பங்களாதேஷ்: COVID-19 நெருக்கடி மத்தியில் பாதுகாப்பு கோரி ஆடைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

COVID-19, தொடர்ந்து நாடுமுழுவதும் பரவுதால் உற்பத்தியை தடைபடாமல் வைத்திருக்கவேண்டும் என்ற முதலாளிகளின் கோரிக்கைகளுக்கு எதிராக கடந்த மாத இறுதியில் ஆடைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தினை மேற்கொண்டனர்.

டாக்காவின் துரக் பிராந்தியத்திலுள்ள ஆடைத் தொழிலாளர்கள் சனிக்கிழமையன்று அவர்களுடைய தொழிற்சாலைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள் மேலும் பணிபுரியும் பகுதியை இழுத்து முடவும் மற்றும் நிலுவைச் சம்பளங்களை வழங்கக்கோரியும் வெளிநடப்பு செய்தனர்.

காஸிபூர் இல் உள்ள ஷபா ஸ்வீட்டர் மற்றும் ஜஹீன் டெக்ஸ்டைல்லிருந்தும், மிர்பூர் இல் உள்ள ஷிரஜ் ஆடைத் தொழிலகம், முகம்மடுபூர், அஷுலியா வில் உள்ள தொழிற்சாலைகள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆடைத் தொழிலாளர்கள் இதே கோரிக்கைகளுக்காக போராட்டத்தை நடத்தினார்கள். வாழ்வை அச்சுறுத்தும் இடர்களை முகங்கொடுக்கும் நிலையில் அவர்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற முதலாளிகளின் கோரிக்கைகளுக்கு உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு அலை வளர்ச்சி கண்டு வருவதன் ஒரு பகுதியாக இந்தப் போராட்டம் நடந்திருக்கிறது.

மார்ச் 23 அன்று பங்களாதேஷ் அரசாங்கம் மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கைகளை தொடர்ந்து நாடுமுழுவதும் அடைப்பை அல்லது உத்தியோகபூர்வமற்ற மூடக்குதலை அறிவித்திருக்கிறது. பின்னர் மார்ச் 26 லிருந்து ஏப்ரல் 4 வரை அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்கள் தொடர்ந்து மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகள், உணவு சந்தைகள், அத்தியாவசிய சேவை வழங்குநர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் போன்ற அவசர சேவைகள் தொடர்ந்து இயங்கும். வங்கிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் திறந்திருக்கும், ஆனால் உணவு, எண்ணெய் மற்றும் மருந்துபொருட்கள் போன்ற அத்தியாவசிய போக்குவரத்து தவிர அனைத்து பொது போக்குவரத்தும் இயங்காது மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும்.

நோய் கட்டுப்படுத்துதல் மற்றும் ஆராய்ச்சி, தொற்றுநோயியல் கல்வி நிறுவனத்தின் கூற்றுப்படி, 5 பேர் இறந்துள்ளார்கள், 15 பேர் குணமடைந்துள்ளார்கள் மற்றும் 28 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பவர்கள் உட்பட COVID-19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்கள் 48 பேர் இருக்கின்றனர். மார்ச் 29 மட்டும் 1,185 பேர் மருத்துவ சோதனை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற நிலையில் பெரும்பாலான மக்கள் பரிசோதனை செய்யப்படாமலும், சமூக பரிமாற்றம் (community transmission) ஏற்கனவே தொடங்கியிருக்கின்ற நிலையின் கீழ் இந்த எண்ணிக்கை நம்பத்தகுந்தவகையாக இல்லை.

தற்போது பங்களாதேஷ் ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (BGMEA) உறுப்பினர்களுக்கு சொந்தமான 80 சதவீத தொழிற்சாலைகள் மற்றும் பங்களாதேஷ் பின்னலாடைத் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (BKMEA) உறுப்பினர்களுக்கு சொந்தமான 60 சதவீத தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன.

இருந்தபோதிலும், மாரச் 29 அன்று, 299 ஆடைத் தொழிற்சாலைகள் உட்பட 985 தொழிற்சாலைகள் திறந்தே இருந்தன. மருத்துவரக்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி (Personal Protective Equipment – PPE) செய்யும் சில தொழிற்சாலைகள் இயங்கிக்கொண்டிருந்தன என்று BGMEA இன் செய்தித் தொடர்பாளர் மன்ஷூர் அகமது ஊடகத்திற்கு தெரிவித்தார்.

அதிகாரபூர்வமற்ற முடக்குதலுக்கு முன், ஷ்ராமிக் கர்மாச்சாரி ஆரோக்ய பரிஷத் மற்றும் ஆடை ஷ்ராமிக் ஷோதிகர் அந்தோலன் தொழிற்சங்கங்கள் ஆடைத் தொழிற்சங்கங்களுடன் கூட்டிணைந்து பல நிறுவனங்கள் தடையின்றி உற்பத்தியை தொடர்ந்தார்கள்.

