புத்திஜீவித, கலாச்சார வாழ்விற்கு கொரோனா வைரஸ் பேரழிவு எதனை அர்த்தப்படுத்துகின்றது

David Walsh
7 April 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங காணலாம்

தற்போதைய இந்த உலகளாவிய மருத்துவ, பொருளாதார பேரிடர் முன்நிகழ்ந்திராததாகும்.

இதன் குறுகிய கால விளைவு என்னவாக இருந்தாலும், சமூக வாழ்க்கையும் நனவும் ஒருபோதும் அவற்றின் முந்தைய நிலைகளுக்குத் திரும்ப போவதில்லை. ஒரு திரும்ப முடியாத வரம்பு கடந்தாகிவிட்டது. தற்போதுள்ள ஒழுங்கு, பல்லாயிரக் கணக்கானோரின் பார்வையில், இனிமேல் சட்டவிரோதமாகவும், அவர்களின் தொடர்ந்து உயிர்வாழ்வுக்கான ஓர் உடனடி அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படும்.

பல அரசியல் பிரச்சினைகள் பல குழப்பங்கள் தீர்க்க வேண்டியதாக உள்ளன என்றாலும், மக்கள் தொகையின் பரந்த அடுக்குகளின் நனவு வேகமாக இடதுக்கு மாறி வருகிறது.

ஆனால், தற்போதைய நெருக்கடிக்கு முந்தைய மாதங்கள் மற்றும் ஆண்டுகளில், கல்வித்துறையிலும் கலைத்துறை வட்டாரங்களிலும் கூட, நிரம்பியிருந்த உத்தியோகபூர்வ "தீவிர கொள்கை," அதிகரித்தளவில் இனம், பாலினம் மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட பைத்தியக்காரத்தனமான சுயநல அரசியலாக இருந்தன. எண்ணற்ற கட்டுரைகள், நூல்கள் மற்றும் பல்வேறு வகையான அறிவிப்புகளும், சான்றாக “வெள்ளையின முன்னுரிமை", அடிமைத்தனத்தை இல்லாதொழிப்பது, #MeToo பிரச்சாரம் அல்லது பாலியல் துன்புறுத்தல்—அல்லது, இவற்றுடன் சேர்த்து, தலைச்சிறந்த அமெரிக்க உள்நாட்டு திட்டத்தில் அச்சுறுத்தும் "ரஷ்ய தலையீடு" என்பவை தான் "நம் காலத்திய தீர்க்கமான பிரச்சினை" என்பதாக பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தின.

சமீபத்திய மாதங்களில் இத்தகைய வட்டாரங்களில் மிக முக்கிய பிரச்சினைகள், அல்லது ஏறக்குறைய இவை மட்டுமே அவற்றின் முக்கிய பிரச்சினைகள் என்றும் ஒருவர் கூறலாம், அமெரிக்கப் புரட்சியை "அடிமை உடமையாளர்கள் கிளர்ச்சி" (slaveholders revolt) என்று அவதூறு செய்வது, ஆபிரகாம் லிங்கனை ஒரு "இனவெறியர்" என்று அவதூறு செய்வது, ரோமன் போலன்ஸ்கி, வூடி அலென் (Woody Allen) மற்றும் (இப்போது கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள) பிளாசிடோ டோமிங்கோ (Plácido Domingo) மீது கரும்புள்ளி குத்துவது மற்றும் சில குறிப்பிட்ட திரைப்பட தயாரிப்பாளரான ஹார்வி வைன்ஸ்டீனைக் ஆயுள் தண்டனை பெற வைப்பது ஆகியவற்றைச் சுற்றியே சுழன்றுள்ளன.

