50 ஆண்டுகளுக்கு முன்னர்: இந்தியாவில் வேலை நிறுத்தம் செய்த விவசாயத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

டிசம்பர் 25, 1968 அன்று தமிழ்நாட்டில் உள்ளூர் நிலச்சுவந்தார்கள் தலைமையில் ஒரு கும்பலால் 44 பேர் உயிருடன் எரித்துக் கொலைசெய்யப்பட்டனர். இறந்தவர்களில் பதினாறு பெண்கள், ஐந்து ஆண்கள், மற்றும் இருபத்தி மூன்று குழந்தைகளும் அடங்குவர். இந்த கொலைகள், அந்த பகுதியில் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு பதில் அளிப்பதற்காக நடத்தப்பட்டது.

கீழ்வெண்மணியில் எரித்துக்கொல்லப்பட்ட கிராமத்தவர்களின் உடல்கள்

ஏழை விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரபலமாக வளர்ச்சியடைந்து வந்தது. கூலி உயர்வுக்காகவும் மேம்பட்ட வாழ்க்கை நிலமைகளுக்காகவும் போராடுவதற்கு தொழிலாளர்கள் சங்கங்களை உருவாக்கினர். அதுவே கொலை செய்யுமளவுக்கு முக்கிய காரணமாக விளங்கியது. விவசாயிகள் மற்றும் தொழிலாள வர்க்க கிராமங்களில் செங்கொடிகள் பறப்பதை பார்ப்பதற்கு பொதுவானதாக ஆகியிருந்தது.

இந்த தொழிலாளர்களின் இயக்கத்திற்கு எதிர்வினையாக, நிலச்சுவந்தார்கள் அவர்களுக்கான சங்கத்தை உருவாக்கி, கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிக்கும் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தனர். நிலச்சுவந்தார்களின் சங்கமான "நெல் உற்பத்தியாளர்கள் சங்கம்" (Paddy Producers Association – PPA), தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கும் சிறந்த வாழ்க்கை நிலமைகளுக்கான அவர்களின் போராட்டத்தை நசுக்குவதற்குமான ஒரு கருவியாக இருந்து செயற்பட்டது. ஊதியங்களை குறைப்பதற்காக தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியும், பிற இடங்களிலிருந்து வந்த ஏழைகளை கூலிக்கு அமர்த்தியும் PPA தொடர்ந்து செயற்பட்ட போதும், தொழிலாளர்களின் அமைப்புகள் வளர்ந்து வந்தன.

இறுதியில் தொழிலாளர்கள் ஒரு வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர் மற்றும் நிலச்சுவந்தார்களிடமிருந்து அவர்களுடைய அறுவடையை விவசாயிகள் நிறுத்திவைத்தனர். நிலச்சுவந்தார்களின் தீர்வு பயங்கரவாதமாக இருந்தது. டிசம்பர் 25 அன்று, நிலச்சுவந்தார்கள் PPA வை ஆதரிக்காத ஒரு கடைக்காரரை கடத்தி தாக்கினார்கள். உடனடியாக தொழிலாளர்கள் கடைக்காரரை விடுவிக்க கட்டாயப்படுத்தி அதிக அளவில் அணிதிரண்டு பேரணி நடத்தினர். இந்த தகராறில் நிலச்சுவந்தாரின் கையாள் ஒருவன் கொல்லப்பட்டான்.

நள்ளிரவு, 200 பேர்களைக்கொண்ட கும்பலொன்று விவசாயிகளின் கிராமமான கீழ்வெண்மணிக்குள் நுழைந்து தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் துப்பாக்கிகள் மற்றும் அரிவாள்களைக் கொண்டு தாக்கினர், மேலும் அவர்களுடைய குடிசைகளை தீயிட்டு கொளுத்தினர். நேரில் பார்த்த சாட்சியங்களின்படி தாக்குதலில் ஈடுபட்டுவர்களில் பலர் காவல்துறையினரின் சீருடைகளில் வந்திருந்தனர். தாக்குதல் நடத்த தொடங்கியவுடன், 44 பேர்கள் அவர்களுடைய குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என ஒரு குடிசைக்குள் சென்று பாதுகாப்பாக இருக்க முயற்சித்தனர். ஆனால் அந்த கும்பல் அந்த குடிசைமீது தீயிட்டு கொளுத்தியதுடன் யாரும் வெளியே வந்துவிடாதபடி தடுப்பதற்கு சுற்றி வளைத்து நின்றது. ஒரு கட்டத்தில அந்த தீயிலிருந்து காப்பாற்ற இரண்டு குழந்தைகளை ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிந்தனர் ஆனால் அவர்கள் தாக்குதல்காரர்களால் திருப்பி அதற்குள்ளேயே எறியப்பட்டனர்.

படுகொலைகளுக்குப் பின்னர் தொழிலாளர்களின் சீற்றத்திற்கு அஞ்சி அந்தக் கும்பல் உடனடியாக காவல்துறையிடம் அவர்களுடைய பாதுகாப்பை பெறுவதற்கு தப்பியோடினர். ஆரம்பத்தில் ஒரு சில நிலச்சுவந்தார்கள் கைதுசெய்யப்பட்டனர் மேலும் படுகொலையில் அவர்கள் ஈடுபட்டதற்காக 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். ஆனால் பின்னர், அனைத்து குற்றங்களும் உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.

Loading