இங்கிலாந்து: சர்வாதிகார அதிகாரங்களைக் கைப்பற்ற ஜோன்சன் அரசாங்கம் கொரோனா வைரஸ் நெருக்கடியைப் பயன்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜோன்சன் அரசாங்கம் அடுத்த திங்கட்கிழமைக்குள் அவசரகால கொரோனா வைரஸ் மசோதாவை நிறைவேற்ற விரைந்து செல்லும். இது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பொலிஸ் அரசு நடவடிக்கைகளை வழங்குகிறது.

பிரிட்டனில் ஆளும் உயரடுக்கு பல வாரங்களாக இந்நோயை எதிர்த்துப் போராட எதுவும் செய்யாதிருந்ததுடன், COVID-19 தொற்றுநோயால் பொது சுகாதாரத்திற்கு ஏற்படும் மிகப்பெரும் ஆபத்தை பயன்படுத்திக்கொண்டு, அவர்கள் நீண்ட காலமாக அமுல்படுத்த திட்டமிட்டிருந்த நடவடிக்கைகளை செயல்படுத்துகின்றனர்.

321 பக்க மசோதா நேற்றைய தினம்தான் பகிரங்கப்படுத்தப்பட்டது. ஆனால் ஒரு சில நாட்களில், எந்தவொரு பொது விவாதமும் இல்லாமல், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான சாக்குப்போக்கின் கீழ் இரண்டு ஆண்டுகள் வரை அமைச்சர்களுக்கு கிட்டத்தட்ட வரம்பற்ற அதிகாரங்களை அந்த மசோதா வழங்கும். இந்த மசோதாவின் கீழ் இயற்றப்பட்ட எந்தவொரு நடவடிக்கையின் காலாவதி தேதியையும் “அவ்வாறு செய்வது விவேகமானதாக இருந்தால்.” மீண்டும் மீண்டும் மாற்றுவதற்கும், மேலும் ஆறு மாதங்கள் ஒரேநேரத்தில் நீடிப்பதற்கும் சில உட்பிரிவுகள் அமைச்சர்களுக்கு அதிகாரம் வழங்குகின்றன.

கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பாக ஆபத்தினால் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை கீழ் சபையில் கூட்டுவது மிகவும் ஆபத்தானது என்ற அடிப்படையில் வாக்கெடுப்பு இல்லாமல் அதை நிறைவேற்ற முடியும் என்று எதிர்க் கட்சிகள் ஒப்புக்கொண்டதால், இந்த மசோதா குறித்து நாடாளுமன்ற விவாதம் எதுவும் இருக்கப்போவதில்லை.

இந்த வார தொடக்கத்தில், தொழிற் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேசுவதற்காக ஜோன்சனை சந்தித்தார். நான்கரை ஆண்டுகளாக, கோர்பின் ஒரு பழமைவாத அரசாங்கம் மிகவும் நெருக்கடிக்குள்ளானபோது, இரண்டு பிரதமர்களான டேவிட் கேமரூன் மற்றும் தெரசா மே ஆகியோர் இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்ட சமயத்தில் முண்டுகொடுத்து காப்பாற்றினார். போருக்குப் பின்னர் மிகவும் வலதுசாரி அரசாங்கத்தின் தலைவராக ஜோன்சன் ஆட்சிக்கு வருவதற்கு கோர்பினே பொறுப்பாளியாவார். கூடியவிரைவில் கட்சித் தலைவர் பதவி மாற்றப்படும் நிலையில், கோர்பினின் இறுதித் துரோக செயல் என்னவெனில், ஜோன்சன் தனது சர்வாதிகார அதிகாரங்களைப் பெற அனுமதித்ததே.