"தனிச்சலுகை பெற்ற" வெள்ளையின ஆண்கள், பாலியல் துஷ்பிரயோகிகள் மற்றும் புட்டினின் முகவர்கள் இல்லாமல் இருந்திருந்தால், அமெரிக்கா மற்றொரு சொர்க்க பூமியாக (Garden of Eden) இருந்திருக்குமென நமக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த அழுகிய "தார்மீக" சிலுவைப் போரில் சர்வதேச போலி இடதுகள் உற்சாகமாக இணைந்து கொண்டனர். International Viewpoint இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்ட பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் (NPA) ஒரு பிரதிநிதியான Manon Boltansky இன் ஒரு கட்டுரை, நவீன பிரெஞ்சு வரலாற்றின் தீர்க்கரமான நிகழ்உகளில் ஒன்றான ட்ரேஃபுஸ் விவகாரத்தை (Dreyfus affair) கையாண்ட ஒரு திரைப்படமான போலன்ஸ்கியின் J’accuse (An Officer and A Spy) படத்தை ஒடுக்குவதற்கு அதன் முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது. அக்கட்டுரையில் Boltansky ஒவ்வொரு இடத்திலும் ஓர் உயர் அரசு அதிகாரி போல அல்லது ஏதோவொரு வலதுசாரி, மாகாண சட்டமன்ற உறுப்பினரைப் போன்ற தொனியில், "போலன்ஸ்கி எந்த விலக்கீட்டுரிமையுடன் அவரின் சமீபத்திய படமான J’accuse இக்கு நிதியளிக்க, இயக்க, ஒளிபரப்புவதைச் செய்ய முடிந்ததோ" அதை சீற்றத்துடன் கண்டித்தார். பிரெஞ்சு அரசாங்கத்தின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் போலன்ஸ்கியின் படைப்பைத் திரையிடுவதைத் தடுக்க அல்லது சீர்குலைப்பதற்கான முயற்சி, “கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் அல்ல” என்று அப்பெண்மணி கணிசமான குதர்க்கவாதத்துடன் வாதிட்டார். யதார்த்தத்தில், இத்தகைய நபர்கள், "கற்பழிப்பு கலாச்சாரம்" என்று கூறப்படுவதை எதிர்க்கும் பதாகையில் சுற்றப்பட்டிருக்கும் வரையில், பகிரங்கமான சர்வாதிகார நடவடிக்கைகள் உட்பட எதையும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

J'accuse தயாரிப்பின்போதுபோலன்ஸ்கி

இந்த தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட புதிய சூழ்நிலைகள், அத்தகைய கண்ணோட்டங்களையும் அவற்றுக்கு வக்காலத்துவாங்கும் சக்திகளையும் — இன்னமும் அதற்கு வக்காலத்துவாங்கி கொண்டிருப்பவர்களையும் பெரும் நிம்மதிக்குள் தள்ளியுள்ளன.

ஆண், பெண், வெள்ளை, கறுப்பு, இலத்தீன் மற்றும் புலம்பெயர்ந்தோர் என ஒவ்வொரு பகுதியினரையும் பாதிக்கும் தற்போதைய விரிவான, வாழ்க்கை மற்றும் இறப்பு நெருக்கடிக்கு இந்த சமூகக் கூறுகளின் அற்பமான கவலைகள் என்னவாறான சாத்தியமான தொடர்பை கொண்டிருக்கின்றன? வீட்டிலேயே தங்கி, தங்கள் குடும்பங்களுக்கு வாடகை மற்றும் உணவுக்காக பணம் செலுத்தவோ அல்லது வேலைக்குத் திரும்பவோ அல்லது ஒரு கொடிய நோயை பரப்புவதற்கான அல்லது எதிர்கொள்ளும் திறனை எதிர்கொள்ளவோ பணம் இல்லாத அபாயத்தை எதிர்நோக்குவது என்பன "விரும்பத்தக்கதா" என்பதை இப்போது மில்லியன் கணக்கானவர்கள் தீர்மானிக்க வேண்டியுள்ளது. இந்த பாலியல் துன்புறுத்தல் வேட்டையாடலின் குட்டி முதலாளித்துவ ஆதரவாளர்கள் எவரும், நியூயோர்க்டைம்ஸின் 1619 வரலாற்று பொய்மைப்படுத்தும் திட்டம், 2016 இலும் மற்றும் ஒவ்வொரு தேர்தலிலும் ரஷ்ய தலையீடு பற்றிய முட்டாள்தனம், பொதுவாக சுய-வெறி மற்றும் சுய-பரிதாபம் போன்றவை தற்போதைய நெருக்கடிக்கு அவர்களின் சிறிதும் தயாராக இல்லாதநிலையை காட்டுகின்றன.

