பிரிட்டிஷ் பொலிசாரால் அசான்ஜ் கைப்பற்றப்படுவதற்கு ட்ரம்ப் உத்தரவிட்டதுடன், அவரது மரணத்தையும் விரும்பினார்

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஊடகவியலாளரான கசாண்ட்ரா ஃபேர்பேங்க்ஸ் (Cassandra Fairbanks), தனக்கும் குடியரசுக் கட்சி செயற்பாட்டாளர் ஆர்தர் சுவார்ட்ஸூக்கும் (Arthur Schwartz) இடையிலான விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜின் வழக்கு தொடர்பான உக்கிரம்நிறைந்த தொடர்ச்சியான தகவல்தொடர்புகளைப் பற்றி வெளிப்படுத்தினார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நிகழ்த்தப்பட்ட அமெரிக்க போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய எவரையும் மவுனமாக்குவதையும், மற்றும் ஏகாதிபத்திய போர் எதிர்ப்பாளர்களை அச்சுறுத்துவதையும் நோக்கமாக கொண்டு, அசான்ஜை நாடுகடத்த முயற்சிப்பது ஒரு குற்றவியல் சாகச முயற்சி என்பதை அவை உறுதி செய்கின்றன. மரண தண்டனை உட்பட, அவ்வாறு செய்வதற்கான அனைத்து முறைகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன என்பதையே அவை நிரூபிக்கின்றன.

உளவு குற்றச்சாட்டுக்களின் பேரில் 175 ஆண்டுகள் வரை சிறைதண்டனையை அசான்ஜ் எதிர்கொள்ளவிருக்கும் அமெரிக்காவிற்கு அவரை நாடுகடத்த முடிவு செய்வதற்கு கடந்த வாரம் தொடங்கப்பட்ட விசாரணையின் ஊடாக அவர் பாதி வழி செலுத்தப்பட்டிருக்கிறார். அசான்ஜ் அரசியல் தஞ்சம் புகுந்திருந்த இலண்டனில் உள்ள ஈக்வடோரிய தூதரகத்திலிருந்து ஏப்ரல் 2019 இல் பிரிட்டிஷ் பொலிசாரால் அவர் சட்டவிரோதமாக வெளியே இழுத்துவரப்பட்ட பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஃபேர்பேங்க்ஸ் கசியவிட்ட உரையாடல்களின் படி, ட்ரம்ப் நிர்வாகம் தெளிவாக விரும்பிய அசான்ஜின் மரண தண்டனையை தீர்மானிப்பதற்கான உத்தரவை மேசையிலிருந்து வெளிப்படையாக அவர்கள் எடுத்ததற்கு ஈடாக, அசான்ஜ் கைப்பற்றப்படுவதை பாதுகாக்க 2018 இல் ஈக்வடோரிய அரசாங்கத்துடனான ஒரு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த ஒப்பந்தத்திற்கு ஜனாதிபதி ட்ரம்பின் தற்போதைய தேசிய புலனாய்வு இயக்குநரான ரிச்சார்ட் கிரெனெல் (Richard Grenell) ஏற்பாடு செய்திருந்தார், அப்போது அவர் ஜேர்மனிக்கான அமெரிக்க தூதராக பணிபுரிந்து கொண்டிருந்தார். ஜனாதிபதி அலுவலகத்தின் நேரடி அறிவுறுத்தலின் கீழ் அசான்ஜை கைது செய்வதற்கும் மற்றும் நாடுகடத்துவதற்கும் கோரப்பட்டதாக ஃபேர்பேங்க்ஸ் வழங்கிய தகவல்கள் தெளிவுபடுத்துகின்றன.

அக்டோபர் 30, 2018 அன்று கிரெனெல் மற்றும் சுவார்ட்ஸ் உள்ளிட்ட, ட்ரம்ப் சார்பு பிரச்சாரகர்களின் அரட்டைக் குழுவுடன் அசான்ஜூக்கு ஆதரவான செய்தியை அவர் பதிவிட்டதாக ஃபேர்பேங்க்ஸ் விளக்கமளித்தார். அவர் “எப்போதும் நட்பு பாராட்டிய,” சுவார்ட்ஸ், விக்கிலீக்ஸை ஆதரிப்பதை ஃபேர்பேங்க்ஸ் நிறுத்த வேண்டும் என்று அவரிடம் கூறுவதற்கு விரைவில் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்:

ஜூலியனை கைது செய்வதற்கு அவர்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், தூதரகத்திற்குள் செல்வதற்கு ஏற்கனவே ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது என்று அவர் கூறிக் கொண்டிருந்தார்…. ட்ரம்பின் சமூக உலகத்தில் நான் ஈடுபட்டிருந்தேன் என்றும் அவர் கூறிக் கொண்டிருந்தார்… மேலும், ஜூலியன் மோசமானவர் என்பது எனக்கு தெரிவதற்கு முன்னர் விக்கிலீக்ஸை நான் ஆதரித்தேன் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அவரைப் பற்றிய இந்த மோசமான விடயங்கள் அனைத்தும் வெளிவந்த சமயத்தில் அவர்கள் கண்டிப்பாக புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள்.

