கொரோனா நச்சுயிரியல் நெருக்கடிக்கு மத்தியில் தொழிற் கட்சியின் தலைவர் கோர்பின் பரிதாபகரமாக வெளியேறுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா நச்சுயிரியல் நெருக்கடியை மையமாகக் கொண்டு பிரதம மந்திரிக்கான முக்கிய கேள்விகளின் விரிவான அமர்வின்போது, புதன்கிழமை தொழிற் கட்சியின் தலைவராக ஜெரமி கோர்பின் தனது இறுதி நாடாளுமன்ற பங்கேற்பில் பங்கேற்றார்.

Corbyn speaking at a “Labour Roots” event in Bolton [Credit: Sophie Brown]

ஒரு தேசிய சீர்திருத்த கொள்கைக்கு திரும்புவதன் மூலம் தொழிலாளர்கள் தங்கள் நலன்களைப் பாதுகாக்க ஒரு வாய்ப்பாகவும் மற்றும் அவர் தலைவராக உருவானால் தொழிற் கட்சியின் மறுபிறப்பைக் குறிக்கிறது என்ற கூற்றும் அவரது தனிப்பட்ட அரசியல் வங்குரோத்தை மட்டுமல்லாமல், அவரது படுமோசமான செயல்திறனின் இறுதிச் சான்றை வளங்குகிறது.

கோவிட்-19 இன் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் வெடிப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தின் இறுதி அமர்வு நடந்தது, லண்டனில் உள்ள மருத்துவமனைகள் “சுனாமியைப்” போன்று கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளையும் மற்றும் 30 சதவிகிதம், 40 சதவிகிதம் மற்றும் சில நேரங்களில் 50 சதவிகிதம் மருத்துவ ஊழியர்கள் தொற்றின் விகிதங்களையும் எதிர்கொள்கின்றனர் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழக்கிறார்கள் அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் தொடர்ந்து வேலைக்குச் செல்ல நிர்பந்திக்கப்படுகிறார்கள் மற்றும் தமக்கும் தங்களின் அன்புக்குரியவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆனால் பரவலாக பொதுமக்களிடையே சீற்றத்தை தூண்டியிருந்த பல்வேறு பிரச்சனைகளை கோர்பின் எழுப்பினார், அவை —கோவிட்-19 க்கான பரிசோதனைகள் பற்றாக்குறையாக இருந்த மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத, வேலைகளில் இருந்து வெளியேற்றப்படும் அச்சுறுத்தல்கள், சுயதொழில் செய்பவர்களுக்கு வருமான ஆதரவு இல்லாத பிரச்சனைகளாக இருந்தன— போரிஸ் ஜோன்சனின் பழமைவாத அரசாங்கத்திற்கு இன்னும் கொஞ்சம் உதவி வழங்குமாறு முறையிட்டதைத் தவிர கோர்பின வேறு எதையும் வழங்கவில்லை.

பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு 350 பில்லியன் பவுண்டுகள் பாரியளவில் கையளித்ததற்காக எந்த விதமான விமர்சனமும் செய்யப்படவில்லை. நான்கு தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போர் கொள்கைகள், தேசிய சுகாதார சேவையை (NHS) மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை அச்சுறுத்தி அழித்த பொறுப்பிற்கு காரணமாக இருந்தது என்ற உண்மையைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அத்தியாவசிய தொழில்துறை மற்றும் போக்குவரத்து போன்ற சேவைகளை தேசியமயப்படுத்துவது ஒருபுறம் இருக்கட்டும், பல வாரங்கள் முடிந்தும் பணி நிறுத்தம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செலுத்தும்படி கூட பெரும் வணிகத்திடம் கோரிக்கை வைக்கப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளித்துவம் அதன் முடிச்சுகளிலிருந்து துகள் துகளா வீழ்ந்துகொண்டிருக்கும் போதும், அங்கே சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கதின் போராட்டத்திற்கான அழைப்பு ஏதும் இருக்கவில்லை.

