ஜேர்மன் வலதுசாரி தீவிரவாதி ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கிக்கு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் ஏன் நிதி வழங்குகிறது?

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நான் அண்மித்து ஓராண்டுக்கு முன்னர், ஏப்ரல் 3, 2019 இல், “சர்வாதிகாரங்கள் நிலைமாற்றமடைகின்றன” (Dictatorships in Transition) என்ற தலைப்பிலான பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வரங்கின் மீது கவலையை வெளிப்படுத்தி பேராசிரியர் டெபோரா காப்லெ (Deborah Kaple) க்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அப்பெண்மணி அந்நிகழ்வுக்கு பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கியை அழைத்திருந்தார். அந்நிகழ்வை ஒழுங்கமைப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த காப்லெ, அவ்வேளையில் பிரின்ஸ்டன் வழங்கிய 300,000 டாலர் ஆய்வு நிதியைப் பார்பெரோவ்ஸ்கி உடன் பகிர்ந்து கொண்டார்.

நான் எழுதினேன்:

பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கி ஜேர்மனியில் மிக முக்கிய வலதுசாரி திருத்தல்வாத வரலாற்றாளர்களில் ஒருவர் என்பது, இந்த கருத்தரங்கு/ஆய்வரங்கை ஒழுங்கமைக்கையில் மற்றும் இந்த கூட்டு ஆய்வு திட்டத்தை ஏற்பாடு செய்கையில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு தெரியாதா? மறைந்த பேராசிரியர் ஏர்ன்ஸ்ட் நோல்ட இன் நாஜி குற்றங்களை குறைத்துமதிப்பிடல், 1980 களின் இறுதியில் புகழ்பெற்ற “வரலாற்றாளர்களுக்கு இடையிலான விவாதத்தை” தூண்டிய நிலையில், இவர் அவரின் கண்ணோட்டங்களை பகிரங்கமாக ஆதரித்து பேசியுள்ள ஓர் ஆதரவாளராவார்.

பார்பெரோவ்ஸ்கி, சான்சிலர் மேர்க்கெலின் புலம்பெயர்வு கொள்கைகளை எதிர்க்கும் ஒரு முன்னணி நபராக உள்ளார். அவ்விடயம் மீதான அவரின் தீவிர வலதுசாரி கண்ணோட்டங்கள், நவ-பாசிசவாத ஜேர்மனிக்கானமாற்றீடுகட்சியின் (Alternative für Deutschland) வெளிநாட்டவர் விரோத போக்கை சட்டபூர்வமாக்க சேவையாற்றி உள்ளது. புலம்பெயர்வைக் குறித்த பார்பெரோவ்ஸ்கியின் அறிவிப்புகள் வழமையாக Breitbart News பத்திரிகையிலும், இன்னும் அதிகமாக கேடு விளைவிக்கும் வகையில், முன்னணி அமெரிக்க நாஜி வலைத் தளமான Daily Stormer இலும் வெளியிடப்பட்டுள்ளன...

பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கியின் கண்ணோட்டங்களை பற்றிய கருத்துபேதங்களைக் குறித்து உங்களுக்கோ, அல்லது சமீபத்திய அந்த கருத்தரங்கம்/ஆய்வரங்கில் பங்கெடுத்தவர்கள் எவரொருவருக்குமோ தெரிந்திருந்ததா என்பதை அறிய ஆர்வப்படுகிறேன். இங்கே பிரச்சினை வெறுமனே பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கியின் தனிப்பட்ட அரசியல் கருத்துக்கள் சம்பந்தப்பட்டதல்ல. மாறாக, நாஜி குற்றங்களை நியாயப்படுத்துவதற்காக அவரது வாழ்நாளில் கடைசி மூன்று தசாப்தங்களைச் செலவிட்டிருந்த ஏர்ன்ஸ்ட் நோல்டவை அவர் பாதுகாப்பது, பார்பெரோவ்ஸ்கியின் வரலாற்று-தத்துவார்த்த திட்டத்தின் உள்ளார்ந்த பாகமாக உள்ளது. யூதப் படுகொலை உள்ளடங்கலாக நாஜி காட்டுமிராண்டித்தனமானது, சோவியத் ஒன்றியதால் ஹிட்லர் ஆட்சி மீது பலவந்தமாக திணிக்கப்பட்ட விடையிறுப்பு என்ற வாதமே நோல்ட-பார்பெரோவ்ஸ்கி கருத்துருவின் மையத்தில் உள்ளது. பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கியினது கண்ணோட்டங்களின் தீவிர வலதுசாரி தன்மையும் அபாயகரமான உள்நோக்கங்களும் —அது வரலாற்று ஆவணங்களை ஏதோ சிறியளவு பொய்மைப்படுத்தலுடன் தொடர்பற்றது என்பதையும் இங்கே சேர்த்துக் கொள்ள வேண்டும்— சமீபத்திய கருத்தரங்கம்/ஆய்வரங்கில் பங்கெடுத்த கல்வியாளர்களால் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதை கற்பனை செய்வதே சிரமமாக உள்ளது. அந்த கருத்தரங்கம்/ஆய்வரங்கின் எந்தவொரு தருணத்திலும் பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கியின் கண்ணோட்டங்கள் சவால் விடுக்கப்பட்டதா?

