ஐரோப்பிய ஒன்றியத்துடனான மேயின் பிரெக்ஸிட் உடன்படிக்கை தொடர்பாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவாதம் ஆரம்பமாகிறது

மொழிபெர்ப்பின் மூலக்கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரதம மந்திரி தெரேசா மேயின் உடன்படிக்கை மீது அடுத்த வாரம் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல நாட்களாக நடக்கவுள்ள விவாதத்தைத் இன்று ஆரம்பிக்கிறார்கள். அந்த "முக்கியத்துவம்வாய்ந்த வாக்கெடுப்பு" ஜனவரி 15 இல் நடத்தப்பட உள்ளது.

மேயின் உடன்படிக்கை, அனைத்து எதிர்கட்சிகளாலும் மற்றும் அவரின் பழமைவாத கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களாலும் எதிர்க்கப்படுகிறது. கடந்த மாதம் கடைசி நிமிடத்தில் இந்த உடன்படிக்கை மீதான ஒரு வாக்கெடுப்பை அவர் இரத்து செய்த பின்னர், இந்த விவாதத்தை நடத்தவும் வாக்கெடுப்புக்கு விடவும் அவர் நிர்பந்திக்கப்பட்டுள்ளார். இதில் அவர் பெரியளவில் தோல்வியடையக்கூடும் என்பதும், அவரின் பிரதம மந்திரி பதவியையே அச்சுறுத்தலில் உள்ளது என்பதும் மே க்கு நன்குத் தெரியும்.

டோரிக்கள், சிறுபான்மை அரசாங்கமாக ஆட்சி செய்வதற்கு, “பிரிட்டன் கடுமையாக வெளியேறுவதை" ஆதரிக்கும் ஜனநாயக ஒன்றியக் கட்சியின் (DUP) 10 நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சார்ந்துள்ள நிலையில், ஜனநாயக ஒன்றியக் கட்சி இப்போது அந்த உடன்படிக்கையை எதிர்க்க சூளுரைத்துள்ளதால், மே முகங்கொடுக்கும் நெருக்கடி இடைக்காலத்தில் ஆழமடைந்து மட்டுமே உள்ளது. பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை எட்டப்படும் வரையில், வடக்கு அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் காலவரையின்றி "பின்னோக்கி செல்லக்கூடிய" சுங்கவரி ஒத்துழைப்பு ஒன்றிய உடன்படிக்கையில் (Customs Union agreement) இருக்க வேண்டும் என்பது, பல ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும் என்பதால் அவர்கள் அதை எதிர்க்கின்றனர். ஞாயிறன்று, DUP இன் துணை தலைவர் நைஜல் டோட்ஸ் கூறுகையில், “இதை ஒரு மோசமான உடன்படிக்கையாக ஆக்கும் அடிப்படை பிரச்சினைகள் மாற்றப்படாமலேயே இருப்பதாக தெரிகிறது,” என்றார். “பின்னோக்கி செல்லக்கூடிய என்ற நிலைப்பாடு, வெளியேறும் உடன்படிக்கை மீதான எந்தவொரு வாக்கெடுப்பையும் அது மிகவும் நச்சுத்தன்மைக்குரியதாக ஆக்குகிறது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஐரோப்பிய ஒன்றியம், மேயின் உடன்படிக்கை அறிவிக்கப்பட்ட டிசம்பர் ஆரம்பத்தில் இருந்தே, பேச்சுவார்த்தைகள் இப்போது எழுத்து வடிவில் முடிந்து விட்டன என்றும், இது முழுமையடைய இரண்டாண்டுகள் ஆனது என்றும் கூறுகிறது. இதற்கிடையிலும், அடுத்த வாரம் வாக்கெடுப்பு வரவிருக்கின்ற நிலையிலும், பிரிட்டன் தொடர்ந்து புரூசெல்ஸ் உடன் இன்னமும் பேச்சுவார்த்தைகளில் இருப்பதாக மே கூறுகிறார். அந்த ஆவணத்தில் "மாற்றங்களை" பெற முடியுமென அவர் நம்புவதாகவும், "பின்னோக்கி செல்லக்கூடிய” ஏற்பாடுகள் மீது சட்டரீதியில் பிணைந்த உத்தரவாதங்களைப் பெற ஐரோப்பிய ஒன்றியத்துடன் "இன்னமும் செயலாற்றி" வருவதாகவும் மே ஞாயிறன்று பிபிசி இன் "ஆண்ட்ரூ மர் நிகழ்ச்சியில்" தெரிவித்தார். வாக்கெடுப்புக்கு முன்னதாக, மே வடக்கு அயர்லாந்து எல்லை சம்பந்தமான அரசாங்க முன்மொழிவுகளை விவரிக்க இருப்பதுடன், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால அடுத்தக்கட்ட உறவுகள் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக பாத்திரம் வகிப்பதற்கான வாய்ப்புகளையும் விவரிக்க உள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியமோ, பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாக பொதுமக்களிடையே அதன் நிலைப்பாட்டை பேணி வருகிறது. கடந்த வியாழனன்று, ஐரோப்பிய ஆணைக்குழுவின் மினா ஆண்ட்ரீவா வலியுறுத்துகையில், “நாங்கள் மேசையில் இருப்பதன் மீது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கவில்லை,” என்றார். திங்களன்று பிரெஞ்சு ஐரோப்பிய அமைச்சர் Nathalie Loiseau கூறுகையில், மே க்கு சில உத்தரவாதங்கள் வழங்கப்படலாம் ஆனால், “இத்தகைய அரசியல் உத்தரவாதங்கள் ... தவிர கூடுதலாக நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை,” என்றார்.

