ஐரோப்பாவில் அமைதியின்மை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத்தளம் 1917 பிப்ரவரியிலிருந்து மார்ச் வரையிலான லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களின் புதிய மொழிபெயர்ப்புக்களை வெளியிட்டுவருகிறது. பலவிடயங்களில், இக்கட்டுரைகள் முதல் முறையாக இப்போதுதான் ஆங்கிலத்தில் வெளிவருகின்றன.

இக்கட்டுரை நியூயோர்க் நோவிமிர் (புதியஉலகு) எனும் செய்தித்தாளில் மார்ச் 13, 1917 இல் வெளியிடப்பட்டது. இது ரஷ்ய மொழியில் ட்ரொட்ஸ்கியின் 1923 Voina i Revoliutsiia (போரும் புரட்சியும்) என்பதில் வெளியிடப்பட்டது, தொகுதி 2, பக்கம் 419-421. இது இங்கே முதல் முறையாக மொழிபெயர்பு செய்யப்படுகிறது. (மொழி பெயர்ப்பாளர்: ஃபிரெட் வில்லியம்ஸ், பதிப்புரிமை: WSWS)

ஐரோப்பாவில் அமைதியின்மை நிலவுகின்றது. ரஷ்யாவின் கிழக்கிலிருந்து கவலைதரக்கூடிய ஒரு வசந்தம் வீசுகிறது, அது அதனுடன் பெட்ரோகிராட் மற்றும் மாஸ்கோ தொழிலாளர்களின் புரட்சிகர ஒலிகளைக் கொண்டு வருகின்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஜேர்மன் முடியாட்சியினரான Hohenzollern மற்றும் ஆஸ்திரிய முடியாட்சியினரான Habsburg ரஷ்யாவில் புரட்சிகர இயக்கம் பற்றிய செய்திகளை திருப்தி இல்லாது சந்தித்திருந்திருக்கும். ஆனால் இப்பொழுது அத்தகைய செய்திகள் அவர்களின் இதயங்களை அமைதியற்ற அச்சத்துடன் மட்டும் நிரப்பியிருக்கும். அதன் வழியில் ஜேர்மனியில் அமைதியின்மையும் ஆஸ்திரியாவில் பயங்கரமும் இருக்கிறது. ஜேர்மன் நீர்மூழ்கிக்கப்பல்கள் கூட்டுநாடுகளின் “தளவாடங்களை” மூழ்கடிப்பதிலேயே வெற்றிகரமாக இருந்தன, ஆனால் ஜேர்மன் தாய்மார்களுக்காக கூடுதலாய் ஒரு ரொட்டித் துண்டோ அல்லது ஒரு குவளை பாலோ பெறுவதற்குக்கூட சக்தியற்றவையாக இருந்தன. பெட்ரோகிராட் மற்றும் மாஸ்கோவில் இடம்பெறும் பசியால் வாடிய பெண்களின் ஆர்ப்பாட்டங்கள் நாளை பேர்லின் மற்றும் லைப்சிக்கில் உள்ள தாய்மார்களிடையே ஒரு பிரதிலிப்பை எழுச்சியுற வைக்கும்.

“நாம் கட்டாயம் வென்றாக வேண்டும்” பழமைவாத தலைவர் கவுண்ட் வெஸ்ராப் அண்மையில் டிரேஸ்டெனில் இவ்வாறு கூறினார், “நாம் கட்டாயம் நஷ்ட ஈட்டை பெற வேண்டும்: அல்லாவிடில், யுத்தத்திற்கு பின்னர் ஒவ்வொரு ஜேர்மன் படையினரும் யுத்தத்திற்கு முன்னர் அரசுக்கு செலுத்திய வரிகளை விட ஐந்து மடங்கு செலுத்த நேரும்.”

