ஐக்கிய இராஜ்ஜியம்: ஜோன்சன் கோவிட் -19 தொற்று நோய்க்கான மானியமாக 350 பில்லியன் பவுண்டுகளை வணிகத்திற்கு வழங்குகிறார் ஆனால் தொழிலாள வர்க்கத்திற்கு ஒன்றுமில்லை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் மற்றும் நிதிமந்திரி ரிஷி சுனக் ஆகியோர் இங்கிலாந்து நிறுவனங்களுக்கு முன்னோருபோதுமில்லாத வகையில் தாராளமான நிதியை வழங்குவதற்கு நேற்றைய கொரோனா வைரஸ் பற்றிய புதிப்பிக்கப்பட்ட ஊடக அறிவிப்பினை பயன்படுத்திக்கொண்டனர்.

சுனக் 330 பில்லியன் பவுண்டுகள் கடன்களை "குறைந்த" வட்டி விகிதத்தில் கிடைக்கப் போவதாக அறிவித்துடன், "தேவைப்பட்டால் மேலும் செல்லலாம்" எனக் கூறியதுடன், "வரம்பற்ற கடன்கொடுப்பு திறனை" அளிக்கவிருப்பதாகவும் உறுதியளித்தார். இது இங்கிலாந்தின் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதத்திற்கு சமமாகும். மேலும் 20 பில்லியன் பவுண்டுகள் வரி விலக்கு, பண மானியம் மற்றும் தொழிலாளி நோய்வாய்ப்பட்டால் சட்டரீதியாக நிறுவனங்கள் செலுத்தவேண்டிய ஊதியத்திற்கான இழப்பீடுகளுக்கும் உறுதியளிக்கப்பட்டது.

வணிகங்களுக்கு நேரடியாகத் தேவையானதாகக் கருதப்படும் எந்தவொரு நிதியையும் வழங்குவதற்கும், வரவிருக்கும் கொரோனா வைரஸ் மசோதா மூலம் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று சுனக் கூறினார்! "சமாதான காலத்தில் நாங்கள் ஒருபோதும் இதுபோன்ற பொருளாதார போராட்டத்தை எதிர்கொண்டதில்லை" என்று அவர் அறிவித்தார். "நாங்கள் போர்க்கால அரசாங்கத்தைப் போல செயல்பட வேண்டும், நமது பொருளாதாரத்தை ஆதரிக்க என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும்."

வணிகத்திற்கான வரம்பற்ற ஆதரவுகொடுத்துக்கொண்டு, நெருக்கடியின் சுமைகளைத் தாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உழைக்கும் மக்களை உள்ளாக்குவது அவமதிப்பும் மற்றும் புறக்கணிப்புமாகும். "ஊழியர்களின் செலவுகள்" பற்றி நேரடியாகக் கேட்டபோது, தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் ஊதியங்களுக்கு உத்தரவாதம் அளிப்பதில் சுனக் எந்த உறுதிப்பாடும் செய்யவில்லை, அல்லது அவ்வாறு செய்ய நிறுவனங்களை கட்டாயப்படுத்தவுமில்ல.. அதற்கு பதிலாக தொழிற்சங்கங்கள் ஒரு "வேலைவாய்ப்பு ஆதரவு" திட்டத்தை மேற்பார்வை செய்ய வேண்டும், இது ஒரு பணியில், ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் யார் பணியில் இருக்கவேண்டும், யாரை பணிநீக்கம் செய்யவேண்டும் என்ற முடிவுகளை எடுக்கும்.

திங்களன்று, ஜோன்சன் வணிகத் தலைவர்களுடன் ஒரு இணையவழி மாநாட்டினை நடத்தினார், அத்தியாவசிய மருத்துவ விசிறிகளை (ventilators) உற்பத்தி செய்வதற்கு சில உற்பத்தித் திறனைத் திசைதிருப்புமாறு கேட்டுக் கொண்டார். ஒரு வணிகத் தலைவர் பத்திரிகையாளர்களிடம், இந்த திட்டத்தை “முடிவுக்கு முன்னரான இறுதி நடவடிக்கை” (“Operation Last Gasp.”) என அழைக்கலாம் என்று கூறினார்.

