இந்தியா: மகாராஷ்டிராவில் பாசிச சிவசேனா கட்சியை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்குக் கொண்டுவருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அக்டோபர் 24 இல் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து ஒரு மாத காலமாக அங்கு நடந்து வந்த அரசியல் குதிரை பேரம் மற்றும் மோசடிகளுக்குப் பின்னர், காங்கிரஸ் கட்சியும் மற்றும் அதன் நீண்டகால பிராந்திய கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் (Nationalist Congress Party-NCP), இந்து மேலாதிக்கவாத மற்றும் மராத்திய வகுப்புவாத சிவசேனா கட்சியுடன் இணைந்து ஒரு கூட்டணி அரசாங்கத்தை அங்கு உருவாக்கியுள்ளன.

காங்கிரஸூம் தேசியவாத காங்கிரஸூம் சேர்ந்து சிவசேனாவைக் காட்டிலும் அதிக இடங்களை கொண்டுள்ளன. ஆயினும், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேக்கு மாநில பாராளுமன்றத்தில் ஒரு இடம் கூட இல்லாத நிலையிலும், அவரது சர்வாதிகாரத்தினால் இந்த கூட்டணி அரசாங்கத்தில் முன்னணி வகிக்கும் வாய்ப்பு அந்த கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

115 மில்லியனுக்கு அதிகமான மக்கள்தொகையுடன் இந்தியாவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருப்பதுடன், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மிகப்பெரிய பங்களிப்பாளராக அது உள்ளது. மேலும், இந்த மாநிலத்தின் தலைநகரான மும்பை இந்தியாவின் நிதிசார் தலைநகராக உள்ளது என்பதுடன், பாலிவுட் திரையுலகம் உட்பட, பல தொழில்களுக்கான மையமாகவும் அது உள்ளது.

சிறுபான்மையினர் மீதான வெறுப்பை எப்போதும் தூண்டி வரும் மற்றும் அது எதிரியாக கருதும் முஸ்லீம்கள் அல்லது எவரையும் அச்சுறுத்துவதற்காக வன்முறையை கையாண்டு வரும் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு இரத்தம் தோய்ந்த கட்சியான சிவசேனா உடன் பகிரங்கமாக கூட்டணி சேர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி பின் வாங்க முடியாத அரசியல் பொறிக்குள் சிக்கிவிட்டது. அதாவது, மிகுந்த வலதுசாரி மற்றும் வெறித்தனமான வகுப்புவாத சக்திகளுக்கு ஒத்தூதுவதன் மூலம் மதச்சார்பின்மையின் ஒரு அரணாகவும், பல இன மற்றும் பன்முக கலாச்சார சமுதாயத்தின் முன்னணி அரசியல் பிரதிநிதியாகவும் தன்னைக் காட்டிக் கொள்ளும் விதமாக அது கூறும் சாரமற்ற கூற்றுக்களால் இனி அது கட்டுப்படுத்தப்படாது என்பதற்கான சமிக்ஞையாகவே இது உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கை, ஏப்ரல்/மே 2019 தேசியத் தேர்தலில் 543 மக்களவைத் தொகுதிகளில் வெறும் 52 ஐ மட்டுமே வெற்றிக் கொண்டதன் பின்னர் அதன் அரசியல் எதிர்காலத்திற்கு புத்துயிரூட்டுவதற்கான ஒரு தீவிர முயற்சியாக உள்ளது, 2014 இல் மிகப்பெரிய தேர்தல் தோல்வியை அது சந்தித்த போது பெற்றிருந்ததை காட்டிலும் தற்போது எட்டு இடங்களை மட்டுமே கூடுதலாக வென்றுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத் தேர்தலில் இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதாக் கட்சியின் (BJP) பங்காளராகத் தான் சிவசேனா கட்சி போட்டியிட்டது, அக்டோபர் 2014 முதல் பிஜேபி முதலமைச்சர் தேவேந்திர பட்நவிஸ் தலைமையின் கீழ் கூட்டு சேர்ந்தே அம்மாநிலத்தை சிவசேனா ஆட்சி செய்து வந்தது. கடந்த மாத நிகழ்வுகள் வரை, அதாவது, மே 2014 முதல் இந்தியாவை ஆண்ட நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி/தேசிய ஜனநாயக கூட்டணி (National Democratic Alliance-NDA) அரசாங்கத்திலும், 1998 மற்றும் 2004 ஆண்டுகளுக்கு இடையில் அடல் பிஹாரி வாஜ்பேய் தலைமையிலான பிஜேபி தலைமையிலான அரசாங்கங்களிலும் அமைச்சரவை பிரதிநிதித்துவத்துடன், பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனா கட்சியும் உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா தேர்தலில் சிவசேனா-பிஜேபி கூட்டணியை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி எதிர்த்தது, இருப்பினும், மோடியை “வளர்ந்து வரும் இந்தியாவிற்கான” ஒரு “தீர்க்கமான” தலைவர் என ஊக்கமளித்த பெருநிறுவன ஊடகங்களின் வெட்கமில்லாத பிஜேபி சார்பு பிரச்சாரங்களை எதிர்கொள்கையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் என அனைத்தும் தேர்தல்களுக்கு முன்கூட்டியே ஒப்புக்கொண்டன. ஆட்சிக்கு வர அச்சுறுத்தும் பிஜேபி-சிவசேனா கூட்டணியின் போக்கு பற்றிய ஊடகச் செய்திகளை கண்டு அஞ்சி, காங்கிரஸூம் தேசியவாத காங்கிரஸூம் ஒரு பலவீனமான, வலதுசாரி பிரச்சாரத்தை மேற்கொண்டதுடன், ஆளும் கூட்டணியின் வகுப்புவாத வாய்ச்சவுடாலை எப்போதும் போல இன்னும் வெளிப்படையாக பின்பற்றின.