பங்களாதேஷ் தொழிற்சாலை தொழிலாளர்களின் கோபம் அதிகரித்திருந்தது ஏனெனில் அவர்கள் வேலையிலிருந்து மற்றும் வேலைக்கு செல்லும் பயணத்தில் அல்லது அவர்களுடைய தொழிற்சாலைகளில் சமூக இடைவெளி முறையை பின்பற்றுவதற்கு முடியாமல் இருக்கிறார்கள். “தினமும் பயணத்தின் போது பாதிக்கப்பட்ட நபர் யாராவது என்னை தொட்டுவிட்டாரா, இல்லையா என்று எனக்கு உண்மையில் அச்சமாக இருக்கிறது” என்று சிட்டகாங் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தின் ஒரு ஆடைத் தொழிலாளி ஷாஹேனா அக்தர் டெய்லி ஸ்டார் க்கு கூறியுள்ளார்.

பங்களாதேஷின் சுமார் 4000 ஆடைகள் தொழிற்சாலைகளில் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் மக்கள் பிரதானமாக பெண்கள் பணியிலிருக்கிறார்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா விலிருந்து கொள்முதல்ஆணைகள் வீழ்ச்சியடைந்திருப்பதால் அவர்கள் தங்களது வேலைகளை இழப்பதற்கான சாத்தியத்தை எதிர்நோக்குகிறார்கள். வால்-மார்ட், எச்அன்ட்எச், சிஅன்ட்ஏ, மார்க் மற்றும் ஸ்பென்சர், எஸ்பிரிட், ஜிஏபி மற்றும் லி அன்ட் பஃங் போன்ற மிகப்பெரும் உலக மொத்தவணிகர்கள் மிகவும் சுரண்டப்பட்ட இந்த தொழிலாளர்களிடமிருந்து பெரும் இலாபங்களை ஈட்டுகிறார்கள். இவர்களுக்கு மாதம் 95 அமெரிக்க டாலர் அல்லது அதைவிட குறைவாக வழங்கப்படுகிறது.

BGMEA இன் கூற்றுப்படி, 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் கொள்முதல் ஆணைகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் மற்றும் இன்னொரு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் இரத்துசெய்யப்பட்டதால் இரண்டு மில்லியன் தொழிலாளர்ளின் வேலைகள் அச்சுறுத்தப்படுவதுடன் ஆடைத் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டு ஏற்றுமதி வருமானத்தில் ஆடைத் தொழிலின் பங்களிப்பு 84.21 சதவீதமாக உள்ள நிலையில் இது பங்களாதேஷ் பொருளாதாரத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரதமர் ஷேக் ஹசினா மார்ச் 25 சுதந்திர தின மற்றும் தேசிய நாள் அன்று அவருடைய தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட உரையில் “வீட்டில் இருங்கள்” மற்றும் “கண்டிப்பாக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்” என பொது மக்களை பதட்டத்துடன் கேட்டுக்கொண்டார். பூகோள கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகள் அல்லது அத்தியாவசியமற்ற துறைகள் செயல்பட வேண்டும் என்று அவர் கூறவில்லை.

ஹசினா ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகளுக்காக 50 பில்லியன் டக்கா (595 அமெரிக்க டாலர்) “ஊக்குவிப்பு தொகுப்பினை” அவர்களுடைய தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும் என்று பணிவுடன் பரிந்துரைத்து அறிவித்துள்ளார். பெருவணிகம் அவரது கோரிக்கையை கவனிக்கிறதா என்ற ஊடக செய்திகள் எதுவுமில்லை. தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்குப் பயந்து, ஊதியம் வழங்குவதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் “பயங்கர சமூக அமைதியின்மை உருவாகும்” என்று BGMEA தலைவர் ரூபனா ஹுக் பின்னர் எச்சரித்துள்ளார்.

COVID-19 பரவல் ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களையும் பாதிப்பில் வைத்திருக்கிறது. மார்ச் 27 இலிருந்து மெளலிவுபஜார் மாவட்டத்தின் 163 தோட்டங்களில் சுமார் 500,000 தொழிலாளர்கள் வேலை செய்யவில்லை. இந்த தொழிலாளர்கள் மிக நெருக்கமாகவும் மற்றும் சுகாதாரமற்ற குடியிருப்புகளிலும் வாழ்கிறார்கள்.