அதற்கு பதிலாக, கோர்பின் நாடி நரம்புகள் புடைக்க தேசிய அவசரகால நேரங்களில் ஆதரவாகவும் பொறுப்பாகவும் இருப்பதாக வலிந்து காட்டிக்கொண்டார், அவர் “பிடிவாதமான எதிர்மறையாக” தோன்ற விரும்பவில்லை என்பதை வலியுறுத்தினார்.” ஜோன்சனுடனான கோர்பினின் கடைசி விவாதப் பரிமாற்றம் தேசிய ஒற்றுமைக்கு ஆதரவான அறிவிப்பாகும். பழமைவாத அரசாங்கம் எவ்வாறு தங்கள் தலைவிதிக்கு ஏற்றாற்போல் தொழிலாளர்களை கைவிடுகிறது என்பதற்கான எண்ணற்ற உதாரணங்களை விவரித்த பின்னரும் கூட, கோர்பின் வலியுறுத்தினார், “நெருக்கடி காலங்களில், யாரும் ஒரு தீவாக இருப்பதில்லை, யாரும் சுயமாக உருவாவதும் இல்லை. பணக்கார பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரியின் நல்வாழ்வு என்பது துணை ஒப்பந்த தொழிலாளி அவர்களது அலுவலகத்தை சுத்தம் செய்வதைப் பொறுத்து இருக்கிறது. இதுபோன்ற சமயங்களில், ஒரு சமூகத்தின் வலிமை என்பது ஒருவருக்கொருவர் அக்கறை செலுத்துவதாகவும் மற்றும் அனைவருக்காகவும் அக்கறை செலுத்துவதாகவும் இருக்கிறது, அத்துடன் ஒவ்வொருவரது மதிப்பினையும் நாங்கள் அங்கீகரிக்க வேண்டும்.”

“எதிர்க்கட்சித் தலைவரின் இறுதி வார்த்தைகளுடன் என்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறேன்” என்று ஜோன்சன் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தார்.

தொழிலாள வர்கம் விலை செலுத்துவதற்காக எதிர்பார்க்கப்படும் என்று வலியுறுத்துவதற்கு முன் ஜோன்சன் “நாங்கள் ஒரு தேசமாக ஒன்றாக இணைந்து வருகிறோம்” என்று பிரகடனப்படுத்தினார், “இது ஒரு தியாகத்தை உள்ளடக்கியது என்பதை நாங்கள் அனைவரும் புரிந்து கொள்கிறோம்.… இன்று நான் சட்டசபைக்கு சொல்லக்கூடிய மிக முக்கியமான புள்ளி என்னவென்றால் அந்த தியாகம் தவிர்க்கமுடியாததாகவும், அவசியமானதாகும் இருக்கின்றது என்பதே.

ஜோன்சன் நாடாளுமன்றத்தில் பிரதம மந்திரிக்கான கேள்விகளைக் தொடங்குகையில் கோர்பினை “தனது கட்சிக்கும், உண்மையில், நாட்டிற்கும் அவர் செய்த சேவைக்காக” பாராட்டியதன் மூலம், “தற்போதைய அவசரகால நிலைமையில் முடிந்தவரை கட்சியின் (டோரி) வழிகளில் ஒத்துழைத்தமைக்காக அவருக்கும் அவரது சக சகாக்களுக்கும்” நன்றி தெரிவித்தார்.

டோரிகளுடனான தொழிற் கட்சியின் அரசியல் ஒத்துழைப்புக்காக பாராட்டப்படுவதில் கோர்பினுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் ஜோன்சன் “இதை ஒரு வகையான அஞ்சலி நிகழ்வாகப் பேசுகிறார்... எனது குரல் அடக்கப்படாது, நான் எல்லா இடங்களிலும் இருப்பேன், நான் பிரச்சாரம் செய்வேன்” என்று கோர்பின் புகார் கூறினார்.