Black troops in Civil War

இந்த செயல்முறை 2017 இலோ அல்லது 2012 இலோ வெறுமனே தொடங்கவில்லை. உண்மையில், பல தசாப்தங்களாக, பெருகிய முறையில் சுயநல மற்றும் மனநிறைவான மனநிலைகள் ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறை மற்றும் உலகளாவிய கல்வியாளர்களின் உயர்மட்டங்களில் பூத்துக்குலுங்குகின்றன.

எப்போதும் அதிகரித்து வரும் பங்குச் சந்தை மற்றும் அதீதசெல்வந்தர்கள் தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்த சுரண்டல் மற்றும் வறுமையில் வேரூன்றியுள்ள ஒரு சிறிய செல்வத்தை தாங்கள் வாடகைக்கு அமர்த்தியவர்களுக்கு பரப்புவதன் அடிப்படையில், இந்த புதிதாக வசதிபடைத்த அந்த அடுக்குகள் பணிவுடன் இந்த அமைப்பை நம்பவும் மற்றும் அதற்கு அவர்களின் விசுவாசத்தை அடகு வைக்கவும் முன்வருகின்றனர்.

பணம் மற்றும் அந்தஸ்தில் மெய் மறந்து, தெள்ளத்தெளிவாக வரலாற்றில் ஜெயிக்கும் தரப்பில் இருப்பதாக சிலிர்ப்படைந்து, குறுகிய பார்வை கொண்ட பல்வேறு பண்டிதர்களும், மூன்றாம் மற்றும் நான்காம் தர கலைஞர்களும் மற்றும் நல்ல ஊதியம் பெற்ற ஊழல்பீடித்த பேராசிரியர்களும் நீண்ட காலத்திற்கு முன்னரே, பல விடயங்களில் (Bertolt Brecht இன் வார்த்தைகளில் கூறுவதானால்) “மூளையைக் கழற்றி காயவிட்டு” நிதிய களியாட்டத்தில் இணைந்தனர்.

அவர்களது பார்வையை கணிசமாக மட்டுப்படுத்த ஊக்குவித்த சுயநலமானது மற்றும் அவர்களின் சுய-ஏமாற்றப்பட்ட நிலையில், கடுமையான முரண்பாடுகளிலிருந்து விடுபட்டதாகக் கருதப்படும் ஒரு அமைப்பில் வளரும் கொரொனா வைரஸ் நெருக்கடியின் பரிமாணங்களின் பேரழிவை அவர்களால் யாருமே தொலைதூரத்தில் இருந்தும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

ரோசா லுக்செம்பேர்க்

சோசலிசத்திற்கு மாறுவதற்கான சோசலிச கோட்பாட்டின் தொடக்கப்புள்ளி எப்போதும் "ஒரு பொதுவான பேரழிவு நெருக்கடியாக" இருந்துள்ளது என்று லுக்செம்பேர்க் ஒருமுறை விளக்கினார். இந்த கண்ணோட்டத்தின் மையக் கோட்பாடு, "முதலாளித்துவம், அதன் சொந்த உள்முரண்பாடுகளின் விளைவாக, சமநிலைப்படுத்த முடியாத போதும், அது சாத்தியமற்றது என வரும்போதும் ஒரு புள்ளியை நோக்கி நகர்கிறது என்பதை உறுதிப்படுத்துவதை" உள்ளடக்கியுள்ளது என்றவர் எழுதினார். “ஒரு பேரழிவுகரமான பொதுவான ஒரு பொருளாதார நெருக்கடியின் வடிவில் அந்த சந்தர்ப்பத்தில் கூர்ந்துணர வேண்டியதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஆனால் அடிப்படை கருத்தை கவனத்தில் எடுக்கையில் அது இரண்டாம் தர முக்கியத்துவத்தைப் பெறுகிறது.”

ஒரு சில வாரங்களில், முதலாளித்துவம் மனிதகுலத்தின் பெருந்திரளான மக்களுக்கு "சமநிலையற்றதும்" "சாத்தியமற்றதுமாக" ஆகிவிட்டது.