இருப்பினும், இந்த தேர்தல் பிஜேபி க்கு குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியது. அதேவேளை, இது 288 சட்டமன்ற ஆசனங்களில் அதிகபட்ச அளவாக 105 ஆசனங்களை வென்றது, இது 2014 இல் பிஜேபி வென்ற 122 ஆசனங்களைக் காட்டிலும் குறைந்துவிட்டதை குறிப்பிடுகிறது.

சிவசேனா 2014 ஐ காட்டிலும் ஏழு ஆசனங்கள் குறைந்து 56 ஆசனங்களை வென்றது. இதற்கிடையில், அவர்களே அதிர்ச்சியடையும் வகையில், காங்கிரஸ் கட்சியும் அதன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியும் முறையே 44 மற்றும் 54 ஆசனங்களை வென்றன.

அதேபோல, பிஜேபி இன் வாக்குகளின் பங்கும் 2014 இல் 27.8 சதவிகிதமாக இருந்தது 25.6 சதவிகிதமாகக் குறைந்தது. என்றாலும், வாக்காளர் பங்கேற்பு கூர்மையாக வீழ்ச்சியடைந்த நிலையில், அனைத்துக் கட்சிகளும் கணிசமான வாக்குகளை இழந்திருப்பதானது, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் மீது வளர்ந்து வரும் அதிருப்தியையே பிரதிபலிக்கிறது. மும்பையில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 42.7 சதவிகிதத்தினர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

பிஜேபி இன் பிரச்சாரம் ஜம்மு-காஷ்மீர் மீதான இந்திய இறையாண்மையை உடல்வலிமை கொண்டு வலியுறுத்துவதில் பெரும்பாலும் பிரத்யேக கவனம் செலுத்தியது. மோடி, அவரது அரசியல் ஆதரவாளர் அமித் ஷா, மற்றும் இந்திய ஜனாதிபதியும், பிஜேபி ஜாம்பவானுமான ராம் நாத் கோவிந்த் ஆகியோர் ஆகஸ்ட் 5 அன்று, இப்போது செயலிழந்து நிற்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய ஒன்றியத்திற்குள் ஒரு தனித்துவமான, பகுதியளவு தன்னாட்சி அந்தஸ்தை வழங்கிய இந்திய அரசியலமைப்பின் நீண்டகால சிறப்பு உரிமையை (பிரிவு 370) சட்டவிரோதமாக இரத்து செய்ய சதி செய்தனர்.