தின வருமானத்தை இழந்திருக்கும் தெரு வியாபாரிகள், கூவி விற்பவர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுபவர்கள், வண்டி ஓட்டுநர்கள் போன்ற நகர்புறங்களிலிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் வறுமை மற்றும் மோசமான நோய்த்தொற்றினால் பாதிக்கப்படக்கூடிய அபாயத்தில் இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் வெடிப்பு தொடங்கியது முதல் சில 630,000 பங்களாதேஷ் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியிருப்பதால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5 சதவீதத்துக்கு மேல் (2019 இல் சுமார் 17 பில்லியன் அமெரிக்க டாலர்) இணைந்துள்ள வெளிநாட்டு செலவாணியின் வீழ்ச்சியும் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மத்திய கிழக்கு மற்றும் பிற பகுதிகளில் சுமார் 10 மில்லியன் பங்களாதேஷத்தினர் வேலை செய்கின்றனர்.

அதிகாரிகளின் சுகாதார முன்னெச்சரிக்கைகளை ஆயிரக்கணக்கான சாதாரண தொழிலாளர்கள் அறியாமலிருக்கிறார்கள் எனெனில் எந்த பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் அதிகாரிகள் செய்திருக்கவில்லை. நகர்ப்புற ஏழைகளுக்கு “சமூக இடைவெளி” செயல்முறை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகவே இருக்கிறது.

மார்ச் 8 இல் முதலாவதாக பாதிக்கப்பட்டவர் கண்டறியப்பட்டதிலிருந்து, பரிசோதனை கருவிகள், தீவிர சிகிச்சை பிரிவு வசதிகள் மற்றும் பாதுகாப்பு உடைகள் ஆகியவற்றிற்காக இரண்டு பில்லியன் டக்கா தொகையை அரசாங்கம் உறுதியளித்துள்ளது. ஆனால் மருத்துவமனைகளுக்கு இதுவரை இந்த உபகரணங்கள் வந்து சேரவில்லை.

சுகாதார மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு முறையாக பயிற்சி அல்லது வேண்டியதைக் கொடுக்கவில்லை. மூன்று மருத்துவர்கள் மற்றும் இரண்டு செவிலியர்கள் பாதிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டிருக்கிறார்கள் மேலும் 10 மருத்துவர்கள் மற்றும் 12 மருத்துவ பணியாளர்கள் தனிப் பாதுகாப்பின் கீழ் இருக்கிறார்கள். கொரோனா வைரஸால் அவர்கள் பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பார்ப்பதற்கு தயங்குகிறார்கள். சில்ஹெட், ராஜ்ஷாஹி மற்றும் குல்னா மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகளைக் கேட்டு வேலைநிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில், “சமூக இடைவெளி” முறையை அமுல்படுத்துவதற்கு என கூறி இராணுவத்தினரையும் மற்றும் காவல் துறையினரையும் அமர்த்தி இராணுவ மயமாக்கல் திட்டத்தினை அரசாங்கம் முன்னெடுக்கிறது. மார்ச் 25 அன்று, டினாபூரின் சணல் ஆலையில் ஆலையை மூடுவதற்கும் மற்றும் மூன்றூ வார சம்பள நிலுவைத் தொகையை வழங்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஐந்து தொழிலாளர்கள் காயமடைந்தனர் மற்றும் அருகிலிருந்த தேனிர்கடை வியாபாரி கொல்லப்பட்டார்.

கோக்ஸ் பஜாரில் அதிக நெருக்கமாகவும் சுகாதாரமற்ற முகாம்களில் வாழும் ஒரு மில்லியன் ரோகின்யா அகதிகள் மத்தியில் நோய்தொற்றக்கூடிய அச்சங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. அவர்கள் சுத்தமான தண்ணிர் மற்றும் மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளற்று இருக்கின்றனர். அவர்களுடைய நடமாட்ட சுதந்திரம் தடுக்கப்பட்டிருக்கிறது மேலும் தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தன்னார்வத் தொழிலாளர்களின் மீதான நுழைவுக் கட்டுப்பாடுகள் முகாம்களில் கொரோனாவைரஸ் தொற்றுநோய் அளவு பற்றிய அறிவைத் தடுத்துக்கொண்டிருக்கின்றன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளது. நாட்டின் மோசமாக இருக்கும் நெரிசலான சிறைகளில் சுமார் 89,000 பேரும் ஆபத்தில் இருக்கிறார்கள்.

உலகெங்கிலும் உள்ள அவர்களின் ஆளும் சகாக்களின் கடுமையான அலட்சியத்தை பிரதிபலிக்கும் விதமாக பங்களாதேஷ் அதிகாரிகள் COVID-19 உடல்களை பெருந்திரளாக அடக்கம் செய்வதற்கு டாக்காவிலுள்ள கில்கான்-டால்தலா மயானத்தை தயார்நிலையில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Loading