அசான்ஜ் பாதுகாப்புக் குழு: “பேரரசு இதை உளவுபார்ப்பு என்று அழைக்கிறது. நாங்களோ இதை ஊடகவியல் என்கிறோம்”

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்களன்று தொடங்கவிருக்கும் ஜூலியன் அசான்ஜின் அமெரிக்க ஒப்படைப்பு விசாரணை பற்றி விவாதிப்பதற்கு நேற்று இலண்டனில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் 23 நாடுகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். வெளிநாட்டு பத்திரிகைகளின் சங்கம் (Foreign Press Association) ஒழுங்கமைத்திருந்த இந்த கூட்டத்தில் விக்கிலீக்ஸ் தலைமை பதிப்பாசிரியர் Kristinn Hrafnsson, வழக்கறிஞர் ஜெனிஃபர் ரோபின்சன் மற்றும் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆண்ட்ரூ வில்கி மற்றும் ஜியோர்ஜ் கிறிஸ்டென்சன் ஆகியோர் உரையாற்றினர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அசான்ஜ் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊடகவியலாளராக இருந்ததை ஹ்ராஃப்சன் நினைவுகூர்ந்தார். அச்சமயம் கேபிள்கேட் என்றறியப்பட்ட ஆவணங்களை வெளியிடுவதற்கு உலகளவில் ஒன்றிணைந்த ஊடகவியலாளர்களின் ஒரு முக்கிய குழுவுடன் சேர்ந்து விக்கிலீக்ஸ் பணியாற்றியது. “அந்த முக்கிய மதிப்புக்கள் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஜூலியன் அசான்ஜ் வழக்கில் அபாயத்திற்கு உள்ளாகப்போகின்றன.விக்கிலீக்ஸ் தலைமை பதிப்பாசிரியர் கிறிஸ்டின் ஹ்ராஃப்சன், வழக்கறிஞர் ஜெனிஃபர் ரோபின்சன், தெபோரா பொனெட்டி மற்றும் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆண்ட்ரூவில்கி மற்றும் ஜியோர்ஜ் கிறிஸ்டென்சன்

விக்கிலீக்ஸ்தலைமைபதிப்பாசிரியர்கிறிஸ்டின்ஹ்ராஃப்சன், வழக்கறிஞர்ஜெனிஃபர்ரோபின்சன், தெபோராபொனெட்டிமற்றும்ஆஸ்திரேலியநாடாளுமன்றஉறுப்பினர்கள்ஆண்ட்ரூவில்கிமற்றும்ஜியோர்ஜ்கிறிஸ்டென்சன்

அசான்ஜ் ஊடகவியலாளர் அல்ல, மற்றும் விக்கிலீக்ஸ் ஒரு ஊடக அமைப்பு அல்ல என்ற அமெரிக்க அரசுத்துறையின் கூற்றுக்களை “அபத்தம்” என்று விவரித்து, ஹ்ராஃப்சன், “நேற்று இரவு எங்களில் சிலர்… Frontline Club இல் இருந்தபோது, 2011 இல் ஆஸ்திரேலியாவின் Walkley விருது… மற்றும் Pulitzer பரிசும் ஜூலியன் அசான்ஜிற்கு வழங்கப்பட்ட ஒளிப்பதிவுகளை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். 2010 மற்றும் 2011 வெளியீடுகளுக்காக அவர் அந்த விருதைப் பெற்றார். அதே வெளியீடுகள் தற்போது உளவுபார்த்தல் என்று விவரிக்கப்படுகிறது” என்று கூறினார்.

“பேரரசு இதை உளவுபார்ப்பு என்று அழைக்கிறது. நாங்களோ இதை ஊடகவியல் என்கிறோம்.”