இந்த புதிய சூழ்நிலையில், "வெள்ளையினத்தவரின் தனிச்சலுகை" அல்லது "ஆண்களின் தனிச்சலுகை" மீதான மிகச் சிறிய நம்பகத்தன்மை குறித்தும் கூட யார் தான் பேச முடியும்?

வயது மற்றும் சிக்கலான உடல்நல நிலைமைகள் காரணிகளாக இருந்தாலும், கொரொனா வைரஸ் ஓர் இனம் அல்லது ஓர் இனக்குழுவிற்கு எதிராக மற்றொரு இனம் அல்லது இனக்குழுவை தண்டிக்கிறது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. சீன, பிரெஞ்சு மற்றும் ஸ்பானிய ஆண்கள் மற்றும் பெண்கள், அவர்களுடன் இத்தாலியர்கள், ஈரானியர்கள், அமெரிக்கர்கள், ஜேர்மனியர்கள், கொரியர்கள் மற்றும் சுவீடர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பரிதாபகரமான மருத்துவத்துறையைக் கொண்ட இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், நைஜீரியா, செனகல், கென்யா, மெக்ஸிக்கோ மற்றும் வேறு இடங்களிலும் அந்த வைரஸ் தீவிரமாக படையெடுக்கும் போது அது என்ன செய்யும் என்பது அண்மித்து கற்பனையும் செய்யவியலாது.

இந்த நோய் பெண்களை விட அதிகமான ஆண்களை தாக்கினால் இது “பெண்களுக்கான தனிச்சலுகை” என்று வாதிட முடியாது. வர்க்க சமூகத்தில் எப்போதுமே நடப்பதைப் போல, ஏழைகள், அதிக உழைப்பாளிகள், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு இனக்குழுவும் பாலினமும் மிக மோசமான நிலைக்கு ஆளாக நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.

நிச்சயமாக, இனவாதம் மற்றும் பாலின அரசியலை ஊக்குவிக்கும் குரல்கள் அமைதியாகி விடாது.

கொரொனா வைரஸ் பணிநீக்கங்கள் கறுப்பின மற்றும் இலத்தீன் தொழிலாளர்களை பொருத்தமற்ற விகிதத்தில் பாதிக்கின்றன: ‘இது ஏறத்தாழ அணுவாயுத காலம் வருவதைப் போல் உள்ளது,’” என்ற மார்ச் 24 USA Today கட்டுரை, தொழிலாள வர்க்கத்தில் பிளவுகளை உருவாக்குவதையும் மற்றும் வகுப்புவாத சுயநலத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேரிலாந்தின் ஒரு சிறிய அச்சகத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு கறுப்பின தனியொரு தாயின் விடயத்தைச் சுட்டிக்காட்டும் அந்த அறிக்கை, அப்பெண்மணி “சிறு வணிகங்கள், உணவகங்கள், விடுதிகள், உல்லாச மதுக்கூடங்கள் மற்றும் உற்பத்தி ஆலைகளில் இத்தொற்றுநோயினால் அண்மைய நாட்களில் வேலையிழந்த ஆயிரக்கணக்கான பணியாளர்களில் ஒருவராவார். வெவ்வேறு நிற அடையாளம் கொண்ட அந்த தொழிலாளர்கள் சேவைக் கட்டணங்களைச் செலுத்தவும் தங்கள் குடும்பங்களுக்கு உணவு வழங்கவும் முடியாமல் கீழ்நோக்கிய சுழற்சியில் தள்ளப்படுவார்களோ என்று மனித உரிமை குழுக்கள் கவலைப்படுகின்றனர்,” என்று வாதிடுகிறது.

மீதமுள்ள மக்களின் கதி என்ன? அவர்கள் அனைவரும் நரகத்திற்கு செல்ல வேண்டுமா? தேசிய நகர்ப்புற அமைப்பின் ஓர் அதிகாரியின் கருத்தை மேற்கோளிட்டு USA Today குறிப்பிடுகையில், "பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது, எப்போதுமே வெவ்வேறு நிறத்தவருக்குச் சுமை வெவ்வேறு விதமாக இருக்கும்,” என்றது. தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவும் பாதிக்கப்படும், ஒவ்வொரு பிரிவும் போராட்டத்தினுள் நகர்த்தப்படும்.

