ஐக்கிய இராச்சிய தொழிற் கட்சியின் புதிய தலைவர் கெய்ர் ஸ்டார்மர் டோரி அரசாங்கத்துடனான தேசிய ஒற்றுமைக்கு பரிந்துரைக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தொழிற் கட்சிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சேர் கெய்ர் ஸ்டார்மரின் முதல் நடவடிக்கை, கொரோனா நச்சுயிரியல் நெருக்கடி நீளும் காலம் வரை போரிஸ் ஜோன்சனின் பழமைவாத அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படுவதற்கு ஒத்துக்கொண்டதாகும்.

ஜோன்சனின் காட்டுமிராண்டித்தனமான தொழிலாள வர்க்க எதிர்ப்பு அரசாங்கத்தை ஸ்டார்மர் கட்டித்தழுவியிருப்பது, உத்தியோகபூர்வ அரசியல் ஒரு பாரிய வலதுசாரி மாற்றம் எடுப்பதற்கு வெளியேறும் தலைவர் ஜெரமி கோர்பின் தலைமை தாங்கினார் என்பதை உறுதிசெய்கிறது, இது தொழிலாள வர்க்கத்திற்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

தொழிற் கட்சியின் வணிக சார்பு, சிக்கன நடவடிக்கைகள் சார்பு, போருக்கு ஆதரவான நிகழ்ச்சி நிரலை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்து கோர்பின் 2015 இல் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், பிளேயரிசவாதிகள் மீண்டும் கட்டுப்பாட்டை கொண்டனர் மற்றும் டோனி பிளேயர் கூட நகர்வுகளை அரசியல் தற்கொலை என்று கருதியிருப்பார். அனைத்து அடிப்படை பிரச்சினைகளிலும் கோர்பின் தொடர்ச்சியாக பின்வாங்கினார் –தொழிற் கட்சி ஆளும் உள்ளூர் நிர்வாக சபைகளை சிக்கன நடவடிக்கைகளை விதிக்க கோருவது, சிரியாவுக்கு எதிரான போரில் நிபந்தனை அற்ற வாக்கெடுப்பை அனுமதித்தது, நேட்டோ உறுப்பினர்களையும் மற்றும் அணு ஆயுதங்களை தக்கவைத்திருப்பதையும் பாதுகாத்தது– கோர்பின் தனது ஆதரவாளர்கள் மீது டோரிகளின் சூனிய வேட்டையை எதிர்ப்பதற்கு கோழைத்தனமாக மறுத்ததோடு சேர்ந்து எல்லாம் தோல்வியில் முடிந்தது.

தொழிற் கட்சியை பெரும் திரளான தொழிலாளர்கள் கூட்டமாக கைவிட்டனர். அவரை இரண்டு முறை தலைவராக தேர்ந்தெடுப்பதற்காக இணைந்த நூறாயிரக்கணக்கானவர்கள் கோபமாகவும், உரிமையற்றவர்களாகவும் கைவிடப்பட்டனர். இதன் விளைவாக கிட்டத்தட்ட 300,000 தகுதி வாய்ந்த வாக்காளர்கள் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவில் இருந்து தவிர்க்கப்பட்டனர் மற்றும் இப்பொழுது எப்போதும் இருந்ததைப் போலவே ஏகாதிபத்திய சார்புடைய ஒரு கட்சியை விட்டு தொழிலாளர்கள் வெளியேறுகிறார்கள்.

முதல் சுற்றில் 56 சதவிகித வாக்குகளைப் பெற்று ஸ்டார்மர் எளிதில் வென்றார், இடது வேட்பாளராக நியமிக்கப்பட்ட ரெபேக்கா லாங்-பெய்லி (Rebecca Long-Bailey) வெறும் 27.6 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஏஞ்சலா ரெய்னர் துணைத்தலைவராக இலகுவாக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதேநேரத்தில் தேசிய செயற்குழுவிற்காக போட்டியிட்ட மூன்று பதவிகளும் வலதுசாரிகளால் கைப்பற்றப்பட்டது.

சனிக்கிழமை முடிவு அறிவிப்புக்கு முன் உடனடியாக, ஜோன்சன் அனைத்து எதிர்கட்சித் தலைவர்களையும் அவரது இருப்பிடமான 10, டவுணிங் தெருவுக்கு கொரோனா நச்சுயிரி சம்பந்தமாக சிறு சந்திப்புக்கு அழைத்து, “தேசிய அவசரநிலை காலங்களில் கட்சி தலைவர்களாகிய நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