ஃபேர்பேங்க்ஸ் இந்த அழைப்பை “அச்சுறுத்தலாகவும்” “மிரட்டலாகவும்” விவரித்தார்.

ஃபேர்பேங்க்ஸால் காப்பகப்படுத்தப்பட்ட குறியாக்கம் செய்யப்பட்ட சேவை சமிக்ஞை மூலமான அடுத்தடுத்த உரை செய்திகளில், சுவார்ட்ஸ் அசான்ஜை பற்றி குறிப்பிடுகையில், “அந்த பயனற்ற குப்பை என்னவென்று நீங்கள் சரியாக பார்க்கும் வரை நான் உணர்ச்சிவசப்பட மாட்டேன். … மரண தண்டனைக்கான சாத்தியம் மேசையில் இருந்ததற்கான ஒரு சிறந்த காரணம் உள்ளது” என்று ஃபேர்பேங்க்ஸூக்கு தெரிவித்தார்.

தூதரகத்தில் அசான்ஜின் அனைத்து உரையாடல்களையும் பாதுகாப்பு நிறுவனமான UC Global பதிவு செய்து, ட்ரம்ப் நிர்வாகத்திற்கு நேரடியாக ஒளிபரப்பியதை ஃபேர்பேங்க்ஸூம் உறுதிப்படுத்துகிறார். ஜனவரி 2019 மற்றும் மீண்டும் மார்ச் 27 அன்று, ஈக்வடோர் தூதரகத்திற்குச் சென்று அசான்ஜை அவர் எச்சரித்தார். கண்காணிப்பை சந்தேகிக்கும் அவர்கள், தங்கள் உரையாடலை தனிப்பட்ட முறையில் வைத்திருக்க முயற்சிப்பதற்கு எழுதப்பட்ட குறிப்புகள் மற்றும் பலவகைப்பட்ட விவாதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். இந்த முன்னெச்சரிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், மார்ச் 29, 2019 அன்று, சுவார்ட்ஸிடமிருந்து ஃபேர்பேங்க்ஸிற்கு வந்த மற்றொரு அழைப்பில், அவர் “அந்த தகவலை யார் எனக்கு கசியவிட்டார்கள் என்பது குறித்து வெளியுறவுத்துறை விசாரணை நடந்ததாக நான் அசான்ஜிற்கு கூறியதை அவர் அறிவார் என்று என்னிடம் கூறினார்.”

அசான்ஜின் கைது நடவடிக்கையை பாதுகாக்க ஈக்வடோர் மற்றும் அமெரிக்க அரசாங்கங்களுக்கு இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை பகிரங்கமாக வெளிப்படுத்திய ABC செய்தி அறிக்கையை குறிப்பிட்டு செப்டம்பர் 10, 2019 அன்று ஃபேர்பேங்க்ஸ் ஒரு ட்வீட்டை பதிவு செய்தார். ஜேர்மனிக்கான ஈக்வடோர் தூதர் மானுவல் மெஜியா டால்மாவ் (Manuel Mejia Dalmau), அசான்ஜிற்கு எதிராக மரணதண்டனை விதிக்க அமெரிக்கா உறுதியளிக்குமா என்று கேட்பதற்கு, 2018 இன் பிற்பகுதியில் கிரெனெலுடன் ஒரு “அவசரக் கூட்டத்தை” நடத்தினார் என்று அநாமதேய வட்டாரங்கள் ABC ஊடகத்திற்கு செய்தியளித்தன.

கிரெனெல் அமெரிக்க நீதித்துறையைத் தொடர்பு கொண்டு, துணை அட்டர்னி ஜெனரல் ரோட் ரோசென்ஸ்டீனின் (Rod Rosenstein) ஒப்புதலைப் பெற்றார், இவ்வாறாக ஈக்வடோருடன் ஒப்பந்தம் செய்ய அவர் அனுமதிக்கப்பட்டார்.

“ஜூலியன் அசான்ஜின் கைதுக்கான ஒப்பந்தத்திற்காக வேலை செய்தவர்களில் கிரெனெலும் ஒருவர்” என்று ஃபேர்பேங்க்ஸ் ட்வீட் செய்தார். சற்று நேரத்திற்குப் பின்னர், “ரிக்கின் பங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது. …யாரோ சிறைக்குச் செல்லப் போகிறார்கள்.” என்று கூறி, அவரது ட்வீட்டை நீக்கி விடுமாறு கோருவதற்கு சுவார்ட்ஸ் அழைத்தார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில் கிரெனெல் செயல்பட்டு வந்தார் என சுவார்ட்ஸ் தெரிவித்தார். மேலும், “தயவு செய்து. நான் உங்களிடம் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்… அவர் [கிரெனெல்] ஜனாதிபதியிடமிருந்து உத்தரவுகளை பெறுகிறார். சரிதானே?” என்றார்.

