இந்தியப் பிரதமரின் கொரோனா வைரஸ் முடக்கம் மில்லியன் மக்களை அச்சுறுத்தும் சமூக பேரழிவு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

COVID-19 ஐ கையாள்வதில் இந்தியாவின் விரைவான தன்மை உலகளவில் பரவும் நோயை தடுப்பதற்கு முக்கியமானது என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்த நாளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 24 நள்ளிரவிலிருந்து தேசிய அளவில் மூன்று வார முடக்கத்தை (lockdown) அறிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரும் மக்கள் தொகையைக் குறிப்பிட்டு, WHO அவசரகால திட்ட இயக்குநர் மைக் ரையன் மார்ச் 23 அன்று: “அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் என்ன நடக்கிறது என்பதன் மூலம் இந்த பூகோள தொற்றுநோயின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். பொது சுகாதார அளவிலும் மற்றும் சமூக மட்டத்திலும் மேலும் இந்த நோயை கட்டுப்படுத்தவும் மற்றும் அடக்கவும் இந்தியா தீவிர நடவடிக்கை எடுப்பது முக்கியமானதாகும்.”

இந்தியா COVID-19 உறுதிப்படுத்தப்பட்ட முதலாவது நபரை அறிவித்த பின்னர் அதிகபட்சமாக விலைமதிப்பற்ற இரண்டு மாதங்களில் மோடியின் முடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது. தற்போதைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி இறந்தவர்கள் 12 பேருடன் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் 606 ஆக இருக்கும்போது 1.3 பில்லியன் மக்களில் எவ்வளவுபேர் பாதிக்கப்பட்டார்கள் என்பது தெளிவாக இல்லை. ஏனெனில் வெறும் 20,000 பரிசோதனைகள் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது.

WHO உடன் சேர்ந்து, ஒருதொகை மருத்துவ நிபுணர்கள் தறிகெட்டு உள்வரும் பேரழிவு குறித்து எச்சரித்திருக்கிறார்கள். இருந்தபோதிலும் மோடியும் இந்திய அதிகாரிகளும், எந்தவொரு இடத்திலும் சமூக பரவலால் நடக்கவில்லை என்ற கூற்றுக்களின் அடிப்படையில் “பீதியடைய வேண்டாம்” என்று அவர்களின் நோக்கங்களை பலமுறை அறிவித்தனர். ஒரு மொத்த தேசத்தை முடக்குதலை செயற்படுத்துவதற்கான மோடியின் தற்போதைய அவசரம், நிலைமை எவ்வளவு கடுமையானதாக வந்திருக்கிறது என்பதை மட்டுமே குறிக்கிறது.

உலகளாவிய தேவை பெருமளவில் அதிகரிக்கையில், 40 சதவீதமாக மருத்துவ உபகரணங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தொழிற்சாலை மற்றும் அரசாங்கங்களை WHO கேட்டதற்கு எவ்வாறு இந்திய அரசாங்கம் செவிசாய்க்கவில்லை என்று மார்ச் 23 அன்று இந்தியாவின் எக்னோமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. “ஆனால் அரசாங்கம் எந்தவொரு முன்கணிப்பையும் செய்யத் தவறிவிட்டது” என்று டைம்ஸ் குறிப்பிட்டு மேலும் “அதன் விளைவு அரசாங்கத்தின் ‘கடைசி நிமிட அவசரம்’ போதுமானதாக இல்லை என தொழில்வல்லுநர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.” என கருத்து தெரிவித்துள்ளது.

இந்திய தடுப்பு உடைகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சஞ்சீவ் ரெல்ஹன் கூறியதாவது: “நாங்கள் அமைச்சகத்திற்கு சென்று இலாப நோக்கற்ற நடவடிக்கைளை பிப்ரவரி 7 க்கு முதல் தடைசெய்யுங்கள் என்ற கோரிக்கை வைத்தோம், இந்திய அரசாங்கம் அதனைச் செய்யவில்லை. மூன்றடுக்கு முகக்கவசம் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களின் விலை கிலோ 250 இலிருந்து கிலோ 3000 ஆக அதிகரித்துவிட்டது. தொய்வு நாடா (Elastics) எந்த விலைக்கும் கிடைக்கவில்லை. எமது சொந்த தயாரிப்பு செய்வதில் நாம் ஒரு நெருக்கடியை முகங்கொடுக்கிறோம். நாங்கள் பாதுகாப்பு உடைகளை பெருமளவில் சேர்த்துவைக்கவேண்டிய தேவையை பலதடவை எழுப்பியிருக்கிறோம், அவைகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.”