கோர்பின் உண்மையில் கடந்த நான்கரை ஆண்டுகளை தனது சொந்த அரசியல் இரங்கல்பாவை எழுதுவதற்கு செலவிட்டார், சிக்கன நடவடிக்கை மற்றும் ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கான தொழிற் கட்சியின் பிளேயர்வாதிகள் வணிக சார்பு கொள்கைகளுக்கு ஆதரவான சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பெரும் ஆணையை இழிவாக காட்டிக்கொடுத்தவராக உணரப்படுவார்.

பழமைவாத அரசாங்கத்தால் கோரப்பட்ட காட்டுமிராண்டித்தனமான வெட்டுகளைத் தொடர்ந்து அமுல்படுத்துமாறு கோர்பினும் மற்றும் நிழல் நிதி மந்திரி ஜோன் மெக்டோனலும் (John McDonnell) தொழிற் கட்சி ஆளும் உள்ளூராட்சி சபைகளை அறிவுறுத்தினார்கள். அவர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் இணைந்து வேலை நிறுத்தங்களை மற்றும் ஆர்ப்பாட்டங்களை சீரழித்தாராகள், தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தின் அழிவுக்கும் தலைமை தாங்கினார்கள். அதேநேரத்தில் காம இச்சைகளைத் தீர்க்கும் அவமதிப்பான நடத்தைகளில் லண்டன் நகரத்தை கவர்கிறார்கள்.

கோர்பினின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நற்சான்றிதழ்களை பொறுத்தவரை, சிரியா மீது குண்டு வீசுவதற்காக முடிவெடுத்த நிகழ்வில் போர்வெறிகொண்ட பிளேயர்வாதிகள் நிபந்தனையற்று வாக்களிக்க அனுமதித்ததற்காகவும், தொழிற் கட்சியை 2017 மற்றும் 2019 பொதுதேர்தலுக்கு வழிநடத்திய தேர்தல் விஞ்ஞாபனத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 2 சதவீதத்தினை இராணுவம், நேட்டோ(NATO) உறுப்பினர் தொகை மற்றும் அணு ஆயுத களஞ்சியங்களை பராமரிப்பதற்கு செலவளிக்க உறுதியளித்தற்காகவும் போர் வேண்டாம் கூட்டணியின் (Stop the War Coalition) முன்னாள் தலைவர் (கோர்பின்) நினைவுகூரப்படுவார்.

வலதுசாரிகளால் உறுதியாகக் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு கட்சியை கோர்பின் தனக்குப் பின் விட்டுச் செல்கிறார், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்சுக்கு எதிரான ஒப்புவிப்பு கோரிக்கையை சுவீடன் கைவிடுவதைத் தடுக்க அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் பொது வழக்கு விசாரணை தொடுனர்களுக்கான (வழக்குரைஞர்) இயக்குனர் சேர் கெய்ர் ஸ்டார்மர் ஏப்ரல் மாதம் கோர்பினுக்குப் பதிலாக தொழிற் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். “இடது” கொடிதாங்கியாக நியமிக்கப்பட்ட ரெபேக்கா லோங் பெய்லி (Rebecca Long- Bailey), ஸ்டார்மரின் நிழல் அமைச்சரவையில் விசுவாசகமாக உட்கார்ந்து கொள்வார் அங்கு அவர் “முற்போக்கான தேசபக்தி” என்று வரையறுக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலை வென்றெடுப்பார்.

அத்தகைய அரசியல் அழிபாடு தவிர்க்க முடியாதது என்று சோசலிச சமத்துவக் கட்சி தொடக்கத்தில் இருந்தே எச்சரித்தது. செப்டம்பர் 2015 இல் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னரே, “சிக்கன நடவடிக்கைகளுக்கு மாற்றாக ஒரு கோர்பின் வெற்றியை எதிர்பார்ப்பவர்கள் கொடூரமாக ஏமாற்றப்படுவார்கள்” என்று நாங்கள் எழுதினோம்.

