ஜே.வி.பி. தலைவர் "முஸ்லிம் அதிதீவிரவாதத்துக்கான" பொறுப்பை "முஸ்லிம் சமூகத்தின்" மீது திணித்து முஸ்லிம் விரோத பிரச்சாரத்திற்கு எண்ணெய் வார்க்கின்றார்

மொழிபெயர்ப்பின் மூலக்கட்டுரையை இங்கே காணலாம்

ஏப்ரல் 21 அன்று, இஸ்லாமிய அதிதீவிரவாதிகளே பயங்கரவாத குஇங்கேண்டுத் தாக்குதலை நடத்தியதால், அந்த "அதிதீவிரவாதத்தின் கருப்பையான முஸ்லீம் சமூகமே" அதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும், என மே 7 அன்று பாராளுமன்ற விவாதத்தில் பங்குபற்றிய ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மறுநாள், மே 8 அன்று, ஜே.வி.பி. தனது தலைமையகத்தில் முஸ்லீம் "சமூகத் தலைவர்கள்" சிலரை அழைத்ததோடு, அங்கும் திசாநாயக்க பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களுக்கான பொறுப்பை முஸ்லீம் சமூகத்தின் மீது சுமத்துவதற்கு கொடூரமான முறையில் முயற்சித்தார். உண்மையில், இது ஒரு கலந்துரயாடல் வடிவத்தில் செய்யப்பட்ட இனவெறி அச்சுறுத்தல் ஆகும்.

பெரும்பான்மையான முஸ்லிம் "சமூகத் தலைவர்கள்" திசாநாயக்கவின் இனவாத குதர்க்கத்தை ஏற்கவில்லை. ஒரு "சமூகத்தலைவர்", சிங்கள-பௌத்த தீவிரவாதிகள் முஸ்லீம் இனத்தவர்களுக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுத்த அழுத்தங்களினால் குழும்பிப் போன முஸ்லிம் இனத்தவர் மத்தியில் இருந்த ஒரு சிலர், இந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர், என்று கூறினார். “ஒரு நபர் மீண்டும் மீண்டும் நெருக்கப்பட்டால் அவர் மனிதனாக அன்றி மிருகமாகவே செயற்படுத் தள்ளப்படுவார்" என்று அவர் கூறினார்.

திசாநாயக்கவின் மேற்கூறிய கருத்து அவரது எல்லா உரைகளலும் அடிப்படைக் தொணிப்பொருளாக உள்ளது. மே 1 அன்று, சிரச தொலைக் காட்சியில் "இலக்கு" நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன் மூலம் இந்த தர்க்கத்தை அவர் பலமாக வலியுறுத்தினார்.

இந்த முஸ்லீம்-விரோத தர்க்கத்தை, தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்கள் இழிவுடன் நிராகரிக்க வேண்டும்.

அதிதீவிரவாத அரசியல் இயக்கங்களின் மூலங்கள், மதங்களில் அன்றி, உலக முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகள் கூர்மையடைவதன் காரணத்தால் தோன்றும் சமூக பொராளாதர நெருக்கடியின் விளைவிலேயே தங்கியிருக்கின்றன. இத்தகை நெருக்கடியின் போது, ஆளும் வர்கங்கள் மத பிற்போக்குத் தனத்தைப் பயன்படுத்திக்கொள்வது இரகசியமானதல்ல.

ஏப்பிரல் 21 அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பும் கூட, அமெரிக்கா அதன் புவிசார் அரசியல் நோக்கங்களுக்காக கட்டியெழுப்பி வளர்த்து விட்ட ஒன்று என்பது வெளிப்படையான விடயமாகும்.

பயங்கரவாதத்தின் கருப்பை மதவாதம் அன்றி, நெருக்கடியில் மூழ்கிப் போயுள்ள முதலாளித்துவமே என்ற உண்மையை மறைத்து, முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் இருந்து தொழிலாள வர்க்கத்தை திசைதிருப்புவதற்கே, ஜே.வி.பி. இன் தலைவர் தனது தர்க்கத்தை மேம்படுத்துகிறார்.