முன்கூறமுடியாத பொருளாதார மற்றும் சமூக விளைவுகள் ஏற்படும் என்ற நிலையில், புரூசெல்ஸ் மீது கூடுதலாக அழுத்தமளிக்கவும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் உடன்படிக்கையை ஆதரிக்குமாறு நிர்பந்திக்கவும், மார்ச் இறுதியில் "உடன்பாடு எட்டப்படாமல்" பிரிட்டன் வெளியேறுவதற்கு அதிகரித்து வரும் சாத்தியக்கூறைப் பயன்படுத்திக் கொள்ள மே முயன்று வருகிறார். அவர் கூறினார், “ஸ்கொட்லாந்து,” “வரவிருக்கும் இந்த வாக்கெடுப்பில் இந்த உடன்படிக்கைக்கு வாக்குகள் விழவில்லை என்றால், சொல்லப்போனால் பின் நாம் திசை தெரியாத பிரதேசத்தில்,” ஆபத்திற்குள் "சென்று கொண்டிருப்போம்,” “சொல்லப்போனால் நாம் முற்றிலும் உடன்பாடு எட்டப்படாமல் நிற்போம்.” “எதிர்வினையைப் பொறுத்த வரையில் நாடாளுமன்றத்தில் என்ன நடக்கும் என்பதை யாராலும் துல்லியமாக கூறவியலாது என்றே நான் நினைக்கிறேன்,” என்றளவுக்கு ஒரு நெருக்கடி ஏற்படலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவும், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவம் மீது இரண்டாவது கருத்து வாக்கெடுப்பை ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவும் அந்த உடன்படிக்கையை எதிர்க்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அத்துடன் அவர் சொந்த கட்சிக்குள்ளேயும் மற்றும் DUP க்கு உள்ளேயும் உள்ள கடுமையாக பிரிட்டன் வெளியேறுவதை ஆதரிக்கும் பிரிவு என அனைவரும் "நமது ஜனநாயகம் மற்றும் நமது பிராந்தியங்கள் பிழைத்திருப்பது சம்பந்தமாக அவர்கள் ஏற்படுத்தி வரும் அபாயங்களை உணர" வேண்டும் என்றார்.