தலைவர் மாற்றமோ, அல்லது இடது நோக்கி நகரும் உறுப்பினர்களின் வருகையோ கூட, தொழிற் கட்சியின் வரலாற்று ரீதியான மற்றும் நிகழ்ச்சி நிரல் ரீதியான தீர்மானிக்கப்பட்ட தன்மையை மாற்றப்பாவதில்லை என நாங்கள் வலியுறுத்தினோம்: “தொழிற் கட்சி ஒரு வலதுசாரி முதலாளித்துவ கட்சி. இது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அனைத்து குற்றங்களுக்கும் உடந்தையாக இருந்துள்ளது மற்றும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சோசலிசத்தின் பிரதான அரசியல் எதிரியாக செயல்பட்டுவருகிறது.

“ஜெரெமி கோர்பினும் மற்றும் தொழிற் கட்சியும்: மூலோபாய படிப்பினைகள்”, என்ற நவம்பர் 2016 எங்கள் கட்சி மாநாட்டு தீர்மானத்தில், "தொழிற் கட்சியின் வலதுசாரி பக்க திடீர் சரிவு என்பது வெறுமனே டோனி பிளேயர் போன்ற மோசமான தலைவர்களின் தயாரிப்பு அல்ல, மாறாக உலக முதலாளித்துவத்திற்குள் அடிப்படை மாற்றங்களில் ஆழமான புறநிலை வேர்களைக் கொண்டிருந்த பூகோளமயமாக்கலுடன் தொடர்புடையது, இது “தேசிய-அரசு அமைப்பில் உட்பொதிக்கப்பட்ட” பழைய தொழிலாளர் அமைப்புகளின் நம்பகத்தன்மையை “பாரியளவில் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது”, அவை “ஏகாதிபத்தியத்தின் நேரடி கருவிகளாக” மாற்றப்படுவதற்கு வழிவகுத்தது. என விளங்கப்படுத்தினோம்.

இதற்கு நேர்மாறாக, பிரிட்டனின் முக்கிய போலி-இடது குழுக்கள், சோசலிஸ்ட் கட்சி மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சி ஆகியவை கோர்பினை உற்சாகமாக மேலுயர்த்தி பிடித்தனர்-தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிடியையும், வர்க்கப் போராட்டத்தை அடக்குவதற்கான அவர்களின் திறனையும் தக்க வைத்துக் கொள்ளும்பாகமாக தொழிலாள வர்க்கத்திற்குள் அரசியல் குழப்பத்தை விதைத்தனர்.

சோசலிஸ்ட் கட்சி “கோர்பின் எழுச்சி” என்பது “ஒரு புதிய தொழிலாளர் கட்சியை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான, வரலாற்றின் சக்கரத்தை புரட்டிப்போடுவதற்கான ஒரு முயற்சி” என்று வரையறுத்தது.” இது வெற்றிபெறுவதற்கு, எல்லாவற்றிற்கும் மேலாக “தொழிற் சங்கங்களின் மையப்பாத்திரத்தையும், மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் கூட்டுக் குரலாக தொழிற்சங்கங்களின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்வதை” மீண்டும் ஸ்தாபிக்கவும் மற்றும் சோசலிஸ்ட் கட்சியை தொழிற் கட்சியுடன் இணைத்துக்கொள்வதற்கு அனுமதிப்பதற்கு, 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை மீண்டும் (இயக்குவதற்கு) நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் வாதிட்டார்கள்.