பிஜேபி இன் பிரச்சாரம் மகாராஷ்டிர விவசாயிகளின் துயரத்தைப் பற்றி பெரும்பாலும் குறிப்பிடவில்லை. வறட்சியால் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவு, அரசாங்கத்தின் அலட்சியப் போக்கு மற்றும் வட்டிக்கடைக்காரர்கள் விதிக்கும் பெரும் வட்டி விகிதங்கள் ஆகியவற்றின் காரணமாக இம்மாநிலத்தில் குறைந்தது பத்து முதல் பன்னிரண்டு விவசாயிகள் தினமும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த கொடூரமான யதார்த்தத்தை முற்றிலும் மூடிமறைக்கும் வகையில், 2015 மற்றும் அதற்கு பிந்தைய ஆண்டுகளின் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை குறித்து குறைத்து மதிப்பிடப்பட்ட புள்ளிவிபரங்களை வெளியிடுவதற்கு கூட மோடி அரசாங்கம் அக்கறை காட்டவில்லை.

பிஜேபி யும் அதன் சிவசேனா கூட்டணிக் கட்சியும் தேர்தலில் குறைந்தது 200 ஆசனங்களை வெல்வார்கள் என்று நம்பிக்கையுடன் முன்கணிப்பு செய்திருந்தனர்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடனேயே, அரசாங்க கூட்டணியில் சம பங்கு அதிகாரத்தைக் கோரி பிஜேபி இன் பின்னடைவை சுரண்டுவதற்கு சிவசேனா முனைந்த நிலையில், ஐந்தாண்டு சட்டமன்ற காலத்தின் இரண்டாம் பாதியில் முதலமைச்சர் பதவி அதிகாரத்தை சிவசேனா கட்சிக்கு விட்டுக்கொடுக்க உறுதியளிப்பதாகக் கூறி பிஜேபி தன்னை நல்லவிதமாக காட்டிக் கொண்டது.

முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பாக எந்தவித உறுதிமொழியும் வழங்கவில்லை என மறுப்பது உட்பட, பிஜேபி அதற்கு தாமதித்த பின்னர், இரு கட்சிகளும் பரஸ்பரம் தூற்றிக் கொண்டன.

இது தொடர்ந்த நிலையிலும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு பற்றி அறிய முன்னணி வேவுபார்ப்பாளர்களை அனுப்பத் தொடங்கிய நிலையிலும், பிஜேபி தேசிய அரசாங்கம் தலையீடு செய்து, மகாராஷ்டிராவை “ஜனாதிபதி ஆட்சியின்” கீழ், அதாவது நேரடியான மத்திய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது.

இறுதியில், இரவோடு இரவாக “ஜனாதிபதி ஆட்சி” நீக்கப்பட்டது, ஏனென்றால் சிவசேனாவை வழியற்று போகச் செய்யும், மேலும் தேசியவாத காங்கிரஸ் குழுவிலிருந்து பிரிந்த ஒரு கூட்டணியை கொண்டு வழிநடத்தும் வகையில் தேசியவாத காங்கிரஸில் ஒரு பிளவை ஏற்படுத்த அது வேலை செய்து விட்டதாக பிஜேபி நினைத்தது.

ஆனால் இந்த மோசடியான உத்தி விரைவில் தகர்ந்து போனது என்பதுடன், மாறாக வருங்கால காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா கட்சிகளின் கூட்டணி உறுதிப்படுத்தப்படுவதற்கு உதவியது.