உண்மையில், சமீபத்திய ஆண்டுகளில் பல முனைகளிலும் மிகக் கூர்மையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ள மக்கள்தொகையின் ஒரு பகுதி வெள்ளையின ஆண் தொழிலாள வர்க்கமாகும். 2015 முதல் 2017 வரை அமெரிக்காவில் முன்னொருபோதும் இல்லாதளவில் ஆயுட்காலம் குறைந்திருப்பதை விவரிக்கும், அமெரிக்க மருத்துவ அமைப்பு ஆய்விதழின் (JAMA) சமீபத்திய ஆய்வு ஒன்று, அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் வெள்ளையின தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுகின்றன என்பதுடன் சேர்ந்து, உயிரிழப்பின் அதிகரிப்பு ஒவ்வொரு இன மற்றும் வம்சாவழி தொழிலாளர்களையும் பாதித்துள்ளதைக் கண்டறிந்தது. குறிப்பாக வெள்ளையின ஆண்களிடையே ஓபியோய்ட் போதைப் பொருள்களின் அதிக பயன்பாடும் தற்கொலையும் கொடுமையாக உள்ளது.

Philadelphia Inquirer ல் சொலமன் ஜோன்ஸ் எழுதிய ஒரு முட்டாத்தனமான மற்றும் பிற்போக்கான கட்டுரை அதன் தலைப்பிலேயே, "கொரோனா வைரஸ் வெள்ளையினத்தவரின் தனிச்சலுகைகளைச் சீரழிப்பதற்கு மத்தியில் வியாபாரங்களை மூடுவதற்கான முனைவு" என்று வலியுறுத்தியது. வெற்றிகரமான மற்றும் ஆர்வமுள்ள ஆபிரிக்க-அமெரிக்க தொழில்முனைவோருக்காகப் பேசும் ஜோன்ஸ், "ஒவ்வொரு நிறத்தவருக்குச் சொந்தமான ஒவ்வொரு வியாபாரமும் இன்றியமையாததே,” என்று வாதிடுகிறார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “வெள்ளையின வணிக உரிமையாளர்களும் தொழிலாளர்களும் பொருளாதார இழப்புகளால் பாதிக்கப்படுகையில், ஒவ்வொருவரும் இந்த புயலைச் சமாளித்து, ஒட்டுமொத்தமாக வெளியில் வர முடியும் என்பது போல நமது தலைவர்கள் நடந்து கொள்வது, கருப்பின சமூகங்களிடம் இல்லாத சில பாதுகாப்பு வலையம் ஏதோ வெள்ளையினத்தவரிடம் இருப்பதைப் போல பிரதிபலிக்கிறது,” என்றார்.

கடந்து சென்றுவிட முடியாதவாறு, Atlantic இன் ஹெலன் லூயிஸ் அவர் வாசகர்களுக்குத் தெரிவிக்கையில், "கொரோனா வைரஸ் பெண்ணியத்திற்கான பேரழிவு" என்றும், "இந்த தொற்றுநோய்க்கு சத்தமில்லாமல் பெண்களின் சுதந்திரம் பலியாகிவிடும்" என்றும் குறிப்பிடுகிறார். சுமார் 25,000 பேர் உயிரிழந்துள்ளனர் ஓர் அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனாலும் கூட லூயிஸ் பிரதானமாக அவரின் நடுத்தர வர்க்க வாழ்க்கை முறை மோசமாக பாதிக்கப்படுமே என்று கவலைப்படுவதாக தெரிகிறது. இத்தகைய பேரிடர்களுக்கு "பாலினரீதியில் நடுநிலை கொள்ளும் அணுகுமுறையை" நிராகரித்து, ஏராளமானவர்களின் இறப்பதைத் தடுப்பதற்கான சமூகத்தின் இயலாமையை முழுமையாக ஏற்றுக்கொண்டு, லூயிஸ் தொடர்ந்து கூறுகையில், “இப்போது கற்பனை செய்வதற்கே பயங்கரமாக இருக்கும், அடுத்தடுத்த தொற்றுநோய்களும் தவிர்க்க முடியாதவையாகும், பாலின பிரச்சினை ஓரம் நிறுத்த வேண்டிய பிரச்சினை என்று வாதிடுவதற்கான பேரார்வம், நிஜமான நெருக்கடியிலிருந்து திசைதிருப்பது, எதிர்க்கப்பட வேண்டும்,” என்கிறார்.

