ஜூலியன் அசான்ஜிற்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா தயாரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

47 வயதான விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜின் மீது "குற்றவியல் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதை" அமெரிக்க மத்திய அரசாங்க வழக்குத் தொடுனர்கள் உறுதிப்படுத்தியதாக புதன்கிழமை CNN தெரிவித்தது. அண்மையில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆவணத்தின் படி, அசான்ஜுடன் "இணைந்தவர்கள்" விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் வழக்குத் தொடுனர்கள் குறிப்பிட்டனர். CNN அறிக்கையின் படி, இந்த விசாரணையுடன் தொடர்புடைய ஆககுறைந்த ஒரு புதிய ஆவணம் "நடந்துகொண்டிருக்கும் நடவடிக்கையின்" காரணமாக பகிரங்கமாக வெளிவிடப்படவில்லை.

“சமீபத்திய நாட்களில் விக்கிலீக்ஸ் குறைந்தபட்சம் ஒரு குற்றச்சாட்டுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அது மேலும் குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும்" என்றும் CNN மற்றும் பிற செய்தித்துறை அறிக்கைகள் உறுதிப்படுத்துவதாக CNN தெரிவித்தது.

அசான்ஜிற்கு எதிரான கணினி ஊடுருவல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவதற்கு ஒரு சாக்குப்போக்காகும் மற்றும், அதற்குப் பின்னர் மேலதிக குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக கொண்டு வரப்படும் என்ற WSWS மற்றும் மற்றவர்களின் எச்சரிக்கைகளை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

ஏப்ரல் 11 ம் திகதி, அசான்ஜ் லண்டனில் உள்ள ஈக்வடோரிய தூதரகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு ஒரு கடவுச்சொல் மாற்றீட்டு சதி தொடர்பான பொது குற்றச்சாட்டு மீது பிரிட்டிஷ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போரின் பதிவுகள் பற்றிய 2011 விக்கிலீக்ஸ் வெளியிட்ட நாளில் இருந்து இந்த குற்றச்சாட்டு மீண்டும் வருகிறது. அமெரிக்க போர்க்குற்றங்கள் மற்றும் ஊழல்களை வெளிப்படுத்தும் அரை மில்லியன் ஆவணங்களை விட கூடுதலாக பிரசுரிப்பதற்காக விக்கிலீக்ஸிற்கு செல்சியா மானிங் வழங்கினார்.

அசான்ஜை வெளியேற்றுதல் மற்றும் கைது செய்தல் என்பன அசான்ஜை ஒரு முக்கியமற்றவர் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு தகுதியானவர் அல்ல என்பதை நோக்கமாகக் கொண்ட அவதூறு, ஊடகங்களின் ஒரு பிரச்சாரத்தோடு இணைந்து நடத்தப்படுகிறது.

ஆனால் Belmarsh உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் அசான்ஜ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், முன்னணி ஜனநாயகக் கட்சியினர் மற்றும் அமெரிக்க ஊடக அதிகாரிகளால் கூறப்பட்ட பகிரங்கமான கருத்துக்கள், இந்த குற்றச்சாட்டு, அமெரிக்க விசாரணையின் முக்கிய நோக்கம் அல்ல என்று சுட்டிக்காட்டுகின்றன.

"இப்போது ஜூலியன் அசான்ஜ் கைது செய்யப்பட்டுள்ளார், புட்டின் மற்றும் ரஷ்ய அரசாங்கத்தின் சார்பில் எங்கள் தேர்தல்களில் தலையிட்டதற்கு அவர் பதில்கூறுவதற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என்று ஜனநாயக செனட் சிறுபான்மைத் தலைவர் சார்ல்ஸ் சூமர் ட்வீட் செய்தார். அசான்ஜ் "அமெரிக்காவில் 2016 ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய இரகசிய அரசாங்க ஆவணங்கள் மற்றும் இரகசியங்களை வெளியிட்டதன் மூலம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பில் மீண்டும் மீண்டும் தலையீடு செய்தார்" என்று வெளி விவகார குழுவின் ஜனநாயகக் கட்சி தலைவர் எலியட் ஏஞ்சல் ட்வீட் செய்தார்.