தங்களது சொந்த மோசமான அரசியல் சூழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, காங்கிரஸூம் தேசியவாத காங்கிரஸூம் சேர்ந்து சிவசேனாவை தேசிய ஜனநாயக கூட்டணியை (NDA) விட்டு வெளியேறும் படி வலியுறுத்தின. அதை இது செய்தது, ஒரு காபினெட் அமைச்சர் தேசிய அரசாங்கத்திலிருந்து இராஜினாமா செய்தார். என்றாலும், சிவசேனா இதை ஒரு சம்பிரதாயம் என விவரித்து, அவர் பிஜேபி தலைமையிலான கூட்டணியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராவார் என்று வலியுறுத்தியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பொருத்தமாக இருக்கும் என்று சிவசேனா கருதும் போது NDA கட்டுப்பாட்டிற்குள் அது திரும்பும்.

சிவசேனா கட்சி தலைமையிலான காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா கட்சிகளின் அரசாங்க கூட்டணி, தன்னை மஹா விகாஸ் அகதி (Maha Vikas Aghadi-MVA) என்று போலியாக பெயர் மாற்றிக் கொண்டது, இது முன்னேற்றம் அல்லது மேம்பாட்டிற்கான சிறந்த முன்னணி (Great Front for Progress and Development) என்று எளிதாக அதை மொழிபெயர்த்தது.

“பொது குறைந்தபட்ச திட்டம்” (“Common Minimum Program-CMP”) என்றழைக்கப்படும் திட்டம் பற்றி மூன்று கட்சிகளின் தலைமைக்கு இடையிலான பரபரப்பான பேச்சுவார்த்தைகளால் இது கட்டவிழ்த்துவிடப்பட்டது. இந்த CMP, குறிப்பாக மில்லியன் கணக்கான விரக்தியடைந்த, கடன்பட்ட விவசாயிகளுக்கு பல ஜனரஞ்சக வாக்குறுதிகளை வாரி வழங்குகிறது. ஆனால் அதன் முக்கிய நோக்கம், மகாராஷ்டிராவின் புதிய சிவசேனா தலைமையிலான அரசாங்கம் “மதச்சார்பின்மைக்கு” உறுதியளித்துள்ளது என்ற அவர்களின் அபத்தமான கூற்றை உறுதிபடுத்தும் வகையில் பேசுவதன் மூலம், காங்கிரஸூக்கும், அதைவிட சற்று குறைவாக தேசியவாத காங்கிரஸுக்கும் அரசியல் மூடுதிரை வழங்குவதாகும்.

உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தில் இந்துத்துவாவை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்று வெளிப்படையாக தெரிவித்த போது இந்த வதந்தி விரைவில் அம்பலமானது – இந்த இந்து மேலாதிக்க சித்தாந்தம் மகாராஷ்டிராவில் பிறந்த வி.டி.சாவர்க்கர் மூலம் முதன்முதலில் நெறிமுறைப்படுத்தப்பட்டது. “நான் இன்னமும் இந்துத்துவ சித்தாந்தத்துடன் தான் இருக்கிறேன்” என்று தாக்கரே அதை உறுதிப்படுத்தினார். மேலும், அதை “என்னிடமிருந்து பிரிக்க முடியாது” என்றும் கூறினார்.

சமூக ரீதியாக தீங்கு விளைவிக்கும் வகுப்புவாத ஏற்பாட்டை உள்ளடக்கியதான CMP இதைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இம்மாநில ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரி, தனது சட்டமன்ற தொடக்க உரையில், MVA அரசாங்கம் “வேலை வழங்குதல்” என்ற பெயரில், “மண்ணின் மைந்தர்களுக்கு” தனியார் துறை வேலைகளை 80 சதவிகிதம் ஒதுக்கீடு செய்ய கட்டாயப்படுத்தும் சட்டத்தை விரைவில் இயற்றும் என்று வலியுறுத்திக் கூறினார். “உள்ளூர் மக்களிடமிருந்து” வேலைகளை பறிப்பதற்காக 1960 களில் “தென்னிந்தியர்களை” தீவிரமாக குறிவைப்பதன் மூலம் சிவசேனா தோன்றி, சட்டபூர்வமாக நெறிமுறைபடுத்தப்பட்ட இட ஒதுக்கீடு ஆணை இந்த மராத்தி-பேரினவாத அமைப்புக்காக “வெளிமாநிலத்தவரை” இலக்கு வைக்கும் முன்னுதாரணமற்ற ஆயுதத்தை கையிலெடுக்க வகை செய்தது.