பேராசிரியர் காப்லெ நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், எனது கடிதத்தைப் பெற்றதற்கு ஒப்புதலைக் கூட வழங்கவில்லை. ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியுடன் அரசியல்ரீதியில் அணி சேர்ந்துள்ள ஒருவருக்கு, மேலும், புலம்பெயர்ந்தவர்கள் மீதான அவரின் கண்டனங்கள் மற்றும் நாஜி குற்றங்களை நியாயப்படுத்துதல் போன்ற பகிரங்கமான நடவடிக்கைகள் மூலமாக ஜேர்மனியில் பாசிசவாத மீளெழுச்சியை நியாயப்படுத்தும் ஒரு புத்திஜீவித சூழலைப் பேணி வளர்ப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ள ஒருவருக்கு, அப்பல்கலைக்கழகம் ஒத்துழைப்பதன் மற்றும் நிதி உதவி வழங்குவதன் நோக்கத்தை காப்லெயும் சரி அல்லது அப்பல்கலைக்கழகமும் சரி விவரிக்கவே இல்லை. அந்த ஆய்வரங்கின் திட்டநிரல் மற்றும் நடவடிக்கைகளைக் குறித்த ஒரு தொகுப்புரை பிரசுரிக்கப்படவில்லை, “சர்வாதிகாரங்கள் நிலைமாற்றமடைகின்றன” திட்டத்தின் கல்வித்துறை அளவிலான நோக்கங்கள் மற்றும் இலக்குகளைக் குறித்தும் அங்கே எந்த விளக்கமும் இல்லை.

ஜேர்மனியின் அபாயகரமான அரசியல் நிலைமைகளைக் கொண்டு பார்க்கையில், பேராசிரியர் காப்லெயும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகமும் அதன் மாணவர்களுக்கும், கல்வியாளர் சமூகத்திற்கும் மற்றும் பரந்த பொதுமக்களுக்கும் பார்பெரோவ்ஸ்கி உடனான அதன் ஒத்துழைப்பைக் குறித்த விபரங்களை வழங்கக் கடமைப்பட்டிருக்கிறது. மிகச் சமீபத்தில் பெப்ரவரி 19 இல் ஹானோவில் நடந்த ஒன்பது பேரின் படுகொலையில் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, AfD இன் அரசியல் செல்வாக்கு வேகமாக வளர்ந்து வருவதும் மற்றும் யூத-எதிர்ப்புவாத புலம்பெயர்ந்தோர்-விரோத வன்முறையின் வெடிப்பும் பார்பெரோவ்ஸ்கியின் புலம்பெயர்ந்தோர்-விரோத அறிக்கைகளினது உள்நோக்கங்கள் மொத்தத்தையும் மிக மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளன. அது பார்பெரோவ்ஸ்கிக்கு ஆறு இலக்க ஆய்வு நிதியை வழங்கி அவரை பிரின்ஸ்டனுக்கு அழைத்த போது, அது ஏன் ஹிட்லர் மீதான அவரின் அனுதாபங்களைக் குறித்தும், ஐரோப்பியர்களுக்கான "விருப்பமானதையும், சிறப்பு சலுகைகளையும்" புலம்பெயர்ந்தோர் அவர்களிடம் இருந்து பறித்து வருகிறார்கள் என்ற அவரின் தூண்டிவிடும் கருத்துக்களையும் குறித்தும் கண்டுங்காணாமல் இருப்பதைத் தேர்ந்தெடுத்தது? எனது ஏப்ரல் 3 கடிதத்தில், நான் ப்ரைய்ட்பார்ட் பத்திரிகை கட்டுரைகளினதும் மற்றும் பார்பெரோவ்ஸ்கியின் புலம்பெயர்ந்தோர்-விரோத வெறிப்பேச்சுக்களை மேற்கோளிட்ட நவ-நாஜி நாளிதழ் Stormer இனதும் மற்றும் யூதப் படுகொலைக்கான பொறுப்பில் இருந்து ஹிட்லரை விடுவிப்பதற்கு அவர் எந்த பத்திரிகையில் முயன்றாரோ அந்த Der Spiegel இன்கட்டுரைஇணைப்புமுகவரிகளையும் காப்லெக்கு வழங்கி இருந்தேன்.