எல்லா கட்சிகளையும் சேர்ந்த 200 வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன்பாடு எட்டப்படாமல் பிரிட்டன் வெளியேறுவதைத் தடுக்க ஒன்றிணைந்து வருவதாக டெய்லி மெயில் குறிப்பிட்டது. டோரி மந்திரிசபை அமைச்சர் டேம் கரோலின் ஸ்பெல்மன் மற்றும் தொழிற் கட்சி முன்னணி பிரமுகர் ஜாக் திரோமெ தலைமையிலான பிரதிநிதிகள் குழு இவ்வார பேச்சுவார்த்தைகளுக்காக மே ஐ சந்திக்க உள்ளனர். டோரிக்கள் சர் ஒலிவர் லெட்வின், நிக்கி மோர்கன் மற்றும் டோமினிக் கிரீவ் ஆகியோரையும், தொழிற் கட்சியைச் சேர்ந்த ஹர்ரியத் ஹார்மன், வெட் கூப்பர், பென் பிராட்ஷா மற்றும் லியம் பிரைன் ஆகியோரையும், அத்துடன் முன்னாள் தாராளவாத ஜனநாயக கட்சியின் எரிசக்தித்துறை செயலர் சர் எட் டேவே ஆகியோரும் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக, வாகனத்துறை உற்பத்தியாளர்களும் மற்றும் ஜாக்குவார் லாண்ட் ரோவர், ஃபோர்டு, ரோல்ஸ்-ரோய்சி, ஏர்பஸ் ஆகிய பொறியியல் துறை நிறுவனங்களும் மற்றும் பிரிட்டிஷ் தொழில்துறை கூட்டமைப்பு, பொறியியல் துறை முதலாளிமார்களின் கூட்டமைப்பு, வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சமூகம் உட்பட முதலாளிமார்களின் பிரதிநிதிகளும், பெருவணிக ஆதரவாளர்களாக உள்ளனர் என்று செய்திகள் தெரிவித்தன.

பிரான்சில் மஞ்சள் சீருடை இயக்கம் போன்ற சமூக செலவினக் குறைப்புக்கு எதிரான பெருந்திரளான மக்கள் போராட்டங்கள், பொருளாதார கொந்தளிப்பு மற்றும் வர்த்தகப் போர் அச்சுறுத்தல், ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு வலதுசாரி கட்சிகளின் வளர்ச்சி உட்பட அக்கண்டம் எங்கிலுமான அரசாங்கங்களுக்கு அதிகரித்து வரும் நெருக்கடிக்கு மத்தியில், புரூசெல்ஸ் கடுமையான இடத்திற்கும் மிகக் கடுமையான இடத்திற்கும் இடையே சிக்கிக் கொண்டுள்ளது. ஒரு குழப்பமான உடன்பாடு எட்டப்படாமல் பிரிட்டன் வெளியேறுவதன் விளைவாக விடயங்கள் மோசமடைவதை அது விரும்பவில்லை என்றாலும், பிரிட்டனுக்கு விட்டுக்கொடுப்புகள் வழங்குவது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையைப் பலவீனப்படுத்தி, மற்ற நாடுகளும் விட்டுக்கொடுப்புகளைக் கோர எரியூட்டும் என்று அது அஞ்சுகிறது.