1966 இல் உத்தவ் தாக்கரேயின் தந்தை பால் தாக்கரேயின் வன்முறை மிக்க தலைமையில் சிவசேனா கட்சி உருவானது. வேலை நெருக்கடியை தென்னிந்தியர்கள் மற்றும் குஜராத்திகளுக்கு (குஜராத்தைச் சேர்ந்தவர்கள்) மேல் குற்றம் சாட்டுவதன் மூலம் பரவலான இளைஞர் வேலையின்மை —இது இந்தியா முழுவதும் பரவலாக காணப்படும் ஒரு உள்நாட்டு நிகழ்வு— மீதான பொதுமக்கள் கோபத்தை இது சுரண்டியது. மராத்தி மொழி பேசுபவர்களுக்கு முன்னுரிமையளிக்கும் பணி நியமனத்திற்கும் மற்றும் மும்பையில் வாழும் “வெளியாட்கள்” மீதான சரீர ரீதியான தாக்குதல்களுக்கு ஏற்பாடு செய்யவும் இது கோரியது.

அந்த நேரத்தில் சவால் செய்யப்படாமல் மாநிலத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, மும்பையின் அப்போதைய பரந்த ஜவுளித் தொழிலில் ஆதிக்கம் செலுத்திய ஸ்ராலினிச தலைமையிலான தொழிற்சங்கங்களை அழிக்க பலமுறை அடிபட்ட மட்டை போல அதை பயன்படுத்த இந்த மோசமான கூட்டணிக்கு தனது ஆதரவை வழங்கியது.

டிசம்பர் 1992 இல் பிஜேபி தலைமையிலான இந்து தீவிரவாதிகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மும்பையில் எதிர்ப்பு தெரிவித்த முஸ்லீம்களுக்கு எதிராக சிவசேனா வன்முறைத் தாக்குதல்களை நடத்தியது, அதில் நூற்றுக்கணக்கானவர்களை கொன்றது. கட்சியின் செய்தியிதழான சாமானா(Saamana) தொடர்ந்து முஸ்லீம்கள் மீது வெறுப்பைத் தூண்டி வருகிறது, மேலும் 2015 ஆம் ஆண்டில், முஸ்லீம்கள் “இந்து ராஷ்டிரா” அல்லது இந்து தேசத்தை அடிபணிய வைக்க பெருமளவில் இனப்பெருக்கம் செய்ததாக குறை கூறியது.

இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM —இது பிஜேபி ஐ எதிர்த்து போராடும் பெயரில் வர்க்கப் போராட்டத்தை முறையாக நசுக்கி, சமீபகாலம் வரை அரசாங்கத்தின் இந்திய முதலாளித்துவத்தின் பிரதான கட்சியாக இருந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு அடிபணியச் செய்துள்ளது— மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வருவதை ஆதரித்தது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐந்து சிபிஎம் மத்திய குழு உறுப்பினர்கள் விடுத்த அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது: “பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியால் அமைக்கப்படும் புதிய மகாராஷ்டிரா விகாஸ் அகதி அமைப்பு அரசாங்கம் அமைப்பதை எதிர்க்கப் போவதில்லை என்று சிபிஎம் முடிவு செய்துள்ளது.” பாசிச சிவசேனா கட்சி தலைமையிலான இந்த வலதுசாரிக் கட்சிகளின் கூட்டணியை சிபிஎம் “எதிர்பார்க்கிறது” என்று அறிக்கை அறிவிக்க முனைந்ததானது, “முந்தைய பிஜேபி தலைமையிலான ஆட்சியின் கொள்கைகளிலிருந்து ஒரு தெளிவான இடைவெளியை உருவாக்கும்,” என்பதுடன், “ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாப்பதில்” “சமரசமற்றதாக” இருக்கும்

Loading