என் கடிதம் கடந்த ஏப்ரலில் பிரசுரிக்கப்பட்டதற்குப் பின்னர், கடந்தாண்டின் பிரின்ஸ்டன் ஆய்வரங்களில் மற்றொரு பங்கெடுப்பாளர் குறித்தும் புதிய மற்றும் தொந்தரவூட்டும் விபரங்கள் வெளியாகி உள்ளன.

ஹம்போல்ட் பல்கலைக்கழக பயிலகத்தின் கிழக்கு ஐரோப்பிய ஆய்வுத்துறையில் ஆராய்ச்சி உதவியாளராக உள்ள ஃபாபியான் தூனெமானும் (Fabian Thunemann) திரு. பார்பெரோவ்ஸ்கி உடன் இணைந்திருந்தார்.

டிசம்பர் 19, 1998 தேதியிட்ட ஒரு இணைய அறிக்கையின்படி, நவ-நாஜி ஜேர்மன் தேசிய ஜனநாயகக் கட்சி (Nationaldemokratische Partei Deutschland) ஹனோவரில் ஒழுங்கமைத்த ஓர் ஆர்ப்பாட்டத்தில் ஃபாபியான் தூனெமான் என்றொருவர் பங்கெடுத்திருந்ததாக அடையாளம் காணப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டம் 1939 மற்றும் 1945 க்கு இடையே நாஜி இராணுவம் நடத்திய போர் குற்றங்களை அம்பலப்படுத்திய ஒரு கண்காட்சியை எதிர்த்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் 170 நாஜிக்கள் பங்கெடுத்திருந்ததாக அந்த அறிக்கை குறிப்பிடுகின்ற அதேவேளையில், ஃபாபியான் தூனெமானும் அவர் சகோதரர் லூகாஸூம் விஷேடமாக அடையாளம் காணப்பட்ட வெறும் எட்டு நவ-நாஜிக்களில் உள்ளடங்கி இருந்தனர். இரண்டு பேர் முக்கிய வலதுசாரி தீவிரவாதிகளாக இருந்தனர் என்பதுடன், நவ-நாஜி நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொண்டிருந்த பாசிச-எதிர்ப்பாளர்களால் நன்கறியப்பட்டிருந்தனர். அந்த அறிக்கையில் பெயரிடப்பட்டிருந்த மற்றவர்கள், வலதுசாரி வன்முறையின் பிரதான சம்பவங்களில் அதன் பின்னர் உடந்தையாய் இருந்துள்ளனர்.

அந்த அறிக்கையை ஊர்ஜிதப்படுத்திக்கொள்வதற்கான முயற்சியில், ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் நாடாளுமன்றத்தின் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரும் கிழக்க ஐரோப்பிய வரலாற்று பயிலகத்தில் ஒரு பட்டதாரி மாணவருமான ஸ்வென் வூர்ம், 1998 அறிக்கையில் பெயரிடப்பட்ட அந்த ஃபாபியான் தூனெமானும் பார்பெரோவ்ஸ்கியின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு வருபவரும் ஒரே நபரா என்று கேள்வி எழுப்பி பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு டிசம்பர் 2019 இல் ஒரு கடிதம் அனுப்பினார்.

