வெளிவந்திருந்தால், "அதன் விளைவு மறு ஐக்கியத்தை ஒருங்கிணைக்க, உறுதிப்படுத்த தேவையானவற்றிற்கு முற்றிலும் எதிரிடையான சூழ்நிலை உருவாகியிருக்கக் கூடும் என்பதுதான் அதன் விளைவாகியிருக்கும்" என்று ஐக்கிய செயலகத்தின் பதில் கூறுகிறது.

ஆம்! மறு ஐக்கியத்திற்கு ஒட்டுப்போடுவதற்காக, SWP யும் பப்லோவாதிகளும் வேறுபாடுகள் பற்றி எவ்வித விவாதமும் கூடாது என வலியுறுத்தினர். தெளிவாக்குவதற்கு பதிலாக —திருத்தல்வாதத்திற்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு பதிலாக— ஒவ்வொருவரும் தனித்தனியே செயல்படட்டும் என்ற மறைமுக உடன்பாடு இருந்தது.

பெரேரா, திருமதி பண்டாரநாயக்கவின் பாதையில் உறுதியாக சென்றபோது, இலங்கையில் "உண்மையான வெகுஜனக் கட்சி" என்ற பிரதிபலித்த புகழ்ச்சியில் பப்லோவாதிகள் தொடர்ந்து குளிர்காய்ந்தனர்.

அக்காட்டிக் கொடுப்பிற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு, ஐக்கிய செயலகத்தின் அறிக்கை கூறுவதாவது: "இவ்வகையிலான ஒரு தீர்மானகரமான கொள்கை ஐக்கிய செயலகத்திற்கும் LSSP தலைமைக்கும் இடையே இருக்கும் தோழமை உறவுகளுக்கு ஊறு ஏற்படுத்திவிடும், ஏன் அழிவும் கூடச் செய்துவிடும்" (!)

இதே ஐக்கிய செயலகம்தான், ஒரு சில வாரங்களிலேயே, பெரேராவுடன் வாக்களித்திருந்த LSSP இன் அனைத்து 504 உறுப்பினர்களையும் – இவ்வெண்ணிக்கை ஐக்கிய செயலகத்தின் எந்த பகுதியினதும் முழு பலத்தையும் விட பல மடங்கானது! - இடைநீக்கம் செய்வதற்கு நிர்பந்தத்திற்குள்ளானது.

இந்த இறுதி முடிவு நான்காம் அகிலத்திற்கும் அத்தோடு எந்தப் பகுதியில் இருந்தும் மட்டுமீறிய உட்பூசல் அல்லது பதட்டம் ஏற்படுத்துவதன் ஊடாக கட்சியின் ஐக்கியம் கேள்விக்குள்ளாக்கப்படுவதில் முற்றிலும் ஆர்வமற்றிருந்த அதன் இடது-கன்னை உட்பட LSSP க்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். (அழுத்தம் எமது)

அப்படியானால் இறுதி முடிவு இதுதான்!

பியர் பிராங்க் மற்றும் ஐக்கிய செயலகத்தினர் இடது கன்னைக்கு கொடுத்த "ஆதரவின்" தன்மை பற்றி இவ்வளவும் போதும். அவர்கள் உண்மையில் செய்தது என்னவென்றால் பெரேராவின் சரணடைதலுக்கு இயன்றளவு சிறந்த இடது மூடிமறைப்பை கொடுத்து, இடதுபிரிவை முடக்கியதுதான்.

காட்டிக்கொடுப்புக்குத் தயாரித்த ஐக்கியம் பற்றிய ஒரு தவறான சித்திரத்தைத் தடுக்கும்பொருட்டு வேறுபாடுகளை மூடிமறைப்பது அவர்களது வழிமுறையாகும். இந்த வழிமுறை பற்றி அவர்கள் வெளிப்படையாகவும், வெட்கமற்றும் இருந்தனர்.

அவர்களுடைய நான்காம் அகிலம் இதழின் சமீபத்திய பதிப்பு, மறு ஐக்கியம் "ஒரு வருந்தத்தக்க பிளவு" ஆக முடிவுற்றதில் களிப்பைக் காட்டுகிறது; இப்பிளவின் சிறப்புக்கூறுகளை அது முற்றிலும் மூடிமறைக்கிறது மற்றும் ஐக்கியம் என்பது இப்பொழுது "பேச்சு வார்த்தை” மூலம் அடையப்பட்டு விட்டதாகவும் கூறுகிறது!

SWP யும் அதன் நண்பர்களும் வேறுபாடுகளைப் பற்றிய விவாதத்தை தவிர்க்க வேண்டுமேன்றே மறு ஐக்கியத்தினூடாக நடத்திச்சென்றனர் என்பதை அது குறிப்பிடவில்லை.

"ஸ்தூலமான பிரச்சினைகளை" ஆராயலாம் என்று விருப்பம் காட்டி, SWP இந்த மார்க்சிச பகுப்பாய்வுமுறையை கைவிடலுக்கு சாக்குப்போக்கு கூறுவதற்கு, உள்ளூர் அமெரிக்க நடைமுறைவாதத்தை (American pragmatism) கையாண்டது.

