முன்னோக்கு

முதலாளித்துவ வெளிநாட்டவர் விரோத போக்கை நிராகரிப்போம்! கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச சோசலிச ஐக்கியத்திற்காக!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அவரின் அலட்சியம், சித்தம் பிறழ்ந்த வக்கிரத்தனம் மற்றும் பாசிச பேரினவாதத்தின் மற்றொரு காட்சிப்படுத்தலில், டொனால்ட் ட்ரம்ப் COVID-19 ஐ "சீன வைரஸ்" என்று பகிரங்கமாக முத்திரை குத்தி உள்ளார். அந்த தொற்றுநோய்க்கு இவர் நிர்வாகத்தின் காலங்கடந்த செயல் திறமையற்ற விடையிறுப்பு மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வை அபாயத்திற்கு உட்படுத்தியுள்ளது.

ட்ரம்பின் வார்த்தைகள் "மஞ்சள் அபாயத்தை" (Yellow Peril) துணைக்கு இழுக்கும் பழைய இனவாத ஏகாதிபத்திய கண்டுபிடிப்பை நினைவூட்டுவதுடன் மற்றும் ஆசிய அமெரிக்கர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிடுகிறது என்பது மட்டுமல்ல, அவை கொரொனா வைரஸ் குறித்து விஞ்ஞானபூர்வமாக மற்றும் உண்மை அடிப்படையிலான ஒரு புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான முக்கிய முயற்சிகளையும் மற்றும் அந்நோய் பரவுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் கீழறுக்கின்றன. “இது குறித்து ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தி கொண்டிருக்கக்கூடாது,” என்று தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் (WHO) செய்தி தொடர்பாளர் டாக்டர் மைக் ரெயன், “இது நல்லிணக்கத்திற்கான நேரம், இது உண்மைகளுக்கான நேரம், இது ஒருங்கிணைந்து முன்னோக்கி நகர்வதற்கான நேரம்,” என்றார்.

அதன் தேசியவாத ஒருமுனைப்பை அழுத்தமாக வலியுறுத்தியவாறே ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்காவுக்கு தனது உற்பத்தியை இடம் பெயரக் கூறும் ஒரு ஜேர்மன் நுண்ணுயிரி தொழில்நுட்ப நிறுவனமான CureVac கொரொனா வைரஸ் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி வருவதாக வலியுறுத்தி உள்ளார். இது "எந்தவொரு தடுப்பு மருந்தும் முதலில், அனேகமாக பிரத்யேகமாக, அமெரிக்காவுக்குக் கிடைக்கும்" சாத்தியக்கூறை அதிகரித்திருப்பதாக" நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது.

தேசியவாதத்தைத் துணைக்கிழுப்பது இந்நோய்க்கு எதிரான போராட்டத்தைக் குழப்புகிறது, பலவீனப்படுத்துகிறது மற்றும் ஒரு தடையாக சேவையாற்றுகிறது. ட்ரம்பின் கருத்து இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுக்கும் முயற்சிகளில் ஒரு பொய்யான மற்றும் நோக்குநிலை பிறழ்ந்த தேசியவாத திட்டநிரல் மிகவும் விகாரமான வெளிப்பாடு மட்டுமே ஆகும். இந்த தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் என்ற மூடிமறைப்பைப் பயன்படுத்தி, அரசாங்கங்கள் தேசியவாதம் மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்தை ஊக்குவிக்க முயன்று வருகின்றன.

Nurses make a sign of heart with their fingers, in a ward dedicated for people infected with the new coronavirus, at a hospital in Tehran, Iran, Sunday, March 8, 2020. (AP Photo/Mohammad Ghadamali)

இந்த உலகளாவிய தொற்றுநோய் தேசிய எல்லைகளைப் பொருட்படுத்துவதில்லை. இந்த கொரொனா வைரஸ் இனங்கள், தேசியங்கள் அல்லது பாலினம் என்று வேறுபாடு பார்ப்பதில்லை.