பிரெஞ்சு நிதியமைச்சர் றீபோ உம் வெஸ்ராப் போல அதே கருத்தைக் கொண்டிருந்தார்: நாம் (ஜேர்மனியை) கட்டாயம் வெல்ல வேண்டும், மற்றும் (ஜேர்மனியிடமிருந்து) நஷ்ட ஈட்டை கட்டாயம் வாங்க வேண்டும். இல்லாவிடில் விளைவுகளைக் கூட்டிக் கழித்து பார்க்கும்பொழுது ஆட்சியாளர்கள் மக்களுடன் மோசமான நெருக்கடியில் இருக்க நேரிடும். ஆனால் வெற்றியானது யுத்தத்தின் முதல் நாள் இருந்தது போலவே இன்னும் தொலைவில் இருக்கிறது. இதற்கிடையே பிரான்ஸ், அதன் அதிகரிக்காத மக்கட்தொகையுடன், ஒன்றரை மில்லியன் பேரை மரணிக்கவிட்டுள்ளது. கால்களை இழந்தோர், கைகளை இழந்தோர், பித்துப் பிடித்தோர் மற்றும் பார்வை இழந்தோர் எத்துணை எத்துணை செல்லாக்காசாய்………… பயங்கரமானது தேசியவாத காற்றுப்பைகளின் ஆன்மாக்களையும் பொறுப்புணர்வுக்கு அந்நியர்களாக உணரும் ஆனால் அச்சத்தின் உணர்வை நன்கு அறிந்து வைத்திருக்கும் அரசியல் ஏமாற்றுக்காரர்களையும் பற்றிக் கொண்டுவிட்டது. பிரெஞ்சுப் பாராளுமன்றம் இதிலிருந்து வெளியில்வர முயன்றது. என்ன செய்வது? மகிழ்ச்சியற்ற குடியரசின் அனைத்துவிதமான நிதிய மற்றும் அரசியல் அயோக்கியர்களின் தந்தையும் பாதுகாவலனாகவும் இருக்கும் Premier Briand ஐ தூக்கி வீச நோக்கங்கொண்டிருந்தது, அதே பண்புடைய ஆனால் குறைந்த திறனுடைய ஒருவரைக் கொண்டு அவரைப் பதிலீடு செய்வதற்காக.

இங்கிலாந்தும் கூட கவலைப்பட்டது. Lloyd George அது அவரது தலைவர் Asquith க்குள் ஒரு கத்தியுடன் சிக்கிக்கொள்ள வந்தபொழுது பெரும் தந்திரத்தைக் காட்டினார். ஆகையால் சோம்பேறிகளும் அப்பாவிகளும் Lloyd George சாத்தியமான குறுகிய நேரத்தில் ஜேர்மனியரை நசுக்கிவிடுவார் என்று எதிர்பார்த்தனர்; பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கொள்ளைக்காரர்களின் தலைவராகி இருந்த இந்த ஏமாற்று கிறித்தவ நம்பிக்கையாளர், அற்புதங்களை காட்டுவதற்கு சக்தி அற்றவராக ஆகியிருந்தார். இங்கிலாந்தின் மக்கட்தொகையானது, ஜேர்மனியைப் போலவே, என்றும் அதிகமான வகையில் யுத்தமானது முட்டுச் சந்துக்குள் செலுத்தி விட்டது என்று நம்பிக்கை கொண்டது. போருக்கு எதிரானவர்களால் நடத்தப்பட்ட கிளர்ச்சி என்றுமிரா வகையில் அதிக ஆதரவை ஈட்டின. சிறைகள் சோசலிஸ்டுகளால் நிரம்பி வழிந்தன. ஐரிஷ்கள் என்றுமிரா அதிகரித்த அளவில் அரசாங்கத்திடமிருந்து சொந்த ஆட்சியை அமைக்க கோரிக்கை விடுத்தனர். அரசாங்கம் ஐரிஷ் புரட்சியாளர்களை கைது செய்ததன் மூலம் பதில் கொடுத்தது.

ஆயுதப்படைகளைவிட மிகப் பெரும் வேட்கையுடன் யுத்தத்தை கொண்டுவந்த இத்தாலிய அரசாங்கம், ஏனைய மற்றெல்லோரையும் விட வலுவான தளமில்லை என்று உணர்ந்தது. ஒருபுறம், ஆஸ்ட்ரோ- ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பல்கள் அவர்களுக்கு மிகவும் தேவைப்பட்ட கரி ஏற்றி வந்த சரக்குக்கப்பல்களை தடுக்கின்றன. மற்றொருபுறம், துணிவு மிக்க இத்தாலிய சோசலிஸ்டுகள் என்றும் அதிகரித்துவரும் வெற்றிகளுடன் யுத்தத்திற்கு எதிரான தங்களின் கிளர்ச்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆகையால், ஓய்வுபெறல் விரைந்து நெருங்கிக் கொண்டிருந்த ஹங்கேரிய சர்வாதிகாரி Tisza ஆல் இத்தாலிய முதல்வர் Boselli க்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர இயலவில்லை: அது அவரது சொந்த மரண நேரத்தை மட்டுமே நினைவூட்டியது.