அசான்ஜிற்கு எதிரான அமெரிக்க ஜோடிப்பு குற்றச்சாட்டுக்களை ஹ்ராஃப்சன் எதிர்த்துப்பேசினார். அவர் ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார், “அமெரிக்காவின் சார்பில் வாதிடவிருக்கும் வழக்கறிஞர்கள் அவர் மீதான குற்றச்சாட்டுக்களில் ஒன்றான தகவல் திருட்டை பற்றிக் கொள்வர். ஆனால் அதுவல்ல. அந்த முத்திரை ஒரு பிரச்சாரமே… தகவல் திருட்டு எதையும் இது செய்யவில்லை. இது, செய்திகளின் மூலத்திற்கும் ஊடகவியலாளருக்கும் இடையிலான சட்டபூர்வ தகவல் தொடர்பு பற்றியது.”

விக்கிலீக்ஸின் அம்பலப்படுத்தல்கள் “உயிர்களுக்கு ஆபத்தை விளைவித்தன,” என்ற “பென்டகனின் இதயமில்லா ஜெனரல்களின்” ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நிராகரித்து, ஹ்ராஃப்சன், “ஆப்கானிஸ்தானில் மரண குழுவினரைக் கொண்டிருப்பதாக நாம் அம்பலப்படுத்திய அந்த நபரிடம் இருந்து இக்கருத்து வருவது நையாண்டித்தனமாக இருக்கின்றது என்றே நான் நினைத்தேன்” என்று பதிலளித்தார்.

“இப்போது பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டு தகவல் கசிவுகளின் விளைவாக எந்தவொரு தனிநபரும் சரீரரீதியாக பாதிப்படைந்த சம்பவம் பற்றிய ஒரு பதிவு கூட அங்கில்லை.”

அசான்ஜிற்கு எதிராக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் மற்றும் உரிய செயல்முறையை தவறாக பயன்படுத்துவதால் கடந்த தசாப்த காலம் முழுவதும் அவர் பாதிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டு, ஹ்ராஃப்சன், “வழக்கை தள்ளுபடி செய்யப்படுவதற்கான பெரும் விவாதங்கள் அங்கு இருப்பதாக” அவர் விளக்கமளித்தார்.

“இதுவொரு மிகவும் அரசியல்மயமாக்கப்பட்ட வழக்கு,” என்றும், “ஜூலியன் அசான்ஜ் ஒரு அரசியல் கைதி... ஏனென்றால் விக்கிலீக்ஸை “கீழறுப்பதற்காக” அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளும் வர்ணனையாளர்களும் அழைக்கப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்த 2010 ஆம் ஆண்டு அரசியல் என்றும் பலமுறை நான் கூறிவிட்டேன்” என்றும் தொடர்ந்து கூறினார்.

“ஜூலியன் அசான்ஜின் படுகொலைக்காக ஒருவர் அழைப்பு விடுக்கப்படுவது இது அரசியலே என்பதை காட்டுகின்றது, அதாவது ஈராக்கின் சமீபத்திய நிகழ்வுகளின் வெளிச்சத்தில் பார்க்கையில் ஒருவர் இதை தீவிரமாக கவனிக்க வேண்டும்.

“2017 இல் சிஐஏ இயக்குநராக மைக் பொம்பியோ இருந்தபோது, விக்கிலீக்ஸை ஒரு ‘அரசு சாரா விரோத உளவுத்துறை சேவை’, என்று அவர் சித்தரிக்க முடிவு செய்தமை, இதற்கு முன்பு கேள்விப்படாத ஒன்று… என்ற நிலையிலும் இது அரசியலே.

ஆஸ்திரேலிய சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினரும், ராயல் ஆஸ்திரேலிய காலாட் படையின் (Royal Australian Infantry Corps) முன்னாள் லெப்டினன்ட் கர்னலுமான ஆண்ட்ரூ வில்கி, “அமெரிக்க போர்க்குற்றங்கள் குறித்த கடினமான ஆதாரங்கள் உட்பட, பொது நலனுக்கான செய்திகளையே அசான்ஜ் அம்பலப்படுத்தியுள்ளார்” என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

அவர் “பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நடத்தை குறித்து மிகுந்த அக்கறை கொண்டிருந்தார், ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் நடத்தை குறித்தும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்… மேலும், வெளிநாட்டில் பிரச்சனைக்குட்பட்டுள்ள ஒரு ஆஸ்திரேலிய குடிமகனை பாதுகாப்பது குறித்து ஆஸ்திரேலிய அரசாங்கம் எதுவும் பேசாமல் இருப்பதை நான் விமர்சிக்கிறேன்.”