"இலக்கய" (இலக்கு) நிழக்ச்சியில் ஜே.வி.பி. தலைவரின் இந்த முயற்சிகள் இன்னும் தெளிவாக வெளிப்ட்டன. திசாநாயக்க, அதிதீவிரவாத இயக்கங்களின் வளர்ச்சிக்கு காரணம், "திறனற்ற அரசாங்கங்களே" என்று திசாநாக்க அங்கு குறிப்பிட்டார். அவரின் கூற்றுப் படி, நெருக்கடியின் வேர் முதலாளித்துவமல்ல, முதலாளித்துவத்தின் கீழூம் கூட திறமையான அரசாங்கத்தின் மூலம் பயங்கரவாதம் உட்பட, நெருக்கடியை தடுத்துக்கொள்ள முடியும்.

"அதிகாரப் போட்டியை" ஓரங்கட்டி விட்டு, முதலாளித்துவ ஸ்தாபகத்தின் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையை விளக்கிய, திசாநாயக்க, "இரண்டு முகாம்கள் தான் உள்ளன. நாங்கள் ஒரு புறத்தில் இருக்கிறோம், இஸ்லாமிய அதிதீவிரவாதிகள் மற்றைய பக்கத்தில் உள்ளனர்," என பிரகடனம் செய்தார்.

அவர் “எங்கள் பக்கம்” எனக் கூறியது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி, போலி இடது கட்சிகள் மற்றும் முதலாளித்துவ ஊடகங்கள் உட்பட முழு முதலாளித்துவ ஸ்தாபகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் "முகாமைப்" பற்றியே ஆகும்.

"இஸ்லாமிய அதிதீவிரவாதத்தை" அடக்குவதற்கு என்ற பெயரில், தொழிலாளர்களதும் ஏனைய ஒடுக்கப்பட்டவர்களதும் போராட்டங்களை நசுக்குவதற்கு, அரசாங்கத்தால் அமுல்படுத்தப்படும் கொடூரமான பொலிஸ்-அரச திட்டங்கள் பற்றி, இந்த முகாமில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் இடையில் ஒரு அடிப்படை உடன்பாடு உள்ளது.

அரசாங்கம், அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி, எந்தவொரு நபரையும் கைது செய்து தடுத்து வைக்கவும் ஒப்புதல் வாக்கமூலம் பெறவும் பொலிஸ் மற்றும் இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. அதில் திருப்தி அடையாத திசநாயக, ஒரு "வலுவான சட்ட அமைப்பு" உருவாக்கப்பட்டு, "பாதுகாப்பு இயந்திரம் மறுசீரமைக்கப்பட வேண்டும்" என்றும் வலியுறுத்துகிறார்.

"ஒவ்வொரு அரசியல் தலைவருக்கும் இந்த எண்ணம் இருக்க வேண்டும்," என்று கபடத்தனமாக கூறிய அவர், "இது வேரைத் தாக்குவதற்கான நேரம் இல்லை," என்றார்.

"வேரைத் தாக்குவது" என்றால் என்ன என்பதை திஸாநாயக்க வெளிப்படையாக விளக்கவில்லை என்றாலும், அவரது கலந்துரையாடலின் பின்னணியையும் ஜே.வி.பி.யின் வரலாற்றையும் எடுத்துக்கொள்ளும் போது, இது மிகவும் தெளிவாக உள்ளது. அடிப்படை அர்த்தத்தில், "வேரைத் தாக்குவது" என்பது, முதலாளித்துவ அரசுக்கு எதிரான போராட்டமாகும். அதாவது அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாள வர்க்க வெகுஜனங்களின் வர்க்கப் போராட்டங்களாகும். திசாநாயக்க, இது அதற்கான நேரம் இல்லை என்கிறார்.

1988-89 கால கட்டத்தில், "நாட்டுப்பற்று" மற்றும் "தேசதுரோகம்" என்ற இரண்டு முகாம்களை பிரித்த ஜே.வி.பி., "தாய்நாடே முதலாவது இரண்டாவதே வேலைத்தளம்," என்ற கோஷத்தின் மூலம் வர்க்கப் போராட்டத்தை ஒத்திப் போட்டது.

இனவாத போர் நடந்த மூன்று தசாப்தங்களாக, வர்க்கப் போராட்டம் நடந்த எல்லா சமயங்களிலும், ஜே.வி.பி. யுத்தத்தை பிரதானமானதாக காட்டி, வர்க்கப் போராட்டத்திற்கு குழி பறிக்கவும் வர்க்கப் போராட்டங்களை நசுக்குவதற்கும் முதலாளித்து அரசாங்கங்களுடன் கூட்டாக வேலை செய்தது.

