இலண்டனில் சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டம்: ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங்கை விடுதலை செய்! அமெரிக்காவிடம் ஒப்படைக்காதே

சிறையிலடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜையும் மற்றும் இரகசிய செய்தி வெளியீட்டாளர் செல்சியா மானிங்கையும் விடுதலை செய்யக் கோரி, பெப்ரவரி 23 ஞாயிறன்று இலண்டனில் நடைபெறவுள்ள தங்களது பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் படி உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்து வாசகர்களையும் சோசலிச சமத்துவக் கட்சி (UK) அழைப்புவிடுக்கிறது.

இலண்டனில் நடைபெறவுள்ள அசான்ஜ் ஒப்படைப்பு விசாரணை தொடர்பான இந்த முக்கிய பொதுக் கூட்டத்தை தவறவிடாதீர்கள். அதில், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான SEP வேட்பாளர்; ஆஸ்திரேலிய SEP ஐ சேர்ந்த WSWS நிருபர் ஒஸ்கார் கிரென்ஃபெல்; மற்றும் இங்கிலாந்து SEP தேசிய செயலர் கிறிஸ் மார்ஸ்டென் ஆகியோர் பிரதான பேச்சாளர்களாக பங்கேற்கவுள்ளனர்.

அசான்ஜையும் மானிங்கையும் மவுனமாக்க முயற்சிக்கும் மூன்று ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த இந்த சோசலிஸ்டுகள், அவர்களது விடுதலைக்கான போராட்டத்திற்கு உயிரூட்ட அவசியப்படும் அடிப்படை கொள்கைகள் மற்றும் வேலைத்திட்ட கருத்தாக்கங்கள் பற்றி அப்போது சுருக்கவுரை வழங்குவர். இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியாக கேள்வி-பதில் நேரமும் இருக்கும்.

அமெரிக்க போர்க்குற்றங்களையும், மற்றும் உலக மக்களுக்கு எதிராக அது மேற்கோண்ட சட்டவிரோதமான வெகுஜன கண்காணிப்பு நடவடிக்கைகளையும் துணிச்சலுடன் அம்பலப்படுத்தியதற்காக உளவு சட்டத்தின் கீழ் அசான்ஜ் குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்பதால், 175 ஆண்டு கால சிறை தண்டனையையோ அல்லது மரண தண்டனைக்கான சாத்தியத்தையோ அவர் எதிர்கொள்வார். முன்னாள் அமெரிக்க இராணுவ சிப்பாயான செல்சியா மானிங் அசான்ஜிற்கு எதிராக சாட்சியமளிக்க மறுத்ததற்காக அண்மித்து 12 மாதங்களாக அமெரிக்க மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், பேச்சுரிமை மற்றும் ஊடக சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை ஜனநாயக உரிமைகள், இப்போது போருக்கான பாதையில் இறங்கி, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சர்வாதிகாரத்தை கையிலெடுத்துள்ள ஆளும் வர்க்கத்தால் சீரழிக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்க இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் பிடியில் அசான்ஜை சிக்க வைப்பதற்கு ஊழல் நிறைந்த இங்கிலாந்து சட்ட அமைப்பு தயார் செய்துவரும் நிலையில், இலண்டனில் நடைபெறவுள்ள இந்த அமெரிக்க ஒப்படைப்பு விசாரணை என்பது ஒரு போலிநாடக விசாரணையே.

மேலும், பெப்ரவரி ஒப்படைப்பு விசாரணையானது, ஒவ்வொரு நாட்டிலும் உத்தியோகபூர்வ அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபக ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட சட்டவிரோத அரசு துன்புறுத்தலின் ஒரு தசாப்த கால பிரச்சாரத்தின் விளைவேயாகும்.

“கருத்து வேறுபாடுள்ள” பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்புக்கள் அல்லது தொழிற்சங்கங்களிடம் முறையீடு செய்வதன் மூலமாக அசான்ஜூம் மானிங்கும் விடுவிக்கப்பட மாட்டார்கள்.