நிறுவனங்கள் தங்கள் இலாபத்தை தக்கவைக்க வரி செலுத்துவோரின் பணத்தை கோருவதற்கு ஏற்கனவே அணிவகுத்து நிற்கின்றன. விர்ஜின் அட்லாண்டிக்கின் தாய் நிறுவனமான IAG ஞாயிற்றுக்கிழமை, நாட்டின் விமானத் தொழிலுக்கு 7.5 பில்லியன் டாலர் பிணை எடுப்புக்கு இங்கிலாந்து அரசு உறுதியளிக்க வேண்டும் என்று கோரியது. விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கான ஆதரவளிக்கும் ஒரு குறிப்பிட்ட தொகுப்பில் தான் பணியாற்றி வருவதாக சுனக் நேற்று தெரிவித்தார். பல கோடிகளுக்கு அதிபதியான சேர் ரிச்சார்ட் பிரான்சனுக்குச் சொந்தமான விர்ஜின் அட்லாண்டிக், இந்த "முன்னொருபோதுமில்லாத அளவிலான ஆதரவை" பாராட்டியதுடன், அதன் தொழிலாளர்கள் எட்டு வாரங்கள் "ஊதியம் பெறாத விடுப்பு" எடுக்க ஒத்துக் கொண்டபோதும், அதன் 10,000 ஊழியர்களுக்கும் "தாமாகவே ஏற்றுக்கொண்ட பணிநீக்கத்தை" வழங்குமாறு கோரியது.

முக்கிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் பங்குதாரர்களுக்கும் நிதி பாய்ச்சப்பட உள்ள நிலையில், பெருகிவரும் பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் அவர்களது ஊழியர்கள் தம்மைத்தாமே தற்காத்துக் கொள்ள கைவிடப்படுகிறார்கள்.

இங்கிலாந்தின் கொரோனா வைரஸ் புள்ளிவிவரங்களில் மற்றொரு பாய்ச்சலுக்கு மத்தியில் சுனக்கின் உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. இறந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது, உறுதிப்படுத்தப்பட்ட நோய் தொற்று எண்ணிக்கை 1,950 ஐ எட்டியுள்ளது. நோய் தொற்றினை பரிசோதிப்பதற்கான வளங்களின் பற்றாக்குறையால், பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை குறைந்தது 35 மடங்கு அதிகமாக இருக்கக்கூடும். நேற்று இங்கிலாந்தின் தலைமை விஞ்ஞான ஆலோசகர் சேர் பேட்ரிக் வலன்ஸ், பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை 55,000 ஆகியிருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார்.

அவரது ஒப்புதல், அரசாங்கத்தின் மீதான ஒரு பேரழிவுகரமான குற்றச்சாட்டு ஆகும், அது சர்வசாதாரணமாக திங்கள் வரை, இருமல் அல்லது காய்ச்சல் உள்ளவர்கள் வீட்டிலேயே இருக்கவும், ஒரு வாரம் சுய தனிமைப்படுதலுக்கும் அறிவுறுத்தியது. அன்று மாலையே அதன் கூர்மையான கொள்கை தலைகீழானது, -வீட்டுத் தனிமைப்படுத்தல் மற்றும் சமூக தூரப்படுத்தலுக்கான புதிய வழிமுறைகளை உள்ளடக்கிய- இங்கிலாந்தின் பொது சுகாதார சேவையில் இருந்து நூற்றுக்கணக்கான இறப்புகளை முன்னறிவிக்கும் ஒரு உள் ஆவணம் கசிந்ததாலும், லண்டனின் இம்பீரியல் கல்லூரி COVID-19 பதிலளிப்பு குழுவின் கண்டுபிடிப்புகள் மூலமாகவும் கட்டாயப்படுத்தப்பட்டது.

அணியின் ஆய்வுக் கட்டுரை மதிப்பீட்டின்படி, இங்கிலாந்து அரசாங்கத்தின் அசல் கொரோனா வைரஸ் மூலோபாய “தணிப்பு” கால் மில்லியனுக்கும் அதிகமான உயிர்களை (260,000) காவு கொள்ளும் என மதிப்பிடுகிறது. நோயினால் பாதிக்கப்பட்டவர்களை வெறுமனே வீட்டு தனிமைப்படுத்தலின் மூலம் வைரஸ் பரவுவதைத் தணிப்பதற்கான திட்டங்கள், மற்றும் 70 வயதிற்கு மேற்பட்டவர்களைக் காப்பாற்றுவதும், தொற்றுநோயின் உச்சநிலையில் எட்டு மடங்குக்கும் மேலாக முக்கியமான பராமரிப்பு படுக்கைகளின் தேவையை தாண்டிவிடும்.