ஆஸ்திரேலிய தாராளவாத தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஜியோர்ஜ் கிறிஸ்டென்சன் பார்வையாளர்களிடம் அசான்ஜை பாதுகாப்பவர்கள் மத்தியில் அவர் வழமைக்கு மாறானவர் என்றார், ஏனென்றால் அவர் “டொனால்ட் ட்ரம்பின் பெரிய ரசிகர் என்பதுடன் போஜோ வின் [இங்கிலாந்து கன்சர்வேடிவ் கட்சி பிரதமர் போரிஸ் ஜோன்சனின்] பெரிய ஆதரவாளரும் ஆவார்.” “என்றாலும், நான் பேச்சுரிமை மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான பெரும் ஆதரவாளராகும். ஜூலியன் அசான்ஜின் வழக்கு விசாரணைக்கு வரும்போது அவர்கள் தெளிவான தாக்குதலுக்கு உள்ளாவார்கள்” என்றும் அவர் கூறினார்.

அவரது மற்றும் வில்கியின் இலண்டன் விஜயத்திற்கான நோக்கம் குறித்து விளக்கமளித்து, கிறிஸ்டென்சன், அவர்கள் “ஜூலியன் அசான்ஜ் ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் மற்றும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்ன தெரிவிக்க விரும்புகிறார் என்பதை நேரடியாக கேட்க” விரும்பியதாக கூறினார். மேலும், அவரது உடல்நலன் குறித்து பரிசோதிப்பதற்காகவே அவ்வாறு செய்ததாகவும், ஏனென்றால், அவரது உடல் ஆரோக்கியம், மற்றும் அவரது உளநிலை பற்றி நாங்கள் கேட்ட தொடர்ச்சியான அறிக்கைகளால் நாங்கள் கவலையடைகிறோம்.” என்றார்.

கீழ்ச்சபையில் வழங்கப்பட்ட போரிஸ் ஜோன்சனின் சமீபத்திய அறிக்கையிலிருந்து தான் நம்பிக்கை பெற்றதாகக் கிறிஸ்டென்சன் கூறினார்: “இங்கிலாந்துடனான அமெரிக்க ஒப்படைப்பு ஒப்பந்தம் ஓரளவு சமநிலையற்றது என்று தான் நம்புவதாக அவர் கூறினார். மேலும், ஊடகவியலாளர்களையும், இரகசிய செய்தி வெளியீட்டாளர்களையும் இங்கிலாந்து பாதுகாக்கிறது என்று அவர் கூறியதற்காகவும் நான் அவரைப் பாராட்டுகிறேன் என்றும் அவர் கூறினார். வழக்கின் போக்கில் ஒரு மாற்றம் இருப்பதாக நான் நம்புகிறேன்.”

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆராயும் ஊடகவியலாளர்களை குற்றமயமாக்குவதை குறிப்பிட்டு, அசான்ஜ் மீது வழக்கு தொடரப்படுவதற்கு காரணமான விக்கிலீக்ஸின் அம்பலப்படுத்தல்களின் முக்கியத்துவம் குறித்து ஜெனிஃபர் ரோபின்சன் கவனம் செலுத்தினார்:

“கூட்டுக் கொலை, போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்கள் பற்றி நாங்கள் பேசுகிறோம்; அமெரிக்க போர்களின் உண்மையான விளைவுகளை எடுத்துக்காட்டிய, ஆப்கன் மற்றும் ஈராக் போர்கள் பற்றி நாங்கள் பேசுகிறோம்; மனித உரிமை மீறல்கள் பற்றி பேசுகிறோம்; அராபிய வசந்தத்தை தூண்டிவிட்ட கேபிள்கேட் பற்றி நாங்கள் பேசுகிறோம்… என்று சர்வதேச பொது மன்னிப்பு சபை கூறியது.”