திங்களன்று, ஐரிஷ் பிரதம மந்திரி லியோ வராட்கர் கூறுகையில், மே இன் உடன்படிக்கைக்குப் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பைத் தணிக்க, ஐரோப்பிய ஒன்றியம் அவருக்கு "எழுத்துபூர்வமான உத்தரவாதங்கள், விளக்கங்கள் மற்றும் உறுதிமொழிகள்" வழங்க தயாராக இருப்பதாக கூறினார். “[ஜனவரி 15] வாக்கெடுப்பில் [மே] தோற்பாரென எதிர்பார்க்கப்படுகிறது" என்றாலும் "... அனேகமாக ஜனவரி இறுதியில் அல்லது பெப்ரவரி ஆரம்பத்தில் வரவிருக்கின்ற இரண்டாவது வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறுதியான புரிதல் ஏற்படுமென அவர் நம்புகிறார்—மார்ச் 29 இல் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு அந்த அணியிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதைப் பிரதம மந்திரி தள்ளி வைக்க வேண்டியிருக்கும் என்ற அனுமானங்கள் அதிகரித்து வருகின்றன,” என்று பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கும் சட்டமசோதா ஷரத்து 50 ஐ நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதை, அதிலேயே தங்கியிருப்பதை ஆதரிக்கும் ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள், பிரிட்டன் வெளியேறுவதை வெற்றிகரமாக அவர்களால் தவிர்ப்பதற்கு இன்றியமையாததாக பார்க்கிறது. ஸ்காட்டிஷ் தேசிய கட்சி மற்றும் தாராளவாத ஜனநாயகவாதிகளுடன் கூட்டணியில் உள்ள தொழிற் கட்சியின் வலதுசாரி, அக்கட்சி தலைவர் ஜேர்மி கோர்பினின் தற்போதைய நிலைப்பாட்டுக்கு எதிராக இரண்டாவது கருத்து வாக்கெடுப்புக்கான ஆதரவைப் பெறும் வகையில் தொழிற் கட்சியின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கு வெறித்தனமாக முயன்று வருகிறது. கோர்பின், செல்வாக்கான வணிகப் பிரிவுகளுக்கு இன்னும் அனுகூலமாக பிரெக்ஸிட் உடன்படிக்கையை பேரம்பேச, ஒரு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலமாக டோரிக்களை நீக்கி ஒரு பொது தேர்தலைக் கொண்டு வருவதை ஆதரிக்கிறார்.

பிளேயரிச தலைமையிலான People’s Vote நடத்திய ஒரு கருத்துக்கணிப்பு உட்பட வழமையாக வெளியாகி வரும் கருத்துக்கணிப்புகளோ, தொழிற் கட்சி அங்கத்தவர்களில் பெரும்பான்மையினரும் வாக்காளர்களும் இரண்டாவது கருத்து வாக்கெடுப்புக்கு ஆதரவாக இருப்பதாக கூறுகின்றன. இதே People’s Vote ஆய்வானது, “தெரியவில்லை" என்பதை கழித்துப் பார்த்தால், ஐரோப்பா விட்டு வெளியேறலாம் என்று வாக்களிக்கும் 46 சதவீதத்தினருடன் ஒப்பிட்டால், ஒட்டுமொத்தமாக பிரிட்டன்வாசிகளில் 54 சதவீதத்தினர் ஐரோப்பாவிலேயே தங்கியிருக்கலாம் என்பதற்கு வாக்களிப்பார்கள் என்பதைக் கண்டறிந்தது. இது அதிலேயே தங்கியிருக்கலாம் என்பதை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் தான் என்றாலும், இன்னமும் ஆழ்ந்த பிளவுகளையே காட்டுகிறது.

கருத்துக்கணிப்புகள் 2016 கருத்து வாக்கெடுப்புக்கு முன்னதாக கூட இதே போல அதிலேயே தங்கியிருக்கலாம் என்பதற்கான வெற்றியையே சிறிய வித்தியாசத்தில் காட்டின, ஆனால் 52-48 சதவீதத்தில் வெளியேறலாம் என்பதே வென்றது. அனைத்திற்கும் மேலாக, அதிக வித்தியாசத்தில் இரண்டாவது கருத்து வாக்கெடுப்புக்கு ஆதரவைக் காட்டும் YouGov கருத்துக்கணிப்பு, ஒரு சிறந்த பிரெக்ஸிட் உடன்படிக்கையைப் பேரம்பேசுவதற்காக டோரிக்களை நீக்கி விட்டு ஒரு பொதுத் தேர்தலை நிர்பந்திக்க கோரும் கோர்பினின் கொள்கையை ஆதரிக்கும் தொழிற் கட்சி உறுப்பினர்களில் 47 சதவீதத்தினர் கோர்பினின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக உள்ளனர், 29 சதவீதத்தினர் அதை எதிர்க்கின்றனர், 19 சதவீதத்தினர் முடிவெடுக்கவில்லை என்பதைக் கண்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கும் Observer இல் ஆண்ட்ரூ ராவ்ன்ஸ்லே எழுதுகையில், “தொழிற் கட்சி ஆதரவாளர்களின் முடிவு தெளிவாக உள்ளது. அவர்கள் மற்றொரு கருத்து வாக்கெடுப்பை விரும்பினால், அவர்கள் அவர்களின் தலைவரிடம் இருந்து பாடம் படித்து, அவரை எதிர்த்து கிளர்ச்சி செய்ய வேண்டியிருக்கும்,” என்றார். இது 2016 கருத்து வாக்கெடுப்புக்குப் பின்னர் தொடங்கிய முயற்சிகளின் ஒரு தொடர்ச்சியாகும், அப்போது 172 வலதுசாரி தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிலேயே தங்கியிருக்கலாம் பிரச்சாரத்திற்கு ஆதரவாக அவர் மந்தமாக இருப்பதாக அவருக்கு எதிராக பிரதான குற்றச்சாட்டுகளை சுமத்தி கோர்பினுக்கு எதிராக தோல்வியடைந்த ஒரு பதவிக்கவிழ்ப்பு சதியை நடத்தினர்.