சோசலிஸ்ட் கட்சி, தொழிற் சங்கங்களுக்கு வெள்ளை பூச்சு அடித்து இருப்பது இந்த உறுதியான கூற்றால் வெளிப்படுத்தப்படுகிறது, “தொழிற் கட்சிக்குள் ஒரு சில “தொழிற் சங்க பிரபுக்கள்” அதிகாரம் செலுத்துகிறார்கள் என்று முதலாளித்துவ ஊடகங்கள் தொழிற் சங்கங்களின் பாத்திரத்தை நிராகரிகின்றன, இந்த பிரபுக்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் தொழிற் சங்கங்களின் ஜனநாயகக் கட்டமைப்புகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை புறக்கணிக்கின்றன. புத்துயிர் பெற்ற தொழிற் கட்சி “இப்போதும் ஒரு 'பரந்த தேவாலயமாக' இருக்கும் என்று சோசலிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது, எப்படி என்றால் இது தவிர்க்க முடியாமல் வெவ்வேறு வகையான அரசியல் பார்வைகள், அணுகுமுறைகள், கருத்துக்களை கொண்ட குழுக்களாக இருக்கும் என்பதாகும்.

சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), அதன் பங்கிற்கு கோர்பினை “தொழிற் கட்சியின் விடாப்பிடியான தன்மைக்கு” சான்றாக பறைசாற்றியது, Donny Gluckstein, ஜூன் 2016 இல் சோசலிச தொழிலாளர் கட்சியால் வெளியிடப்பட்ட, “சமூக ஜனநாயகத்தின் மறுபிறப்பு” என்ற புத்தகத்தில் கோர்பினின் மேலாதிக்கம் என்பது “வெகுஜன நனவுக்குள் முரண்பாடுகளால் இயக்கப்படும் ஒரு சுழற்சியின் மறு உருவாக்கம்” ஆக இருக்கிறது என்று விளக்கினார். இது சீர்திருத்தவாதிகளுக்கு அவசியமாக இருந்தது.

“19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இது சமூக ஜனநாயகத்தை பெற்றெடுத்தது, 100 ஆண்டுகளுக்கு பின்னர் எல்லாம் தீர்ந்து போய்விட்டது. இன்று அந்த பரிணாம வளர்ச்சியின் பின்னணியில் உள்ள சக்திகள் மீண்டும் தோன்றியுள்ளன...” தொழிலாளர்களின் சீர்திருத்தவாத நனவு, “வெகுஜன சீர்திருத்தவாத ஆற்றலின் நித்திய ஆதாரத்தினை வழங்குகிறது” என்று அவர் எழுதினார்.

சோசலிச நனவுக்கான போராட்டத்தினுடாகவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் தலைமையை வெல்லுவதனுடாகவும் மார்க்சிஸ்டுகள் இந்த நிலைமையை மாற்றுவார்கள் என்ற எந்தவொரு சாத்தியத்தையும் Gluckstein நிராகரித்தார். 20 ஆம் நூற்றாண்டின் வரலாறு, ரஷ்யாவை தவிர சுருக்கமாகவும் மற்றும் கருக்கலைப்புடனும், சீர்திருத்தவாதத்திற்கு வெளியே “பெரும்பான்மையை வெல்வதற்கான” புரட்சியாளர்களின் நம்பிக்கை இழந்த முயற்சியாக சித்தரிக்கப்பட்டது.

சீர்திருத்த வாதமாக “பிறந்து” “உடலாலும், மனதாலும் தாக்குதலுக்குள்ளான இளமைப் பருவம்” (ரஷ்ய புரட்சி, ஜேர்மன் புரட்சி, பாசிசத்தின் வெற்றி, ஸ்பானிய உள்நாட்டுப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர் உட்பட 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியை உள்ளடக்கிய) வரலாறு தன்னை ஒரு சுழற்சியால் முன்வைத்தது, “அதன் வயதை எட்டியவுடன்” - இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து பல தசாப்தங்கள் “சீர்திருத்தவாதத்தின் பொற்காலம்” என்று கருதப்பட்ட, “களைத்து பலவீனமான முதுமைக் காலங்கள்” ஊடாக சீர்திருத்தவாதம் சீர்திருத்தங்களை உருவாக்க இயலாது என்று தோன்றியதும் புதிய தொழிற் கட்சியை உருவாக்குவதில் முடிந்தது.

