ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மற்றும் ஈரானில் தொழிலாளர் அதிகாரத்திற்குமான போராட்டம் நூலின் துருக்கிய பதிப்பின் முன்னுரை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மற்றும் ஈரானில் தொழிலாளர் அதிகாரத்திற்குமான போராட்டம் நூலின் துருக்கிய பதிப்பின் முன்னுரை என்ற துருக்கிய மொழி பதிப்பிற்கான முன்னுரையை இங்கே கீழே வெளியிடுகிறோம். துருக்கியில் மெஹ்ரிங் Yayıncılık (Mehring Books) வெளியிட்டுள்ள ஈரானிய இஸ்லாமிய சோசலிசத்தின்ஆதரவாளருக்கான பதிலாகும். இந்த முன்னுரையை அப்பிரசுரத்தின் ஆசிரியரான, சோசலிச சமத்துவக் கட்சியின் (கனடா) தேசிய செயலாளர் கீத் ஜோன்ஸ் எழுதியுள்ளார்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மற்றும் ஈரானில் தொழிலாளர்களின் அதிகாரத்திற்குமான போராட்டம்: “ஈரானிய இஸ்லாமிய சோசலிசத்தின்ஆதரவாளருக்கு பதில் என்ற துருக்கிய மொழி பதிப்பை மெஹ்ரிங் Yayıncılık வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

உலக சோசலிச வலைத் தளத்தால் முதலில் வெளியிடப்பட்ட எனது கட்டுரை, பல தசாப்தங்களாக அமெரிக்க ஏகாதிபத்திய சூழ்ச்சி மற்றும் ஆக்கிரமிப்பின் இலக்காக உள்ளதும் மற்றும் 2018 முதல் தொழிலாள வர்க்கத்தின் பாரிய ஆர்ப்பாட்டங்களிலும் தொடர்ச்சியான வெடிப்புகளால் எடுத்துக்காட்டப்பட்ட ஒரு நாட்டில் ஒரு சுயாதீனமான வர்க்கப் போராட்டத்தின் பாதையை கண்டுபிடிக்க முயலும் தொழிலாள வர்க்கத்திற்கான சோசலிச மூலோபாயத்தின் முக்கிய பிரச்சினைகளை ஆய்வு செய்கின்றன.

ஈரானின் வரலாறு மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தின் அடிப்படையில், ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்பதற்கான ஒரு சாத்தியமான மூலோபாயம் தொழிலாள வர்க்கத்தினால் மட்டுமே நிறுவப்பட முடியும் என்பதை இது நிரூபிக்கிறது. மேலும் ஈரானிய முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் எதிராக ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அதன் அணிதிரட்டல் தேவைப்படுகிறது.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மற்றும் ஈரானில் தொழிலாளர்களின் அதிகாரத்திற்குமான போராட்டம் என்பது 2018 முதல் வாரங்களில் ஈரான் பத்திரிகை தொலைக் காட்சி பத்திரிகையாளர் ராமின் மசாஹேரி உலக சோசலிச வலைத் தளத்தினால் 2017 இல் ஆரம்பித்து 2018 இல் முடிவடைந்த தொழிலாள வர்க்கத்தின் ஆர்ப்பாட்டங்களை பற்றி எழுதப்பட்டவற்றை விமர்சித்ததற்கு பதிலாக எழுதப்பட்டது. இது அரசியல் ரீதியாக பூர்த்தியடையாத ஒன்றாக இருந்தாலும், உழைக்கும் மக்களின் நீண்டகாலமாக சமூக, ஜனநாயக அபிலாஷைகளுக்கு குரல்கொடுப்பதாகவும் மற்றும் அவர்கள் இஸ்லாமிய குடியரசால் ஒடுக்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டு அப்போராட்டங்களை வரவேற்றதற்காக மசஹேரி WSWS ஐ கண்டித்தார். அத்துடன் தற்போதைய ஈரானிய தலைமையானது ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு தலைமை கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மசாஹேரிக்கு நான் அளித்த பதிலில் கூறப்பட்டதை நான் இங்கு மீண்டும் கூறப்போவதில்லை, புரட்சிகர சோசலிச இயக்கத்தின் நிலைப்பாட்டை விரிவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக WSWS தனது விமர்சனங்களை வரவேற்றது. அதாவது நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான ஈரானை பாதுகாப்பதும் மற்றும் ஈரானிலும் மத்திய கிழக்கு முழுவதிலும் சோசலிச புரட்சிக்கான போராட்டத்துடனான அதன் உறவு பற்றியும் ஆராய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டது.

இந்த கட்டுரை எழுதப்பட்டதிலிருந்து, ஈரானின் முதலாளித்துவ-மதகுரு ஆட்சியின் நெருக்கடி மற்றும் ஈரானை குறிவைத்து ஒரு அமெரிக்க போரின் அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ளது.

2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து மே 2018 இல் அமெரிக்கா விலகியது. இருப்பினும் தெஹ்ரான் அந்த உடன்படிக்கையின் அனைத்து நிபந்தனைகளையும் கடுமையாக பின்பற்றியது. போருக்கு இணையான ஒரு செயலில், அது அடுத்த 12 மாத காலப்பகுதியில் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை ஒருதலைப்பட்சமாக மீண்டும் அமெரிக்கா விதித்தது. ஈரானின் பொருளாதாரத்தை "நொருக்குவது" என்ற பகிரங்கமாக அறியப்பட்ட நோக்கத்துடன், வாஷிங்டன் ஈரானின் அனைத்து எண்ணெய் ஏற்றுமதியையும் மூழ்கடித்து, அதன் வர்த்தகத்தை முடக்கியது மற்றும் அமெரிக்க ஆதிக்கம் செலுத்தும் உலகளாவிய நிதி அமைப்பிலிருந்து அதை முடக்கியுள்ளது.

