கொரோனா வைரஸ்: இத்தாலிய நெருக்கடிக்கு பிரான்ஸ் தயாராகி வருகிறது

Anthony Torres
18 March 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஒரு இத்தாலிய சூழ்நிலை ஏற்படும் என்ற அச்சத்தில், பிரெஞ்சு அரசாங்கம் சனிக்கிழமை மாலை 3 ஆம் கட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து, அத்தியாவசியமற்ற பொது நிறுவனங்கள் மூடப்பட்டன. ஏற்கனவே நெருக்கடியின் விளிம்பில் உள்ள மருத்துவமனை அமைப்பின் மீதான அழுத்தத்தை குறைக்க முற்படுகையில், அரசாங்கம் தனது சுயநலம் மற்றும் குற்றவியல் கொள்கைகளை மறைக்க முடியாதளவுக்கு நிலைமை உருவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் உலகளவில் தொடர்ந்து பரவி வருகிறது, இதில் 156,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட 6,000 இறப்புகள் ஏற்பட்டுள்ளன, அவற்றில் 53 சதவீதம் சீனாவில் இடம்பெற்றுள்ளன. ஸ்பெயினில் ஒரே நாளில் 1,500 க்கும் மேற்பட்டோருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது பாதிப்புக்குள்ளான நாடான இத்தாலியில், 1,441 பேர் இறந்துள்ளதுடன், 21,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. பிரான்சில், 5,423 பேருக்கு -தற்போது 6400 பேருக்கு- தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 127 பேர் இறந்துள்ளனர், ஆனால் சனிக்கிழமையில் இருந்து, 924 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மற்றும் அதில் 36 இபேர் இறந்துள்ளனர்.

3 வது கட்டத்தினை அறிவிப்பதற்கான மக்ரோன் அரசாங்கத்தின் முடிவு, லு மொன்ட் சுட்டிக்காட்டியபடி, “தீவிரமான தடுப்பு மற்றும் சமூக தூரப்படுத்தல் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படாதுவிடத்து, தொற்றுநோயின் உச்சத்தில் நோயாளிகளுக்கு ஒதுக்க 30,000 முதல் 100,000 தீவிர சிகிச்சை படுக்கைகள் தேவைப்படும்” என்ற ஒரு நிபுணர் குழுவின் "இரகசிய திட்டமிடல்" இல் இருந்து எடுக்கப்பட்டதாகும். அந்த நிபுணர் குழு வரப்போகும் பேரழிவு அபாயத்தினை கணித்ததுடன், எச்சரிதிருந்தார்கள்.

அரசு "அதிகபட்ச வெள்ளைத் திட்டத்தை" அறிவித்துள்ளது, வெள்ளைத் திட்டம் என்பது தொற்றுநோய் மற்றும் மருத்துவ நெருக்கடி ஏற்படும்போது 2004 சட்டத்தின் பிரகாரம் விதிவிலக்காக எடுக்கப்படும் அவசர நடவடிக்கை -கூடியபட்சமான முறையில் கொரோனா வைரஸ் நோயாளிகளை ஏற்றுக்கொள்வதற்கு ஏற்ப எந்தவொரு அவசரகால அறுவை சிகிச்சையையும் இரத்து செய்யும்படி மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 3வது-நிலை என்பது ஏற்கனவே பல தசாப்தங்களாக அழுத்தங்களுக்கு உள்ளாகிவருவதால் -தசாப்தங்களாக அது முகம் கொடுத்துவரும் பண நெருக்கடியால்- மருத்துவமனைகள் நோயாளர்களால் நிரம்பிவளிவதை தடுப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நோயாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதை நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், சுகாதார அமைச்சரின் அறிவிப்புகள் வெளிவந்தபோதும், மருத்துவதுறை ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய பணத்தின் தொகையோ அல்லது மருத்துவப்பொருட்கள் குறித்து எந்த புள்ளிவிவரங்களும் வெளியிடப்படவில்லை.

மார்ச் 10, செவ்வாயன்று, சுகாதார இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலொமன், பிரான்சில் 5,000 உயிர்தப்பிக்க உதவும் அவசரசிகிச்சை படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் 7,364 படுக்கைகள் இருப்பதாக அறிவித்தார். ஆனால் இந்த இருப்பு நிலை விரைவாக நிரம்பி விடும் விளிம்பில் இருக்கிறது. கோவிட்-19 தொற்று நோய் எண்ணிக்கை இப்போது ஒவ்வொரு 72 மணி நேரத்திற்கும் இரட்டிப்பாகிறது, மேலும் 300 பேர் ஏற்கனவே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் ஆல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியங்களில், தீவிர சிகிச்சை பிரிவுகள் சில நாட்களாக தீவிர நோயாளிகளின் வருகையை எதிர்கொண்டுள்ளன, மேலும் தொற்றுநோயின் வேகம் குறையாவிட்டால் அவர்களால் இனி சமாளிக்க முடியாத நிலை உருவாக்கும் என்று அஞ்சுகின்றனர்.

