நேபாளம் ஒரு வாரம் கொரொனாவைரஸ் முடக்கத்தை அறிவித்திருக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேபாள அரசாங்கம் திங்களன்று இரண்டாவது COVID-19 தொற்றுநோய் பாதிக்கப்பட்டவரை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததன் பின்னர் நாட்டினை ஒரு வாரம் முடக்குவதாக அறிவித்துள்ளது. கடந்தவாரம் கட்டார் வழியாக பாரிஸிலிருந்து வந்த 19வயது மாணவன் தற்போது காத்மண்டுவிலுள்ள சுக்ரராஜ் வெப்பமண்டல மற்றும் தொற்றுநோய்கள் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார். அவருடைய குடும்பம் வீடு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நேபாளத்தில் கொரொனாவைரஸ் தொற்றுநோய்க்கு முதலாவதாக பாதிக்கப்பட்டவர் சீனாவிலிருந்து திரும்பிய ஒரு மாணவன் ஆவார்.

நேற்று தொடங்கிய முடக்கம் ஒரு “கட்டாயமாக வீட்டில் இருக்க வேண்டிய உத்தரவு” மற்றும் ஊரடங்கு சட்டமாகவும் இருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள், வணிகங்கள் மற்றும் கடைகள் மூடப்படுகிறது கூடவே சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் மற்றும் பொது போக்குவரத்தும் இழுத்து மூடப்படுகிறது. தினக்கூலி சம்பாதிப்பவர்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். ஏற்கனவே 1.5 மில்லியன் மக்கள், அதில் பெரும்பான்மையானவர்கள் தொழிலார்கள், அவர்கள் தலைநகர் காத்மண்டுவிலிருந்து கிராமப்புற மாவட்டங்களில் இருக்கும் அவர்களுடைய வீடுகளுக்கு செல்ல புறப்பட்டிருக்கிறார்கள்.

அரசாங்கம் தற்போது இந்தியாவுடனிருக்கும் நாட்டின் 1800 கிலோமீட்டர் எல்லையை சீல் வைத்துமூடிவிட்டது. இந்தியாவுடன் நிலத்தால் சூழப்பட்ட நாட்டின் பிரதான நுழைவு- வெளியேறும் வழிகள் மற்றும் சமீபத்தில் சீனாவுக்கு அமைக்கப்பட்ட போக்குவரத்து வழிகள் அதில் இருக்கின்றன. ஒரு வாரத்திற்கு முன்னர், எல்லைப் பாதுகாப்பு நடமாட்டம் பகுதியளவு கட்டுப்படுத்தப்பட்டது. முதலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான நேபாளியர்கள் இந்திய எல்லைகளை கடப்பதற்கு திங்களன்று ஊரடங்கு அறிவிப்பதற்கு முதல் நாள் காய்ச்சல் குறித்த சோதனை எடுக்கப்பட்ட பின்னர் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு அனுமதியளிக்கப்பட்டார்கள்.

பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மற்றும் அவருடைய இடது கூட்டணி அரசாங்கம் என்று அழைக்கப்படுபவர்கள் கொரோனா வைரஸ் மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமான அளவில் எடுக்கத் தவறியதற்காக அல்லது தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் (PPE), முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அல்லது பயிற்சிகள் சுகாதாரப் பணியாளர்களுக்கு போதுமான அளவுக்கு வழங்காதற்காக தேசிய ஊடகங்களில் கண்டிக்கப்பட்டு வந்தனர்.