பல்கலைக்கழக செய்தி தொடர்பாளர் ஹன்ஸ்-கிறிஸ்தோப் கெல்லர், வேண்டுமென்றே தெளிவற்ற விதத்தில், அவ்விடயம் குறித்து அவரிடம் எந்த தகவலும் இல்லை என்று பதிலளித்தார்.

திரு. வுர்ம் ஜனவரி 2020 இல் திரு. கெல்லருக்கும் பல்கலைக்கழக தலைவர் சபீன குன்ஸ்ட்டுக்கும் இரண்டாவதாக ஒரு கடிதம் அனுப்பினார், அதில் அவரின் கேள்விக்குக் நேரடியாக பதிலளிக்குமாறு கோரியிருந்தார். அவர் எழுதினார்:

இது மிகவும் முக்கிய விடயம். ஆகவே நான் கேள்வி எழுப்பியே ஆக வேண்டும்: தற்போது கிழக்கு ஐரோப்பிய வரலாற்றுத்துறையில் பணியாற்றி வரும் திரு. தூனெமானும் ஹனோவரில் நவ-நாஜி நடவடிக்கைகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவரும் ஒருவர் தானா என்பதை முடிவு செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் ஏதாவது முயற்சி எடுத்ததா அல்லது ஏதேனும் முயற்சி எடுக்க உத்தேசித்துள்ளதா? இந்த அறிக்கை உண்மையா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது உங்களுக்குச் சிரமமாக இருக்காது.

திரு. கெல்லர் இரண்டாவது முறையாக வெளிப்படையாகவே தட்டிக்கழிக்கும் விதத்தில் பின்வருமாறு பதிலளித்தார்:

தனிநபர்கள் சம்பந்தப்பட்ட விடயத்தில், ஹம்போல்ட் பல்கலைக்கழகம் சட்டக் காரணங்களுக்காக மூன்றாவது தரப்பினருக்குத் தகவல்கள் வழங்க மறுக்கக்கூடும். இதை நீங்கள் புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பல்கலைக்கழகம் ஒரு நேரடி பதிலை வழங்க மறுப்பது, ஒரு நவ-நாஜி ஆர்ப்பாட்டக்காரராக அடையாளம் காணப்பட்ட ஃபாபியான் தூனெமானும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வரங்கில் பார்பெரோவ்ஸ்கி உடன் பங்கு பற்றிய ஃபாபியான் தூனெமானும் ஒருவரே என்பதை பற்றி சந்தேகப்படுவதற்கு போதிய காரணத்தை தருகின்றது.

1998 அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட நவ-நாஜி ஃபாபியான் தூனெமானும் பேராசிரியரினது ஆய்வரங்கில் பங்கெடுத்தவரும் ஒரே நபர் தானா என்பதன் மீது பேராசிரியர் காப்லெக்கு ஐயங்கள் இருந்தால், ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தையும் திரு. தூனெமானையும் பிரின்ஸ்டன் தொடர்பு கொண்டு, குழப்பத்திற்கிடமில்லாத ஒரு பதிலுடன் அவ்விடயத்தை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரியிருக்க வேண்டும்.