இந்த வரலாற்றை ஆய்வு செய்து சிரச தொலைக்காட்சி பேட்டியில் பேசிய திசாநாயக்க, "சில நேரங்களில் நாம் நாட்டைப் பற்றி நினைத்து அரசியல் முடிவுகளை எடுத்துள்ளோம்," எனத் தெரிவித்தார்.

1977 இல் சிறிமா பண்டாரநாயக்கவின் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கவும், 1994 இல் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் பொதுஜன முன்னணியை ஆட்சிக்கு கொண்டு வரவும் மற்றும் 2005 இல் மஹிந்த இராஜபக்ஷவை ஜனாதிபதி ஆக்குவதற்கு உழைத்தது போலவே 2015 இல் வாஷிங்டனின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்றத்தின் போதும் ஜே.வி.பி. "நாட்டைப் பற்றி சிந்தித்து" அந்த பிற்போக்குத் சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்திருந்தது.

ஜே.வி.பி, “நாட்டைப் பற்றி சிந்தித்து” எடுத்த அரசியல் முடிவுகளில், 2003 இல் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஜனநாயக விரோதமான முறையில் பதவி நீக்குவதற்கு பிற்போக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆணையை பயன்படுத்தலாம் என குமாரதுங்கவுக்கு அழுத்தம் கொடுத்ததோடு, விக்கிரமசிங்க அரசாங்கம் அகற்றப்பட்ட பின்னர் அமைக்கப்பட்ட "இடைக்கால அரசாங்கத்திலும்" ஜே.வி.பி. அமைச்சுப் பொறுப்புக்களை பெற்று, தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது தொடுத்த தாக்குதல்கள் குறிப்பிடத் தக்கவை ஆகும்.

மாவோவாதம் காஸ்ட்ரோவாதம் மற்றும் சிங்களம் பெளத்த பேரினவாதத்தைத்தினதும் கலவையை அடிப்படையாகக் கொண்ட, தேசிய குட்டி முதலாளித்துவ தீவிரவாத இயக்கமாக 1960களின் நடுப்பகுதியில் தலைதூக்கிய ஜே.வி.பி., 1988-89 கால கட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பாசிச வடிவிலான படுகொலைப் பிரச்சாரத்தை முன்னெடுத்து.

1980 தோன்றிய உற்பத்தியின் பூகோளமயமாக்கல் உடன், உலகம் முழுதும் இத்தகைய தேசியவாத இயக்கங்கள், தமது ஏகாதிபத்திய-எதிர்ப்பு மற்றும் சோசலிச வாய்ச்சவடால்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அந்தந்த நாடுகளின் முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய முகாமில் முழுமையாக இணைந்துகொண்டன. ஜே.வி.பி. இன் தர்க்க ரீதியான முடிவும் அதுவாகவே இருந்ததோடு, தற்போது, அது முதலாளித்துவ அரசினதும் முதலாளித்துவத்தினதும் உறுதியான பாதுகாவலனாக உள்ளது.

அதை உறுதிப்படுத்தி தொலைக்காட்சி பேட்டியில் திசாநாயக்க, "ஜே.வி.பி. நாட்டின் பாதுகாப்பை பரிசீலித்தே இந்த பிரச்சினையில் தலையீடு செய்கின்றது. நாடு பாதுகாப்பற்ற நிலையில் வீழ்ச்சி நிலையில் உள்ளது," என கூறினார். ஏனைய முதலாளித்துவ தலைவர்களைப் போலவே திசாநாயக்கவுக்கும், “நாடு” என்பது முதலாளித்துவ அரசே அன்றி வேறில்லை.

2008 நிதி நெருக்கடியில் இருந்து வீழ்ச்சியை நோக்கி பயணிக்கும் உலக முதலாளித்துவத்திற்கு, சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான கொடூரமான தாக்குதல்களை நடத்தவும் மற்றும் உலகப் போர்களையும் உருவாக்கவும் மட்டுமே முடியும். இதற்குப் பிரதிபலிப்பாக, சர்வதேச அளவில் எழுந்திருக்கும் வர்க்கப் போராட்டம் அலையின் பாகமாக, இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு தொகை வர்க்கப் போரட்டங்கள் பற்றி, ஜே.வி.பி. உட்பட முழு முதலாளித்துவ ஆளும் வர்க்கமும் கடும் கவலை கொண்டுள்ளது.