திங்கட்கிழையன்று, நாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் இருந்தனர் என்று பெரும்பான்மையான சுகாதார வல்லூநர்கள் ”நம்பினார்கள்” மேலும் “இந்த வாரம் வரை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்டறியும் சோதணைகள் ஒரு பற்றாக்குறையாக இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தனர் என்று நேபாளி டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

மார்ச் 29 அன்று சுக்ரராஜ் வெப்பமண்டல மற்றும் தொற்றுநோய்கள் மருத்துவமனையில் கோவிட்-19 தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டவர் ஒருவர் வந்தபொழுது சுகாதாரப் பணியாளர்கள் பயந்ததுடன் கண்ணீரும் விட்டார்கள் என்று காத்மண்டு போஸ்ட் செய்தி குறிப்பிட்டுள்ளது. ஒரு சில நாட்கள் கழித்து, திரிபுவன் பல்கலைக்கழக (TU) போதனா மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லையென்றால் வேலைக்கு வருவதை நிறுத்தப்போவதாக அச்சுறுத்தினர்.

லலித்பூர் இல் உள்ள சுமேறு மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் சனிக்கிழமையன்று விடுப்புகோரி விண்ணப்பித்திருந்தனர். “ஒவ்வொரு நாளும் விடுப்புக்காக விண்ணப்பித்த பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது” என்று மருத்துவமனையின் தலைவர் ஹெம்ராஜ் டஹல், போஸ்ட் பத்திரிகைக்கு கூறியுள்ளார். “இதற்கான காரணத்தை புரிந்துகொள்வது கடினமல்ல. கொரோனா வைரஸ் பரவக்கூடியது என்று சுகாதாரப் பணியாளர்கள் அச்சப்படுகிறார்கள்”

பஷுந்தரா விலுள்ள கிரீன் சிட்டி மருத்துவமனையில் கடந்த வாரம் விடுப்புக்காக செவிலியர்கள், மருத்துவ ஆய்வுகூட தொழில்வல்லுநர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களும் விண்ணப்பித்துள்ளனர். “மருத்துவமனையில் பயன்படுத்துவதற்கு எங்களுடைய சொந்த துணி முகக்கவசங்களை நாங்களே தைத்துக்கொண்டிருக்கிறோம்” என்று மேலாளர் மனீஷ் டவாடி பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

“பாதுகாப்பு பயிற்சி மற்றும் உபகரணங்கள் அவர்களுக்கு வழங்காமல் இந்த மாதிரியான நோயாளிகளை கவனிப்பதற்கு அவர்களை கட்டாயப்படுத்துவது ஒரு பேரழிவானதாகும்” என்று TU போதனா மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பாதுகாப்பு தலைவர் மருத்துவர் சுபாஷ் பிரசாத் ஆச்சார்யா கூறியுள்ளார்.

அரசாங்க அலுவலர்களும் மற்றும் சுகாதார அதிகாரிகளும் கோரோனா வைரஸ் அபாயங்களையும் தங்களது செயலற்ற தன்மையையும் குறைத்துக்காட்ட முயன்றுள்ளனர்.

கோவிட்-19, பூகோள அளவில் 17,000க்கும் அதிகமானவர்களை கொன்றுள்ளது மேலும் 400,000 க்கும் அதிமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இதற்கு சிறப்புப் பயிற்சிகள் தேவையில்லையென்று சுகாதார சேவைகள் துறையின் இயக்குநர் மஹேந்திரா பிரசாத் ஷ்ரேஸ்தா கூறியுள்ளார். “புது நோய்கள் தோன்றும்போதெல்லாம் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கு (புதிய அறிவை) வழங்குவது இயாலாத காரியாமாகும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். இது “யாரெல்லாம் தீவிர சிகிச்சையில் உள்ளார்களோ” அவர்களுக்கு மட்டும் தேவை என்று மேலும் கூறியுள்ளார்.