திரு. வூர்ம்மின் விசாரணைகளுக்கு குழப்பமிக்க பின்விளைவுகள் கிடைத்தன. ஜனவரி 30, 2020 இல், மாணவர் நாடாளுமன்றத்தில் ஓர் ஆசனத்திற்காக வூர்ம் பிரச்சாரம் செய்கையில், சட்டபூர்வமாக பதியப்பட்டிருந்த சுவரில் இருந்து அவரது தேர்தல் விளம்பரங்களை கிழித்தெறியும் ஒரு நடவடிக்கையில் பார்பெரோவ்ஸ்கியை வூர்ம் எதிர்கொண்டார். அந்த அடாவடித்தனம், மாணவர் நடவடிக்கைகளில் பல்கலைக்கழக பணியாளர்கள் குறுக்கிடுவதற்கு எதிரான கட்டுப்பாடுகளைப் பகிரங்கமாக மீறியிருந்தது. AfD செல்வாக்கு வளர்வதை எதிர்ப்பதில் வூர்ம் வகித்த முன்னணி பாத்திரம் மற்றும் பார்பெரோவ்ஸ்கி வழிநடத்தும் கிழக்கு ஐரோப்பிய வரலாற்றுத்துறை நவ-நாஜிக்களுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறதா என்பதைத் தீர்மானிப்பதற்கான அவரின் முயற்சிகள் ஆகியவற்றால் பார்பெரோவ்ஸ்கி தெளிவாக சீற்றமுற்றிருந்தார். பிரச்சார பொருட்களை நாசப்படுத்துவதை நிறுத்துமாறு வூர்ம் பார்பெரோவ்ஸ்கியைக் கோரிய போது, பார்பெரோவ்ஸ்கி அவரை சரீரரீதியில் தாக்கினார். அந்த ஒட்டுமொத்த சம்பந்தமும் காணொளியில் பதிவு செய்யப்பட்டு, யூ-டியூப்பில் பதிவிடப்பட்டது, 22,000 க்கும் அதிகமான தடவை இது பார்வையிடப்பட்டுள்ளது.

அந்த காணொளியில் பதிவாகி உள்ள இவ்விதத்தில் வன்முறையாக ஒரு மாணவரைத் தாக்கிய வேறெந்த பிரின்ஸ்டன் பேராசிரியரும் பல்கலைக்கழகத்திலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பார், அவர் ஆணோ பெண்ணோ அவர் வேலை இழந்திருப்பார், மேலும் அனேகமாக, குற்றவியல் குற்றச்சாட்டுகளையும் முகங்கொடுத்திருப்பார். ஆனால் ஜேர்மனியில் நிலவும் தற்போதைய அரசியல் சூழலில், பார்பெரோவ்ஸ்கியைக் கண்டிக்கக் கூட அது விரும்பவில்லை என்பதை அப்பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டும் அளவுக்கு AfD செல்வாக்கைப் பிடியில் வைத்துள்ளது. பல்கலைக்கழக தலைவர், சபீன குன்ஸ்ட் அறிவிக்கையில், பார்பெரோவ்ஸ்கியின் நடவடிக்கையை "ஒரு மனிதாபிமானரீதியாக விளங்கிக்கொள்ளக்கூடியது" என்று ஆதரவு தெரிவித்து அறிவித்தார். பார்பெரோவ்ஸ்கியை காயப்படுத்துவதற்கு குன்ஸ்ட் அஞ்சுவது சக்தி வாய்ந்த வலதுசாரி வலையமைப்புகளுடன் அவரின் நெருக்கமான தொடர்புகளை ஊர்ஜிதப்படுத்துகிறது. இந்த தொடர்புகள் ஜேர்மனியில் தீவிர வலதின் எதேச்சதிகார ஆய்வு ஒன்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்வென் வூர்ம் ஐ தாக்கிய ஒரு சில நாட்களுக்குப் பின்னர், கூட்டணி அரசாங்கத்தின் கல்வித்துறை அமைச்சருடன் பார்பெரோவ்ஸ்கி ஒரு மேடையைப் பகிர்ந்து கொண்டார், அக்கூட்டணி அரசாங்கம் AfD இன் அதிதீவிர வலதுசாரி வேலைத்திட்டத்தின் கணிசமான பகுதிகளை ஏற்றுக் கொண்டதன் மூலமாக அதைச் சாந்தப்படுத்த முயன்றுள்ளது.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் பார்பெரோவ்ஸ்கிக்கு அழைப்பு விடுத்தன் மூலம், “ஹிட்லர் வக்கிரமானவர் இல்லை,” என்றும், மிகவும் சமீபத்தில், "ஹிட்லர் அவுஸ்விட்ச் குறித்து எதையும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை" என்ற அவரின் வலியுறுத்தல் மூலமாகவும் எடுத்துக்காட்டப்பட்டவாறு, நாஜி-சார்பான வரலாற்று திருத்தல்வாதத்தை முன்னெடுத்த அவரின் புத்திஜீவித மோசடி முயற்சிகளுக்கு பொருத்தமற்ற மிகப் பெரும் சர்வதேச கௌரவ மட்டத்தை வழங்கியது.