மோடி தனது உரையில், நோய் பரவலை தடுப்பதற்கு சமூக இடைவெளி (social distancing) முறை முக்கியமானது என பலமுறை வலியுறுத்தினார். “நமக்கு முன்னால் உள்ள ஓரே வழி” இதுதான் இருக்கிறது என்றும் கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க வேறு எந்த முறையோ அல்லது வழியோ இல்லை” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முக்கிய பகுதியாக சமூக இடைவெளி முறை இருக்கிற அதேவேளை மோடி வலியுறுத்துவது போல் அது மட்டும் தான் ”ஒரே” வழியல்ல. அடையாளம் காண்பதற்கும் விரைவாக தனிமைப்படுத்துவதற்கும் மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருக்கமாக இருந்த நபர்களை பரிசோதிப்பதற்கும் முறையான “தடமறிதல்” மூலம் இணைந்து பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களை அடையாளம் காண பெரிய அளவிலான பரிசோதனை முக்கிய பாத்திரம் வகிக்கிறது என்பது சர்வதேச அனுபவத்தின்மூலம் நிருபிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சுகாதார துறையில், “தனிமைப்படுத்தபட” முடியாத தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உடைகள் எந்த வகையிலும் முக்கியத்துவம் குறைந்தது அல்ல.

“வீட்டை விட்டு நாங்கள் வெளியே செல்லக்கூடாது” என இந்திய மக்களிடம் அறிவிக்கும்போது, முக்கிய அடிப்படை உணவுத் தேவைகள் பெற்றுக்கொள்வது உட்பட முடக்கத்தின் கீழ் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் எண்ணற்ற சிரமங்களை சமாளிப்பதற்கு ஒரு விரிவான திட்டத்தை மோடி கோடிட்டுக் காட்டவில்லை.

“குறைந்தது 90 சதவீத இந்தியாவின் உழைப்பாளர்கள் அமைப்புசாரத் துறையில் வேலை செய்கிறார்கள், சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் கூற்றுப்படி பாதுகாப்பு காவலர்கள், துப்புரவாளர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், தெருவோர வியாபாரிகள், குப்பை பொறுக்குபவர்கள் மற்றும் வீட்டு வேலை செய்பவர்கள் போன்ற வேலைகளில் பங்களிக்கிறார்கள்.” என மார்ச் 25 அன்று ஒரு பிபிசியின் செய்தி குறிப்பிட்டுள்ளது.

அவர்கள் எந்த சம்பளத்திற்கும் உத்தரவாதமில்லாமல் இருக்கும்போது, 2019 இல் சுமார் 520 மில்லியன் தொழிலாளர்களாக இருந்த இந்த மக்கள் தொகையின் பரந்த பிரிவினர் முழுமையாக மூன்றுவார முடக்கத்தின் காலத்திற்கும் அவர்களின் கூலியை இழக்கின்ற நிலையில் இருக்கிறார்கள்.

ரமேஷ் குமார், ஒரு கட்டிடத் தொழிலாளி, உத்தரப் பிரதேசத்திலுள்ள பண்டா மாவட்டத்திலிருந்து பிபிசி க்கு கூறினார்: “எங்களை வேலைக்கு அமர்த்த யாருமில்லை ஆனாலும் நாங்கள் இன்னமும் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என பார்க்கிறோம்… நான் ஒவ்வொரு நாளும் 600 ரூபாய் ($US8) சம்பாதிக்கிறேன் மேலும் நான் 5 பேருக்கு சாப்பாடு போட வேண்டும். ஒரு சில நாட்களில் நாங்கள் சாப்பாடுவதற்கு எதுவுமே இருக்காது. கொரோனா வைரஸ் ஆபத்தை நான் அறிகிறேன் ஆனால் என்னுடைய குழந்தைகள் பசியை என்னால் பார்க்க முடியாது.”