சுவார்ட்ஸ் உடனான தனது ஒப்பந்தங்களை பெப்ரவரி 25 அன்று அவர் வெளிப்படுத்துகையில் ட்வீட்டை நீக்குவதற்கு ஃபேர்பேங்க்ஸ் ஒப்புக் கொண்டார். அசான்ஜை அழிக்க விரும்பும் ட்ரம்ப் நிர்வாக ஊழியர்கள் உட்பட, அதிவலது மற்றும் பாசிசவாத தனிநபர்களுடனான அசான்ஜின் அரசியல் தொடர்புகளுக்கு அவர் தனது ஆதரவையும் வழங்கினார். தனது தகவல்களை பொது மக்களுக்காக வழங்காத ஃபேர்பேங்க்ஸ் சுவார்ட்ஸின் நண்பியாக பேசப்பட்டார்.

கடந்த வாரம் பெல்மார்ஷ் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாடுகடத்தல் விசாரணை ஒரு போலிநாடக விசாரணையாக இருப்பதை சுவார்ட்ஸ் மற்றும் ஃபேர்பேங்க்ஸின் தகவல்தொடர்புகள் உறுதிப்படுத்துகின்றன - இது, அசான்ஜை என்றென்றும் மவுனமாக்குவதற்கான அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு இடையிலான ஒரு அரசியல் சதியை மூடிமறைப்பதற்கான ஒரு அத்தி இலையாக உள்ளது. இந்த தீர்ப்பு, அசான்ஜ் கைது செய்யப்படுவதற்கு ஈக்வடோர் உடந்தையாக இருந்த காட்சிகளுக்குப் பின்னால் நிச்சயமாக முன்னரே தீர்மானிக்கப்பட்டது.

பொது நலன் கருதி தெளிவாக தகவல்களை வெளியிட்ட வகையில் அசான்ஜ் எந்த குற்றமும் செய்யவில்லை என்ற நிலையில், அமெரிக்க நாடுகடத்தல் கோரிக்கை தானாகவே மறுக்கப்பட வேண்டும். ஆங்கிலோ-அமெரிக்க நாடுகடத்தல் ஒப்பந்தம் (2007), சுமத்தப்பட்ட குற்றம் “அரசியல் குற்றமாக இருப்பின் அது குறித்து சம்பந்தப்பட்ட நபரை நாடுகடத்துவதற்கு கோரப்பட்டால்” அத்தகைய நாடுகடத்தலை தடை செய்கிறது.

ஒப்பந்தத்தின் விதிமுறைகளை உள்நாட்டுச் சட்டத்தில் இணைக்கும் நாடுகடத்தல் சட்டம் (2003) என்பது, ஒருவரின் “அரசியல் கருத்துக்களுக்காக” அவர் மீது “வழக்கு தொடர்வதற்கான அல்லது தண்டிப்பதற்கான நோக்கத்திற்காக” அல்லது அவரது “அரசியல் கருத்துக்கள்” காரணமாக “அவரது விசாரணை பக்கசார்புடன் நடத்தப்படலாம், அல்லது தண்டிக்கப்படலாம், தடுத்து வைக்கப்படலாம் அல்லது அவரது தனிப்பட்ட சுதந்திரம் கட்டுப்படுத்தப்படலாம்” என்பதற்காக நாடுகடத்தலை தடை செய்கிறது.