விக்கிலீக்ஸின் ஆவணங்கள் உலகெங்கிலும் பல மனித உரிமை வழக்குகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன என்று ரோபின்சன் கூறினார். “தங்களது குடிமக்களுக்கும் பிறருக்கும் எதிரான துஷ்பிரயோகங்களுக்கு அரசாங்கங்களை பொறுப்பாளிகளாக்க முற்படும் நம்மை போன்றவர்களுக்கு அவை குறிப்பிடத்தக்க ஆதாரங்களாகும். இந்த வெளியீடுகளினால் தான், அசான்ஜ் தற்போது அதிவுயர் பாதுகாப்புள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதுடன், அமெரிக்காவில் 175 ஆண்டுகள் வரையிலான கடும் சிறைவாசத்தை எதிர்கொள்ளவிருக்கிறார்.”

கேள்வி பதில் நேரத்தில், 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களின் போது ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருக்கான முன்தேர்வில் பேர்னி சாண்டர்ஸின் பிரச்சாரத்தை தகர்த்தெறிவதில் ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழு மேற்கொண்ட நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதில் விக்கிலீக்ஸின் பங்கு என்ன என்பது பற்றி ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். கிறிஸ்டென்சன் அதை கவனித்து, “அதனால்தான், இடதிலிருந்து சிலர் ஜூலியன் அசான்ஜை கைவிட்டனர்” என்று கூறினார். உண்மையில், ஜனநாயகக் கட்சியும் அதன் போலி இடது மற்றும் தாராளவாத ஆதரவாளர்களும், டொனால்ட் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் அமர வைத்த “ரஷ்ய தலையீட்டின்” ஒரு பகுதி என்று கூறி, சர்வதேச அளவில் விக்கிலீக்ஸூக்கு எதிராக ஒரு பிற்போக்குத்தனமான பிரச்சாரத்தை தொடங்கினர்.”

கடந்த ஆண்டின் நீதிமன்ற தீர்ப்பு, இந்த பொய்யை சிதறடித்து விட்டதாக ஹ்ராஃப்சன் விளக்கினார். நியூயோர்க் நீதிபதி ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுவின் வழக்கை “பாரபட்சமானது” என தள்ளுபடி செய்தார், அதில் “இந்த ஆண்டின் ஊடகங்களில் இதுபற்றி மிகவும் குறைவாக அறிவிக்கப்பட்டது” என்று அவர் விவரித்தார்.

சக வலதுசாரி அரசியல்வாதியான போரிஸ் ஜோன்சன் அசான்ஜை காப்பாற்றத் தலையிடுவார் என்ற கிறிஸ்டென்சனின் அபத்தமான நம்பிக்கையும் தொழிற் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பினால் பகிரங்கமாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. திங்களன்று வில்கியை சந்தித்த பின்னர், ABC செய்தி ஊடகத்திற்கு கோர்பின் இவ்வாறு தெரிவித்தார், “அவர் [ஜோன்சன்] இது [இங்கிலாந்து-அமெரிக்க ஒப்படைப்பு ஒப்பந்தம்] ஒரு சமநிலையற்ற ஒப்பந்தம் என்றும் அது நியாயமானதல்ல என்றும் ஏற்றுக் கொண்டார் என்ற நிலையில், இதை பிரிட்டிஷ் அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றம் என்றே நான் கருதுகிறேன்.”

இது கடந்த புதன்கிழமை பிரதமரின் கேள்விநேரத்தின் போது என்ன நடந்தது என்பதை வேண்டுமென்றே சிதைப்பதாகும், இளம் வயது Harry Dunn இனை காரை ஏற்றிக்கொன்ற சிஐஏ செயற்பாட்டாளரான அன்னே சகூலாஸ் (Anne Sacoolas) பற்றி முதலில் கேள்வி எழுப்பப்பட்ட போதே கோர்பின் அந்த அமர்வை நிறைவு செய்தார். அதற்கு கோர்பின், “அமெரிக்கா உடனான எங்களது நாட்டின் ஒருதலைப்பட்ச ஒப்படைப்பு ஒப்பந்தத்தை” கண்டித்து, ஜோன்சன் “அமெரிக்காவுடனான சமப்படுத்தப்பட்ட ஒப்படைப்பு உறவை நாடுவதற்கு அவர் உறுதியளிப்பாரா” என்றும் கேட்டார்.