முகமது ஷபீர், தெருவோர வியாபாரி, மில்லியன் கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பேரழிவை பிபிசிக்கு பொருத்தமாக சுருக்கிக் கூறுகையில்: “நான் உதவியற்ற தன்மையை உணர்கிறேன். கொரோனா வைரஸ் க்கு முன்னர் நம்மைப் போன்ற பலரை பசி கொன்றுவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்.”

அனைத்து உணவகங்களில் மூன்றில் ஒரு பங்கு மூடப்படலாம், வரவிருக்கும் இரண்டு வாரங்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக வேலைகள் நீக்கப்படும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அனைத்து வாகனத் தொழிற்துறை அதன் தொழிற்சாலைகள் தற்காலிக இழுத்துமூடலை செய்கின்ற அதேவேளை, இந்த பகுதியில் பணிபுரியும் ஒரு மில்லியன் கணக்கான மக்களின் வருமானத்தை ஆபத்தில் வைக்கிறது.

“கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் மற்றும் நாட்டின் மருத்துவ கட்டுமானங்களை வலுப்படுத்தவும்” 150 பில்லியன் ரூபாய்களை ($US1.9 billion) ஏற்பாடு செய்வதாக மோடி உரத்துக் கூறியுள்ளார். வரப்போகிற பேரழிவின் பரிமாணங்களை பார்க்கும்போது, இது கடலில் விழும் ஒரு துளியாகும் மேலும் இது மனித உயிர்கள் பற்றிய ஆளும் வர்க்கத்தின் புறக்கணிப்பையும் மற்றும் அலட்சியத்தையும் பிரதிபலிக்கிறது.

சில வாரங்களுக்கு முன்பு, வைரஸை எதிர்த்து போராடுவதற்கான செலவினத்தைவிட 30 மடங்குக்கு மேல் மோடி அரசாங்கம் 66 பில்லியன் அமெரிக்க டாலரை பாதுகாப்பு வரவு செலவு திட்டத்திற்கு ஒதுக்கியது. பிப்ரவரி 24-25 அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வருகைதந்தபோது அமெரிக்க தயாரிப்பின் இராணுவ ஹெலிகொப்டர்கள் வாங்குவதற்கான மோடி ஒப்புக்கொண்டதைவிட இந்த தொகை குறைவானதாகும்.

கொரொனா வைரஸ் பரிசோதிக்கும் கருவி ஒன்று சுமார் 5,000 ரூபாய் ($67) அரசாங்கத்திற்கு செலவாகிறது. பரிசோதனைக்கும் மட்டும் மொத்தமாக $1.9 பில்லியன் அமெரிக்க டாலரை செலவுசெய்தால், அது 1.3 பில்லியன் மக்கள் தொகையில் 29 மில்லியன் பரிசோதனைகளுக்கு மட்டுமே செலவாகும்.

எவ்வாறெனினும், மோடியின் $1.9 அமெரிக்க டாலர் மானியம் பரிசோதிப்பதற்காக மட்டுமல்ல ஆனால் கடுமையான குறைபாடாக இருக்கும் நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவும் தான் என்று அவர் பெருமிதம் கொண்டார். 100,000 பேருக்கு 2.3 தீவிர சிகிச்சை பிரிவு (ICU) கட்டில்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த புள்ளிவிபரத்தை ஈரானுடன் ஒப்பிடும்போது, 100,000 பேருக்கு 4.6 தீவிர சிகிச்சை பிரிவு (ICU) கட்டில்கள் உள்ளன, மேலும் COVID-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. வரும் வாரங்களில் இந்தியாவில் வளர்ந்துவரும் மோசமான நிலைமைக்காக முற்றிலும் வலுவான கவனம் செலுத்தவேண்டியதை இது காட்டுகிறது.

2016 இன்படி, பல்லாயிரக்கணக்கான தீவிர சிகிச்சை நிபுணர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக இந்திய மருத்துவ சங்க செய்தி குறிப்பிட்டிருக்கிறது. தனியார் சுகாதார சேவையில் அதிக டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை கட்டில்கள் இருக்கின்ற நிலையில், மக்கள்தொகையில் பெரும் அதிக அளவில் இருக்கின்ற தொழிலாள வர்க்கம் மற்றும் கிராம ஏழைகளுக்கு இது மலிவானதல்ல.

Loading