நகரங்களில் வளர்ச்சி மற்றும் உலகளாவிய மக்களின் ஒருவரோடு ஒருவர் உடனான தொடர்பு ஆகியவற்றால், பல ஆண்டுகளாகவே, விஞ்ஞானிகள் உலகளவில் அதிகரித்து வரும் தொற்றுநோய் அபாயம் குறித்து எச்சரித்து வந்துள்ளனர். "விலங்குகளில் இருந்து தோன்றும் மற்றும் பொருளாதார அபிவிருத்தி மக்களை உந்தி செல்கின்ற புவியின் ஏதோவொரு இடத்தில் விலங்குகளுடன் சம்பந்தப்பட்ட விதத்தில் எழக்கூடிய ஒரு வைரஸில் இருந்து" விளையும் பெயர் தெரியாத "X நோய்" குறித்து 2018 இல் உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்ததைச் சுற்றுச்சூழல் சார்ந்த நோய் நிபுணர் Peter Daszak நினைவுகூர்ந்தார்.

“மனிதப் பயணங்கள் மற்றும் வர்த்தக வலையமைப்புகளை பயன்படுத்தி, அது பல நாடுகளையும் சென்றடையும் மற்றும் அமைப்பையே சீர்குலைக்கும். X நோய் பருவகாலங்களில் தோன்றும் தொற்றுநோயை விட அதிகமான இறப்புவிகிதத்தைக் கொண்டிருக்கும் என்பதுடன் மிகவும் எளிதில் பரவக்கூடியதாகவும் இருக்கும். அது தொற்றுநோய் அந்தஸ்தை எட்டுவதற்கு முன்னரே நிதியியல் சந்தைகளை உலுக்கிவிடும்,” என்று குறிப்பிட்டது.

மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா எங்கிலுமான அரசாங்கங்கள், போதுமான பரிசோதனைகள் மற்றும் மருத்துவக் கவனிப்பை வழங்க மறுத்துள்ளன அதற்கு பதிலாக அவை, வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, மக்களில் ஒரு கணிசமான பங்கினருக்கு இந்நோய் தொற்றுவது "விருப்பத்திற்குரியதே" என்ற பிரிட்டன் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே ஏற்று வருகின்றன. இது மில்லியன் கணக்கான மக்களுக்கு விதிக்கப்படும் ஒரு மரண தண்டனையாகும்.

அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் போதுமான பரிசோதனை மற்றும் மருத்துவக் கவனிப்பை வழங்க தவறியுள்ள நிலையில் அந்த வைரஸை எதிர்த்து போராட மிகவும் நடைமுறையளவிலான வழியிலிருந்து வெகுதூரம் விலகி அவை மில்லியன் கணக்கான மக்களை முடக்கி, கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

மார்ச் 17 இல், ஐரோப்பிய ஒன்றியம் அதன் வெளி எல்லைகளை மூடியது. இது ஒன்றன் பின் ஒன்றாக அதன் அங்கத்துவ நாடுகள் அவற்றின் சொந்த எல்லைகளை அடைத்தன. புதன்கிழமை, அமெரிக்காவும் கனடாவும் அவற்றின் நில எல்லையை மூட இருப்பதாக அறிவித்தன, மேலும் அமெரிக்க அது அந்நாட்டிற்குள் நுழைவதில் இருந்து அனைத்து புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளைத் தடுக்க இருப்பதாக அறிவித்தது.