The Hill இணைய தளத்தில் Madeleine Simon இன் “பெண்களும் கொரோனா வைரஸின் மறைக்கப்பட்ட சுமையும்” என்பது, “பெண்கள் தான் COVID-19 தொற்றுநோயின் தாக்கத்தை சுமக்கிறார்கள்” என்று வாதிடுகிறது. "பெண்களை விட அதிகமான ஆண்களே கொரோனா வைரஸால் இறந்து கொண்டிருக்கிறார்கள்,” என்பதை ஆதாரங்கள் காட்டுகின்றன என்றாலும் கோவிட்-19 பெண்கள் மீது குறிப்பிட்ட துணைவிளைவுகளைக் கொண்டுள்ளது" என்று Simon எழுதுகிறார். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் சுமைகளைச் சுட்டிக்காட்டிய பின்னர், அவர்களில் சுமார் 850 மில்லியன் பேர் உலகெங்கிலும் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருக்கிறார்களாம், மருத்துவச் சிகிச்சை வழங்குதல் கேள்விக்கிடமின்றி பொருத்தமற்ற விகிதாசாரத்தில் பெண்கள் மீதே விழுகிறது, இந்த உண்மையை அந்த பத்திரிகையாளரால் வெளியிட முடியாமல் இருக்க முடியவில்லையாம்.

பெண்கள், "உலகளாவிய பெரிதும் சுகாதார உரையாடல்களிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்" மற்றும் "முடிவெடுக்கும் துறைகளிலும் குறைவாகவே பிரதிநிதித்துவம்" செய்யப்படுகிறார்கள் என்றும், “… அமெரிக்க கொரொனா வைரஸ் பணிக்குழுவில் Seema Verma மற்றும் Deborah Brix உம் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றாலும், “அக்குழுவில் உள்ள பிரதிநிதிகளில் வெறும் 10 சதவீதம் மட்டுமே பெண்கள்” என்றும் அப்பெண்மணி எழுதுகிறார். வீட்டு பொறுப்புகள் மற்றும் ஏனைய பொறுப்புகளைக் கொண்டு சுமையேற்றப்படும் உழைக்கும் பெண்களைக் குறித்த அருமையான வார்த்தைகள், ஏற்கனவே தொழில் வாழ்வில் செல்வ செழிப்பாக உள்ள பெண்கள் மீதான அதிக அக்கறைகள், அதிக பதவிகள், அதிக வருவாய், அதிக அதிகாரத்திற்கு வழிவிட்டு விடுகின்றன.

சில குழுக்களின் பிற்போக்குத்தனம் முன்னெப்போதையும் விட தன்னையே மையமிட்டிருக்கலாம் என்றாலும் அது மட்டுமே ஒரே பிற்போக்குத்தனமாக இருக்காது.

கொரொனா வைரஸ் நெருக்கடி புத்திஜீவிதமான மற்றும் கலைத்துறை சார்ந்த சக்திகள் உட்பட பிற சக்திகளையும் கட்டவிழ்த்துவிடும்.

Terrence McNally in 2020 (Photo credit: Al Pereira)

இந்த நோய் மற்ற துறைகளில் இருப்பதைப் போல கலை உலகில் உடல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாடக ஆசிரியர் Terrence McNally, நடிகர் Mark Blum, இசைக்கலைஞர்கள் Manu Dibango, Mike Longo, Freddy Rodriguez Sr., Marcelo Peralta ஆகியோரின் சோகமான மரணங்கள் Plácido Domingo, Jackson Browne, Idris Elba, Rita Wilson, Tom Hanks, David Bryan, Ed O’Brien, Debi Mazar, Rachel Matthews, Olga Kurylenko, Kristofer Hivju, Daniel Dae Kim மற்றும் ஏனைய கலைஞர்கள் மற்றும் இசைக் கலைஞர்களில் வைரஸ் தொற்றுதலானது எந்தளவிற்கு பரவும் என்பதையும் அதனுள் அடங்கியுள்ள தீங்குமிக்க சக்தியையும் சுட்டிக்காட்டுகின்றது.