இந்த மசோதா நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்தது. பிப்ரவரி 10 அன்று நிறைவேற்றப்பட்ட சுகாதார பாதுகாப்பு (கொரோனா வைரஸ்) ஒழுங்குமுறை மசோதா-2020 இல் அதன் சில முக்கிய விதிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இது தொற்றை மற்றவர்களுக்கு பரப்பும் அல்லது தொற்று அபாயத்தை குறைப்பதற்காக தொற்றுக்குள்ளான நபர்களை அகற்றுவதற்காக மேலதிகமான கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் சில நபர்கள் மீது அல்லது குழுக்களின் மீது விதிக்க அனுமதிக்கின்றது. மேலுலம் கொரோனோ தொற்று நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தடுத்துவைக்க பொலீசுக்கு அதிகாரங்களை வழங்குகின்றது.

இவை அனைத்தும் அவசர கொரோனா வைரஸ் மசோதாவில் உள்ளன.

• எந்தவொரு இடத்திலும், வாகனம், இரயில், கப்பல் அல்லது விமானம், எந்தவொரு அசையும் கட்டமைப்பும் மற்றும் எந்தவொரு கடல்களில் நிலைநிறுத்தலும் மற்றும் மிக அவசியமான இடங்களில், வளாகங்களை மூடுவதற்கும் தொற்றுநோய்களின் பரவலின் போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நிகழ்வுகள் மற்றும் ஒன்றுகூடல்களை கட்டுப்படுத்த அல்லது தடை செய்ய இந்த மசோதா அரசாங்கத்திற்கு அனுமதியளிக்கிறது. கல்வி நிறுவனங்கள் அல்லது குழந்தை பராமரிப்பு வழங்குநர்களை மூடுவதற்கு இது ஒரு தற்காலிக அதிகாரத்தை வழங்குகிறது, இது இதற்கு சமனான சட்டமேதும் இல்லாத ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தை உள்ளடக்கியதாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

• எல்லைக்காவல் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இங்கிலாந்தின் எல்லைப்பாதுகாப்புக்கு குறிப்பிட்டதக்க மற்றும் நிஜமான அச்சுறுத்தல் ஏற்பட்டால், “இங்கிலாந்தில் ஒரு விமான நிலையம், துறைமுகம் அல்லது ஒரு சர்வதேச இரயில் நிலையத்தினை நிர்வாகத்தின் பொறுப்பானவர்கள் வழிகாட்டுதலை வழங்குவதற்கும், தேவையெனில் நிறுத்திவைக்கவும்” அரசதுறைச் செயலாளர் அதிகாரம் அளித்துள்ளார்.

• இம் மசோதாவை கொண்டு வழமையான விசாரணை முறைகள் நிறுத்தப்படவுள்ளன, “ஒரு நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாய விசாரணைகளின் செயல்திறன் மற்றும் அதற்கான நேரமின்மை COVID-19 பரவலால் பாதிக்கப்படும். பயணத்தின் மீதான கட்டுப்பாடுகளால் இருதரபப்பினருக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகுவது கடினமாக இருப்பதாலும் மற்றும் விசாரணை முறைகள் இல்லாமல் கணிசமான எண்ணிக்கையிலான விசாரணைகள் மற்றும் வழக்குகள் ஒத்திவைக்கப்பட வேண்டியிருக்கும்.” இது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்படும் மக்களை நீண்ட காலத்திற்கு காவலில் வைக்க நீதிமன்றங்களையும் பிற அதிகாரிகளையும் அனுமதிக்கிறது.

• COVID-19 ஐ ஒருவர் பரப்புவார் என சந்தேகிக்கும் எவரையும் கைது செய்து தனிமைப்படுத்தும் அதிகாரம் பொலிஸ் படைகளுக்கு வழங்கப்படுகிறது.

• "மரணித்த உடல்கள் தொடர்பான அதிகாரங்கள்" என்ற தலைப்பில் மசோதாவின் ஒரு பகுதி, "COVID-19 ஆல் ஏற்படும் அதிகப்படியான இறப்புகளால் மரண நிர்வாக அமைப்பு மூழ்காமல் இருக்க, அந்த நிர்வாகத்தில் இருப்பவர்களை வழிநடத்த தேவையான அதிகாரங்களை உள்ளூர் அதிகாரிகளுக்கு அளிக்கிறது". இந்த வாரம், பாராளுமன்றத்திலிருந்து ஒரு மைல் தொலைவில் மத்திய லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் பிணவறைக்கு அடுத்ததாக ஒரு பெரிய தற்காலிக பிணவறை அமைக்கப்பட்டுள்ளது.

• கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிப்பதற்காக மருத்துவமனைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் படுக்கையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற சூழ்நிலையில், இந்த மசோதா மருத்துவமனையிலிருந்து வெளியேறும் மக்களுக்கு பராமரிப்பு மற்றும் சிகிச்சை திட்டங்களை வழங்குவதற்கான கடமையில் இருந்து தேசிய சுகாதார சேவையை விடுவிக்கிறது. மருத்துவர்கள் நோயாளிகளை விரைவாக வெளியேற்றும் பொருட்டு காகிதப்பணி மற்றும் நிர்வாகத் தேவைகளை குறைக்க இந்த மசோதா அனுமதிக்கிறது.

• அடிப்படை ஜனநாயக விதிமுறைகள் மீதான தாக்குதல் மார்ச் 13 க்கு முன்னரே முன்வைக்கப்பட்டது, தொழிற் கட்சியின் ஆதரவுடன் ஜோன்சன் மே மாதம் நடைபெறவிருந்த, 118 ஆங்கில உள்ளூராட்சி மன்ற, லண்டன் சட்டமன்றம் மற்றும் ஏழு ஆங்கில மாநகராட்சி மேயர்களுக்கான உள்ளூரராட்சி தேர்தல்களை மே 2021 வரை ஒத்திவைத்தார். இந்த நடவடிக்கை முன்கூட்டியே நன்கு தீர்மானிக்கப்பட்ட ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. பிரிவு 58 “தற்போது எதிர்பார்க்க முடியாத விதிமுறைகள், பிற தொடர்புடைய தேர்தல்கள் மற்றும் வாக்கெடுப்புகள் (பிரிவு 57 இல் இல்லை) மூலம் ஒத்திவைக்க மாநில செயலாளர் அல்லது அமைச்சரவை அலுவலகத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.”

நிகழ்வுகள் மற்றும் ஒன்றுகூடலுக்கான தடையானது அனைத்து வகையான பொது அரசியல் எதிர்ப்பு தொடர்பானவற்றையும் உள்ளடக்கியிருக்கிறது. ஏற்கனவே நூறாயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 5 மில்லியன் வேலையற்றோர், உணவு பற்றாக்குறை மற்றும் சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு பொறிவு பற்றிய முற்கணிப்புகளால், சமூக மற்றும் அரசியல் கிளர்ச்சிகள் தெருக்களில் இராணுவ துருப்புக்களால் கண்காணிக்கப்படும்.

இந்த வாரம் 20,000 இராணுவத்தினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10,000 இராணுவத்தினர் வெள்ளப்பெருக்கெடுப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட நியமிக்கப்பட்டிருந்துடன், மேலும் 10,000 துருப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளனர். ஆயுதப்படைகளை அணிதிரட்டுவது முன்னரே தயாரிப்பு நிலையில் உள்ளது மற்றும் டோரிகளின் பிரெக்ஸிட்-க்கு பிந்தைய திட்டமிடல் மூலோபாயத்தின் மைய அங்கமாக "Yellowhammer நடவடிக்கை" அறியப்பட்டு இருந்தது. Yellowhammer "சமூக பதட்டங்களை மற்றும் வகுப்புவாத பதட்டங்களை அதிகரிக்கும்" என்று முன்கணித்தது.

ஆயிரக்கணக்கான துருப்புக்களை தயார் செய்ய அசாதாரண நடவடிக்கைகள் இயற்றப்பட்டுள்ளன. பாதுகாப்பு மந்திரி பென் வாலஸ் புதன்கிழமை அன்று கூறினார், "எனது கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாப்பு அமைச்சும் முழுமையும் இந்த உலகளாவிய தொற்றுநோயால் தேசத்தை மீட்க ஆயுதப்படைகளும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன."