இந்த முன்னுரிமைகளை உலக சுகாதார அமைப்பு வார்த்தையளவிலும் மற்றும் தொடர்ந்தும் மீண்டும் மீண்டும் விமர்சித்துள்ளது. விலக்கி வைத்தலும் பயணக் கட்டுப்பாடுகளும் அவசியம் தான் என்றாலும், அவை மட்டுமே போதுமானதில்லை. இந்நோயைப் பரிசோதனை செய்வதற்காக, அபாயத்தில் இருப்பவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக, மற்றும் நோயால் துன்பப்படுபவர்களைக் கவனிப்பதற்காக ஒதுக்கப்படும் ஆதாரவளங்களை விரிவாக்குவதே இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி என்பதை உலக சுகாதார அமைப்பு (WHO) மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பொது-இயக்குனர் Tedros Adhanom Ghebreyesus குறிப்பிடுகையில், “பள்ளிகளை மூடுதல் மற்றும் நிகழ்ச்சிகள் மற்றும் ஏனைய ஒன்றுகூடல்களை இரத்து செய்தல் போன்ற சமூக விலக்கு நடவடிக்கைகளில் ஒரு வேகமான தீவிரப்பாட்டை நாம் பார்க்கிறோம். ஆனால் பரிசோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் தொடர்புகளின் சுவடுகளை ஆராய்வதில் நாம் போதுமான தீவிரப்பாட்டைக் காணவில்லை. இது தான் COVID-19 விடையிறுப்புக்கு முதுகெலும்பாகும்,” என்றார்.

இத்துடன் டாக்டர். மைக்கெல் ரெயன் கூறுகையில், “இந்த வைரஸைத் தடுப்பதற்கான ஒரு வழியாக பயண தடுப்பு நடவடிக்கைகளில் தங்கியிருக்கும் நாடுகள் வெற்றி அடையப் போவதில்லை,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

நோயில் பாதிப்பிலிருந்து குணமாகி வரும் வந்தாலும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் மனிதாபிமானத்துடன் தங்க வைக்க உரிய வசதிகளுடன், பாரியளவில் பரிசோதனை மற்றும் சிகிச்சைத் திட்டத்தைத் தொழிலாளர்கள் கோர வேண்டும்.

இந்த தொற்றுநோயை தேசிய அடிப்படையில் எதிர்த்து போராடுவது சாத்தியமே இல்லை. இந்த நோய்க்கு விடையிறுக்க, மனித நல்லிணக்கத்தைப் பகிர்ந்து கொள்வதன் அடிப்படையில் மனிதகுலத்தின் அனைத்து மருத்துவ, விஞ்ஞானபூர்வ மற்றும் சமூக ஆதாரவளங்களையும் அணித்திரட்டுவது அவசியமாகும்.

இந்த கொரொனா வைரஸைக் கட்டுப்படுத்த, சிகிச்சை அளிக்க மற்றும் இறுதியில் முற்றிலுமாக அகற்ற நடைமுறையளவிலான எதிர்நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்யப்படுவதை தாமதிக்க மட்டுமே சேவையாற்றும் புவிசார் அரசியல் மோதல்கள் மற்றும் "தேசிய நலன்கள்" ஆகியவற்றின் இடர்பாடு இல்லாமல், உலகெங்கிலுமான விஞ்ஞானிகள் அவர்களின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்த தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கான சிறந்த நடைமுறைகளும் நோய்நீக்கி சிகிச்சை முறைகளும் தடுப்பூசிகளையும் உருவாக்குவது தேசிய எல்லைகளால் தடுக்கப்பட்டிருக்கக் கூடாது. தங்களின் நாட்டில் துணிச்சலாக இந்த தொற்றுநோயை அடக்கிவிட்ட சீன மருத்துவத் தொழிலாளர்கள் அவர்களின் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள மற்ற நாடுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

முகக் கவசங்கள், செயற்கை சுவாசங்கள் மற்றும் காற்றோட்ட வசதி ஆகியவற்றின் உற்பத்தியில் சர்வதேச கூட்டுறவு இருக்க வேண்டும் மற்றும் சமூக தேவையின் அடிப்படையில் அவை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

இந்த தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கான ஒரு வெற்றிகரமான முயற்சி, ஏகாதிபத்திய புவிசார்அரசியல் மற்றும் அனைத்து வடிவத்திலான தேசிய மோதல்களுடன் பொருந்துவதாக இருக்காது. அது முதலில் எங்கிருந்து தோன்றியிருந்தாலும், ஒரு தொற்றுநோய் எந்தவொரு நாட்டில் வெளிப்பட்டாலும் அதுவொரு உலகளாவிய நிகழ்வாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகள் ஈரானில் COVID-19 பாதிப்பு குறித்து மனம் குளிர்கிறார்கள் என்ற உண்மை அவர்களின் மனிதாபிமானமற்ற தன்மையை மட்டுமல்ல மாறாக மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு அந்த வைரஸ் தொற்றுவதற்கான உலகளாவிய சாத்தியக்கூறை அவர்கள் மலைப்பூட்டும் அளவில் அலட்சியப்படுத்துகிறார்கள் என்பதற்குச் சான்று பகிர்கிறது.

