ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Resolution of the Revolutionary Minority to the LSSP Congress,
The LSSP and Crisis of the SLFP Government

1964 ஜூன் 6-7 லங்கா சம சமாஜ கட்சி மாநாட்டிற்கு புரட்சிகர சிறுபான்மையின் தீர்மானம்

லங்கா சம சமாஜக் கட்சியும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் நெருக்கடியும்

June 6-7, 1964

சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் ஒரு நம்பிக்கை இழந்த நிலையில் உள்ளது. அது, அதன் ஆட்சியுடன் இடதுகளினதும் குறிப்பாகத் தொழிலாள வர்க்கத்தினதும் அரசியல் ஒத்துழைப்பு இல்லாமல் தனது நிலையைத் தக்கவைப்பதற்கான உண்மையான சாத்தியம் எதுவுமில்லாது, ஆட்சி, அதன் அரசியலமைப்புரீதியான பதவிக்காலத்தின் இறுதி ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவேதான் பாராளுமன்றத் தொடர்புறவுகளும் பிரதமரும் அவரது சில அமைச்சர்களும் அரசாங்கத்தில் லங்கா சம சமாஜக் கட்சி பங்கேற்பதை உத்தரவாதப்படுத்துவதற்கான முயற்சிகளும் இருக்கின்றன.

திருமதி. பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் தனியாகவோ அல்லது ஐக்கிய இடது முன்னணியில் (United Left Front) உள்ள மற்ற கட்சிளுடனான ஒத்துழைப்புடனோ பதவியை ஏற்க உடன்படுவது, தொழிலாள வர்க்கத்தின் எழுந்துவரும் அலையிலிருந்தும் அதற்கு எதிரான வெகுஜன அதிருப்தியிலிருந்தும் அதனைப் பாதுகாத்துவைப்பதாகவே இருக்கும், மற்றும் இலங்கையில் முதலாளித்துவ அரசியலமைப்புக் கட்டமைப்பிற்குள்ளே இலங்கையில் முதலாளித்துவத்தைப் பராமரிக்கும் அதன் கொள்கைக்கு தொழிலாள வர்க்க ஒத்துழைப்பை வழங்குவதற்கு முயல்வதாக இருக்கும்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்குள் லங்கா சம சமாஜக் கட்சி தலைவர்கள் நுழைவதென்பது, வெளிப்படையான வர்க்க ஒத்துழைப்பிலும், மக்களின் நோக்குநிலை தவறலிலும், தொழிலாள வர்க்கத்தின் பிளவிலும் மற்றும் போராட்ட முன்னோக்கை கைவிடுதலிலும் விளைவை ஏற்படுத்தும், இவை தொழிலாள வர்க்க இயக்கத்தைச் சீர்குலைக்கவும் இடதுகளின் புரட்சிகர அச்சை இல்லாதொழிக்கவும் இட்டுச்செல்லும். அதன்விளைவாக, முதலாளித்துவ பிற்போக்கு சக்திகள், பலவீனப்படுவதிலிருந்து அல்லது செய்யத் திட்டமிட்டிருந்ததை செய்யாது தடுக்கப்படுவதிலிருந்து விலகி, இறுதியில் பலமடைந்துவிடும்.

ஒரு ‘குறைந்தபட்ச வேலைத்திட்டம்’ என்ற அடிப்படையில் முதலாளித்துவ சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடனான ஒத்துழைப்பு என்பது, இவ்வாறு கட்சியின் புரட்சிகர வேலைத்திட்டத்திற்கு பெரிதும் எதிராகச் செயல்படுவதுடன் லங்கா சம சமாஜக் கட்சியால் அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துறைகள் ஏற்கப்பட்டமையானது பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு பெருந்துரோகமாக இருக்கும்.

ஆகையால், சிறப்பு மாநாடானது முற்றிலும் என்ன அடிப்படையிலிருந்தாலும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் ஒரு கூட்டுக்கான அனைத்து முன்மொழிவுகளையும் நிராகரிக்கிறது, மற்றும் அதன் புரட்சிகர வேலைத்திட்டத்தைப் பாதுகாப்பதற்கு அணிதிரளுமாறு கட்சியை அழைக்கிறது. கட்சியின் இன்றைய பணியானது, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் கீழ்ப்படியவும் வைப்பதற்கான முயற்சியைத் தோற்கடிப்பது மற்றும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்கும் எதிரான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பகுதிகளையும் உழைக்கும் வெகுஜனங்களையும் ஒன்றிணைக்க செயல்படுவதாகும்.

R.S. பகவன், ரெஜினால்ட் மெண்டிஸ், சம்பா, T.E. புஷ்பராஜன், W.D. தர்மசேன, பிரிம் ராஜசூர்யா, மெரில் பெர்னான்டோ, எட்மண்ட் சமரசக்கொடி, V. காராளசிங்கம், பெலிஸ் செரசிங்க, D.S. மல்லாவரச்சி பாலா தம்பு, S.A. மார்ட்டினஸ், சிட்னி வனசிங்க.