நேபாளத்தில் கொரோனா வைரஸ் பரிசோதிப்பதற்கு தேசிய பொது சுகாதார ஆய்வுக்கூடம் மட்டுமே வசதியுடன் இருக்கிறது. ஒரு வாரத்தில் 500 கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதிப்பதற்கு இது மட்டுமே கருவிகளை கொண்டுள்ளது என்று ஆய்வுக்கூடத்தின் இயக்குநர் டாக்டர் ரூனா ஜா ஊடகத்திற்கு கூறியுள்ளார். போதுமான மனித வளங்கள், சரியான உள்கட்டமைப்பு மற்றும் இராசாயன உலைகள் வழங்கப்பட்டால் இங்கு 3,000 ஆக பரிசோதனை அளவுகளை அதிகரிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பால் வழங்கப்பட்ட 1000 பரிசோதனைக் கருவிகள் மட்டுமே இந்த இடத்தில் பயன்படுத்தப்படுவதாக ஆய்வுக் கூடத்தின் தலைமை மருத்துவ தொழில்நுட்ப வல்லூநர் ஒப்புக்கொண்டுள்ளார். அதிகாரிகள் மேலும் ஒரு 5000 கருவிகளை கேட்டிருக்கிறார்கள் ஆனால் அவைகள் வந்து சேரவில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான சுகாதார சேவை வழங்குவது ஒருபுறமிருக்க, மற்ற பகுதிகளில் கண்டறியும் சோதனைக்கு நேபாள அரசாங்கத்திடம் தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை.

”வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது கடினமான ஒன்றாக இருக்கும் என்று தென் கொரிய அனுபவம் கூறும்போது அரசாங்கம் இவ்வாறான அலட்சிய அணுகுமுறையை கொண்டிருக்கிறது” என்று ஹிமாலயன் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இருந்தபோதிலும் கொரோனா வைரஸ்க்கு பெருமளவிலான சோதனை, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையளிப்பது இந்த கொடிய நோய்க்கு உடனடி பதிலாக இருக்கவேண்டும் என்றாலும் குறைந்த வளங்களைக் கொண்ட நேபாளத்தில் இருமல், காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகளை தெரிவிக்கும் நபர்கள் திருப்பி அனுப்பிவிடப்படுகிறார்கள்.

எவ்வாறு இருந்தாலும், அரசாங்கத்தின் பிரதானமான அக்கறை மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சாதாரண மக்கள் நலனிலோ, பாதுகாப்பிலோ அல்ல ஆனால் சுற்றுலா வணிகத்தின் மீதான இழுத்துமூடலின் பாதிப்பில் இருந்தது. அது 1.5 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்திருந்தது மேலும் ஆண்டு வருமானத்தில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் அரசாங்கத்திற்கு வழங்கியிருந்தது. அரசாங்கம் இத்தகைய தொழிலாளர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்திற்காகவும் எந்தவொரு நிவாரண திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

மோசமான ஊட்டச் சத்தின்மையால் பாதிக்கப்பட்ட 5 வயதுக்கு மேற்பட்ட கிட்டத்தட்ட 50 சதவீத குழந்தைகளுடன் ஆசியாவில் வறுமைக்குட்பட்ட நாடுகளில் ஒன்றாக நேபாளம் இருக்கிறது. 29 மில்லியன் வலுவான மக்கள்தொகையில் ஒரு கால்வாசி ஒரு நாளைக்கு 35 ரூபாய் ($0.29 அமெரிக்க டாலர்) குறைவான தொகையில் வாழ்கிறார்கள் மேலும் இந்த நாட்டில் 66 சதவீத அனைத்து இறப்புகள் தொற்றாத நோய்களால் நடக்கின்றன.

சுமார் காசநோயால் பாதிக்கப்பட்ட 70,000 மக்கள் உட்பட ஒவ்வொரு வருடமும் சுவாசக் கோளாறின் மூலம் 100,000 இல் 100 பேர் இறப்பதுடன் உலகில் சுவாச நோயால் இறப்பவர்களின் மோசமான அளவில் இரண்டாவது இடத்தில் நேபாளம் இருக்கிறது.

இந்த உயர்ந்தளவிலான தொற்றுநோயினால் பத்தாயிரக் கணக்கான மக்கள் இறப்பார்கள் என்பதை கோவிட்-19 க்கு நேபாள அரசாங்கத்தின் முற்றிலும் போதாமலிருக்கும் பதிலிறுப்பு உத்தரவாதம் செய்கிறது, இது குற்றவியலானதாகும்.

Loading