வீடியோ: சோ.ச.க. ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன இலங்கையில் தேசிய அளவில் ஒளிபரப்பப்பட்ட கூட்டத்தில் உரையாற்றினார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தமிழில் எழுத்து விளக்கம் அடங்கியுள்ள பின்வரும் வீடியோ, சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன இந்த வாரம் கொழும்பில் நடந்த "ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது மேடை" நிகழ்வில் ஆற்றிய உரை ஆகும். அக்டோபர் 5 அன்று சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுமார் 4,000 பேர் கலந்து கொண்டதுடன் ரூபாவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவைகள் இதை தேசிய அளவில் ஒளிபரப்பப்பின.

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களுக்கு "சமமான" வாய்ப்பு வழங்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறியிருந்தாலும், நிகழ்வு இரண்டு சுற்றுகளைக் கொண்டதாக இருந்தது. "சிறிய கட்சி" வேட்பாளர்களுக்கு திறக்கப்பட்டிருந்த முதல் சுற்றில் விஜேசறிவர்தன சேர்க்கப்பட்டார். அவர்களின் கருத்துக்களை முன்வைக்க நான்கு நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன.

இரண்டாவது சுற்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் என அழைக்கப்படுவனவற்றின் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கு நீண்ட நேரம் வழங்கப்பட்டதுடன் அவர்களின் கொள்கைகள் குறித்த சில கேள்விகளுக்கு பதிலளிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றது

[5 அக்டோபர் 2019]

இலங்கை சோ.ச.க. ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டங்களை அறிவிக்கிறது

[9 அக்டோபர் 2019]

Loading