இதுவரையில் கோர்பின் அவரின் நிலைப்பாட்டையே உத்தியோகபூர்வமாக பேணி வருகிறார், அதேவேளையில் அரசாங்கத்திற்கு எதிராக எப்போது அவர் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நகர்த்துவார் என்பதை சுட்டிக்காட்டவில்லை—மேலும் மே இன் உடன்படிக்கை நிராகரிக்கப்பட்டால் அவரை புரூசெல்ஸிற்குத் திரும்ப செல்ல கோர இருப்பதாகவும் அவர் கார்டியனுக்குக் கூறியுள்ளார். ஆனால் நிழல் அமைச்சரவை சான்சிலர் ஜோன் மெக்டொன்னெல் கூறுகையில் டோரிக்களை நீக்குவதற்கு நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு வெற்றிபெறவில்லை என்றால் இரண்டாவது கருத்து வாக்கெடுப்பிற்கு தொழிற் கட்சி ஆதரிப்பது "தவிர்க்கவியலாதது" என்பதை தெளிவுபடுத்தினார். கோர்பின் வலியுறுத்திய நாடாளுமன்ற பெரும்பான்மை அதுபோன்றவொரு விளைவைத் தடுக்கும் என்பதால் அரசாங்கத்தின் "அச்சத்தின் செயல்திட்டம்" (Project Fear) இருப்பதால், “உடன்பாடு எட்டபடாத பிரெக்ஸிட்" க்குத் தயாரிப்புகளை கோர்பின் இவ்வாரம் விவரித்தார்.

உடன்பாடு எட்டப்படாத பிரெக்ஸிட்டை மேசையில் இருந்து நீக்கும் வரையில் அரசாங்கத்தின் வரி அதிகாரங்களைத் தடுக்கும் வகையில் அரசாங்கத்தில் இடம்பெறாத முன்னணி பிளேயரிச Yvette Cooper கொண்டு வந்த நிதி மசோதா சட்டதிருத்தத்தை ஆதரிக்குமாறு தொழிற் கட்சி அதன் உறுப்பினர்களை வலியுறுத்தியது.

அந்த சட்டத்திருத்தத்தை 20 டோரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரித்த நிலையில், 303 க்கு 296 என்று அரசாங்கம் தோல்வியடைந்ததை அந்த வாக்கெடுப்பு கண்டது.

அந்த தோல்வி பெரிதும் ஒரு அடையாளமாகவே இருக்கும் என்றாலும், ஒரு புதிய சர்வஜன வாக்கெடுப்புக்கான எந்த பிரச்சாரத்திலும் இன்றியமையாததாக இருக்கும் தங்கியிருக்கலாம் என்பதை ஆதரிக்கும் டோரிக்களுடன் கூட்டணியை உருவாக்க கோர்பின் தயாராக இருப்பதை அது சுட்டிக்காட்டுவதாக உள்ளது.

Loading