தற்போதைய பணிநிறுத்தத்தின் பொருளாதார விளைவு, பல கலைஞர்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும். அவர்களில் பெரும்பாலோர் சிறந்த நேரங்களில் ஆபத்தான வாழ்க்கையை நடத்துகிறார்கள். ஆனால் மிகவும் நீடித்த விளைவு நிதிரீதியாக இல்லாது, கருத்தியல் மற்றும் புத்திஜீவிதமானதாக இருக்கும்.

முதலாளித்துவத்தின் தற்போதைய மற்றும் மீளமுடியாத மதிப்பிழப்பு சமகால திரைப்படம், இசை, ஓவியம், இலக்கியம் மற்றும் நாடகங்களின் மேலும் வளர்ச்சியை ஆழமாக பாதிக்கும். எந்தவொரு விலையிலும் இலாபத்திற்கான நிர்வாணமான உந்துதல் கலைஞர்களிடையே வெறுப்பையும் திகிலையும் தூண்டும், கண்களைக் கொண்ட அனைவருக்கும் அதன் அடிப்படை காட்டுமிராண்டித்தனம் வெளிப்படும்.

சிறந்த கலைஞர்களின் கவனம் அவர்கள் வாழும் அமைப்பின் சமூக மற்றும் பொருளாதார முரண்பாடுகளை இன்னும் விமர்சன ரீதியாக ஆராயும் திசையை நோக்கி செல்லும் என்று முன்கணிப்பது பாதுகாப்பானதாகத் தெரிகிறது. இவ்வமைப்பு இப்போது அவர்களுக்கும் மற்ற அனைவருக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. கலைஞர்கள், மற்ற மக்களுடன் சேர்ந்து: இது எப்படி சாத்தியமானது? யார் பொறுப்பு? என்ன செய்ய முடியும்? என்பதை தெரிந்து கொள்ள விரும்புவார்கள்.

ஒரு அழகியல் அணுகுமுறையாக யதார்த்தவாதத்தில் புதுப்பிக்கப்பட்ட ஆர்வம், வாழ்க்கையுடன் மிகவும் தீவிரமான, உறுதியான ஈடுபாடு மற்றும் குறிப்பாக வெகுஜன மக்களின் வாழ்க்கை மற்றும் தலைவிதியுடன், தற்போதுள்ள நிலைமைக்கு மேலும் மேலும் வெளிப்படையான அரசியல் எதிர்ப்போடு இணைக்கப்பட்டிருப்பதே அதன் விளைவாக கட்டாயம் இருக்க வேண்டும்.

சமுதாயத்தின் மீது அதிகரித்துவரும் ஆக்கம்மிக்க அழுத்தத்துடன் ஒரு அதிகரித்துவரும் அழுத்தம் பெருகி வருகிறது. பலர் குழப்பமடைந்துள்ளனர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், தங்கள் குரலையோ அல்லது காலடிகளையோ கண்டுபிடிக்க முடியவில்லை அல்லது அனுமதிக்கப்படவில்லை. அல்லது தங்களை மற்றும் அவர்களின் ஆழ்ந்த எண்ணங்களையும் உணர்வுகளையும் அறியச் செய்ய போதுமான நம்பிக்கை இல்லாதுள்ளது. எல்லாமே ஒரே இரவில் மாறாது, ஆனால் கம்யூனிச எதிர்ப்பு உள்ளடங்கலாக ஜனநாயகக் கட்சியில் உள்ள நப்பாசைகள் போன்ற தற்போதைய தப்பெண்ணங்களின் அழிவு எவ்வாறாயினும் நடந்தே தீரும். கலைஞர்களும் மற்றவர்களும் சமுதாயத்தினை முழுமையாகவும் மற்றும் தீவிரமாகவும் மறுகட்டமைப்பதனை நோக்கி தங்களை நோக்குநிலைப்படுத்திக்கொள்வதன் மூலம் தங்களுக்கான வழியைக் கண்டுபிடிப்பார்கள்.