வயதின் முதுமை குறிக்கும் நிகழப்போகும் உடனடியான மரணத்திற்கு மாறாக, கோர்பினின் எழுச்சி “வயதின் முதுமை புதிய பிறப்பின் வழியை தயாரிப்பு செய்கிறதென்று பதிலாக நிருபித்தது... நீண்ட காலத்திற்கு முன்பே சமூக ஜனநாயகத்துக்கு வாழ்வளித்த நீரூற்று இன்னும் பாய்கிறது மற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டால் தன்னை வெளிப்படுத்துவதற்கான ஓர் ஊடகத்தை கண்டுபிடிக்கும், அது சிரிசா, கோர்பின், அல்லது வேறு ஊர்திகளாக இருக்கலாம். ஆகவே 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிற்கு வேறுபடாத ஒரு அத்தியாயத்திற்கு நாங்கள் சாட்சியாக இருக்கிறோம்.

இது, போலி இடதுகளால் முன்வைக்கப்படும் சுயதிருப்தியடைதல் மற்றும் பிற்போக்குத் தனமான புறநிலைவாதமாக இருக்கிறது. இதில் மார்க்சிச சொற்றொடர்கள் அதிகாரத்துவத்தின் துரோகத்துக்கும் மற்றும் புரட்சிகர போராட்டத்தின் தோல்விக்கும் பகுத்தறிவான காரணத்தையும் மற்றும் ஆசீர்வாதத்தையும் வழங்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

சோசலிச நனவு இல்லாமையினால் தொழிலாள வர்க்கம் முடிவில்லாத துரோகத்தின் சுழற்சிக்குள் அழிந்துபோகவில்லை. மாறாக, கடந்த தசாப்தத்தில், கிரேக்கத்தில் சிரிசா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் “கோர்பினிசம்” ஆகிய கட்சிகளை எதிர்கால அலைகளாக போலி இடதுகளால் பாராட்டப்பட்டதையும் சேர்த்து தொழிலாளர்கள் நனவு மாற்றத்தின் பிரமாண்டமான அனுபவங்களை கடந்து வந்துள்ளனர்.

இந்த அனுபவங்கள் தொழிலாளர்கள் தங்களின் தற்போதைய தலைமைகளைப் பற்றி எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதன் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இது தொழிலாளர் தலைமக்கு எதிராக பெருகிய முறையில் விரோதப் போக்கை உண்டாக்கியுள்ளது. இந்த அமைப்புகளுக்கு வெளியே கடந்த ஆண்டு எழுச்சியடைந்த சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிரான உலகளாவிய வெகுஜன எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களில் இது ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நச்சுயிரி நெருக்கடி இந்த அபிவிருத்தியை நிறுத்தப்போவதுமில்லை, கோர்பினும், ஜோன்சனும் மிகவும் விரும்பிய “தேசிய ஒற்றுமைக்கான” உணர்வுகளையும் உருவாக்கப்போவதுமில்லை. மாறாக, நேற்றைய பிரபலம் கோர்பின் பயத்துடன் பதுங்கி ஒழிந்து நாடாளுமன்ற பின்இருக்கைக்கு செல்லுகையில், பெருநிறுவன உயரடுக்கினால் சமூக செல்வம் அபகரிக்கப்படுவது அதிகரிக்கையில், மில்லியன் கணக்கானவர்களின் தலைவிதிக்கு அரசாங்கங்களின் கணக்கிடப்பட்ட அலட்சியம் மற்றும் முதலாளித்துவத்தினது வெளிப்படையான தோல்வி ஆகியவை புரட்சிகர சோசலிசத்திற்கு தொழிலாள வர்க்கம் திரும்புவதற்கு வழி அமைக்கிறது. வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களுக்கு தேவையான வரலாற்றுப் படிப்பினைகளிலிருந்து பெறப்பட்ட வேலைத்திட்டத்தையும் தலைமைத்துவத்தையும் வழங்குவது சோசலிச சமத்துவக் கட்சியின் பணியாகும்.

Loading