முன்பே தயாரிக்கப்பட்ட பதிலுடன் ஸ்டார்மர் தயாராக இருந்தார். அவரது பதிவுசெய்யப்பட்ட காணொளி வெற்றி அறிக்கை தெரிவித்தது, “ஒரு தேசமாக இதுபோன்று ஒன்றுசேரவேண்டும் என்ற எங்கள் விருப்பம் நீண்ட காலமாக செயலற்ற நிலையில் இருந்து வந்தது... எனது தலைமையின் கீழ் நாங்கள் அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமாக செயல்படுவோம், எதிர்க் கட்சியின் நலனுக்காக எதிர்ப்பதாக இருக்காது. கட்சியின் அரசியல் புள்ளிகளை எண்ணி அடுக்குவதாகவும் இருக்காது அல்லது சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் இருக்காது. ஆனால் அங்கே சரியான விஷயத்திற்காக செயல்படும்போது தைரியத்துடன் ஆதரிப்போம்”.

ஸ்டார்மரின் அடுத்த நகர்வு ஜோன்சனை அழைப்பதாக இருந்தது, ஒரு செய்தி தொடர்பாளர் “அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமாக பணியாற்ற ஸ்டார்மர் முன்வந்ததாக” விளக்கப்படுத்தியதுடன், மற்றும் “கொள்கை முடிவு நிறைவேற்று அதிகாரம் கொண்ட மந்திரிகளுக்கான ஆலோசனை சபையின் சிறு விளக்கங்கள் மற்றும் விவாதங்களுக்கான ஏற்பாடுகளை செய்ய” ஒப்புக்கொள்வதும் மற்றும் இப்படியாக முன்னோக்கி செல்கிறது.

டோரிகளுக்கு ஒலீவ் இலைகளை, அதாவது அமைதிக்கான கைகளை நீட்டும் போது, ஸ்டார்மர் நூற்றுக்கணக்கான இடது நோக்கி நகரும் தொழிற் கட்சி உறுப்பினர்களை யூத-எதிப்பு வாதிகள் என்று அடையாளப்படுத்தி சூனியவேட்டை முடுக்கி விடப்படும் என்று ஸ்டார்மர் தெளிவுபடுத்தினார். “யூத-எதிப்பு வாதம் எங்கள் கட்சிகுள் ஒரு கறையாக இருக்கிறது,” என்றும் மற்றும் அவர் “நான் இந்த விஷத்தை அதன் வேர்களில் இருந்து துண்டித்து எறிவேன்” என்று வலியுறுத்தினார்.

ரூபர்ட் மூர்டோக்கின் (Rupert Murdoch) சண்டே டைம்ஸ் கடந்த வாரம் ஸ்டார்மர், “தொழிற் கட்சித் தலைவரான சில வாரங்களுக்குள் நிழல் அமைச்சரவை மற்றும் கட்சி தலைமையகத்திலும் ஜெரெமி கோர்பினின் ஆதரவாளர்களை களையெடுப்பார்” என்று கணித்துள்ளது. இந்த வாரம், செய்தித்தாளின் துணை ஆசிரியர் சாரா பாக்ஸ்டர் (Sarah Baxter) ஸ்டார்மர், “மார்க்சிஸ்டுகள், தீவிர இடதுசாரிகள் மற்றும் கோர்பினின் பதாகையின் கீழ் திரண்ட யூத-எதிர்ப்பு வாதிகளை மூட்டை கட்டி அனுப்புவாரா இல்லையா” என்பதன் மூலம் ஆளும் வர்க்கத்தால் தீர்ப்பளிக்கப்படுவார் என்று எழுதினார்.

இப்பொழுது தொழிற் கட்சி எல்லா குறிக்கோள்களுடனும் தேசிய ஒற்றுமைக்கான ஒரு டோரிகளின் அரசாங்கத்தில் இருக்கிறது, ஆயினும் அது இன்னும் அதிகாரபூர்வமாக இல்லை என்றாலும், அவைகளால் கோரப்படும் எதுவானாலும் தொழிற் கட்சி செய்வதற்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால் COVID-19 நோயால் தொடர்ந்து அவதிப்படும் ஜோன்சன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாக நேற்றைய அறிவிப்பு ஒரு தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் மீதான விவாதங்களை அதிகரிக்கக்கூடும்.

கொரோனா நச்சுயிரியல் நோயை எதிர்த்துப் போராடுவது என்ற சாக்குப்போக்கின் கீழ் இப்போது தொடரும் அதன் ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவதை தொழிலாள வர்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற செய்தியை வலிமைப்படுத்த தொழிற் கட்சி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும். COVID-19 இல் பல வாரங்கள் கடந்தும் ஜோன்சனின் செயலற்ற நிலை மற்றும் தேசிய சுகாதார சேவையை (NHS) மற்றும் பராமரிப்பு சேவைகளை எரித்து கரியாக்கும் வெட்டுக்கள் ஆகியவை ஆயிரக்கணக்கான தேவையற்ற மரணங்களுக்கு வழிவகுக்கும் போதும், 370 பில்லியன் பவுண்டுகளை வங்கிகளுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும் ஒப்படைத்த அரசாங்கத்திற்கு எந்த சவாலும் இருக்கக்கூடாது என்று தொழிற் கட்சி வலியுறுத்தும்.

தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு வெட்கக்கேடான அரசியல் சதி, ஒரு “தேசிய ஒற்றுமை” மூலோபாயம் மூடிய கதவுகளுக்குப் பின்னாலும் மற்றும் ஊடகங்களிலும் பல வாரங்களாக விவாதிக்கப்பட்டுள்ளன.

டோரி சார்பு டெய்லி டெலிகிராப் (Daily Telegraph) மார்ச் 18 அன்று தலையங்கப்படுத்திய கருத்தாக்கத்தில், “எதிர்கட்சி உட்பட அனைவரும் வழிகாட்டுதலின் அதே நேர்கோட்டில் செல்ல வேண்டும். ஒருவேளை கூட்டு கட்சிக்கு போர்கால அமைச்சரவை தேவைப்படலாம்.” ஜோன்சனின் அரசாங்கத்தின் முன்னாள் மந்திரி ஜோர்ஜ் ஃப்ரீமன் (George Freeman) மார்ச் 24 அன்று கார்டியனிடம் (The Guardian) கூறினார், “இந்த நீண்ட தேசிய அவசரகால நிலையை கணிக்கும்போது.... வழமையான அரசியலை இடைநிறுத்த வேண்டியிருக்கிறது. தொழிற் கட்சி ஒரு விவேகமுள்ள தலைவரை பெறும்போது, கெய்ர் ஸ்டார்மர் (தேர்ந்தெடுக்கப்பட்டால்) COVID அமைச்சரவை, கோப்ரா (COBRA) தேசிய அவசரகால நிலையில் கூட்டப்படும் கூட்டம் மற்றும் டவுனிங் தெரு 10 இல் COVID சம்பந்தமாக புதிப்பித்த தகவல்களை வழங்குவதற்கும் ஸ்டார்மர் கட்டாயம் அழைக்கப்படவேண்டும்.”

தொழிற் கட்சி தலைவர் கிளெமெண்ட் அட்லீயின் (Clement Atlee) கீழ் வின்ஸ்டன் சர்ச்சிலுடனான (Winston Churchill) போர்க்கால கூட்டணியை பல்வேறு வகையான வக்கீல்கள் தேசிய ஒற்றுமைக்கான தங்களின் முன்னுதாரணமாக மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டுகிறார்கள். எவ்வாறாயினும், தொழிற் கட்சிக்கும் டோரிகளுக்கும் இடையிலான இன்றைய கூட்டு “கொரோனா நச்சுயிரி நோய் மீதான போர்” என்று சொல்லப்படுவதால் தூண்டப்படவில்லை, மாறாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு தொடர் போரை முன்னெடுப்பதற்காக தூண்டப்படுகிறது. ஸ்டார்மரின் முன்னணி ஆதரவாளர் ஒருவர் பைனான்சியல் டைம்ஸிடம் (financial times) கூறியது போல், “அட்லீயின் முன்மாதிரிகள் மோசமான ஒன்றல்ல… மரணித்த உடல்கள் தீவிரமான முறையில் குவியத்தொடங்கினால் மற்றும் முடங்குதல்கள் தொடரவேண்டிய நிலை இருந்தால், நாங்கள் சமூக கொந்தளிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்... ஜோன்சன், “ஏன் நீங்கள் உள்ளே வந்து எங்களுக்கு உதவக்கூடாது” என்று கூறலாம்.

COVID-19 கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் இவை எதுவுமே COVID-19 உடன் முடிவடையாது. ஏற்கனவே நூறாயிரக்கணக்கானோர் வேலை இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளனர். மேலும் மில்லியன் கணக்கானவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். மேற்கொண்டு, 2008 இல் நிகழ்ந்த பிணை எடுப்பு போலவே, கடந்த வாரங்களில் பெருநிறுவன உயரடுக்கிற்கு ஒப்படைக்கப்பட்ட பாரிய தொகைகள் சிக்கன நடவடிக்கைகளை அதிகரிப்பதன் மூலமும், தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் காட்டுமிராண்டி தனமான சுரண்டலை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதன் மூலமும் செலுத்தப்படும். COVID-19 நிகழ்வுகளில் ஒருமுறை எதிர்பார்க்கப்பட்ட எழுச்சி முடிந்தவுடன், தொடர்ச்சியான “தேசிய அவசரகால நிலை” அதிகரித்து வரும் சமூக அதிருப்தியை அடக்குவதற்கான அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கையையும் தொழிற் கட்சி ஆதரிக்கும்.