"தற்போதைய நேரத்தில் தொற்றுநோயை ஒடுக்குவது மட்டுமே சாத்தியமான உத்தி" என்று அறிக்கை முடிவடைகிறது, இதில் "பரந்தளவில் மக்களுக்கான சமூக தூரப்படுத்தல், நோய் தொற்றுக்குள்ளானவர்களை வீட்டுக்குள் தனிமைப்படுத்தல் மற்றும் பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களை மூடல் ஆகிய தனிமைப்படுத்தலுடன் இணைந்து" ஒரு “குறைந்தபட்ச கொள்கையாக" இது இருக்கும். தடுப்பூசி அல்லது கணிசமான நோய்த்தடுப்பு இல்லாத மக்கள் தொகை, இயல்புநிலைக்கு திரும்புவது தாமதமானால், தொற்றுநோய்களின் அதிகரிப்புக்கு விரைவாக வழிவகுக்கும் என்பதால், இந்த நடவடிக்கைகள் “ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை அல்லது கூட்டான நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் படிப்படியாக வரும் வரை இருக்க வேண்டும்.”

சம்பந்தப்பட்ட நேரத்தின் அளவினைக் கருத்தில் கொண்டு, COVID-19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை கண்காணிக்க அறிக்கை அறிவுறுத்துகிறது, அதே நேரத்தில், "மக்கள்தொகை அளவிலான சமூக தூரப்படுத்தல் மற்றும் பள்ளி மூடல் ஆகியவற்றை மாற்றவும் நிறுத்தவும்” வீட்டுக்கு வீடு தனிமைப்படுத்துவதற்கான கொள்கைகளை காலவரையின்றி பராமரிக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு சமூக தூரப்படுத்தல் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அது மதிப்பிடுகிறது. இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சி குழுவின் தலைவரான நீல் பெர்குசன், “நாங்கள் ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு மிகவும் வித்தியாசமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கலாம்” என்றார்.

இந்த நடவடிக்கைகள் எவ்வளவு கண்டிப்பாக செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தே, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொத்த கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை 8,700 முதல் 100,000 பேர் வரை இருக்கலாம் என அறிக்கை மதிப்பிடுகிறது. சுகாதார சேவைகள் மீதான அதிகரித்த அழுத்தங்களால் அல்லது சமூகக் கட்டுப்பாடுகளால் ஏற்படும் மறைமுக மரணங்களை அவர்கள் கணக்கிடவில்லை என்பதை அதன் ஆசிரியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

தொற்றுநோயை ஒழிப்பதற்கு அவசியமான கொள்கைக்கான ஆரம்ப நடவடிக்கைகளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது: “இதை ஒழிப்பதற்கு, ஆரம்ப நடவடிக்கைகள் முக்கியமானவை, மற்றும் சுகாதாரத் திறன் பழுவால் மூழ்கிவிடாமல் இருப்பதற்கு முன்பு தலையீடுகள் சரியாக இருக்க வேண்டும். … அறிமுகப்படுத்தப்பட்ட தலையீடுகளுக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோய்யாளர்களின் எண்ணிக்கையில் காணப்படும் தாக்கத்திற்கும் இடையில் 2 முதல் 3 வாரங்கள் பின்னடைவு உள்ளது… ICU க்களில் [தீவிர சிகிச்சை பிரிவுகளில்] COVID-19 தொற்று நோயாளர்களின் அனுமதிப்பு வாரத்திற்கு 200 ஐ தாண்டுவதற்கு முன்பு செயல்படுவதாக இருக்கவேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்”.

குறிப்பிட்ட எண்கள் புதியவை என்றாலும், உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் எண்ணற்ற விஞ்ஞான மற்றும் மருத்துவ வல்லுநர்கள் இந்த விடயத்தினை பல வாரங்களாக சரியாக கூறி வருகின்றனர். ஜோன்சன் அரசாங்கம் "கூட்டு நோய்எதிர்ப்புசக்தி" என்ற கொள்கையைப் பின்பற்றி இரண்டு மாத தயாரிப்பு நேரத்தை வீணடித்தது, இது இங்கிலாந்தின் மக்கள்தொகையில் 60 சதவிகிதம் "விரும்பிய" விளைவின் அடிப்படையில் நோய்த்தொற்றுக்குள்ளாகும் என கணித்து, மனித வாழ்வினை விட நிறுவனங்களின் இலாபங்களுக்கு முன்னுரிமை அளித்தது. இப்போது கூட, பரிந்துரைக்கப்பட்ட கொள்கைகளை முழுமையாக செயல்படுத்த அரசாங்கம் மறுத்து வருகிறது.