இவ்விதத்தில், SWP இன் அரசியல் குழுவின் அறிக்கையில், "உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் 'விரைந்த மறு ஐக்கியத்திற்காக" என்பதில், கீழ்க்கண்டதும் அடங்கியுள்ளது:

எமது தைரியமான திட்டம், எமது உணர்வு, போர்க்குணமான செயல்கள் மூலம் புதிய தலைமுறை எழுச்சியாளர்களின் சிறந்த அடுக்குகளை ஈர்க்க முடியும்; நம்மிடையே இருக்கும் வேறுபாடுகள், கடந்த கால பூசல்கள் ஆகியவை அவர்களை வெறுப்படையச் செய்துவிடும்; செயலில் ஈடுபடத்துடிக்கும் இளம் புரட்சியாளர்களுக்கு அவற்றில் அக்கறை இல்லை; அவர்கள் பெரும் அரசியல் பிரச்சினைகள், இன்றைய கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினைகள் பற்றித்தான் முக்கியமாக கவனம் கொண்டுள்ளனர்.

சுருங்கக் கூறின், விரைவான மறுஐக்கியம் என்பது, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு ஒரு தேவையாகப் போய்விட்டது ...

இரு புறத்திலும் இருக்கும் சிறந்த தலைவர்களும், ஒரு புதிய தோழமை சூழ்நிலையை உருவாக்கும் முயற்சிகளை, இன்றைய ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நிலைமையில் எவ்வித உண்மையான அடிப்படையும் இல்லாத, அச்சங்களை அகற்றுவதற்கான முயற்சிகளை, (கண்டிப்பாக) ஆரம்பிக்க வேண்டும்.

இதற்குப் பின்னர்தான் இலங்கை காட்டிக் கொடுப்பு வந்தது! இதே ஆண்டுதான் பப்லோவையும் அவருடைய நெருக்கமான ஆதரவாளர்களையும் "பிளவுவாதிகள்" என்பதற்காக நீக்கம் செய்ததும் வந்தது! ஐக்கியத்திற்கு சற்றே முன்னதாக, பப்லோவாதிகள் கிட்டத்தட்ட தங்கள் இலத்தீன் அமெரிக்க பிரிவு முழுவதையும் இழந்திருந்தனர்; ஐரோப்பிய பிரிவுகளில் அனைத்திலும் பிளவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன!

LSSP இல் இருக்கும் புரட்சிகர கன்னையின் மார்க்சிசவாதிகள் வெகுஜனங்களை சென்றடைவதற்கு ஒரு பாதையை கண்டுபிடித்துள்ளனர்; இப்பாதை வழி சென்றால் அவர்கள் ஐக்கிய செயலகத்தை நிராகரித்து, இலங்கையில் வர்க்கக் காட்டிக் கொடுப்பை விளைவாக கொடுத்த அதிகாரத்துவத்திற்கு அனுசரிக்கும் கொள்கைகளை மார்க்சிச கோட்பாட்டினை கொண்டு மாற்றுவர் என்று நம்புகிறோம்.

ஐக்கிய செயலகம், LSSP (புரட்சிகர கன்னைக்கு) எழுதிய ஒரு கடிதத்தில், பெரேராவிற்கு ஆதரவு கொடுத்த அனைத்து ஓடுகாலிகளுக்கும் அவர்களுடைய செயலை மீள்பரிசீலனை செய்து நான்காம் அகிலத்திற்கு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளது.

ஜெரி ஹீலி மற்றும் The Newsletter மீதான பியர் பிராங்கின் தாக்குதல்கள் காட்டிக் கொடுப்பு மற்றும் ஏமாற்றுத்தன சான்றுகளை மூடிமறைக்கும் ஒரு இழிவான முயற்சியாகும்.

LSSP இன் இடது கன்னை, நான்காம் அகிலத்தை கைவிட வேண்டும் என்று நாங்கள் "கோரவில்லை". தோழர் ஹீலி, LSSP (புரட்சிகரக் கன்னை) இடம் நான்காம் அகிலத்தின் பெயரை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் பாரிசின் பப்லோவாத மையத்திடம் இருந்து முறித்துக் கொண்டு, நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்றே கோரினார்.

இந்த விவாதங்களின் நோக்கம் ஒரு சர்வதேச மாநாட்டை ஒழுங்கமைப்பதாகும்; அங்கு அனைத்துலகக் குழு மற்றும் பப்லோவாதிகள் தங்களின் பல்வேறுபட்ட கருத்துக்களையும் முன்வைக்க முடியும்; அது சர்வதேச இயக்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த பயன்படும்.

LSSP இன் புரட்சியாளர்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மார்ச்சிஸ்டுகளுடன் குறுகிய காலத்தில் தங்களுடைய இடத்தைப் பெறுவர் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.