ஜோன்சன், சகூலாஸ் ஒரு சிஐஏ முகவர் என்பதை அறிந்து நாட்டை விட்டு அவர் வெளியேற அவரது அரசாங்கம் அனுமதித்தது தொடர்பான விடயம் வெளிப்பட்டது பற்றி கடும் அழுத்தத்தின் கீழ், ஹாரி டுன் மற்றும் அன்னே சகூலஸின் வழக்கிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது என்றும், ஒப்படைப்பு ஒப்பந்தம் “சமநிலையற்றது” என்று கோர்பின் வரையறுத்தபோது அவர் நெளிந்தார்.

அசான்ஜின் “ஒப்படைப்பு எதிர்க்கப்பட வேண்டும் மற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் இரகசிய செய்தி வெளியீட்டாளர்களின் உரிமைகள் நம் அனைவரின் நலனுக்காகவும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என்று ஜோன்சன் உணர்ந்தாரா என்று கோர்பின் கேட்டபோது, “ஊடகவியலாளர்கள் மற்றும் இரகசிய செய்தி வெளியீட்டாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும், இந்த அரசாங்கம் தொடர்ந்து அதைச் செய்யும்” என்று கூறுவதற்கு முன்பாக “எந்தவொரு தனிப்பட்டோரின் வழக்குகள்” குறித்தும் நான் கருத்து தெரிவிக்க மாட்டேன் என்று ஜோன்சன் பதிலளித்தார்.

ஏப்ரல் 11, 2019 அன்று அசான்ஜ் பற்றி “ஜோன்சன்” விடுத்த ஒரேயொரு அறிக்கையில், ஈக்வடோர் தூதரகத்தில் இருந்து கொடூரமாக அசான்ஜை கைது செய்து வெளியே இழுத்து வந்த இங்கிலாந்து வெளியுறவு அலுவலக அதிகாரிகளை வாழ்த்தினார். சகூலஸை ஒப்படைப்பதில் கோருவதற்கோ அல்லது, அசான்ஜ் இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற அமெரிக்க கோரிக்கையை எதிர்ப்பதற்கோ அவ்வித நோக்கமும் இருக்கவில்லை. கோர்பினும் கிறிஸ்டென்சனும் இதை முழுமையாக அறிவார்கள்.

இந்த இடைவிடாத, தசாப்தகால நீண்ட துன்புறுத்தல், ஜூலியன் அசான்ஜை சட்டவிரோத நடவடிக்கை மற்றும் சித்திரவதைக்கு அச்சுறுத்துவதானது, அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் போர், சர்வாதிகாரம் மற்றும் அரசு அடக்குமுறையை நோக்கி திரும்புவதன் விளைவாகும். இதில் தான் ஜோன்சனின் அரசாங்கம் ட்ரம்பின் பிரதான இராணுவ நட்பு நாடாக தன்னை காட்டிக்கொண்டிருக்கிறது.

ஜோன்சனின் “மனம் மாறலாம்” என்று கூறப்படுவதால் அசான்ஜ் விடுதலை செய்யப்படமாட்டார். ஆனால் விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை விடுவிக்கக் கோரும் டோரி அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கம் கட்டமைக்கப்படுவதன் மூலமாக அது சாத்தியமாகும்.

The author also recommends:

லான்செட் மருத்துவ இதழில் மருத்துவர்களின் கடிதம் பிரசுரிப்பு: “ஜூலியன் அசான்ஜை சித்திரவதை செய்வதையும், அவருக்கு மருத்துவ சிகிச்சையளிக்க மறுப்பதையும் முடிவுக்கு கொண்டு வாருங்கள்”

[18 February 2020]

The significance of the doctors’ open letter in defence of Julian Assange
[26 November 2019]

The prosecution of Julian Assange, the destruction of legality and the rise of the national security state
[15 January 2020]

Julian Assange’s court hearing in London: Britain stages a lawless show-trial
[24 October 2019]