அனைத்திற்கும் மேலாக, பார்பெரோவ்ஸ்கியின் பாசிசவாத அரசியல் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அவரது அவமதிப்பைக் கொண்டு பார்க்கையில், “சர்வாதிகாரங்கள் நிலைமாற்றமடைகின்றன" என்ற ஆய்வான காப்லெ-பார்பெரோவ்ஸ்கியின் ஆய்வுத் திட்டத்தின் கருப்பொருள் நம்ப முடியாதளவில் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. “சர்வாதிகாரம் மாற்றீடாக" (“Dictatorship as Alternative”) என்ற ஆத்திரமூட்டும் தலைப்பைக் கொண்ட இதே போன்ற திட்டத்திற்கு நிதியுதவி பெறுவதற்கான பார்பெரோவ்ஸ்கியின் முயற்சிகள், அப்பேராசிரியரின் வலதுசாரி தீவிரவாத கண்ணோட்டங்களை நன்கறிந்த ஹம்போல்ட் பல்கலைக்கழக கல்வியாளர் செனட் குழுவால் (Akademischer Senat) நிராகரிக்கப்பட்டது. நிதியுதவியை அவர் பயன்படுத்தும் விதம் குறித்து கணக்கிட பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட வெளியிலிருந்து சுதந்திரமான வல்லுனர்கள் அவர் திட்டத்தைப் படுமோசமாக விமர்சனத்திற்கு உட்படுத்தினர்.

வலதுசாரி அரசியல் படுகொலைகளுக்கும் மனித படுகொலை வன்முறையின் ஏனைய நடவடிக்கைகளுக்கும் ஒரு பொதுவான இடமாக மாறி வரும் ஜேர்மனியில் நாஜிசம் ஒரு புத்துயிரூட்டலை அனுபவித்து வரும் இந்நேரத்தில், பார்பெரோவ்ஸ்கி போன்றவர்களுடன் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் ஒத்துழைப்பதும் மற்றும் நிதியுதவி வழங்குவதும் புத்திஜீவித ரீதியில் பொறுப்பற்றதும் மற்றும் அரசியல்ரீதியில் கண்டனத்திற்குரியதும் ஆகும்.

ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி உடனான அதன் உறவின் தன்மையை பிரின்ஸ்டன் இன்னும் தெளிவுபடுத்தவில்லை. அது தொடர்ந்து வருகிறதா? ஓர் ஆராய்ச்சி திட்டத்திற்கு 300,000 டாலர் ஒதுக்கப்படுவது நிதிய ஆதாரவளத்தில் ஒரு குறிப்பிடத்தக்க செலவாகும். இத்திட்டத்தின் வீச்செல்லை என்ன? துல்லியமாக, எதற்காக இப்பணம் செலவிடப்பட்டு வருகிறது? இந்த நிதிச் செலவுகள் மீது பார்பெரோவ்ஸ்கி என்ன கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளார்? இத்திட்டத்தில் ஃபாபியான் தூனெமான் வகிக்கும் பாத்திரம் என்ன?

இறுதியாக, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் நிலவும் தற்போதைய அரசியல் நிலைமைகளுக்குத் தொடர்புடைய விதத்தில், சிலியில் தளபதி பினோசே இன் கீழ் நிலவியதைப் போன்ற சர்வாதிகாரத்திற்கு, ஒரு சமகாலத்திய நியாயப்பாட்டைக் கட்டமைப்பதற்கான பார்பெரோவ்ஸ்கியின் முயற்சிகளை அது ஏன் நம்புகிறது என்பதை பிரின்ஸ்டன் விவரிக்க வேண்டும்.

கட்டுரையாளர்பரிந்துரைக்கும்ஏனையகட்டுரைகள்:

Princeton University provides $300,000 in funding for right-wing historian and propagandist Jörg Baberowski
[10 April 2019]

Sound the alarm! Political conspiracy and the resurgence of fascism in Germany
[14 February 2020]

The Lübcke murder and the return of the “Nazi problem” in Germany
[25 June 2019]

Appreciative audience at Australian launch of Why Are They Back?
[10 December 2019]

Seventy-five years since the liberation of Auschwitz
[27 January 2020]

Loading