அமெரிக்கா, பிரிட்டிஷ் மற்றும் ஈக்வடோர் அரசாங்கங்கள் அசான்ஜின் நாடுகடத்தலை நியாயமானது என்று வாதிடுகின்றன, ஏனென்றால் செல்சியா மானிங் இற்கு ஒரு கடவுச்சொல்லை கொடுக்க உதவ முயற்சித்த ஒரு குற்றச்சாட்டின் மீதே அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் அது வெறும் சாக்குப்போக்கு என்று இப்போது வெளிப்பட்டுள்ளது. தகவல் வெளியீட்டாளரை அமெரிக்கா காவலில் வைப்பதற்கு விரும்பும் உண்மையான காரணம் சூமர் மற்றும் ஏஞ்சல் என்பவர்களால் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15 ம் திகதி WSWS, போலியான குற்றச்சாட்டுகளின் கீழ் நாடுகடத்தப்படுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை இந்த அறிக்கைகள் காட்டுகின்றன என்று எழுதியது. "ஒரேயொரு பகிரங்க குற்றச்சாட்டு என்பது ஒரு மூடிமறைப்பாகும். அரசாங்கம் அசான்ஜை விசாரணை செய்யத் திட்டமிட்டுள்ளதுடன், அமெரிக்க போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக மேலும் குற்றம்சாட்டவும் மற்றும் சாட்சியம் வழங்குவதற்கும் நிர்பந்திக்கின்றது." ("ஜூலியன் அசான்ஜின் அசாதாரண நாடுகடத்தலை நிறுத்து!")

டிசம்பர் 2017 ல் அமெரிக்க வழக்கறிஞர்கள், அசான்ஜ் முகம்கொடுக்கும் குற்றச்சாட்டுகளை இரகசியமாக வைத்திருக்க விரும்புவதாக ஒரு மத்திய அரசாங்க நீதிபதிக்குத் தெரிவித்தனர். இல்லையென்றால், அவற்றைப் பற்றி அவர் அறிந்து கொள்வதன் மூலம் அவர் ஈக்வடோர் தூதரகத்தை விட்டு தப்பிக்கலாம் என்று தெரிவித்தனர். CNN கருத்துப்படி, சமீபத்தில் வெளிவந்த ஆவணங்கள் வேர்ஜினியாவில் ஒரு பெரிய நீதிபதி அசான்ஜை 2018 ல் குற்றஞ்சாட்டினார் என்றும் மற்றும் அதே காரணத்திற்காக குற்றச்சாட்டுகள் இரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று வழக்கறிஞர்கள் மீண்டும் கோரினர், ஆதாரங்கள் பொய்மையாக்கல் மற்றும் சாட்சிகள் அச்சுறுத்தல் பற்றி தங்களது கவலைகளையும் அவர்கள் சேர்த்துக் கொண்டனர்.

லண்டன் தூதரக அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த போது, அசான்ஜை வலதுசாரி Gateway Pundit வலைத் தளத்திலிருந்து Cassandra Fairbanks என்பவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை சந்தித்தார். அசான்ஜுடனான சந்திப்பு சமீபத்திய விசாரணையை பற்றியது என்பதை அப்பெண்மணி உறுதிப்படுத்தினார்.

"திங்களன்று, ஜூலியனுக்கு எதிரான ஒரு இரகசிய பெரும் விசாரணை இருப்பதாக எனக்குத் அறிவிக்கப்பட்டது. இரண்டு சாட்சிகளிடம் அவருடன் என் சந்திப்பு பற்றி கேள்விகேட்கப்பட்டனர். இருந்த போதிலும், அவர்கள் என்னை முன்கூட்டி நேரடியாக அழைக்கவோ கேள்வி கேட்கவோ இல்லை" என்று உலக சோசலிச வலைத் தளத்திடம் அவர் கூறினார்.

அசான்ஜை சந்தித்த அமெரிக்க நபர்களை பற்றி அவர்கள் அறிந்திருந்தார்களா என்பதை தனித்தனியாக தம்மிடம் கேட்டிருந்ததாக சாட்சிகள் என்னிடம் கூறினார்கள். அவர்கள் உண்மையில் கேள்விக்கு பதில் சொல்லாதபோது, அவர்கள் குறிப்பாக என்னைப் பற்றியும் அசான்ஜை சந்திக்க வந்த மற்றவர்களின் பட்டியலையும் கேட்டார்கள்."

அசான்ஜ் கைது செய்யப்பட்டதில் இருந்து, கைதிகளின் சித்திரவதைகளை அம்பலப்படுத்தியதற்காக 2012 ல் ஒபாமா நிர்வாகத்தால் குற்றஞ்சாட்டப்பட்ட CIA இன் தகவல் வெளியிட்டவரான John Kiriakou, அசான்ஜ் அமெரிக்காவில் நியாயமான விசாரணையை சந்திக்க வாய்ப்பு இல்லை என்று சமூக ஊடகங்களில் வலியுறுத்தியுள்ளார். "லியோனி பிரிங்கிமா என்ற நீதிபதி தலைமையில் வேர்ஜீனியாவின் கிழக்கு மாவட்டத்தில் ஒரு நியாயமான விசாரணை முற்றிலும் சாத்தியமற்றதாகும். அவர்கள் "உளவு நீதிமன்றமான" EDVA வை எதற்கும் அழைக்கவில்லை" என்று அவர் எழுதினார்.

Loading