போரிடும் ஐரோப்பாவின் பாராளுமன்ற மற்றும் அரசாங்க வட்டாரங்களில் அங்கே அமைதியின்மை இருக்கிறது. அமைச்சரவை நெருக்கடிகள் எங்கும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன, மற்றும் “தேசிய யுத்தத்தின்” கந்தல் தலைவர்களின் வீழ்ச்சியானது சில காரணத்திற்காக தாமதமாகுமேயானால், தற்போதுள்ள நிலைகளின் கீழ் அதிகாரத்தின் சுமையைத் தாங்களே சுமக்கத் தயாரிப்பு செய்து கொள்ளும், சற்று அதிகம் அதிகாரம்கொண்ட பாராளுமன்ற நடவடிக்கையாளர்கள் அல்லது சாகசவாதிகள் அங்கே இருப்பதால்தான்.

இதற்கிடையே போர் எந்திரமானது இரு பக்கங்களிலுமே தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அனைத்து அரசாங்கங்களும் அமைதியை விரும்புகின்றன மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் நாள் ஒரு இருப்புநிலை கணக்கு எடுக்கும் நாளாக இருக்கும் என்பதற்காக அவை அஞ்சுகின்றன, வெற்றிக்கான நம்பிக்கையை இழந்து, ஆட்சியாளர்கள் யுத்தத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றனர், அதன் வழிமுறைகளுக்கு என்றுமிராத வகையில் அதிகரித்த அழிவுகரத் தன்மையை வழங்குகின்றனர். நடுநிலை நாடுகளில் முதலாளித்துவ பொதுக் கருத்துக்குகூட அது தெளிவாகிக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய மக்கள் ஒருவரை ஒருவர் கொலைசெய்வதை முடிவு கட்டுவதற்கு திறனுடையது மூன்றாவது சக்தியின் தலையீடு மட்டுமே என்று. இந்த மூன்றாவது சக்தி புரட்சிகரப் பாட்டாளி வர்க்கமாக மட்டுமே இருக்க முடியும்.

அரசாங்கங்கள், பாராளுமன்றங்கள் மற்றும் கட்சிகளில் கொள்கைகளில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இது எழுச்சிகொள்வது பற்றி அச்சம்கொள்கைகின்றன. இறுதி ஆய்வில், மந்திரிசபை நெருக்கடிகள், பாராளுமன்றக் கட்சிகளை மாற்றி அமைத்தல் இரண்டும் அவர்கள் ஏமாற்றியிருக்கும் வெகுஜனங்கள் பற்றிய பீதியால் தூண்டப்படுபவை ஆகும்.

இந்த நிலைமைகளின் கீழ், பீட்டர்ஸ்பேர்க்கிலும் மாஸ்கோவிலும் நடைபெறும் வேலைநிறுத்தங்களும் கிளர்ச்சிகளும் ரஷ்ய எல்லைகளை தாண்டி இன்னும் தொலைவாகச் செல்லும் அரசியல் முக்கியத்துவத்தை கொண்டிருக்கின்றன. இதுதான் முடிவின் ஆரம்பம். மதிப்பிழந்த ஐரோப்பிய அரசாங்கங்களியேயே மிகவும் மதிப்பிழந்த அரசாங்கத்திற்கு எதிராக ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தினால் எடுக்கப்படும் தீர்க்கமான நடவடிக்கை ஒவ்வொன்றும் மற்ற எல்லா நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு பலமான தூண்டலாக பயன்படும். 31 மாதகால யுத்தத்தில் தேசியவாத மனோபாவங்களின் மேலோடும் இராணுவ ஒழுங்கும் என்றுமில்லாத வகையில் மெலிதாய் வளர்ந்திருக்கின்றன. ஒரு கடுமையான திடீர் குலுக்கலில் — இந்த மேலோடானது தூசியாக மாறும். ஆட்சியாளர்கள் இதனை அறிவார்கள். அதன் காரணமாகத்தான் ஐரோப்பாவில் அத்தகைய அமைதியின்மை இருக்கிறது….

Novy mir, 15 March 1917.

Loading