கென்யா மற்றும் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் பயிற்சிகளை வழங்குதல் இரத்து செய்வதன் மூலம் துருப்புக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு நடவடிக்கைகளில் உள்ள ஏனைய பிரிட்டிஷ் இராணுவத்தினருக்கு விடுப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. ஈராக் இராணுவத்திற்கு பயிற்சியளித்த சுமார் 200 பிரிட்டிஷ் வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

"கோவிட் ஆதரவு படை" என்று அழைக்கப்படுவது, ஹாம்ப்ஷயர் மாநிலத்தின் ஆல்டர்ஷாட்டில் நகரத்தில் உள்ள பிரிட்டிஷ் இராணுவத்தின் நிலையான கூட்டு கட்டளை தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆல்டர்ஷாட் ஒரு "இராணுவ நகரம்", "பிரிட்டிஷ் இராணுவத்தின் வீடு" என்று அழைக்கப்படுகிறது, இப்பகுதியில் குறைந்தபட்சம் 11 படைப்பிரிவுகள் உள்ளன.

படையினரின் நோக்கத்தை மறைக்க வாலஸ் முயற்சித்த போதிலும், "லண்டன் தூண்டப்படக்கூடியதாக இருக்கும் முழு அடைப்பின் நிகழ்வின் போது வீதிகளை பாதுகாக்க பொலீசை இயக்குவதில் கோவிட் 19 ஆதரவுப்படை ஒரு பங்கை வகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அதே பத்திரிக்கையில் ஜோர்ஜ் பார்க்கர் எழுதினார், பல்பொருள் அங்காடிகள் காவல்துறையினரால் பாதுகாக்கப்படும் அதேநேரத்தில் திறந்திருக்கும் கடைகள் சிலவற்றில் மருந்தகங்களும் ஒன்றாக இருக்கும்.

கார்டியன் பெரும் ஆர்வத்துடன் குறிப்பிட்டது, "அரசாங்கம் வெளிப்படையாக அம்பலப்பட்டதை முன்னிலைப்படுத்த தயக்கம் காட்டிய நிலையில், முழு அடைப்புகளையும் செயல்படுத்தவும், கடைகளில் களவுபோவதை தடுக்கவும் மற்றும் சமூக ஒழுங்கில் ஒரு முறிவு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு ஏனைய நாடுகளில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆயுதப்படைகள் தயாராக இருக்கவேண்டும்.

இந்த மசோதா வெளியிடப்பட்ட அதே நாளில், டோரி சார்பு டெய்லி டெலிகிராப் தலையங்கத்தில் பின்வருமாறு எழுதியது, “இந்த நெருக்கடி நேரத்தில், உத்தியோகபூர்வ கொள்கையில் தொடர்ந்து முறையீடு செய்வது உதவாது. ... நாங்கள் வலிமையான சமரசமத்திற்குள்ளாகாத தலைமைத்துக்காக ஏங்குகிறோம்"

இத்தகைய மொழி ஒரு கடுமையான அரசியல் நெருக்கடியைப் பேசுகிறது, அதில் முதலாளித்துவம் சர்வாதிகார வழிமுறைகளால் தங்கள் நலன்களைப் பாதுகாக்க நகர்கிறது. உலகளவில் அதே தாக்குதல்களை எதிர்கொள்ளும் தொழிலாளர்களுடன் ஒற்றிணைந்து, ஒரு சோசலிச வேலைத்திட்டம் மற்றும் ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அணிதிரட்டலால் மட்டுமே இந்த உடனடி அரசியல் ஆபத்தை எதிர்க்க முடியும்.

பிரிட்டனில் உள்ள தொழிலாளர்கள் ஆங்கில கால்வாயினை கடந்து பிரான்சினை பார்த்தால் மட்டுமே போதும். அங்கு கடந்த ஆண்டு மஞ்சள் சீருடை எதிர்ப்பாளர்களைக் கொடூரமாகத் தாக்கிய கலகப் பிரிவு போலீசாரும் படையினரும் இப்போது கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பயன்படுத்தி நாளாந்தரீதியால் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

Loading