லங்கா சம சமாஜக் கட்சி மாநாடு,ஜூன் 6-7, 1964க்கு ‘நடுநிலை’ குழுவின் தீர்மானம்

28 September 2018

மொழிபெயர்ப்பின் மூலக்கட்டுரையை இங்கே காணலாம்

Resolution of the 'Centre' group to the LSSP Congress,

லங்கா சம சமாஜக் கட்சி மாநாடு, ஜூன் 6-7, 1964க்கு ‘நடுநிலை’ குழுவின் தீர்மானம்

June 6-7, 1964

தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் நிதிய நெருக்கடிகள் முதலாளித்துவக் கட்டமைப்புக்குள்ளே முற்போக்கான வழிகளில் தீர்க்கப்பட முடியாது. நெருக்கடியின் ஒரு முற்போக்கான தீர்வுக்குத் தேவையான நடைமுறை பின்வரும் நிபந்தனைகளின் பேரில், ஐக்கிய இடது முன்னணி (ULF) க்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) க்கும் இடையிலான ஒரு கூட்டரசாங்கத்தால் தொடங்கி வைக்கப்படலாம்.

1. ஒரு ஆண்டுக்குள்ளேயே அமுல்படுத்தக் கூடிய ஒரு தொடர் நடவடிக்கைகளின் பேரில் உடன்பாடு இருக்க வேண்டும். இவற்றில் வெகுஜனங்கள் உற்சாகமடையச் செய்யக்கூடிய மற்றும் அவர்களது செயலூக்கமான பங்கெடுப்பைப் பாதுகாக்ககூடிய நடவடிக்கைகள் கட்டாயம் உள்ளடங்க வேண்டும்.

2. தற்போதைய அரசியல் நிலைமையில், இந்த நடவடிக்கைகளை திறமான வகையில் மேற்கொள்வதை உறுதிப்படுத்துவதற்கு பின்வருவன தேவைப்படுகிறது.

(a) கூட்டு உடன்பாடானது SLFP க்கும் ULF க்கும் இடையிலானதாக இருக்க வேண்டும் மற்றும்

(b) LSSP க்கு முறையே பின்வரும் அமைச்சகங்களை, அதாவது நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சகம்; தேசியமயமாக்கப்பட்ட சேவைகள் அமைச்சகம்; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சகம் போன்ற அமைச்சகங்களை உறுதிப்படுத்துவது தொடர்பான ஒரு உடன்பாடு இருக்க வேண்டும்.

இந்த மாநாடு மேலே சுட்டிக்காட்டப்பட்ட வழிகளில் SLFP உடனான ஒரு கூட்டரசாங்கத்திற்கான ஒப்பந்தங்களைச் செய்வதற்கு மத்திய குழுவிற்கு அதிகாரமளிக்கிறது.

கொல்வின் ஆர்.டி சில்வா,லெஸ்லி குணவர்த்தன,டோர்க் டி சோமா,ஏ.சிறீதாச,பேர்னார்ட் சொய்சா,என்எஸ்இ பெரேரா காமினி,ஆர்.ஆர்.தர்மரட்ணம்