அமெரிக்காவைப் போல இங்கிலாந்தும் அசான்ஜிற்கு விரோதமானது என்பதால் நாடுகடத்தல் விசாரணை தொடர்கிறது. கடந்த வார இறுதியில், ஊடகவியலாளர்களான மாட் கென்னார்ட் (Matt Kennard) மற்றும் மார்க் கர்டிஸ் (Mark Curtis) ஆகியோர், அமெரிக்க நாடுகடத்தல் கோரிக்கைக்கு ஒப்புதலளித்த கன்சர்வேடிவ் கட்சி அரசாங்க உள்துறை செயலரான சஜித் ஜாவித் (Sajid Javid), அமெரிக்க உளவுத்துறை சமூகத்துடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட அமெரிக்க நிறுவன அமைப்பின் (American Enterprise Institute-AEI) ஆறு வருடாந்திர கூட்டங்களில் கலந்து கொண்டார். ஒரு நிகழ்ச்சியில் அப்போதைய National Review இன் ஆசிரியரான ஜோனா கோல்ட்பேர்க் (Jonah Goldberg) உடன் அவரும் பேசினார், அவர் AEI இணைய தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், “பல ஆண்டுகளுக்கு முன்பே அசான்ஜின் அறையில் வைத்தே அவரது குரல்வளை ஏன் நெரிக்கப்பட வில்லை?” என்று கேட்டார். கட்டுரையை எழுதிய நியோ-கான் சித்தாந்தவாதி பில் கிறிஸ்டல் (Bill Kristol), “ஜூலியன் அசான்ஜூம் மற்றும் அவரது ஒத்துழைப்பாளர்களும் எங்கிருந்தாலும் அவர்களை துன்புறுத்துவதற்கும், கைப்பற்றுவதற்கும் மற்றும் மட்டுப்படுத்துவதற்கும் எங்களது பல்வேறு சொத்துக்களை ஏன் பயன்படுத்த முடியாது?” என்று கேட்கிறார்.

கடந்த வார நாடுகடத்தல் விசாரணையின் முடிவில், “தூதரகத்தில் ஜூலியன் அசான்ஜை கடத்துவது அல்லது அவருக்கு விஷமளிப்பது போன்ற மிக தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமா என சிந்திக்கப்பட்டதா என்பது பற்றி” UC Global மற்றும் CIA இடையேயான உரையாடல்களை விவரிக்கும் அநாமதேய இரகசிய செய்தி வெளியீட்டாளர் வழங்கிய ஆதாரங்களை அவர்கள் முன்வைப்பார்கள் என்று அசான்ஜின் சட்டக் குழு விளக்கமளித்தது. இந்த விவாதங்கள், அசான்ஜ் கடத்தப்படுவது “ஒரு விபத்தாக” இருந்திருக்கலாம் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்க தூதரகத்தின் கதவுகளை திறந்தே வைத்திருந்திருக்கலாம் என்ற ஆலோசனையை உள்ளடக்கியது.

அசான்ஜின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த இந்த மலை போன்ற ஆதாரங்களை இங்கிலாந்து அதிகாரிகள் புறக்கணித்தனர், ஏனென்றால் மரண தண்டனைக்கான வாய்ப்பு தானாகவே நாடுகடத்தப்படுவதைத் தடுக்கிறது. ஈக்வடோர் வரையிலும் அளிக்கப்பட்ட வாக்குறுதி பயனற்றது என்று அவர்கள் அறிவார்கள். அசான்ஜ் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டால், அவர் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையை எதிர்கொள்வார். இந்த கோரிக்கைகளை தடுப்பதற்கு, அசான்ஜின் பாதுகாப்பிற்கு தொழிலாள வர்க்கம் பாரியளவில் அணிதிரட்டப்பட வேண்டும்.

ஊழல் நிறைந்த பிரிட்டிஷ் நீதிமன்றங்களிடமிருந்து எந்தவித நீதியையும் எதிர்பார்க்க முடியாது. கடந்த வாரம் நான்கு நாட்களாக நடந்த விசாரணை நடவடிக்கைகளின் போது, அசான்ஜ் தனது வழக்கறிஞர்களை அணுகி தனது பாதுகாப்பை முறையாக ஏற்படுத்திக்கொள்ள முடியாத வகையில் குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டில் உட்கார வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது, மேலும் சிறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பின் கீழ் அவர் இருந்ததுடன், நீதிமன்ற அறையில் சந்தேகத்திற்கு இடமின்றி CIA உளவாளிகளும் இருந்தனர். அப்போது அவருக்கு கைவிலங்கு பூட்டப்பட்டிருந்தது, மேலும் அவரது ஆடைகள் களையப்பட்டு அவர் சோதனை செய்யப்பட்டதுடன், அதிகளவு மருந்தும் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது - அவை அனைத்தும் தலைமை நீதிபதி வனேசா பாரைட்ஸரின் ஒப்புதலின் பேரில் தான் நடந்தது. நாடுகடத்தல் விசாரணை மே மாதத்தில் மீண்டும் தொடங்கும் போது, வலுவூட்டப்பட்ட கண்ணாடி கூண்டில் தான் அசான்ஜ் இருக்க வேண்டும் என்று அவர் தீர்ப்பளித்தார்.

இந்த போலியான-சட்ட கனவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, பணியிடங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்து இடங்களிலும் அசான்ஜ் மற்றும் துணிச்சல் மிக்க இரகசிய செய்தி வெளியீட்டாளரான செல்சியா மானிங்கின் விடுதலையை கோரி கூட்டங்களை நடத்த வேண்டும் என்பதுடன், உலக அளவிலான ஒரு போராட்டத்தை தொடங்க வேண்டியது அவசியமாகும்.

Loading