சுய மற்றும் குடும்ப உறுப்பினர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், வீட்டு வேலை மற்றும் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு கட்டுப்பாடு அல்லது உணவகங்கள் மற்றும் திரையரங்குகளுக்கு வருகை தருவது அனைத்தும் முற்றிலும் ஆலோசனையாகவே இருக்கின்றன. வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாதவர்கள் இன்னும் தங்கள் பாதுகாப்புக்கு எந்த தயாரிப்புகளும் செய்யாமல் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நீண்ட காலத்திற்கு சுய-தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டிய எவரும் வாரத்திற்கு. 94.25 பவுண்டுகள் என்ற அற்பமான சட்டரீதியான மோசமான ஊதியத்தை நம்பியிருக்க வேண்டும், மேலும் குறுகியகால ஒப்பந்தங்களில் உள்ளவர்கள், அதாவது நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப பணிபுரியும் தொழிலாளர்கள் - 1 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள், அவர்களின் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் அல்லது பணமில்லாமல் இருக்க வேண்டும்.

வீட்டு தனிமைப்படுத்தல் மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் பள்ளிகளை மூடுவது போன்ற கட்டுப்பாடுகளை விட, “பள்ளி மற்றும் பல்கலைக்கழக மூடல் அடக்குமுறையை அடைவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என இம்பீரியல் கல்லூரி அறிக்கை இருந்தபோதிலும், இங்கிலாந்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஒரு மிகப்பெரும் இழிந்த சைகையில், சுகாதாரச் செயலாளர் கவின் வில்லியம்சன் பள்ளிகளிடம், சட்டப்பூர்வமாக தேவைப்படும் Ofsted மேற்பார்வைகள் பள்ளி ஊழியர்கள் மீதான "தேவையற்ற சுமைகளை அகற்ற" நிறுத்தப்படும் என்று கூறினார்.

அரசாங்கத்தின் செயலற்ற தன்மை தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்துவரும் குரல் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. மார்ச் 6 ஆம் தேதி "COVID19 க்கு இடையில் பொருத்தமான நேரத்திற்கு பள்ளிகளை மூடு" எனக் கோரிய ஒரு மனு நேற்று மாலைக்குள் 670,000 க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களைப் பெற்றுள்ளது.

# Covid19walkout என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி மாணவர்களும் ஊழியர்களும் வெள்ளிக்கிழமை வெகுஜன வெளிநடப்பு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு இளைஞர் ட்விட்டரில் எழுதினார்: “60 வயதுடைய என் அம்மா ஒரு ஆசிரியை, 70 களில் உள்ள என் அப்பாவின் வீட்டிற்கு வருகிறார். போரிஸ் அவற்றைக் பயனற்ற பொருட்கள் என கண்டால், அவர்கள்தான் எனக்கு கிடைத்த ஒரே குடும்பம், எழுதப்பட்ட தகுதியான புத்தகங்களைவிட அவர்கள் எனக்கு மதிப்பு மிக்கவர்கள்.”

இதுபோன்ற பெருகிவரும் சமூக கோபத்தால் ஏற்படும் அரசியல் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வுடன், பைனான்சியல் டைம்ஸில் ஐரோப்பிய ஆசிரியர் டோனி பார்பர் எழுதிய ஒரு கட்டுரை எச்சரித்தது, “எப்படியாவது நிகழவிருக்கும் வரலாற்று முன்னேற்றங்கள் தொற்றுநோய் போன்ற இயற்கை பேரழிவு நிகழ்வுகளின் தன்மையில் விரைவுபடுத்தப்படும் மற்றும் மறுவடிவமைப்புகளாகும்.

"முதல் உலகப் போர் ரஷ்யாவில் கொந்தளிப்பை தீவிரப்படுத்தியது, இது 1917 புரட்சிகளுக்கு வழிவகுத்தது, மேலும் 20 ஆம் நூற்றாண்டின் முன்னணி உலக சக்தியாக அமெரிக்காவின் தோற்றத்தை முன்னோக்கி செலுத்தியது.

"இரண்டாம் உலகப் போர், சர்வதேச விவகாரங்களில் ஐரோப்பிய மேலாதிக்கத்தின் உறுதியான முடிவையும், அமெரிக்க-சோவியத் போட்டியின் அரங்காக பூமியை மாற்றியதையும் குறித்தது.

"தொற்றுநோயும் அதன் பொருளாதார வீழ்ச்சியும், ஒரு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் கீழ் கொண்டுவரப்படாவிட்டால், இதேபோன்ற பெரிய அளவிலான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உறுதி."

Loading