பேராசிரியர் சாவியே லெஸ்குயூர் குறிப்பிடுகையில், “நாங்கள் ஏற்கனவே 61 கோவிட் நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம், இதில் 20 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அனைத்து படுக்கைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. புதிய நோயாளிகளை வரவேற்க திங்களன்று, இந்த துறையின் கடைசி பிரிவில் 18 படுக்கைகள் திறக்கப்படவுள்ளது. கடைசி ஆறு அவசரசிகிச்சை படுக்கைகளும் திறக்கப்படும், மேலும் மருத்துவமனையின் ஏனைய பகுதிகளிலும் படுக்கைகள் நிறுவப்படுகின்றன” என அறிவித்தார். அத்துடன் மருத்துவ ஊழியர்கள் குறைபாட்டினையும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார். பாரிஸில் உள்ள தெனோன் மருத்துவமனையின் தொற்று நோய்கள் துறையின் தலைவர் டாக்டர் ஜீல் பியாலூ "மிக மோசமான நிலைக்கு நாங்கள் தயாராக வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கவேண்டும்" என்றார்.

பிரான்சில் கொரோனா வைராசால் ஏற்பட்ட முதல் மரணத்திற்குப் பின்னர் அதுபற்றிய பல பேச்சுக்களை வெளியிட்ட ஒரு வீடியோவில், பாரிஸில் உள்ள Pitié-Salpêtrière மருத்துவமனையைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் பிரான்சுவா சலாசா கூறினார்: “மருத்துவமனை ஊழியர்கள் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். நாங்கள் விளிம்பில் இருக்கிறோம். பொது மருத்துவமனைக்கு மறு நிதியளிப்பது முற்றிலும் அவசியம்” என கூறியதைக் கேட்ட மக்ரோன் அதிர்ச்சியடைந்தார்.

அவர் மேலும் கூறுகையில், "Notre-Dame ஐ காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, இயங்க வேண்டியவர்கள் பலர் இருந்தனர். அங்கு, Notre-Dame கிட்டத்தட்ட எரிந்த அதே வேகத்தில் எரியும் பொது மருத்துவமனையை நாம் காப்பாற்ற வேண்டும். அங்கே அதற்கு ஒன்றும் இல்லாமல் செய்யப்பட்டது, இந்த நேரத்தில், இங்கே, அது ஒன்றும் செய்யப்படவில்லை. நீங்கள் என்னை நம்பலாம். தலைகீழாக நிரூபிக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் விடயத்திற்கு திரும்பிய நரம்பியல் நிபுணர் மக்ரோனுக்கு "விரைவான வழிமுறையில் வளங்களை செலுத்தாமல், இந்த வகை நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது" என்று விளக்கினார்".

இந்த எச்சரிக்கை நிறைந்த அவதானிப்பு, மக்ரோன் அரசாங்கத்தின் குற்றவியல் அலட்சியத்தின் கொள்கைகளையும், பொதுவாக தொழிலாள வர்க்கத்தால் உற்பத்தி செய்யப்படும் செல்வத்தை அதன் போர்களுக்கும் அதன் இலாபங்களுக்கும் கொள்ளையடிக்கும் நிதி பிரபுத்துவத்தின் ஒட்டுண்ணித்தனமான பங்கையும், அதன் இலாபங்களுக்கு முன்னால் மக்களின் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதிருப்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.

தொற்றுநோய் பரவாமல் இருக்க ஐரோப்பாவுக்கும் உலகுக்கும் வழிகாட்டும் முறையில் சீனாவிலோ அல்லது சிங்கப்பூரிலோ சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில், பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் இத்தகைய தொற்றுநோயின் விளைவுகள் நிதிச் சந்தைகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் என கவலை கொண்டிருந்ததுடன், தொற்றுநோய் ஐரோப்பாவில் வேகமாக உருவாகும் என்பதையும் அறிந்திருந்ததனர். அதேநேரத்தில், வேகமாக பரவும் தன்மைகொண்ட தொற்றுநோயைக் குறைமதிப்பீடு செய்ததன் மூலம் ஆபத்தில் சிக்கியுள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை அலட்சியம் செய்தனர்.