ஈரான் மீது திணிக்கப்பட்டவை போன்ற அனைத்து விதமான பொருளாதார தடையாணைகள் மற்றும் வர்த்தகப் போர் நடவடிக்கைகளும் உடனடியாக நீக்கப்படுவது இன்றியமையாததாகும். மேலும், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அவசியமான அனைத்து இன்றியமையா கருவிகள் மற்றும் பணியாளர்களுடன் முறையாக நிரம்பிய மருத்துவமனைகள் அகதிகளையும் புலம்பெயர்ந்தோரையும் கையாள கட்டமைக்கப்பட வேண்டும். எந்த மனிதருக்கும் அவசரமாக தேவைப்படும் மருத்துவ சிகிச்சை மறுக்கப்படக் கூடாது.

ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்பு வகிக்கும் வலுவற்ற பாத்திரமும் இந்த தொற்றுநோயின் பல துன்பியலான கூறுபாடுகளில் உள்ளடங்கும். இதன் அர்பணிக்கப்பட்ட பலர் எபொலா நோயை துடைத்தெறிய போராடிய முன்னாள் அனுபவஸ்தர்கள் என்கின்ற நிலையில் இந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதாரத்துறை வல்லுனர்கள் இந்நெருக்கடிக்கு அரசாங்கங்கள் பகுத்தறிவார்ந்த மற்றும் மனிதாபிமான அணுகுமுறையை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த தொற்றுநோய்க்கு முன்னரே கூட பெரிதும் நிதி பற்றாக்குறைவில் இருந்த உலக சுகாதார அமைப்பு இன்னும் ஆதாரவளங்களுக்காக ஏங்குகிறது. இது அமைப்புக்கு "ஏற்கவியலாத" பாதிப்பு மட்டும் என்று அதன் உள்அலுவலக கணக்கெடுப்புகள் குறிப்பிடும் ஒன்றுக்கு இட்டுச் செல்கிறது. அது அரசாங்கங்களிடம் இருந்து மிச்சம் மீதிகளுக்காக பிச்சையெடுக்க நிர்பந்திக்கப்பட்டு, அதன் 675 மில்லியன் டாலர் இலக்கில் இதுவரையில் அது 30 மில்லியன் டாலருக்கும் குறைவாகவே திரட்டியுள்ளது. அதேவேளையில் அரசாங்கங்களோ ட்ரில்லியன் கணக்கான பணத்தை வங்கிகளுக்கு வழங்கி கொண்டிருக்கின்றன.

மில்லியன் கணக்கானவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், தொழிலாளர்கள் சோசலிச சர்வதேசியத்திற்காக போராட வேண்டும் — அதாவது, அனைத்து தொழிலாளர்களின் பொதுவான நலன்கள் மற்றும் ஐக்கியத்தின் அடிப்படையில் உலகளவில் ஒன்றுபட வேண்டும். இந்த உலக தொழிலாளர்களின் ஒற்றுமை தான் மருத்துவத்துறை தொழிலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சமூகத்தின் அனைத்து முற்போக்கு கூறுபாடுகளையும் இந்த தொற்றுநோய்க்கு எதிரான அவர்களின் போராட்டத்தில் நீடித்திருக்க வைக்கும்.

இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில், உலகெங்கிலுமான உழைக்கும் மக்கள் தேசிய பேரினவாதத்தின் அனைத்து வெளிப்பாடுகளும் மனிதகுலத்திற்கு கொரொனா வைரஸை விட குறைந்த அச்சுறுத்தலானவை அல்ல என்று பார்க்க வேண்டும்.

Loading