தொழிற் கட்சி மற்றும் அதன் “இடது” பிரதிநிதிகளிடம் முறையீடு செய்வதை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு மூலோபாயமும் தோல்வியடையும் நிலையில் ஜெர்மி கோர்பினின் நடவடிக்கைகள் ஒரு குறிப்பிடத்தக் நடைமுறை எடுத்துக்காட்டாகும். தொழிற் கட்சி தலைமைக்கு அவரை உந்தித்தள்ளிய போர் எதிர்ப்பு உணர்வுகளை கோர்பின் வெட்கமின்றி காட்டிக் கொடுத்தார். உலகப் புகழ்பெற்ற அரசியல் கைதி ஒருவர் இலண்டனின் மத்தியில் சித்திரவதை செய்யப்பட்டு வருகிறார் என்பது பற்றி எதையும் கூறாமல் பல வருடங்களாக அவர் மவுனம் சாதித்துக் கொண்டிருந்தார்! அசான்ஜ் ஒப்படைப்பை எதிர்த்து பாராளுமன்றத்தில் கடந்த வாரம் கோர்பின் ஆற்றிய 30 விநாடிகள் கொண்ட உரை, தொழிற் கட்சியின் கடைசி இருக்கைவாதிகளை பாதுகாக்க அவர் கிளம்புவதற்கு முந்தைய ஒரு இழிவான முகஸ்துதி நடவடிக்கையாக இருந்தது.

ஏகாதிபத்திய முகாமிற்குள் அவர்களது திடீர் நுழைவின் ஒரு பகுதியாக அசான்ஜை கைவிட்ட வசதியான நடுத்தர வர்க்க போலி இடது கட்சிகள் கோர்பினுக்கு உதவி செய்தன. அடையாள அரசியல் மற்றும் செல்வம் மற்றும் சலுகைக்கான போராட்டத்தில் வெறி கொண்ட அவர்கள், "மனிதாபிமான தலையீடு" என்ற மோசடி பதாகையின் கீழ் மத்திய கிழக்கில் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளை ஊக்குவித்தனர். சோசலிச தொழிலாளர் கட்சி, சோசலிஸ்ட் கட்சி போன்ற அமைப்புகள் அரசியல் ரீதியாக அசாஞ்சிற்கு விரோதமானவை. பென்டகன் மற்றும் அதன் தாராளமய ஊதுகுழல்களான கார்டியன் மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் செய்தியிதழ்களின் பொய்களை மறுசுழற்சி செய்து, அசான்ஜிற்கு எதிராக சுவீடன் அரசு தொடுத்த போலியான பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு அவை ஒத்தூதியதுடன், அசான்ஜை தீவிர வலதுசாரிகளின் கருவியாக சித்தரித்து, அவரை கீழறுப்பதை நியாயப்படுத்த ஜனநாயகக் கட்சியால் பயன்படுத்தப்பட்ட ரஷ்ய விரோத சொல்லாட்சியை அவை பயன்படுத்தின.

எங்களது கூட்டம், அசான்ஜ் மற்றும் மானிங்கின் விடுதலையை பாதுகாப்பதற்கான சக்தி கொண்ட ஒரே சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரள்விற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அசான்ஜ் மற்றும் மானிங்கின் விடுதலையைப் பாதுகாப்பதற்கான புறநிலை அடிப்படை என்பது, சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியிலும், மற்றும் சமூக சமத்துவமின்மையின் சகித்துக்கொள்ள முடியாத வளர்ச்சி மற்றும் சர்வாதிகாரம் மற்றும் போரின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களின் வெடிப்பிலும் ஏற்கனவே வெளிப்பட்டுவிட்டது.

ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்! அமெரிக்காவிடம் ஒப்படைக்காதே!

திகதி மற்றும் நேரம்: ஞாயிறு, பெப்ரவரி 23, மாலை 2.30 மணி

Mahatma Gandhi Hall
Indian YMCA
41 Fitzroy Square
London, W1T 6AQ
(nearest Tube: Great Portland Street)
Event Facebook page

Loading