அனைத்து நோயாளிகளையும் ஏற்கனவே பரிசோதித்து சிகிச்சையளிக்க முடியவில்லை என்று பிரெஞ்சு அதிகாரிகள் வலியுறுத்தியிருந்தனர். இதன் விளைவாக, கொரோனா வைரஸின் அறிகுறிகளை மற்றொரு கொரோனா வைரஸ் தொற்றுடையவரிடமிருந்து ஏற்பட்டதை கண்டறிந்து கொண்ட பின்னர் பிரெஞ்சு மக்கள் பெரும்பாலும் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இத்தாலியில் இருந்து தத்தெடுக்கப்பட்டிருக்கும் இந்த வழிமுறைகள் தான் 30 முதல் 40 வயதுடைய நோயாளிகளின் இறப்பு அதிகரிப்பதற்கு வழிவகுத்தன, அவர்கள் ஏற்கனவே நிமோனியாவால் இறக்கும்போது மட்டுமே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

பொதுச்சேவைக்காக ஒதுக்கப்பட்ட அவசியமான செல்வங்களை, செல்வந்தர்களின் 1 சதவிகிதத்தை நோக்கி செல்வம் குவிவதற்கும், தற்போதையை மற்றும் எதிர்கால போர்களுக்கு தயாராவதற்கு அவர்களின் இராணுவத்தை நவீனமயமாக்குதலுக்காகவும் ஒதுக்குவதற்காக பல தசாப்தங்களாக, பல்வேறு அரசாங்கங்கள் சமூக சேவைகள் மற்றும் சுகாதார அமைப்புக்கு எதிரான தாக்குதல் கொள்கையை முன்னெடுத்திருக்காவிட்டால், இந்த தொற்றுநோயை தவிர்த்திருக்க முடியும்.

சுகாதார வரவு-செலவுத் திட்டங்களைக் குறைத்து சுகாதாரப் பணியாளர்களைத் தாக்க திட்டமிட்டுள்ள மக்ரோன் அரசாங்கத்தின் மூலோபாய திட்டத்திற்கு எதிராக மருத்துவ அவசரத்துறை கிட்டத்தட்ட ஒரு வருடமாக போராடி வருகிறது. 2019 வரவு-செலவுத் திட்டமானது, சுகாதார வரவு-செலவுத் திட்டத்திற்கு 3.8 பில்லியன் யூரோக்களை குறைக்கிறது அல்லது 4 ஆண்டுகளில் 11.4 பில்லியன் குறைப்பினை ஏற்படுத்தியுள்ளது, இந்த தொகை பெரும்பாலும் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய சுவாசக்கருவிகள் போன்ற கருவிகளை வாங்குவதற்கு பங்களிப்புசெய்திருக்க கூடும், இந்த சுவாசக்கருவிகள் தான் உயிரை தக்கவைப்பதற்காக இரத்தத்தில் சுவாசத்தின் அளவினை உயர்த்துவதற்கு பயன்படுகின்றன, இன்று அந்த சாதனத்தின் போதாமையால்தான் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

பட்டியலிடப்பட்ட 3,036 சுகாதார நிறுவனங்களில், மருத்துவமனைகளில் நோயாளிகள் தங்க அனுமதிக்கும் 17,500 படுக்கைகள் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. மாற்றமடையாத ஒரு போக்காக, 2017 க்கும் 2018 க்கும் இடையில், 4,172 படுக்கைகள் மேலதிகமாக அழிக்கப்பட்டுவிட்டன. கடந்த 20 ஆண்டுகளில், 100,000 படுக்கைகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன, இது வைரஸ் தாக்கிய நோயாளிகளை பராமரிப்பதையும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து அனுமதிப்பதையும் சாத்தியமாக்கியிருக்கும்.

அதே நேரத்தில் மக்ரோன் செல்வந்தர்களுக்கான வரியை நீக்கியதன் மூலம் செல்வந்தர்களுக்கு பில்லியன் கணக்கான வரிச் சலுகைகளை வழங்கினார். ஜூலை 1ம் திகதி, திங்கட்கிழமை பொருளாதார செய்தித்தாளான புளூம்பேர்க் குறிப்பிட்டதுபோல, பூமியின் 500 பெரும் பணக்காரர்களில் 14 பில்லியனர்கள் பிரெஞ்சுக்காரர்கள் ஆவர், 2019 முதல் பாதியில் 78 பில்லியன் (நிகர) டாலர்களாக தமது செல்வத்தினை உயர்த்தியுள்ளனர்.

தொழிலாளர்கள் மக்ரோன் அரசாங்கத்திடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. அனைத்து கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கும் இலவச சிகிச்சை அளிக்க தொழிலாளர்கள் அரசியல் ரீதியாக அணிதிரட்டப்பட வேண்டும்; தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளால் அச்சுறுத்தப்படும் அனைத்து தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கான நிதி உதவி; மற்றும் சர்வதேச பொது முதலீட்டு திட்டம், சர்வதேச அளவில் நூறாயிரக்கணக்கான கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான நிதி மற்றும் தொழில்துறை வளங்களை பாதுகாக்க பில்லியனர்களின் செல்வங்களை பறிமுதல் செய்வதன் மூலம் நிதியளிக்கப்படவேண்டும்.