பொருளாதாரத் தடைகள் அவற்றின் நோக்கத்தை வெளிப்படுத்தின. அவர்கள் ஈரானின் பொருளாதாரத்தை கழுத்தை நெரித்து, வாஷிங்டனுடன் எவ்வாறு தொடர்ந்து நழுவிக்கொண்டு செல்வது என்பது குறித்து ஈரானின் முதலாளித்துவ தேசியவாத ஆட்சிக்குள்ளேயே ஏற்கனவே உள்ள ஆழ்ந்த மோதல்களைத் இது தீவிரப்படுத்தியுள்ளது. இது அமெரிக்க ஆதரவுடைய ஷாவின் இரத்தக்களரி கால் நூற்றாண்டு சர்வாதிகாரத்தின் போது நிலவிய, மற்றைய ஏகாதிபத்திய மற்றும் பெரும் சக்திகளின் போட்டி மற்றும் பெருகிய முறையில் அமைதியற்ற ஈரானிய தொழிலாள வர்க்கம் ஆகிய புதிய காலனித்துவ அடிமைத்தனத்திற்கு ஈரானைத் திருப்பிக்கொடுக்கும் நோக்கத்தை கொண்டது.

ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் ஜெனரல் குவாஸ்ஸெம் சுலைமானியை அமெரிக்க ட்ரோன் படுகொலை செய்ததன் மூலம் 2020 தொடங்கியது. இந்த ஒரு போர்க்குற்றம், ஈரானையும் அமெரிக்காவையும் மற்றும் முழு மத்திய கிழக்கையும் ஒரு பேரழிவுகரமான போருக்கு நெருக்கமாக கொண்டு வந்தது.

எனது 2018 கட்டுரையின் பின்னிணைப்பாக, சுலைமானியின் படுகொலையைத் தொடர்ந்து உடனடியாக வெளியிடப்பட்ட மூன்று WSWS கட்டுரைகளை மெஹ்ரிங் Yayıncılık மீண்டும் வெளியிடுகின்றது. இரண்டு கட்டுரைகள் ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொறுப்பற்ற "அதிகபட்ச அழுத்தம்" பிரச்சாரத்தை உந்துகின்ற மூலோபாயம் மற்றும் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை பகுப்பாய்வு செய்கின்றன. இந்த முன்னுரை எழுதப்படுகையில், பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா கூடுதல் துருப்புக்களையும் ஆயுதங்களையும் பயன்படுத்துவதன் மூலம் ஈரானுக்கு எதிரான இந்த அழுத்தத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மூன்றாவது கட்டுரை துருக்கிய முதலாளித்துவத்தின் முக்கிய கட்சிகளும் மற்றும் துருக்கி குடியரசும் இஸ்லாமிய குடியரசின் இரண்டாவது மிக சக்திவாய்ந்த நபராக புகழ்பெற்ற ஜெனரலை ட்ரம்ப் உத்தரவிட்ட படுகொலைக்கான பிரதிபலிப்பை மதிப்பாய்வு செய்கிறது.

கடந்த மூன்று தசாப்தங்களாக அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் முதல் சிரியா மற்றும் லிபியா வரை பெரிய மத்திய கிழக்கு நாடுகளில் ஒருபோதும் அழியாத போர்களைத் தொடர்ந்தது. இந்த போர்கள் சிக்கலான சமூகங்களை வெடித்தன, ஆனால் அவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக பொருளாதார மற்றும் புவி-அரசியல் சக்தியின் வீழ்ச்சியைத் தடுக்கத் தவறிவிட்டன.

ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தின் கீழ் ஈரானிய முதலாளித்துவம் துன்புறுகின்றது. ஆனால் அது அவ்வாறு செய்வது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளினால் அதன் "சொந்த" தொழிலாள வர்க்கத்தின் சுரண்டலை விரிவுபடுத்துவதை தவிர்ப்பதற்கும் ஈரானை ஒரு பிராந்திய மேலாதிக்க சக்தியாக மாற்றுவதற்கும் அதன் முயற்சிகளுக்கு தடையாக இருப்பதால் தான். அதன் வர்க்க நிலைப்பாட்டின் அடிப்படையில், ஈரானிய முதலாளித்துவமும் அதன் இஸ்லாமிய குடியரசும் அனைத்து இன மற்றும் மதங்களுக்கிடையில் மத்திய கிழக்கின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களை புரட்சிகரமாக அணிதிரட்டுவதற்கு இயல்பாக இயலாதும் மற்றும் விரோதமாக உள்ளன. வாஷிங்டனின் ஆக்கிரமிப்பு மற்றும் சூழ்ச்சிகளை எதிர்ப்பதற்கும் ஏகாதிபத்தியத்தை ஒட்டுமொத்தமாக தோற்கடிப்பதற்கும் ஒரே சாத்தியமான போராட்டத்திற்கான பணி தொழிலாள வர்க்கத்தின் மீது விழுகிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் சமூக சமத்துவமின்மை மற்றும் அனைத்து வகையான வர்க்க ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டத்தில் இணைக்கப்படுவதனால் மட்டுமே இது சாத்தியமாகும். அதாவது சோசலிசத்திற்கான போராட்டத்தினாலாகும்.

***

இந்த குறுகிய முன்னுரை எழுதப்பட்டதிலிருந்து, கொடிய நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஈரானுக்கு எதிரான அதன் ஆக்கிரமிப்பை தீவிரப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் வெடிப்பை பயன்படுத்துகின்றது.

பார்க்க:

அமெரிக்க ஏகாதிபத்தியம் கொரொனாவைரஸை போருக்கான ஆயுதமாக்குகின்றது

Loading