சோசலிசம் சம்பந்தமகாக உலகத் தொழிலாள வர்க்க்தின் மத்தியில் வளச்சியடைந்து வரும் ஆர்வம், மற்றும், பல தசாப்தங்களாக வர்க்கப் போராட்டங்களை திட்டமிட்டு நசுக்கி வந்த தொழிற்சங்கங்களில் இருந்து விடுபட்டு, தங்கள் சொந்த சுயாதீன அமைப்புகளை கெட்டியெழுப்புவதற்கு உலகத் தொழிலாள வர்க்கம் எடுத்துள்ள முன் நடவடிக்கைகளும், இங்கையில் நடந்த அன்மைய போராட்டங்களிலும் வெளிப்பாட்டைக் கண்டன.

100,000 தோட்டத் தொழிலாளர்கள் தினசரி சம்பளத்தை 1,000 ரூபாயாக்க கோரி முன்னெடுத்த போராட்டம் இவற்றில் கவனத்தை ஈர்ப்பதாகும். ஹட்டன் எபோட்சிலி தோட்டத் தொழலாளர்கள் தங்கள் போராட்டத்தை சோசலிச கண்ணோட்டத்தில் முன்னோக்கி நகர்த்தும் வகையில் தங்களுடைய சொந்த நடவடிக்கை குழுவை கட்டியெழுப்பி உள்ளனர்.

இந்த வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டங்கள், முதலாளித்துவ அரசை சவால் செய்யக் கூடும் என்று ஜே.வி.பி. உட்பட ஆளும் வர்க்கங்கள் அச்சமடைந்துள்ளன. "நாடு பாதிக்கப்பட்டு வீழ்ச்சியடைந்து வருவதாக" திஸாநாயக்க கூறுவது இந்த அர்த்தத்திலேயே ஆகும்.

பயங்கரவாத குண்டு தாக்குதல்களுக்கு முன்பிருந்தே, பயங்கரவாத-எதிர்ப்பு மசோதாவை அறிமுகப்படுத்தி விவாதத்துக்கு எடுக்க முயன்றதன் மூலம், ஏற்கனவே அரசாங்கம் பொலிஸ்-அரசை நோக்கி நடவடிக்கை எடுத்து வந்துள்ளது. அதன் நோக்கம் வளர்ந்துவரும் வர்க்கப் போராட்டங்களை கொடூரமாக நசுக்குவதாகும்.

பயங்கரவாத தாக்குதலுக்கான பொறுப்பை முஸ்லிம் மக்கள் மீது சுமத்தும் அதேவேளை, "தேசிய ஒற்றுமை பற்றிய சிரச டி.வி. கலந்துரையாடலில் திசாநாயக்கவின் கருத்துக்கள் முற்றிலும் கபடத்தனமானவை ஆகும். இலங்கை முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தால் தொழிலாள வர்க்கத்தின் சக்தியை தகர்க்க ஆரம்பத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் உபாய மாரக்கமான இனவாதத்தை பிறப்பிலேயே அரவனைத்துக்கொண்ட இயக்கமே ஜே.வி.பி. ஆகும்.

தமிழ் மக்களுக்கு எதிரான கொடூரமான போருக்கு முன்நின்று சங்கு முழங்கிய ஜே.வி.பி., ஏப்ரல் 21 நடந்த குண்டுத் தாக்குதலுடன் முதலாளித்துவ ஸ்தாபகம் கட்டவிழ்த்துவிட்ட நச்சுத்தனமான முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரத்தில் முன்னணி பங்கு ஆற்றுவதையே திசாநாயக்கவின் மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் நிரூபிக்கின்றன.

தமிழர்களுக்கு எதிரான மிலேச்சத்தனமான போரின் குருதியில் குளித்துள்ள ஜே.வி.பி., இப்போது முஸ்லிம்களைத் துன்புறுத்துவதற்குத் தேவையான சித்தாந்த சரக்குகளை வழங்குகிறது. "இலக்கய" கலந்துரையாடல் முழுதும், "முஸ்லீம் அதிதீவிரவாதத்தை" அடக்கும் பெயரில் வர்க்கப் போராட்டத்தை திசை திருப்பி, தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை முதலாளித்துவ தாக்குதல்களுக்கு இறையாக்குவதற்கே திசாநாயக்க முயற்சித்தார்.

Loading