தொழிற் கட்சியின் “இடது” என்று கூறப்படுவோரால் எந்தவொரு எதிர்ப்பும் எதிர்வரும் காலங்களில் இருக்கப்போவதில்லை, அதன் மலட்டு தன்மை மற்றும் கோழைத்தனம் இத்தகைய சரியான உருவகத்தைக் கோர்பினில் கண்டனர். கோர்பினின் வாரிசாக சுயமாக அறிவித்த, லொங் பெய்லி (Long- Bailey), ஏற்கனவே ஒரு தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கத்தில் இணைய தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டினார். தொழிற் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஸ்கை டிவியிடம் (sky TV) தெரிவித்தார், “ஏற்கனவே நான் அரசாங்கத்துடன் கூடிவேலைசெய்து வருகிறைன் மற்றும் இந்த நெருக்கடியை கையாளுவதற்கு எனது ஆலோசனைகளையும் மற்றும் எனது சகாக்களின் ஆலோசனைகளையும் கேட்கும்படி அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் நாங்கள் முடிந்தவரை உதவியாக இருக்க விரும்புகிறோம்... நாங்கள் உதவிசெய்ய முயற்சிக்கிறோம் தலைவர் என்றால் நான் அதைத்தான் செய்வேன், மற்றும் நான் தலைவராக இலாலாவிட்டாலும், நான் புதிய தலைவரை ஆதரிக்கிறேன் என்றாலும் அந்த வேலையைத்தான் செய்வேன்”.

தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக தொழிலாளர் கட்சி இறந்துவிட்டது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இப்போது ஒரு புதிய பாதையில் இறங்க வேண்டும்: வர்க்கப் போராட்டம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம். வேலைகள், ஊதியங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்துவதை நியாயப்படுத்த பயன்படுத்தப்படும் தேசிய ஒற்றுமைக்கான அனைத்து முறையீடுகளையும் நிராகரிப்பதற்கு எங்களுடன் இணையுமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. தொழிலாளர் கட்டாயம் கோர வேண்டியது:

• வங்கிகள் மற்றும் கூட்டு பெரும் நிறுவனங்களின் பிணை எடுப்பதற்கு ஒரு முடிவு. தொற்றுநோய் பெரும் பரவலை எதிர்த்துப் போராடுவதக்ற்கும், தேசிய சுகாதார சேவையை (NHS) மற்றும் பராமரிப்புத் துறைகளுக்கு அவசியமான வளங்களை வழங்குவதற்கும் மற்றும் உழைக்கும் மக்களின் வேலைகள் மற்றும் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதையும் கட்டாய நோக்காகக் கொண்டு பொதுப் பணம் செலுத்தப்பட வேண்டும்.

• மிகப்பெரிய செல்வந்தர்களின் செல்வத்தை பறிமுதல் செய்தல். இன்றியமையாத சமூக பாதுகாப்புகளுக்கு நிதியளிக்க இழப்பீடு இல்லாமல் வங்கிகளையும் கூட்டு பெருநிறுவனங்களையும் பொது உடைமையாக மாற்றப்படவேண்டும்.

• வேலை மற்றும் ஊதியத்தின் மீது வெட்டுக்கள் வேண்டாம். தொற்று நோய் பெரும்பரவல் காலம் நீடிக்கும் வரை சொத்து அடமானங்கள், வாடகைகள் மற்றும் அத்தியாவசிய பயன்பாட்டுக் கட்டணங்களை தடைசெய்ய வேண்டும். உற்பத்தியை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்.

• அரசாங்கத்தின் மற்றும் முதலாளிகளின் கருவிகளாக இருக்கும் தொழிற்சங்கங்கள் மீது நம்பிக்கை வைக்காதே. ஒவ்வொரு பணியிடங்களிலும் குடியிருப்பு சுற்றுபுறங்களிலும் சாமானிய உழைக்கும் மக்களின் நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும்.

COVID-19, புவி வெப்பமடைதல், போர் மற்றும் பிற உயிருக்கு நிலவும் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவது, விஞ்ஞானிகள் மற்றும் பிற வல்லுனர்கள் உட்பட, உலக மக்களுக்கு இடையே ஆழ்ந்த மற்றும் திட்டமிட்ட உடனுழைப்பை வேண்டிநிற்கிறது. ஆனால் இதன் பொருள், முதலாளித்துவ வர்கத்திடமிருந்து தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் அதிகாரத்தை உலகளாவிய புரட்சியினுடாக மாற்றுவதன் மூலம் சமூக தேவைக்கு மாறாக தனியார் இலாபத்திற்கான உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட பகைமையுள்ள தேசிய அரசுகளாக உலகம் பிரிந்து கிடப்பதை முடிவுகட்டுவதாகும்.

Loading